வரும் மார்ச் மாதத்தில் வரும் ஐநா மனித உரிமை மன்றத்தில் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைதான் வேண்டும் ஏன்?.. போர்க்குற்றவிசாரணை என்பதை ஏன் நாம் எதிர்க்கவேண்டும்..?…
போர்குற்றத்திற்க்கான விசாரணையா அல்லது இனப்படுகொலைக்கான விசாரணையா என்பது இங்கு அவரவர் விருப்பம் சார்ந்தது பேசப்படுகிறது. அனால் நாம் என்ன கோரிக்கையை வைத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அது தீர்வை நோக்கி நகர்த்தும் என்பதை ஐநாவின் நடைமுறை விதியை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
உதாரணமாக 1994ஆம் ஆண்டில் ருவாண்டாவில் துட்சி மக்கள் மீது அங்குள்ள இன்னொரு இனக்குழுவான ஊட்டு மக்கள் நடத்திய இனப்படுகொலைக்காக ஐநா அவையில் ஒரு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது.அந்த தீர்ப்பாயத்திற்க்கு கொடுக்கப்பட்ட வேலையென்னவென்றால் மிகத்தெளிவாக சொன்னது இனப்படுகொலைக்கான விசாரணையை நடத்த வேண்டுமென்று 20ஆண்டுகள் ஆகியும் இன்றும் அது நடந்துக்கொண்டிருக்கிறது.
இதில் ருவாண்டாவில் வாழ்ந்த துட்சி மக்கள் தங்கள் மீது மீண்டும் ஊட்டு இனமக்கள் திரும்ப தாக்குதல் நடத்துவார்கள் என்று பயந்து பக்கத்திலிருந்த சோசலிச காங்கோ நாட்டிற்க்கு அகதியாக சென்றனர்.அங்கேயும் இந்த துட்சி இனமக்களுக்கு எதிராக 1997முதல் 2003 வரை காங்கோ அரசு ருவாண்டா இராணுவத்துடன் சேர்ந்து இனப்படுகொலையை நடத்தியது.ஆனால் இது வெளியில் தெரியவில்லை அப்படியிருக்கும் பொழுது ஒரு மிகப்பெரிய மனித புதைகுழி 2004ல் அங்கு கண்டுபிடிக்கப்பட்டு அதன்படி விசாரணை நடைபெறும்போது ஊட்டு மக்களின் மீது மிகப்பெரிய இனப்படுகொலை நடந்திருக்கிறது என்ற உண்மையை ஐநா சர்வதேசத்திற்க்கு அறிவிக்கிறது.
ஆனால் அதை விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் எனும்போது ஏற்கனவே ருவாண்டா அரசின் மீது விசாரணை நடைபெறுகிறதே அதே விசாரணை ஆணையத்தில் இந்த இனப்படுகொலையும் சேர்ந்து விசாரிக்கவேண்டும் என்ற விவாதம் ஐநாவில் வரும்போது ஐநா மிக தெளிவாக சொன்னது இது ருவாண்டாவில் 1994ல் நடைபெற்ற இனப்படுகொலையை மட்டுமே விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் இதற்க்கு அதை மட்டுமே விசாரிக்க அதிகாரமுள்ளது.வேறு எதையும் விசாரிக்க இதற்க்கு அதிகாரமில்லை இதுதான் ஐநாவின் விதியென்று மறுத்துவிட்டது.
இப்படியாக ஆதாரங்கள் எல்லாம் மிக தெளிவாக இருந்தும் அந்த இனப்படுகொலையை நிகழ்த்திய அதே ஊட்டு இனக்குழுவின் மேல் ஏற்கனவே நடைபெறுகிற ஒரு விசாரணையில் இதையும் சேர்த்து விசாரிக்க முடியாது என்பதுதான் ஐநாவின் விதி.இதில் மேலும் குறிப்பாக ஐநாவில் எந்த ஒரு தீர்மானம் வந்தாலும் அந்த தீர்மானத்தில் இறுதியாக கடைசி வரியில் THIS IS TO REMAIN SEIZE OF MATTER அதாவது இந்த பிரச்சனையை இதற்க்கு மேல் விவாதிக்க வேண்டியதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முடித்திருப்பார்கள்.இதை போனவருடமோ அல்லது அதற்க்கு முந்தைய வருடமோ வந்த ஐநாவின் தீர்மானத்தில் பார்த்தால் தெரியும்.எனவே ஒரு முறை போர்குற்றத்திற்க்கான விசாரணை என்று வந்துவிட்டால் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசியல் தீர்வை நோக்கி நகர்த்தும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை நாம் கோரமுடியாது.
எனவே எதாவது ஒன்று முதலில் வரட்டும் என்று நாம் இருந்தால் அது தீர்வை அடையாமல் போகத்தான் வழிவகுக்கும்.நமது ஆசைகள் வேறாகயிருக்கலாம் ஆனால் ஐநாவின் விதி என்ன அது மேற்க்கொண்டு இதை நகர்த்துமா இல்லை இதோடு முடித்து வைத்துவிடுமா என்பதை பாதிக்கப்பட்ட சமூகமாகிய நாம் தான் கவனமாக இருந்து ஆராயவேண்டும்.
இதில் போர்குற்றம் அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று ஆரம்பித்து விசாரணை நடந்தால் அது இரண்டு தரப்பில் உள்ள யாரவது ஒருவரை தண்டிப்பதில் முடியும் இல்லையேல் இரண்டு தரப்பும் தவறு செய்திருக்கிறது என்று முடியும் இதுதான் கடந்தகால வரலாறு.
ஆனால் இனப்படுகொலை விசாரணையென்று வந்தால் தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் தனிநாடு அமைத்துக்கொள்ள பொதுவாக்கெடுப்பு என்ற தீர்வை நோக்கி நகரும்.மேலும் இனப்படுகொலை குற்றம் செய்தவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் தண்டிக்கப்படும் சுழலும் வரும்.
இதைதான் கடந்த 2013ஆம் வருடம் டிச 7ம்தேதி முதல் டிச்.10ம் தேதி வரை ஜெர்மனியின் பிரேமன் நகரில் நடைபெற்ற ”நிரந்த மக்கள் தீர்ப்பாயத்தில்” பல்வேறு நாட்டில் நீதிபதிகளாகவும்,சட்ட வல்லுனர்களாகவும் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களாகவும் இருந்தவர்கள் ஈழத்தில் நடந்தது ஒரு இனப்படுகொலைதான் அது இன்றும் தொடர்கிறது என்ற பல்வேறு விதமான விசாரணைகளுக்கு பின் தீர்ப்பளித்தது.மேலும் தமிழர்கள் இலங்கையில் தனித்த தேசிய இனம் எனவே சர்வதேச சட்டத்தின்படி அவர்கள் தங்கள் சுய நிர்ணய உரிமை(தனிநாட்டுக்கான)பெற்றுக்கொள்ள உரிமையுள்ளவர்கள் என்று திர்ப்பளித்துள்ளனர்.
எனவே நாம் இந்த தீர்ப்பாயத்தின் துணைகொண்டு இனப்படுகொலைக்கான சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் எனவும் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும் உரக்க சொல்வோம்.நமது போராட்டத்தை அதை நோக்கி நடத்துவோம். தமிழீழத்தை வெல்வோம்.
உமர்
மே 17 இயக்கம்
ஐ.நா அலுவலக முற்றுகைப் போராட்டத்தினை விரிவுபடுத்த கைகோருங்கள் தோழர்களே…
கடந்த ஆண்டு ஐ.நா தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு இனப்படுகொலைக்கு துணை போன அதிகாரிகளை அம்பலப்படுத்தி நாம் செய்த போராட்டம் பல நகர்வுகளையும் தெளிவுகளையும் நமக்கு சாதகமாக நகர்தியிருக்கின்றன.
கடந்த வருடம் நாம் நடத்திய போராட்டம் ஐ.நாவின் உயர் அதிகாரிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும் பான் – கி – மூன் பகிரங்கமாக ஐ.நா பொதுச்சபையில் இலங்கை விடயத்தில் ஐ.நா தோற்றிருக்கிறது என்று பகிரங்கமாக விமர்சனமேற்றார். இதன் பிறகு நாம் நமது போராட்ட வலிமை மூலமாக இனப்படுகொலைக்கான நீதியை வெல்லும் வரை ஓயப்போவதில்லை என்போம்.
அடுத்த கட்டமாக நமது விடுதலையை வென்றெடுக்க முருகதாசன் நினைவு நாளில் ஐ.நாவிற்கு கண்டனம் தெரிவிக்கவும், பொதுவாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை நடத்தவும் களம் காணுவோம். FEB 12 ஆம் தியதி நியூயார்க் இல் உள்ள ஐ.நாவின் தலைமை செயலகத்தை நாம் ஒருங்கிணைந்து முற்றுகையிடுவோம்.
ஐ.நாவின் தலைமையகத்தை இந்த தருணத்தில் முற்றுகையிட வேண்டியது மிகவும் இன்றியமையானதாக இருக்கிறது, இதனால் நியூயார்க் நகரின் முற்றுகைக்கு தங்கள் பங்கேற்று உதவுமாறு கேட்டு கொள்கிறோம்,
மேற்குலகம், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, மாலத்தீவு, மொரிசீயஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட தமிழர்கள் வாழும் நாடுகளில் ஐ.நாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்,
மற்றும், இந்தியாவின் நகரங்கள்-சென்னை, மும்பை,தில்லி, பெங்களூர், ஹைதராபாத் இதர வாய்ப்பிருக்கும் நகரங்களில் கூடுவோம்.
சர்வதேச தமிழர்களுக்கும், இயக்கங்கள், கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர்களது இயக்க-கட்சி பெயரிலேயே, அடையாளத்திலேயே போராட்டம் நடத்துவதற்கு கோரியிருக்கிறோம்.
முருகதாசன் நினைவு நாளில் ஐ.நாவின் துரோகத்தினை உலகிற்கு அம்பலப்படுத்துவோம்.. முத்துக்குமாரும் முருகதாசனும் தமிழ்ச் சமூகத்தின் இணையற்ற போராளிகள்…
தொடந்து ஐ.நா செய்து வரும் துரோகம், இலங்கைக்கு மறைமுகமாக செய்துவரும் ஆதரவு ஆகியவற்றினை 2009, பிப் 12இல் உலகிற்கு உணர்த்தும் வகையில் ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்சில் முன்பு தன்னைக் கொடுத்து உலகிற்கு உரைத்த வீரனின் தினத்தில், தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்லாமல் உலகின் ஒடுக்கப்படுகிற இனங்களுக்காக குரல் கொடுத்த வீரனின் தினத்தில் முற்றுகை இடுவோம்.
கடந்த வருடம் தோழமை அமைப்புகளுடன் சென்னை, மும்பை (விழித்தெழு நண்பர்கள் இயக்கம்) , தில்லி , பெங்களூர், நியூயார்க், பாரீஸ் என பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டம் போன்று இம்முறை களத்தினை இன்னும் விரிவு செய்து உலகின் பல்வேறு நகரங்களில் முற்றுகை இடுவோம். தமிழ்ச் சமூகம் சர்வதேசச் சமூகமாக எழுந்து நிற்கட்டும்.
தமிழர்கள் இணைவோம்,
வலிமை பெருவோம்,
எதிரியை வீழ்த்துவோம்,
நாம் வெல்வோம்.
மே பதினேழு இயக்கம்
Demanding Justice, Demanding Freedom
UN – From “Complicity with Evil” to “Dancing with Devils”
– Declare UN referendum for Independent Tamil Eelam Now.
– International Independent Investigation on Srilanka for Genocide, Crimes against Humanity, & War Crimes.
– Prosecute Mr.Ban-Ki-Moon, Mr.Vijay Nambiar, Mr.John Holmes, Mr.Takesi, Mr.Neil Buhne & other officials who were complicit in Eelam Tamil Genocide based on Petrie Report & Brahimi Report..
Siege on UN Headquarters – New York – Feb 12 2014
Four years have passed since the genocide of Tamils in Eelam and the international community has yet to deliver justice. Not even a proper investigation has been conducted and their plight pronounced to the world
The Secretary General himself is guilty of grave misconduct in this issue.
Lets join hands in making UN more Humane with the below demand
o Declare UN referendum for Independent Tamil Eelam Now.
o International Independent Investigation on Srilanka for Genocide, Crimes against Humanity, & War Crimes.
Beseige on UN Office for Tamil Justice
Wednesday, February 12 at 5:00pm in UTC+11
UNHCR, Suite 601, 66 King Street, Sydney
Warcrime is a deceitful prototype
Do not get deceived by the warcrime paradigm. It’s the prototypical model of the oppressor. We Tamils have to be uncompromisingly rock-solid on our demand.
Our demand is
1. Conduct Referendum for Independent Tamil Eelam
2. International investigation on Genocide
And nothing less than that.
‘Protest ‘ on Feb 12 @ 10am, Mumbai UN Office for its complicit in Eelam Tamil Genocide.
Ban-ki-Moon, John Holmes, Vijay Nambiar and other high officials of UNHQ found complicit in Eelam Tamil Genocide by Charles Petrie Report constituted by UN.
பிப் 12இல் உலகமெங்கும் ஐநா அலுவலங்கள் முற்றுகை:
இலங்கை இனப்படுகொலை தொடர்பக ஐநாவின் பங்கை ஆராயந்து அறிக்கை வெளியிட்ட சார்லஸ் பெட்ரியின் அறிக்கையை மறைத்து வெளியிட்ட ஐநாவின் அயோக்கியத்தனத்தை கடந்த வருடம் மே 17 இயக்கம் வெளிகொணர்ந்து உலகமெங்கும் உள்ள ஐநா அலுவலகங்களை தோழமைகளுடன் சேர்ந்து முற்றுகையிட்டோம்.இதன் விளைவாக பான்கீ மூனுக்கு சார்லஸ் பெட்ரியின் அறிக்கையை வெளியிட்டதற்க்கு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றத்தை தடுத்து இலங்கை விவாகரத்தில் ஐநா தோல்வியடைந்துவிட்டது என ஒத்துக்கொள்ள வைத்த நெருக்கடியை நமது கடந்த வருட போராட்டமும் ஏற்படுத்தியது.
இதை அடுத்த ஐநாவின் தலைமை அதிகாரி ஜான் இலியசன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஐநாவின் பிழைகள் மற்றும் பெட்ரி அறிக்கையை மீதான விசாரணையை முடித்து ஒரு அறிக்கை அளித்தது அதனையும் வெளியிட ஐநா மறுத்தது.
இதனையடுத்து கடந்த ஜீன் மாதம் ஐநாவின் நவநீதம்பிள்ளைக்கும் இதர அதிகாரிகளுக்கும் மே 17 இயக்கம் நெருக்கடி கொடுத்தது.இதனால் ஒரிரு நாட்களில் அந்த அறிக்கையை வெளியிட்டு அதன்படி இலங்கை மீதும் உடந்தையாக இருந்த ஐநா அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்கவும் முயற்சி நடந்தது.இச்சமயத்தில் கடந்த அக்டோபர்-நவம்பர் மாதம் இந்த அதிகாரிகளை இலங்கையில் சந்தித்த கோத்தபய இராசபக்சே அந்த முயற்சியை நீர்த்துபோக செய்தார்.இதனால் ஐநா மறுபடியும் இலங்கை தொடர்பாக மென்போக்கை கடைபிடித்து வருகிறது.
இச்சமயத்தில் தமிழ் சமூகம் இந்த ஐநாவை நெருக்கடிக்கும் கேள்விக்கும் உள்ளாக்கும் பொழுது போலியான ’போர்குற்ற விசாரணை’ என்பது நேர்மையான ’இனப்படுகொலைக்கான விசாரணை’ என்ற நிலைபாட்டிற்க்கு மாறும்.
இதற்காக இந்த வருடமும் ஐநா அலுவகங்களை பிப் 12 முருகதாசன் நினைவு நாளில் முற்றுகையிட மே பதினேழு இயக்கம் முடிவு செய்துள்ளது.இதில் அனைத்து தோழமை கட்சிகள் மற்றும் இயக்கங்களும் தங்களது கட்சி அடையாளங்களுடன் கலந்து கொள்கின்றனர்.
இப்போராட்டம் டெல்லி,மும்பை,பெங்களூர்,சென்னை உட்பட இந்தியாவிலும் ஆஸ்திரேலியா அமெரிக்கா போன்ற இதர நாடுகளிலும் நடக்கிறது..
சென்னையில்
இடம்: அடையாறு யுனிசெப் அலுவலகம்,கஸ்தூரிபாய் நகர்,அடையார்.
மத்திய கைலாசம் இரயில் நிலையம் அருகில்
நாள்:12.02.14 புதன்கிழமை காலை 10மணிக்கு
அனைவரும் தமிழர்களாய் திரள்வோம்
தமிழீழத்தை வெல்வோம்
முருகதாசன் உயிர் நீத்து உறக்கச் சொன்ன கோரிக்கையை உயர்த்திப் பிடித்து உலகை திரும்பச் செய்ய வா… ரோசமும், மானமும் உள்ள தமிழர்களாய் ஐ.நாவின் கிரிமினல்களுக்கு நெருக்கடி கொடுப்போம்.
மே பதினேழு இயக்கம் -இன அழிப்பிற்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்- மும்பை விழித்தெழு இயக்கம் ஆகியவை ஒருங்கிணைக்க,
இவர்களுடன் ,
ததேபொக, தஓவி, திவிக, தபெதிக, மற்றும் இதர இயக்கங்களுடன் கட்சிகளாக மதிமுக,தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர், தமுமுக, எஸ்டிபிஐ, விடுதலை தமிழ்ப் புலிகள், சீக்கிய இளைஞர் இயக்கம், நியூ சோசலிஸ்ட் ஆல்டர்நேடிவ், மாணவர் இயக்கங்கள் மற்றும் ஏனைய கட்சி இயக்கங்களுடன் உலகெங்கும் முற்றுகை இடுகிறோம். (விடுபட்ட இயக்க பெயர்கள்-ஏதேனும் இருந்தால்- இணைத்துக் கொள்கிறோம். )
இனப்படுகொலைக்கு நீதி கேட்க விரும்புகின்ற தோழர்கள் அனைவரும் இணைக.. கட்சி, சாதியாக பிரிந்து நின்ற 2009 போல அல்லாமல் அனைவரும் கைகோர்ப்போம்.
பிப்ரவரி 12இல்
சென்னை – யுனிசெப் , அடையாறு , இந்திரா நகர், அம்பிகா அப்பளம் எதிரில்
பெங்களூர் – டவுன் ஹால், எம் ஜி சாலை
மும்பை -யுனிசெப் , கிழக்கு அந்தேரி, பர்சி பஞ்சாயத் சாலை,
நியூயார்க் – ஐ.நா தலைமை அலுவலகம்
சிட்னி – ஐ.நா அகதிகளுக்கான குழு , 66, கிங் சாலை,
புது தில்லியில் பிப்14இல் நிகழ்கிறது. லோதி சாலை, தில்லி.