தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களுக்காக போராடியதற்காகவும், தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காகவும் இந்திய பாஜக அரசின் தூண்டுதலின் பேரால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு, விடுதலையாகி வந்திருக்கும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன் ஆகியோர் இன்று தங்கள் விடுதலைக்கு குரல் கொடுத்த தலைவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தோழர்கள் சிறையில் இருந்த போது அவர்களை சிறைக்குள் சந்தித்து ஆதரவு தெரிவித்ததற்கும், தோழர்களின் விடுதலைக்காக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தங்களின் குரலை பதிவு செய்ததற்கும், இதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததற்காகவும்
மதிமுக பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்களையும்,
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் திரு ஜவாஹிருல்லா அவர்களையும்,
SDPI கட்சியின் தலைவர் திரு தெஹலான் பாகவி அவர்களையும்
இயக்குனர் திரு பாரதிராஜா அவர்களையும்
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, அருள்முருகன், லெனாகுமார் மற்றும் பிரவீன்குமார் ஆகியோரும், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், அக்க்ட்சியின் செய்தித் தொடர்பாளர் சைலேந்தர் ஆகியோரும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்புகளின் போது மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் SDPI கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.