30 ஜூலை 2011
இன்று சிபிஎம் ஈழத்தமிழர்களுக்கான தீர்வு என்று மாநில சுயாட்சி – சம உரிமை என்ற பெயரில் சிறப்பு மாநாடு நடத்தியது. இதை எதிர்த்து நமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நேற்று சுவரொட்டிகளை சென்னை, திருநெல்வேலி, கோயமுத்தூர் ஆகிய ஊர்களில் மே 17 சார்பாக ஒட்டினோம். இதில் சென்னையில் மே17 இயக்கம் சார்பில் ஒட்டும்பொழுது வந்த திருவெற்றியூர் H8 காவல்நிலையத்தை சேர்ந்தவர்கள் சுவரொட்டி ஒட்ட கூடாது என்றனர்.
ஒரு மக்களாட்சி நடக்கும் நாட்டில் ஒருவர் தனது கருத்தை மக்களிடம் கொண்டுசேர்க்க மிகச்சிறந்த வழிமுறை இது அடிப்படை உரிமையும் கூட இதை சட்டத்திற்கு புறம்பாக ஒட்ட கூடாது என்று தடுத்தனர். அதன் பிறகும் விடாமல் சுவரொட்டிகளை ஒட்டினோம் ஆனால் அவைகளை காலையில் காவல்துறையினரே கிழித்திருக்கிறார்கள். இது அதுவும் காவல்துறையின் சட்டத்தையும் மக்களையும் பாதுகாப்பதை விட்டுவிட்டு போஸ்டர் கிழிக்கும் கேடுகெட்ட வேலையை செய்துள்ளனர்..
சுவரொட்டிகளே ஒட்டகூடாது என்றால் அருகில் இருக்கும் ஆதிமுக சுவரொட்டிகள், திரைப்பட சுவரொட்டிகளையும் சேர்த்து கிழிக்க வேண்டியது தானே அதை விடுத்து மே 17 சுவரொட்டிகளை மட்டும் கிழித்துள்ளனர் காவல்துறையினர்.. இங்கே இருக்கும் படங்களே இதற்கான ஆதாரங்கள். இப்படி நமது கருத்தையும் கண்டனத்தையும் வெளியில் தெரிவிக்க கூட நமக்கு உரிமையில்லாத நிலையிலேயே நாம் உள்ளோம்..