ஊரெங்கும் தோரணங்கள், ஆங்காங்கே பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு, என்று தம்மை அழிக்கத்தான் இந்த இராணுவம் வந்திருக்கிறதென்று அறியாமல் தமிழீழமெங்கும் தமிழர்கள் இந்திய இராணுவத்திற்கு வரவேற்பு கொடுக்கிறார்கள். ஆனால் இந்திய இராணுவமோ தங்கள் நாடு வலுகட்டாயமாக திணித்த இந்திய இலங்கை ஓப்பந்தத்தை எப்படியாவது இலங்கையில் நிறைவேற்றிவிடவேண்டுமென்ற கொரூரமான நோக்கத்திற்காக இறங்கியிருக்கிறார்கள்.
’’தமிழர்களின் விடுதலையில் இன்று முக்கியமான நாள். எமது சக்தி அப்பாற்பட்ட ஒன்று இன்று எமது விடுதலையை தீர்மானிக்கிற இடத்தில் இருக்கிறது. எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை. சிங்கள இனவாத பூதம் இந்த ஓப்பந்தங்களை விழுங்கி விடும். அவர்கள் ஒருநாளும் எம்மக்களுக்கான தீர்வை தந்துவிடுவார்களென்று நாங்கள் நம்பவில்லை. ஆனால் இந்தியா இந்த ஓப்பந்தத்தை எம் மீது திணிக்கிறது. இந்தியா பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆகவே இன்றிலிருந்து எம்மக்களின் பாதுகாப்பை இந்தியாவிடம் ஓப்படைக்கிறோமென்று தமிழீழத் தலைவர் பிரபாகரன் சுதுமலையில் சோகமும் கோபமும் கலந்து எதிர்காலத்தில் என்ன நடக்க இருக்கிறதென்று மக்களுக்கு விளக்கி பேசுகிறார்.”
கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அமைதி படை தனது ஏஜமான் வேலையை காட்ட எத்தினிக்கிறது. புலிகளிடம் ஆயுதங்களை பிடுங்குவது, புலிகளின் கட்டமைப்புகளை நீர்மூலமாக்குவதென்று குறிவைத்து விடுதலை புலிகளை ஒரு புறம் அழிக்கிறது. மறுபுறம் துரோகக்குழுக்களுக்கு புலிகளிடமிருந்து பிடுங்கிய ஆயுதங்களை கொடுத்து விடுதலை புலிகளின் ஆட்களை குறிவைத்து கொலை செய்ய வைக்கிறது. இதுகுறித்து தமிழீழத் தலைவர் பிரபாகரன் இரானுவ தலைமைக்கும் இந்திய பிரதமராக ராஜிவ் காந்திக்கும் 12கடிதம் மூலமாக இந்தியபடையின் ஆட்டுழியங்கள் குறித்து தெரிவிக்கிறார், ஆனால் ஒருகடிதத்திற்கும் இந்திய அரசிடமிருந்து எந்தவித பதிலுமில்லை.
தமிழீழ மக்களுக்கு எங்கு என்ன நடக்கிறதென்று புரியாத ஒரு குழப்பம் வருகிறது. நம்மை காக்க வந்தவர்கள் தானே இந்திய படைகள் என்ற எண்னம் ஓரளவு அனைத்து தமிழர்கள் மத்தியிலும் நிலவி வந்த வேளையில். 23வயதே ஆன விடுதலை புலிகளின் யாழ்ப்பாண அரசியல் பொறுப்பாளர் பார்த்திபன் என்ற திலிபன் கீழ்க்கண்ட ஐந்து அம்ச கோரிக்கைகள் முன்னிறுத்தி 1987 செப்டம்பர் 15ஆம் நாள் உண்ணாவிரத்தை தொடங்குகிறார்.
1.மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2.சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
3.அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4.ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5.தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
இந்த ஐந்து அம்ச கோரிக்கைகள் என்பது இந்திய இலங்கை அமைதி ஒப்பந்ததில் உள்ள சரத்துகள் தான் இதனை கொண்டுவந்ததெ இந்தியா தான். ஆனால் அதை நிறைவேற்றக்கோரி திலிபன் ஏன் உண்ணாவிரதம் இருக்கவேண்டும். அப்படியானால் இந்தியா இந்த ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்துகிறதா? என்ற எண்ணம் எந்த மக்கள் இந்திய படையை ஆரத்தி எடுத்து வரவேற்றார்களோ அந்த மக்களிடமே லேசாக வருகிறது. இருந்தாலும் இது ஓப்பந்ததில் உள்ளது தானே இந்தியா இதை நிறைவேற்றிவிடும் 23வயது திலிபன் உயிர் காப்பாற்றப்பட்டுவிடுமென்று மக்கள் நினைத்திருந்த வேளையில். இந்தியா திலிபன் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளவில்லை என்பதையும் தாண்டி அதை நிர்மூலமாக்கும் வேளையில் இறங்கியது.
இந்தியாவின் கொரூர நோக்கம் மெல்ல மெல்ல தமிழீழ மக்களுக்கு புரிய ஆரம்பித்தது.
அதற்குள் இதே நாள் செப்.26ஆம் நாள் 1987இல் அந்த 23 வயது இளைஞனின் உயிரை காந்தி தேசம் காவு வாங்கிக்கொண்டது. இந்தியா தமிழீழ மக்களிடம் அம்பலப்பட்டு நின்றது. தமிழீழத் தலைவர் திலீபனுக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு மீண்டும் ஆயுதமேந்தினார். இந்தியாவால் இழந்த பகுதிகளை இந்தியாவிடமிருந்தும் சிங்களத்திடமிருந்தும் மீட்டார். திலிபனின் இறுதி ஆசையை நிறைவேற்ற போராடினார்.
அந்த போராட்டம் இன்று வேறுவகையில் தொடர்கிறது. இன்னும் திலிபன் பசியோடு தான் இருக்கிறான். அவனின் லட்சியம் நிறைவேற்றிட பல திலிபன்கள் இன்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
வரலாற்றில் திலிபன்கள் மாவீராய் இருக்கிறார்கள். இந்தியமும்,சிங்களமும் குற்றவாளிகளாய் இருக்கிறார்கள்.