இனப்படுகொலை இலங்கை அரசு தமிழர்களின் பகுதிகளை சிங்களமயமாக்கவும் மற்றும் இராணுவமயமாக்கவும் வேலையில் தற்போது முழு மூச்சுடன் இறங்கியுள்ளது. அதன் படி தமிழர் பகுதியான் மன்னாரில் தற்காலிகமாக போட்டப்பட்ட இராணுவ நிலையங்களை நிரந்தரமாக்கியுள்ளது. மேலும் இங்குள்ள 25ஏக்கர் பரப்பளவுள்ள தமிழர்கள் நிலத்தை சிங்களர்களுக்கு கொடுத்துள்ளது . மேலும் பல நிரந்தர இராணுவ குடியிருப்புகளையும் பயிற்சி மையங்களையும் கடந்த 30நாட்களில் மட்டும் நிறுவியுள்ளது இனப்படுகொலை இலங்கை . இதன்படி பார்த்தோமேயானல் 25ஆயிரம் மக்கள் தொகைகொண்ட மன்னாரில் ஆறாயிரம் சிங்கள இராணுவ வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. கிட்டதட்ட 4தமிழர்களுக்கு ஒரு இராணுவம் என்ற நிலையை திட்டமிட்டு உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் தமிழர்களை கொடுமைபடுத்தும் வேலையை தொடர்ந்திருக்கிறது. அதன்படி 25தமிழ் மீனவர்கள் 1990லிருந்து மீன்மார்க்கெட் வைத்து வேலை செய்துவரும் பகுதியை சிங்கள கடற்படை தன்வசமாக்கியிருக்கிறது. இது சம்பந்தமான வழக்கு மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இப்படி கடறபடை தமிழ் பகுதிக்குள் புகுந்து தமிழ் மீனவரகளை விரட்டியடித்துவிட்டு அந்த பகுதியில் சிங்கள மீனவர்களை கொண்டு வந்து மீன்பிடிக்க வைக்கிறது. அதுமட்டுமில்லாமல் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் உப்புகுளம் மூர் தெருவை முழுவதும் தற்போது சிங்கள கடற்படை கைப்பற்றியிருக்கீறது.
இப்படி மைத்திரி அரசு செய்யும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை பற்றியோ அல்லது சிங்கள இராணுவத்தை நிரந்தரமாக தமிழர் பகுதியில் தங்க வைத்து தமிழர் பகுதியை இராணுவமாயாக்குவதை பற்றியோ எந்தவித கேள்விக்கும் உட்படுத்தாமல் வெறுமன சுற்றுலாவுக்கு வந்த பயணி போல வந்து சென்றிருக்கிறார் ஐநா மனித உரிமை ஆணையர் அல் ஹீசைன். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=38141