திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று 29.03.2015 காலை இடித்து விழுந்தது, இதில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் முன்று பேர் என்று மொத்தம் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் படுகாயமடைந்த பலர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருக்கிறார்கள்.
ஆந்திராவை சேர்ந்த டிஇசி என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ஓப்பந்த அடிப்படையில் இந்த வேலையை மத்திய அரசின் பொதுப்பணித்துறை (சி.பி.டபிள்யூ.டி.) கொடுத்திருந்தது. ஆனால் அந்த ஆந்திர நிறுவனம் அந்த வேலையை உள் ஓப்பந்தத்தின் அடிப்படையில் மயிலாடுதுறையை சேர்ந்த தனியாரிடம் கொடுத்திருந்தது.
இந்நிலையில் வேலையை விரைவாக முடிக்கவேண்டி அதிக அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள் இதனால் விரைவாக முடிக்க வேண்டி சரியானபடி வேலையை செய்யாததே இந்த கட்டிடம் இடிந்ததற்க்கு காரணமென்றும். மேலும் ஓப்ப்பந்தத்தை முறையாக பயன்படுத்தாமல் உள் ஓப்பந்தம் விட்ட ஆந்திர நிறுவனத்திற்க்கும் இதில் பொறுப்பு உண்டு என்றும் நேற்று மாவட்ட ஆட்சியர் நேரடியாக குற்றஞ்சாட்டினார்.
எதுவானலும் இதுபோன்ற கட்டிடங்கள் இடிந்து விழுவது தமிழ்கத்தில் தொடர்கதையாக இருக்கிறது.இதுபோன்று தான் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டிடம் இடித்து விழுந்து பல உயிர்களை காவு வாங்கியது. அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் அரசுகளின் அலட்சியத்தால் தான் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே
1.அரசுகள் இந்த கட்டிட வேலையைக்கான ஓப்பந்தங்களை முறைப்படுத்த வேண்டும்
2.ஓப்பந்த தொழிலாளர்களின் வேலை நேரத்தையும் மற்றும் ஊதியத்தையும் அரசு முறைப்படுத்த வேண்டும்.
இதனை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டால் மட்டுமே இதுபோன்ற விபத்துகள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முடியும்.மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தை உடனே அரசு வழங்க வேண்டும்
குறிப்பு:திருவாரூரில் வேறு ஒரு நிகழ்விற்காக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் சென்றிருந்த போது, இந்த விபத்தை அறிந்தவுடன் விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று விபத்து குறித்து தகவலை ஆராய்ந்து அது குறித்தான விரிவான தகவலையும் நீயுஸ் 7 தொ.காட்சியில் பதிவு செய்தார்.