இனப்படுகொலைக்கான மக்கள் தீர்ப்பாயத்தின் இந்த சர்வதேச விசாரணை முயற்சியை தொடர்ந்து செய்து வரும் சிங்களத் தோழர்கள் விராஜ் மெண்டிஸ், ஜூட் லால் பெர்னாண்டோவிற்கு வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவிப்போம். அயராது உழைக்கும் அவர்களது பங்களிப்பு நிச்சயம் ஈழத்தில் நிகழ்ந்த அநீதிகளை சர்வதேச அரங்கில் வெளிக்கொணரும்.
சிங்களத் தோழர்கள், விராஜ் மெண்டிஸ், ஜுட் லால் பெர்னாண்டோ ஆகியோர் தமது பெருமுயற்சியால் 2009 இறுதியில் டப்ளினில் மக்கள்தீர்ப்பாயத்தினை நடத்தி சர்வதேசத்தினை அமெரிக்க-இங்கிலாந்து -ஐரோப்பிய ஒன்றீயத்தினை அம்பலப்படுத்தினார்கள்.
போர்க்குற்றம் என்பதாக மட்டுமே சுருக்கினால் நமது விடுதலை என்பது எட்டாக்கனியாக மாறும் என்பதை 2011இல் ஐ.நா அறிக்கை வெளியான உடனேயே முன்வைத்தோம்.. போர்க்குற்றம் என்கிற பதத்தினை ஏற்க முடியாது என்று பேசிய பொழுது மே17 இயக்கத்தினை தனிமைப்படுத்தும் செயல் வெகுவேகமாகவே நடந்தது. ஆனால் இரண்டு வருடங்களுக்கு பின்னர் உலகின் மிக முக்கிய மனித உரிமையாளார்கள், சிந்தனையாளார்கள், செயல்பாட்டாளர்கள் என பல்வேறு நாடுகளில் இருந்து நீதிபதிகளாக வந்தவர்கள் ஆழமாக ஆராய்ந்த பின்னர் இதை ’இனப்படுகொலை’ என அறிவித்திருக்கிறார்கள். இது முக்கியமானது. வரலாற்று சிறப்பு மிக்கது.
மே17 இயக்கம்
Part 01 – JUDGEMENT- permanent peoples tribunal held at Bremen, Germany
Part 02 – JUDGEMENT- permanent peoples tribunal held at Bremen, Germany
TamilNet News :
Sri Lanka guilty of genocide: PPT verdict
[TamilNet, Tuesday, 10 December 2013, 11:08 GMT]After an assessment of evidences presented by eyewitnesses and experts, judges of the Permanent People’s Tribunal reached unanimous consensus that the Sri Lankan state was guilty of crimes of genocide against the Eezham Tamils and that the genocide is continuing even after the end of the military operations against the LTTE. Concluding the four day session with a press conference at Bremen on Tuesday, the judges also noted that the Sri Lankan military did not have capacity to commit genocide on its own and that it was supported by the UK-USA-India axis. While the judges held the USA and the UK to be complicit in the genocidal process, they were of the opinion that more evidence was needed as regards India’s role.The Eezham Tamils were killed not as individuals but as a group and the target of the Sri Lankan state was the destruction of the identity of this group, the findings noted.
The judges took care to highlight the significance of the usage of the term ‘Eelam Tamil’ to refer to the genocide-affected Tamils from the North-East of the island of Sri Lanka.
Noting that the protracted history of genocide extended much before the beginning of the armed conflict, the Tribunal asserted that the Sri Lankan state continued to commit acts of genocide after the end of the “genocidal onslaught” against the de-facto state of the LTTE.
The Verdict: Full text of the PPT Press Statement
This, however, was not possible without the assistance of world powers.
The UK’s historical role in assisting Sri Lanka, its complicity in procuring arms in aiding and shielding the perpetrator of genocide was discussed.
The judges also noted that the USA’s military-to-military relationship with Sri Lanka enhanced the capacity of the latter to commit genocide. The Tribunal was of the opinion that US role in the peace process tilted balance in favour of the Sri Lankan state and led to the massacre of Tamils in 2009.
However, the Tribunal wished to postpone deliberations on India’s role in the genocide pending submission of potential evidence.
Responding to a question from TamilNet on the failure of the Responsibility to Protect (R2P) in Sri Lanka, Dr. Denis Halliday, one of the judges, opined that the R2P doctrine introduced by Gareth Evans was a cover for intervention but not genuine humanitarian intervention, as evidenced in the case of genocide against Eezham Tamils in the island.
The UN has failed the Eezham Tamils and maybe even complicit in the genocide, he said, also noting the failure of the International Community to take appropriate steps.
Burmese democracy activist Maung Zarni, answering a question on the use of the label of ‘terrorism’ to the LTTE, said that terrorism was a “discursive, strategic and political term” cooked-up by world powers as regards to their geo-political interests.
Comparing LTTE and Nelson Mandela’s ANC, he said that a whole movement cannot be labelled as terrorist on the basis of few acts.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36878
வெப்துனியா செய்தி :
இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே! – மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு
புதன், 11 டிசம்பர் 2013( 17:33 IST )
2009 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என ரோம் நகரை தலைமையமாகக் கொண்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், மனித உரிமைகள் தினமான இன்று ஜேர்மனி நாட்டின் பிறேமன் நகரில் அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக, ஜெர்மனியின் பெரிமனில் இந்த தீர்ப்பாயத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டன. இலங்கை அரசாங்கம் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றமொன்று முதல் தடவையாக இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. சர்வதேச மனித உரிமை ஒன்றியம் மற்றும் இலங்கை சமாதானத்திற்கான ஐரிஸ் ஃபோரம் ஆகியன கூட்டாக இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன. மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை பொதுவாக சர்வதேச நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பது வழமையானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மாநாட்டிற்கு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுமா என்பது பற்றி உறுதிப்பட எதனையும் கூற முடியாது என மக்கள் தீர்ப்பாய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை சுதந்திர போராட்ட வீரர்களாகவோ அல்லது பயங்கரவாதிகளாகவோ அடையாளப்படுத்த முடியாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://tamil.webdunia.com/newsworld/news/international/1312/11/1131211033_1.htm