பெண்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து நமது குரல் ஒலிக்கப்பட வேண்டும்.. பெண்களை பாதுகாப்பதற்கான சட்டவிதிகளும், அதற்கு முக்கியத்துவம் அளிக்காத அரசினையும் கேள்விக்குள்ளாக்குவதும் அவசியம். இதற்கான சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதும் காலத்தின் கட்டாயம். தொடர் விவாதங்களும், போராட்டங்களும் பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யவைப்பதற்கான வழியாக அமையும்.
இதற்கான பணியை நாம் அனைவரும் தொடர்ந்து எடுப்பது அவசியம்… நம் சமூகத்தின் சரிபாதி பாதுகாப்பின்றியும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாவதை தடுக்க- கண்டிக்க முன்வருவோம்… அனைவரையும் அழைக்கிறோம்.
நாள் : 09-01-2014
இடம் : பல்லாவரம், சென்னை,
காலம் : வியாழன் மாலை 4 மணி,
– மே பதினேழு இயக்கம். – 9600781111
1. காரைக்கால் சம்பவத்தில் குற்றவாளிகளையும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அனைவரையும் கைது செய்து தனி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
2. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணத்தையும், இலவச மருத்துவ சிகிச்சையினையும் வழங்க வேண்டும்.
3. பெண்கள் உரிமைகள் தொடர்பான வர்மா கமிட்டியின் அறிக்கையினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
4. பெண்கள் உரிமைகள் தொடர்பான கல்வியினை பள்ளிகளில் இருந்தே பாடமாக்க வேண்டும்.
5. பெண்களை போகப்பொருளாக, பண்டமாக சித்தரிக்கும் நிகழ்வுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.