அரசுபள்ளிகளில் ஆங்கிலவழி கல்வியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பாக சென்னையில் மூன்றாம் நாளாக நடைபெற்ற தலைமைச் செயலக மறியல் போராட்டம்.
பள்ளிக் கல்வியில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு கல்வி – வேலை வாய்ப்பில் 80% இட ஒதுக்கீடு வழங்கவும் வலியுறுத்தி, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் ஆகத்து 17 முதல் ஆகத்து 19 வரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு, சென்னைத் தலைமைச் செயலகம் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி மூன்றாம் நாளான இன்று மே 17 இயக்கம் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் விடுதலை உள்ளிட்ட அமைப்புகள் மறியலில் கலந்து கொண்டனர்.
தமிழ்வழிக்கல்வியை வழியுறுத்தி பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறை கைது செய்து சமூக நலக்கூடத்தில் அடைத்தனர்.