தோழர் முகிலன் கைதை வண்மையாக கண்டிக்கின்றோம்.
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன் நேற்று, நிலத்தடி நீரை திருடுவதற்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு பின்பு மாலையில் விடுதலை செய்யப்பட்ட பிறகு, ஆழ்வார்திருநகரி பகுதியில் வைத்து எந்த காரணமும் சொல்லப்படாமல் சீருடை அணியாத காவல் துறையினரால் அத்துமீறி கைது செய்யப்பட்டுள்ளார். சற்று முன்பு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்படும் வரை அவரது நிலை குறித்த எந்த தகவல்களும் இல்லை.
தோழர் முகிலன் கூடங்குளம் அணுஉலை உள்ளிட்ட தமிழகத்தின் சுற்றுச்சூழலை பாதிக்கும் அனைத்து திட்டங்களையும் மக்களோடு இணைந்து எதிர்த்து போராடி வந்தார். காவிரி ஆற்றில் முறைகேடாக மணல் அள்ளப்படுவதை எதிர்த்து மக்களை ஒன்றுதிரட்டி கடுமையாக போராடி வருகின்றார். இந்நிலையில் தமிழகத்தின் மூலவளங்களை கொள்ளையடிக்கும் தற்போதைய முதல்வர்களான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தோழர் முகிலன் போராட்டங்கள் தடையாக உள்ளது. மேலும் காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுப்பதற்கு காவிரி ஆற்றை அழிக்க துடிக்கும் இந்திய அரசிற்கும் இடையூறாக உள்ளார்.
தமிழக அரசின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து போராடி வரும் செயற்பாட்டாளர்களை தமிழக அரசு ஜனநாயக விரோதமாக ஒடுக்கிவருவதன் தொடர்ச்சியே தோழர் முகிலன் கைது. பல்வேறு காலகட்டங்களில் உடல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் தோழர் முகிலன் தாக்கப்பட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியே நேற்றைய சம்பவம். தமிழக அரசின் இந்த பாசிச செயலினை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசே, செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறையை உடனடியாக நிறுத்திக்கொள். தோழர் முகிலன் மீதான வழக்கினை திரும்ப பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்.
மே பதினேழு இயக்கம்
9884072010