ஈழவிடுதலைக்கு எதிராக பல்வேறு நடவெடிக்கைகளை பாஜக அரசு எடுத்த பொழுது பாராளுமன்றத்தில் 37 எம்.பிகளை வைத்து ஏதும் பேசாமல் கள்ள மெளனம் காத்த ஜெயலலிதாவின் அரசினை நம்புவதற்கு ஈழ ஆதரவாளர்கள், பொதுவெளியில் அடுத்தவர் காலில் விழுந்து எழாத ’ரத்தத்தின் ரத்தம்’ அல்ல..
ஈழ அகதிகளை சித்தரவதை செய்யும் அரசின் சொந்தக்காரர் தனது சுயநலத்திற்காக ஈழ கோரிக்கையை பயன்படுத்துவதை ஏற்க இயலாதது.
ஏழு தமிழர் விடுதலையை தனக்குரிய 161 பிரிவின் கீழ் இன்றும் கூட விடுதலை செய்துவிடக் கூடிய அதிகாரம் இருந்தும், விடுதலையை மறுக்கும் அதிமுக அரசின் சூது புரியாததும் இல்லை.
ஏழு தமிழர்களை விடுதலை செய்வோம் என்று கோரிக்கையை முதன்மைப்படுத்த மறுக்கும் திமுகவையும், தனது பெரியாரிய தொண்டர் குடும்பத்திற்கு ‘பார்ப்பனிய’ இந்திய அரசு நிகழ்த்திய கொடூர ஒடுக்குமுறைக்கு சுண்டுவிரலை கூட உயர்த்தாத தி.கவின் தலைமையையும் அம்பலப்படுத்துவோம்.
பாஜக, காங்கிரஸ் என தமிழின விரோத நிலைப்பாடு கொண்ட கட்சிகளுக்கு தமிழினத்தின் மனசாட்சியினை அறிவிக்க ஒன்று கூடுங்கள்.
’அதிமுகவும், திமுகவும் தொடர்ந்து தமிழினத்தினை ஏமாற்ற அனுமதியோம்’ எனும் தோழர்கள் கைகோர்க்க வாருங்கள்.
நாம் ஒன்றாக எழுந்தால் எழுவர் விடுதலை தேர்தலுக்கு முன்பே சாத்தியமாகும்.
ஆயிரமாய் திரண்டால் ஏழு தோழர்களும் இரண்டொரு வாரத்தில் நம் வீட்டிற்கு விருந்துண்ண அழைத்துச் செல்லலாம்.
உங்களது நேரத்தில் ஓரிரு மணித்துளியை எழுவர் விடுதலைக்கு செல்வழிக்கும் பட்சத்தில் 25 வருட தாயின் தவிப்பினை தீர்த்துவைக்கும் வலிமை நமக்கு வந்து சேரலாம்.
ஒன்று சேர்வோம். ஏழு தமிழர்களை மீட்போம்.