தமிழ்த்தேசியம் – காலத்தின் கட்டாயம் என்ற கருத்தரங்கம் தமிழ்த்தேச நடுவத்தின் சார்பில் ஜூலை 19 அன்று மாலை மதுரையில் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியத்திற்காக தொடர்ச்சியாக நீண்ட காலமாக போராடி வரும் தோழர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். தமிழ்த்தேசியம் என்ற பெயரில் பரப்பப்படும் திரிபுவாதங்கள் குறித்தும், ஆரோக்கியமான தமிழ்த்தேசியம் எப்படி அமைய வேண்டும் எனவும் முக்கியமான உரை நிகழ்த்தினர். தோழர்கள் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தோழர் பொழிலன், தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தோழர் அரங்க குணசேகரன், தற்சார்பு விவசாயிகள் இயக்கத் தோழர் கி.வே. பொன்னையன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தோழர் நிலவன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் தோழர் தமிழழகன், மே பதினேழு இயக்கத்தின் தோழர் அருள்முருகன் உள்ளிட்டோர் விளக்கவுரையாற்றினர். மேலும் இக்கருத்தரங்கம் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நடைபெற உள்ளது.
