பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கு பணியில் தனது இறுதி காலம் வரையில் உழைத்த ஐயா நம்மாழ்வார் அவர்களின் பணியை தொடர்ந்து செய்து வரும் திருத்துறைபூண்டி ”நெல் ஜெயராமன்” அவர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் அடித்தட்டு மக்கள் கண்டுபிடிப்புக்கான விருதையும்,காந்திய இளம் தொழில் நுட்ப கண்டுபிடிப்புக்கான விருதையும் வழங்கி கௌரவித்தது.
இயற்கை விவசாயத்திற்காகவும் பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாப்பதற்காகவும் உயரிய விருதுபெற்ற திரு நெல் ஜெயராமன் அவர்களுக்கு நேற்று முன் தினம் 29.03.15 அன்று திருவாரூரில் இயற்கை உழவர் இயக்கம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் பேசிய திரு நெல்.ஜெயராமன் அவர்கள் ஒருபக்கம் விவசாயத்தை அழிக்க அனைத்து வேலைகளையும் செய்யும் அரசு விவசாயிகள் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்காகத் தான் இதுபோன்ற விருதுகளை தருகிறது என்பதை அறிந்தே தான் நான் இதை பெற்றுக்கொண்டேன்.காரணம் ஒன்று தான் இதன் மூலமாவது யாராவது இயற்கை விவசாயத்திற்கு மாற மாட்டார்களா என்பதற்காகத்தான். இந்த விருதை ஏற்றுக் கொண்டேனே தவிர வேறு எதற்க்காகவும் இல்லை. இந்த விருது பணம் ஒரு லட்சம் ரூபாயில் 75ஆயிரத்தை விவசாய சங்கத்திற்கே கொடுத்துவிடுகிறேன் என்று பேசினார்.
இந்த நிகழ்வில் அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் திரு.பாண்டியன் நுகர்வோர் சங்க பிரதிநிதிகள்,மீனவர் பாதுகாப்பு பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வை தோழர் G.v. Varadharajan அவர்களும் அவரின் தோழர்களும் மிகச்சிறப்பாக முன்னின்று நடத்தினர்.