அமெரிக்க அயோக்கிய தீர்மானமும் தமிழர்களின் அடுத்தகட்ட நகர்வுகளும் – கருத்தரங்கம்

- in பரப்புரை

தமிழீழப் போராட்டத்தை சிதைப்பதில் சர்வதேச சக்திகள் ஒருங்கிணைந்து மேற்கொள்வதின் ஒரு அங்கமாக இந்த ஆண்டும் அமெரிக்க அரசு ஒரு அயோக்கியத் தீர்மானத்தினை முன்வைக்கின்றது. இனப்படுகொலைகளை நடத்திய கொடுங்கோலர்களையும் அவர்களுக்கு துணை நின்றவர்களையும், நிற்பவர்களையும் தண்டிக்க எந்த நகர்வினையும் பரிந்துரைக்காத இந்த அயோக்கியத் தீர்மானம், பாதிக்கப்பட்ட மக்களின் அரசியல் தீர்வுகளைப் பற்றி இதுவரை எதுவும் பேசாமல் இருந்ததோடு மட்டுமின்றி, இம்முறை தமிழர்களின் தேசிய இன அடையாளத்தையே மறுத்து ஒரு தீர்மானமாக ஐ.நா.வின் மனித உரிமை மன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது.

இன்றையச் சூழலில், தீர்மானத்தின் மூலம் நடந்தேறக்கூடிய பாதிப்புகள் பற்றியும், இலங்கை அரசு காக்கப்படுவது பற்றியும் ஒரு விரிவான கருத்துப் பரிமாற்றம் தேவைப்படுகின்றது. தமிழர்களின் அரசியல் தீர்வுகள் மறுக்கப்படும் சூழலில், அதனை எதிர்கொள்வது பற்றியும், அடுத்தக்கட்டமாக நாம் எப்படி செயல்படுவது என்பது குறித்தும் ஒரு கருத்தரங்கத்தினை மே பதினேழு இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
இந்தக் கருத்தங்கரத்தில் பங்கேற்கும்படி தோழர்களை அழைக்கின்றோம்.

நாள்: ஞாயிறு (16/03/2014)
நேரம்: மாலை 4:30 மணிக்கு,
இடம்: செ. தெ. நாயகம் பள்ளி. வெங்கட்நாராயணா தெரு, (நடேசன் பூங்கா அருகில்)
 தி.நகர், சென்னை.

அமெரிக்காவின் சர்வதேச நகர்வுகள் குறித்தும், அமெரிக்க தீர்மானத்தின் பகுதிகள் குறித்தும், தமிழர்களின் நகர்வுகள், ஈழ இனப்படுகொலையில் அமெரிக்காவின் பங்குகள் குறித்தும் தரவுகளின் அடிப்படையில் விளக்கும் கருத்தரங்கம் மார்ச் 16 மாலை மே 17 இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது. அமெரிக்க தீர்மானத்தை ஏன் எதிர்க்க வேண்டும், அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் ஏன், இந்தியா தமிழர்களுக்கு ஆதரவான தீர்மானத்தை கொண்டு வருமா என முன்வைக்கப்படுகிற கேள்விகளுக்குமான விளக்கமும் அளிக்கப்பட்டது. மே 17 இயக்கத் தோழர்கள் உமர் மற்றும் திருமுருகன் அனைத்தையும் விளக்கி உரையாற்றினார். தோழர் உமார்கயான், இயக்குனர் வ.கீரா, தோழர் சந்திரா தங்கராஜ் ஆகியோரும் உரையாற்றினர்.
நிகழ்வின் இறுதியில் மே 17 இயக்கத் தோழர்களின் 8 மாத உழைப்பில், சர்வதேச சட்ட ஆலோசகர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில், சர்வதேச விதிகள் பின்பற்றப்பட்டு உருவாக்கப்பட்ட, தமிழர்களின் உண்மையான கோரிக்கைகள் அடங்கிய மாதிரி தீர்மானம் வெளியிடப்பட்டது.

 

Leave a Reply