மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து இன்று நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.
ஏழு தமிழர் விடுதலையைத் தடுக்கிற மோடியின் பாஜக அரசினைக் கண்டித்தும்,
ஈழ விடுதலையைத் தடுக்கும், மீனவர் மீதான தாக்குதலை வேடிக்கை பார்க்கும், 20 தமிழர் படுகொலைக்கு நீதியை மறுக்கும், காவிரி உரிமையை மறுக்கும், மீத்தேன் திட்டத்தை திணிக்கும், இந்தியையும், இந்துத்துவத்தையும் திணிக்கும், நில அபகரிப்புச் சட்டத்தினால் விவசாயிகளின் வாழ்க்கையை அபகரிக்கும் தமிழின விரோத மோடியின் பாஜக அரசின் கொள்கைகளை கண்டித்து தோழர் கோவை இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் இந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-தந்தை பெரியார் திராவிடர் கழகம்-மே பதினேழு இயக்கம்-தமிழர் விடியல் கட்சி.