நேற்று 06.03.16 ஞாயிறு மாலை 7மணிக்கு சென்னை எழும்பூர் சிராஜ் மாகாலில் நீதி, அமைதிக்கான மக்கள் இயக்கமும், வைகறை வெளிச்சம் இதழின் வாசகர் வட்டமும் இணைந்து நடத்திய இரண்டு நூல்களை வெளியிடும் வெளியீட்டு நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மும்பை குண்டுவெடிப்பில் எப்படி முஸ்லீம் சமூகத்தை குற்றவாளிகளாக மாற்றினார்கள் என்றும் இந்த தாக்குதலில் மூளையாக இருந்த இந்து திவிரவாத அமைப்பான் அபிநவ் பாரத் அமைப்பின் தலைவர் புரோகித் அவரின் லேப்டாபிலிருந்த ஆவணங்களை கொண்டு எழுதப்பட்ட புரோகித் இன் லேப்டாப்பில் இருந்தது என்ன? என்ற மிக முக்கியமான நூலும்.
பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களை இந்து மதவெறிக்காக செய்து அதனை எவ்வாறேல்லாம் மூஸ்லீம் சமூகத்தின் மீது போட்டோமென்று குண்டு வைத்த இந்து சாமியார் அசிமானந்தாவின் ஓப்புதல் வாக்குமுலத்தின் தமிழ் பதிப்பான மனம் திருந்திய குற்றவாளி சுவாமி அச்சிமானந்தாவின் ஓப்புதல் வாக்குமூலம் என்ற நூலும் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் மும்பை தாக்குதல் மற்றும் பாராளுமன்ற தாக்குதலில் பிண்னனி என்ன என்பது குறித்து வைகறை வெளிச்சம் இதழின் ஆசிரியர் மு.குலாம் முஹம்மது அவர்கள் மிகமுக்கியமான உரையை நிகழ்த்தினார். மேலும் காஷ்மீர் சிக்கல் குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் அ. மார்க்ஸ் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் தோழர் அப்துல் சமது போன்றோரும் உரை நிகழ்த்தினார்கள். மேலும் ஏராளமான மாற்றுகட்சி தோழர்களும் பெரும் திரளான முஸ்லீம் மக்களும் கலந்துகொண்டு கருத்துகளை கேட்டு பயன்பெற்றார்கள்.