சிறுமி சுருதிக்கு நடந்த கொடுமையை மறக்கமாட்டோம் மன்னிக்கமாட்டோம்

- in தனியார்மயம்
கல்வியில் தனியார்மயம் வேட்டையாடுவது குழந்தைகளைத்தான்… 
குழந்தைகள் தாய்மொழிக்கல்வியை இழக்கிறார்கள், எழுத்துச்சுமையை சுமக்கிறார்கள், அதிக மதிப்பெண் வாங்கவேண்டிய நெருக்கடிக்குள்ளாகிறார்கள் என குழந்தைகள் மீது தனியார்கல்வியும், அதை ஆதரிக்கும் பெற்றோர்களும் வைக்கும் வன்முறைகள் எப்போதும் எல்லை கடக்கின்றன.. வியாபரப் பொருளாகிய கல்வி , அதிக செலவழித்து படிக்க வைக்கப்படும் குழந்தைகளை குடும்பத்தின்‘முதலீடாக’ மாற்றுகின்றன… ஒரு காலத்தில் கல்வி இலவசமாக இருந்தபோது கல்வி கற்றவனே போராட்ட களத்திற்கு முதலில் வருபவனாக இருந்தான்…. கல்வி அவனை போராட்டக்காரனாக மாற்றியது ஒரு காலம்….. டால்ஸ்டாயின் பண்பாட்டியல் சார்ந்த கல்வியானது ருசிய மக்களை புரட்சிக்கு தயார் செய்வதில் ஒரு பங்களிப்பு செய்ததாக சொல்லுவார்கள்..ஆனால் இன்று கும்பகோணத்தில் எரிந்த பிஞ்சுகளும், முடிச்சூரில் மரித்த சுருதியும் தனியார் மயத்தின் கொடுமைகளுக்கு ஆதாரமாய் நிற்கிறார்கள்…. ஒரு தனியார் கல்விக்கு எதிரானதாக இருக்கும் மக்களின் கோபம் தனியார்மயக்கொள்கையின் மீதானதாக மாறும் வரை விடிவு கிடைக்காது…. நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் தனியார் மய எதிர்ப்பு விவாதத்தை, இலவசக் கல்வி விவாதத்தை ஆரம்பிக்க வேண்டிய சமயம் இதுவே…… வீட்டுக்குள் நடக்கும் விவாதங்களும், நம் நண்பர்களிடம் நடத்தும் விவாதங்களும் பெரும் விழிப்புணர்வை அவர்களுக்கு உண்டாக்கும்… அது நமது அரசியல் கடமையாகிறது… கடந்த சில வாரங்களுக்கு முன்பு ம.க.இ.க கட்சியினர் தனியார் கல்வி கொள்கையை எதிர்த்து போராட்டங்களை நடத்தி இருந்தனர்.. பல கட்டுரைகளை அவர்கள் வெளிக் கொணர்ந்தும் இருக்கிறார்கள்… நம்மைச் சுற்றியுள்ள மக்களிடம் விவாதங்களை ஆரம்பிப்போம்.. உங்களால் ஏற்றுக்கொள்ளதக்கதாய் இருந்தால் இந்த செய்தியை உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள், பரப்புங்கள்.





Leave a Reply