நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டெழும் பயாஃப்ரா விடுதலைப் போராட்டம். இக்போ மக்களுடைய தேசிய இனவிடுதலைப் போராட்டத்தினை 1970இல் அமெரிக்கா-பிரிட்டன் -சோவியத்-எகிப்து உள்ளிட்ட நாடுகள் தங்களது பிராந்திய நலனுக்காக இந்த விடுதலைப் போராட்டத்தினை நசுக்கி இனப்படுகொலை செய்தன.
1970களில் முடிவுக்கு வந்த இந்த ஆயுதப் போராட்டம் தற்போது அயுதமேந்தாத விடுதலைப் போராட்டமாக வெடித்திருக்கிறது.
எத்தனைக் காலம் ஆனாலும் விடுதலைப் போராட்டங்களும், விடுதலை கோரிக்கைகளும் மரணித்துவிடாது என்பதற்கு இது ஒரு சமகால உதாரணம்.
நமது காலத்திற்கு பின்னரும் கூட விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்படும், வெல்லப்படும் என்பதை போராளிகள் உணர்ந்தே போராட்டத்தினை நகர்த்துகின்றனர். அவர்களது காலத்திற்குள்ளாக வெல்ல வேண்டுமென்பது மட்டுமே அவர்களது இலக்காக இருந்ததில்லை, மாறாக, கோரிக்கையை உயர்த்திப் பிடித்து சமரசமில்லா போராட்டத்தினை அடுத்த தலைமுறையின் கையில் கொடுத்து செல்வதே போராளிகளின் பெரும் போராட்டமாகும்.
ஈழப்போராளிகளும் இப்போராட்டத்தினை அடுத்த தலைமுறையிடம் கையளித்திருக்கிறார்கள். ஈழவிடுதலையை அமெரிக்கா பெற்றுத்தருமோ அல்லது இந்தியா-இங்கிலாந்து பெற்றுத்தருமோ என்று அவர்கள் தியாகம் செய்யவில்லை. தமிழகத்தின் முன்னாள் கம்யூனிஸ்டுகளும், போராளிகளை காட்டிக்கொடுத்து அம்பலப்பட்டுபோன முன்னாள் இயக்கவாதிகளும் அமெரிக்காவின் காலில் ஈழவிடுதலைப் போராட்டத்தினை சரணடைய வைக்க முயன்ற சதிகளை உடைத்து ஈழவிடுதலைப் போராட்டம் இளம் தலைமுறைகளினால் வீரியமுடன் முன்னெடுக்கப்படுவதை ஈழத்திலும், புலம்பெயர்தேசத்திலும், தமிழகத்திலும் காணமுடிகிறது. இந்த நம்பிக்கையே ஈழம் வெல்லும் எனும் முழக்கத்தினை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
பயாஃப்ரா நாட்டினை வென்றெடுக்க இக்போ மக்கள் நடத்திய போராட்டம் குறித்த தகவலுடன் சமகால போராட்டத்தினைப் பற்றிய முக்கிய கட்டுரை http://www.tamilnet.com/art.html?catid=79&artid=38056 வெளியாகி இருக்கிறது. வாய்ப்புள்ள தோழர்கள் மொழிபெயர்த்து வெளியிடுவது உபயோகமாக இருக்கும்