இனப்படுகொலை இலங்கையை காக்க அமெரிக்காவின் அடுத்த காய் நகர்த்தல்:
இனப்படுகொலை இலங்கையை அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ முறையில் சிறந்த நாடாக மாற்றி அதன் இனப்படுகொலை கரையை அமெரிக்கா மறைக்க நினைக்கிறது அதற்காகவே அமெரிக்க உயரதிகாரிகள் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்கிறார்களென்று இரண்டு மாதத்திற்கு முன்பாகவே மே 17 இயக்கமாகிய நாங்கள் சொல்லியிருந்தோம்.https://www.facebook.com/kondal.samy.12/media_setset=a.1099000436777832.1073741882.100000036593373&type=3. மேலும் இவர்கள் தான் இலங்கையின் அரசியல் சாசன மாற்றத்திலும் பின்னிருந்து வேலை பார்க்கிறார்கள் என்றும் ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தோம்.https://www.facebook.com/kondal.samy.12/media_set?seta.1119872398023969 . 1073741890.100000036593373&type=3.
இதோ நாங்கள் சொன்னது சரிதான் என்று நிருபிக்கும் விதமாக முதல் கட்டமாக இலங்கையின் உயர் பொறுப்பிலுள்ள 20பேருக்கு அமெரிக்கா மூன்று நாள் பயிற்சியை நடத்தியிருக்கிறது.
இந்த பயிற்சியில் இலங்கையிலுள்ள அரசியல், வர்த்தகம், நீதித்துறை, இராணுவம் போன்ற பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இவர்கள் ஒருநாள் முழுக்க 30மேஜிஸ்ரேட் ஜட்ஜுகளுக்கும் பயிற்சி அளித்துள்ளனர். இப்போது கடந்த மாதம் இலங்கைக்கான அமெரிக்க தூதர் சொன்னதை கவனியுங்கள் அமெரிக்காவின் நோக்கம் புரியும். //வருங்காலத்தில் இலங்கையை அனைத்து துறைகளிலும் முன்னேறிய நாடாக மாற்றுவதே அமெரிக்காவின் நோக்கமாகும்//
மேலும் இலங்கைக்கு இந்த பயிற்சியை அளித்த அமெரிக்காவின் வர்த்தக துறை ஆலோசகர் மேகன் மேக்மில்லன் அம்மையார் //இந்த பயிற்சி என்பது இலங்கையை உலக பொது சங்கிலியில் இணைக்குமென்று தெரிவித்திருக்கிறார்.// இதன் மறைமுகப்பொருள் என்ன இலங்கையின் இனப்படுகொலை கரையை இந்த பயிற்சி துடைக்க உதவும் என்பதே. இதே போன்று தான் அமெரிக்கா ஆரம்பத்திலிருந்தே தமிழருக்கெதிரான வேலையை செய்துவருகிறது.
மேலும் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் செய்த ஐநா மனித உரிமை ஆணையர் போர்குற்றம் சம்பந்தமான விசாரணையை நடத்த இலங்கைக்கு போதிய திறமையில்லையென்று சொல்லிவிட்டு சென்றிருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கையை அரசியல் பொருளாதார மற்றும் இராணுவ போன்ற அனைத்து துறைகளில் வலுபடுத்த பயிற்சி கொடுப்பதென்பது இலங்கையின் திறமையை வளர்த்தெடுத்துவிட்டோம் ஆகவே போர்குற்ற விசாரணையை உள்நாட்டிலேயே இலங்கை மேற்கொள்ளட்டுமென்று சொல்வதற்கு தானா? என்ற நோக்கிலும் நாம் பார்க்கவேண்டும்.
குறிப்பு : படத்தில் இருப்பது அமெரிக்காவினால் பயிற்சி அளிக்கப்பட்ட இலங்கை அதிகாரிகளும், அவர்களுக்கு பயிற்சிகுரிய சான்றிதழ்களை அமெரிக்க அதிகாரிகள் வழங்குவதும்.