இதில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு சனநாயக ஆற்றல்களான தமிழ்தேச பொதுவுடைமை கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் மற்றும் திராவிட விடுதலை இயக்கத்தின் காஞ்சி மாவட்ட தலைவர் தோழர் டேவிட் பெரியார் மற்றும் தமிழுணர்வாளர்கள் பங்குபெற்று கைதாகினர்..
கோரிக்கைகள்:
1.குஜராத்தில் இஸ்லாமியர்களை படுகொலை செய்த இந்தியாவின் இராசபட்சே நரேந்திர மோடியை மறக்க முடியாது,மன்னிக்க முடியாது. ”இனப்படுகொலையாளியே திரும்பி போ”.
2.தனது மாநிலமான குஜராத்தில் வளர்ச்சி என்ற பெயரில் உள்ளூரிலுள்ள சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிக்கும் மோடி பிரதமரானால் ஒட்டுமொத்த இந்தியாவையும் தனியார் கம்பெனிகளுக்கு தாரைவார்த்து விடுவார்.ஆகவே அவர் பிரதமராவதை இந்திய மக்கள் தடுக்க வேண்டும்.
3.தமீழத்திலும்,தமிழகத்திலும் தமிழர்கள் பிரச்சனையென்றால் காங்கிரசின் மக்கள் விரோத கொள்கையையே தனது கொள்கையாக கடைபிடித்து வரும் பாஜகவை தமிழக மக்கள் காங்கிரஸை புறக்கணித்ததைப்போல புறக்கணிக்க வேண்டும்.
4.தமிழினம் உள்பட பல்வேறு தேசிய இனங்கள் உள்ள இந்தியாவில் இந்துத்துவாவின் வழியான இந்தியர் என்ற ஒரே இந்தியா,ஒரே இனம் என்ற ஒற்றைத்தன்மையை காட்டமுயலுகிறது பாஜக.இந்த கொள்கையில் தீவிரமாக இருப்பவர் நரேந்திர மோடி.