மே17 இயக்கம்.
முருகதாசன் நினைவு நாளில் ஐ.நாவின் துரோகத்தினை உலகிற்கு அம்பலப்படுத்துவோம்.. முத்துக்குமாரும் முருகதாசனும் தமிழ்ச் சமூகத்தின் இணையற்ற போராளிகள்… இவர்கள் தினத்தில் களத்தில் நிற்போம்.
தொடந்து ஐ.நா செய்து வரும் துரோகம், இலங்கைக்கு மறைமுகமாக செய்துவரும் ஆதரவு ஆகியவற்றினை 2009, பிப் 12இல் உலகிற்கு உணர்த்தும் வகையில் ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்சில் முன்பு தன்னைக் கொடுத்து உலகிற்கு உரைத்த வீரனின் தினத்தில், தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்லாமல் உலகின் ஒடுக்கப்ப்டுகிற இனங்களுக்காக குரல் கொடுத்த வீரனின் தினத்தில் முற்றுகை இடுவோம்.
கடந்த வருடம் தோழமை அமைப்புகளுடன் சென்னை, மும்பை (விழித்தெழு நண்பர்கள் இயக்கம்) , தில்லி , பெங்களூர், நியூயார்க், பாரீஸ் என பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினோம். இம்முறை இன்னும் களத்தினை விரிவு செய்து உலகின் பல்வேறு நகரங்களில் முற்றுகை இடுவோம். தமிழ்ச் சமூகம் சர்வதேசச் சமூகமாக எழுந்து நிற்கட்டும்
நாம் வெல்வோம்.
மே பதினேழு இயக்கம்.
அழைப்பு விடுக்கிறோம்
ஐ.நா அலுவலக முற்றுகைப் போராட்டத்தினை விரிவுபடுத்த கைகோருங்கள் தோழர்களே… முருகதாசன் நினைவு நாளில் ஐ.நாவிற்கு கண்டனம் தெரிவிக்கவும், பொதுவாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை நடத்தவும் களம் காணுவோம்.
மேற்குலகம், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, மாலத்தீவு, மொரிசீயஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட தமிழர்கள் வாழும் நாடுகளில் ஐ.நாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்,
மற்றும், இந்தியாவின் நகரங்கள்-சென்னை, மும்பை,தில்லி, பெங்களூர், ஹைதராபாத் இதர வாய்ப்பிருக்கும் நகரங்களில் கூடுவோம்.
சர்வதேச தமிழர்களுக்கும், இயக்கங்கள், கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
கடந்த வருடம் நடைபெற்ற போராட்டம் ஐ.நாவின் உயர் அதிகாரிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும் பான் – கி – மூன் பகிரங்கமாக ஐ.நா பொதுச்சபையில் இலங்கை விடயத்தில் ஐ.நா தோற்றிருக்கிறது என்று பகிரங்கமாக விமர்சனமேற்றார். இதன் பிறகு நாம் நமது போராட்ட வலிமை மூலமாக இனப்படுகொலைக்கான நீதியை வெல்லும் வரை ஓயப்போவதில்லை என்போம்.
உங்களது இயக்க-கட்சி பெயரிலேயே, அடையாளத்திலேயே போராட்டம் நடத்துங்கள்…
தமிழர்கள் இணைவோம்,
வலிமை பெருவோம்,
எதிரியை வீழ்த்துவோம்,
நாம் வெல்வோம்.