ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

நேற்று 07.02.16 அன்று பத்தாண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள பேரறிவாளன் அபுதாஹிர் உள்ளிட்ட சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி நடத்திய கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பேசியதன் எழுத்து வடிவம்.

முக்கியமானதொரு காலகட்டத்திலே மிகமுக்கியமான கோரிக்கையை கையிலேடுத்து போராடிக் கொண்டிருக்கிற மனிதநேய மக்கள் கட்சிக்கும் அதன் தோழர்களுக்கும் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக முதலில் நன்றியையும் எங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியாவில் இன்று பாசிச பங்கரவாத ஆட்சி நடந்துகொண்டிருக்கிற சூழலிலே இந்த ஜனநாயக போராட்டத்தை கோரிக்கையை வலியுறுத்தி நாம் இங்கு ஓன்றுகூடி நிற்கிறோம். இங்கு கூடியிருக்கிற பல்லாயிரக்கணக்கான தோழர்களாகிய நாம் இந்தியாவை ஜனநாயகப்படுத்தும் பணியிலும் அதனை நாகரிகப்படுத்தும் விதமாகவும் மரணதண்டனையை நீக்க வேண்டுமென்று கோரி கடந்த காலங்களில் தமிழகம் போராடியது.

அன்பான தமிழர்களே 2011ல் மூன்று தமிழருக்கு தூக்கு என்றவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்துகொண்டு நமக்காக யாராவது அந்த சட்டமன்றத்தில் பேசமாட்டார்களா? என்று நாங்கள் எல்லோரும் தவித்துக்கொண்டிருந்த நேரத்திலே மூன்று பேரின் தூக்குகயின்றை தமிழக அரசு இரத்து செய்யவேண்டுமென்று சட்டமன்றத்திலே முதல் குரல் எழுப்பியவர் எங்கள் அருமை தோழர் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசியர் ஜவஹரில்லா அவர்கள். அந்த தகுதியோடு தான் அவர்கள் இன்றும் அந்த் அகோரிக்கைகாக பல்லாயிரணக்கான மக்களை திரட்டி போராடிக்கொண்டிருக்கின்றார்.

அது மட்டுமில்லை நண்பர்களே தமிழகத்தின் எந்த ஜனநாயக கோரிக்கையானலும் அது கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு என்றாலும் சரி, கல்பாக்கம் அணு உலை எதிர்ப்பு என்றாலும் சரி, நியுட்ரொனோ மீத்தேன் கெயில் என்ற தமிழகத்தை பாதிக்கிற எல்லா கோரிக்கைகளிலும் ஜனநாயக சக்திகளோடு இனைந்தே அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் போராடிவந்து கொண்டிருக்கிறது என்பதையும் இந்த தருணத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இப்போது நாம் பேசும் ஆயுள்சிறைவாசிகளின் விடுதலை என்பதும் அந்த ஜன்நாயக கோரிக்கைகளின் அடிப்படையிலேயேதான். என்ன செய்தார்கள் நம் தோழர்கள் பேரறிவாளன்,சாந்தன்,முருகன்,அபுதாஹிர் உள்ளிட்டோர். ஏன் இந்த கொடுமையான சிறைவாசம். இந்த நாட்டில் கொலை செய்த கொலைகாரர்களான சுப்ரமணிய சாமி, மோடி போன்றோரெல்லாம் வெளியே சுதந்திரமாக நாடமாடிக்கொண்டிருக்கும் போது ஒரு தவறும் செய்யாத எங்கள் தோழர்கள் 20,25ஆண்டுகளாக இருட்டறை சிறையில் வாடுகிறார்கள் இது என்ன நியாயம்.

ஆர்.எஸ்.எஸ் போன்ற கொலைகார கூட்டமெல்லாம் சுதந்திரமாக நாட்டில் உலவுவரமுடிகிறது. சிறுபாண்மையின மக்கள், தேசிய இனமக்கள் ஒடுக்கப்பட்ட மக்களெல்லாம் சிறையில் வாடுவதா? இதை கேட்டால் பயங்கரவாதிகள் என்று ஆர்.எஸ்.எஸ் கூட்டம் சொல்கிறது. ஆர்.எஸ்.எஸ் தனது தமிரை தமிழகத்திற்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள் உங்களை கையாழுவது எப்படி பெரியார் உட்பட பலரும் எங்களுக்கு சொல்லி சென்றிருக்கிறார்கள். ஆகவே தோழர்களே

தமிழக அரசு 161ஆவது பிரிவை பயன்படுத்தி உடனடியாக விடுதலை செய்யவேண்டும். எங்கள் தோழர்கள் கூடிய விரைவில் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் , அவர்களின் குடும்பங்களோடு அவர்கள் இணைய வேண்டும் எங்கள் தோழர்கள் நிலவின் ஒளியை பார்க்கவேண்டும். இதனை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். இல்லையென்றால் இந்த தேர்தலில் அதன் பாதிப்பை இங்கு கூடியிருக்கிற பல்லாயிரக்காண தோழர்களும் தமிழகத்திலுள்ள ஜனநாயக சக்திகளும் உங்களுக்கு புரியவைப்பார்கள். தமிழகத்தில் கடந்த தேர்தகளில் எல்லாம் சின்ன கட்சிகளும் இயக்கங்களும் தான் வெற்றி தோல்வியை நிர்ணயத்திருக்கிறார்கள் என்ற ஏதார்த்த உண்மையை புரிந்துகொண்டு முடிவெடுங்கள்.

எங்கள் தோழர்கள் அபுதாஹிர் பேரறிவாளன் சாந்தன் முருகன் இராபர்ட் பயஸ் ரவிச்சந்திரன் நளினி உள்ளிட்ட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சி நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் மே பதினேழு இயக்கம் ஆதரவளிக்கும் என்று சொல்லி நிறைவு செய்கிறேன் நன்றி.

 

Leave a Reply