சானல் 4 அம்பலப்படுத்திய ஐநாவின் ஆவணம் குறித்த காணொளி.
அதன் தமிழாக்கம் :
“இந்த ஆவணம் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அதிர்ச்சியளிக்ககூடியதாகவும் இருக்கின்றது. அறுபது ஆண்டு காலமாக விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடந்த போரில் பல்லாயிர கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை புலிகள் மீதும் போர்குற்றங்கள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் கொல்லப்பட்டது இலங்கை அரசின் ஷெல் தாக்குதலால் தான். பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் ஐநா மனித உரிமைகள் ஆணையம் போர் குற்றங்கள் மீது சுதந்திர சர்வதேச விசாரணை தொடங்க இருப்பதாக முடிவெடுத்தது. ஐநா மனித உரிமைகள் ஆணையம் வரும் செப்டம்பர் மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கின்றது. அந்த அறிக்கையில் என்ன இருக்கும் என்ற பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. அதில் பாதிக்க பட்டவர்களுக்கும் உயிர் பிழைத்தவர்களுக்கும் நீதியும் முன்னேற்றம் பெற ஏதும் வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்து வருகின்றது. காரணம் அவர்களின் எதிர்பார்ப்பு, நோக்கம் எல்லாம் சர்வதேச விசாரணையை சார்ந்தே இருக்கின்றது. அவர்கள் இலங்கை அரசே விசாரணையை நடத்தும் என்றால் அது போலி நீதிமன்றமாகவே இருக்கும். அது நீதியை பெற்று தரும் என்று துளியும் நம்பிக்கை இருக்காது. ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் விவாதம் வர இருக்கும் நிலையில் கிடைத்துள்ள இந்த ஆவணம் அதிர்ச்சியாக உள்ளது. ஐநாவால் இலங்கை அரசின் ஒப்புதலோடு தயாரிக்கப்பட்ட இந்த உள்ளக ஆவணம் கோருவது ஐநாவின் தொழிற்நுட்ப உதவியோடு நடக்கும் முழுமையான உள்நாட்டு விசாரணை. எந்த விசாரணை முறையை பாதிக்கப்பட்டோரும், தமிழ் அமைப்புக்களும் மனித உரிமை அமைப்புக்களும் தெளிவாக புறக்கனித்தார்களோ அதே மாதிரியான விசாரணை ஒன்றையே இந்த ஆவணம் கோருகின்றது. இந்த ஆவணத்தில் கவனிக்க தக்க மற்றொரு செய்தி என்ன வென்றால், நடைமுறைபடுத்தும் கூட்டாளிகள் ( Implementing partners) என்ற ஒரு பதம் வருகிறது. அதில் குறிப்பிடப்பட்டவர்களில் முதன்மையாக இலங்கை அரசையும் , இரண்டாவதா வட மாகாண சபையையும் சொல்லுகின்றது. இதில் வட மாகாண சபை தான் தமிழர்களை பிரதிநிதித்துவ படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள். இந்த ஆவணத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தாலும் வட மாகாண முதல்வரிடம் இதை பற்றி நங்கள் கேட்ட போது, இந்த ஆவணத்தை தாம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அதற்காக ஏதும் செய்ய விரும்பவில்லை, இந்த ஆவணம் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம் என்றும் தெரிவித்தார். அதிர்ச்சியூட்டும் இந்த ஆவணத்தை பார்க்கும்போது இதில் ஐநாவும் அல்லது ஐநாவில் இது தொடர்பில் இயங்குவோரும் இலங்கை அரசோடு சேர்ந்து திரைமறைவில் உள்நாட்டு விசாரணையை கொண்டுவருகிறார்கள் என்ற சொல்லப்பட்டு வந்த குற்றசாட்டு மேலும் உறுதியாகிறது. ஆயினும் நமக்கு தெரியும் பாதிக்கப்பட்டவர்களும் பெரும்பாலான தமிழ் அமைப்புக்களும் இதனை ‘ஒரு போலி நீதிமன்றத்தை தவிர வேறொன்றும் இல்லை – நீதியை எதிர்பார்த்தவருக்கு நம்பிக்கை துரோகத்தை தவிர வேறொண்டும் இல்லை’ – என்றே கருதுவார்கள்.”