மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மரியாதைக்குரிய மாரியம்மாள் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழீழ விடுதலை குறித்தான போராட்டத்திலும், மதுவிலக்கு உள்ளிட்ட போராட்டங்களில் பங்கெடுத்தவர். 95 வயதிலும் தனது ஆதரவை மக்கள் போராட்டத்திற்கு கொடுத்தவர். மூத்த வயதிலும் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அவருக்கு எங்களது வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பிரிவினால் வாடுகின்ற வைகோ அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எங்களது வருத்தத்தினையும், இரங்கலையும் மே17 இயக்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.