தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த கோரி மாபெரும் ஒன்று கூடல்

- in பரப்புரை

ஐ.நாவும் சர்வதேச சமூகமும் 2002ம் ஆண்டு தமிழீழத்திற்கு கொடுக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரத்தை மறுத்து, இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாதத்தின் கீழ் வாழ தமிழர்களை வலியுறுத்தி வருகிறது. இந்த போக்கை கண்டித்து இனப்படுகொலை செய்த சிங்களவர்களுடன் வாழ முடியாது என்பதை அறிவித்து தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை கோரியும், தமிழீழத்திற்க்கு இடைக்கால நிர்வாக சபை அமைத்திட கோரியும் மாபெரும் ஒன்று கூடல் மார்ச் 17ம் தேதி 2013 அன்று மே 17 இயக்கத்தால் நடத்தப்பட்டது. 
இந்த ஒன்று கூடலில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு.பழ.நெடுமாறன் அய்யா, ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் திரு வைகோ அய்யா, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை 
நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன், தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சியின் தோழர் அருணபாரதி, SDPI யின் மாநிலச் செயலாளர் தோழர் அமீர் ஹம்சா, இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் தலைவர் தோழர் உமர் கயான், காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் மகேஷ், ‘பாலம்’ கல்யாணசுந்தரம் அய்யா, பீகார் மாநில சட்டமன்ற உறுப்பினர் தோழர் சோம் பிரகாஷ் சிங், வழக்கறிஞர்கள் கயல், சுந்தர்ராஜன், மக்கள் சக்தி தோழர் பிரபாகரன், இயக்குனர்கள் தாமிரா, ராம், சமூக வலைத்தள தோழர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள், உணர்வாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு மே 17 இயக்கம் வைத்த கோரிக்கைகளான பொது வாக்கெடுப்பு மற்றும் இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்த வலியுறுத்தினர்.











1 Comment

Leave a Reply