மதுரையில் இசைப்பிரியாவுக்கு நீதிகேட்டு ஒன்றுகூடல் – படங்கள்

- in பரப்புரை
இசைப்பிரியா மற்றும் இதர தமிழீழப்பெண்கள், குழந்தைகள், ஈழக்குடிமக்க்கள் மீது நிகழ்த்தப்பட்ட சித்தரவதை, பாலியல்வன்முறைக்கு எதிராகவும், தமிழீழ விடுதலையை அறிவிக்கக் கோரியும்  ஐநாவின் சித்திரவதைக்கு எதிரான நாளில் நினைவேந்தல் நடைபெற்றது

நாள் : 26-6-2014
இடம்: மீனாட்சி பஜார், மதுரை
ஒருங்கிணைப்பு: மே பதினேழு இயக்கம்

ஊடக செய்தி :

சித்ரவதைகளுக்கு ஆளாகி பலியான ஈழத்தமிழ் பெண்கள் மதுரையில் அஞ்சலி
பதிவு செய்த நேரம்:2014-06-27 10:38:29

மதுரை, : சித்ரவதைக்கு எதிரான ஐநாவின் மனித உரிமை தினத்தை ஒட்டி இசைப்பிரியா உள்ளிட்ட ஈழத்தமிழ்பெண்கள் மீது நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடுமைகளுக்கு நீதி கேட்டு மதுரையில் நேற்று மே பதினெழு இயக்கம் சார்பில் அஞ்சலி செலுத் தும் நிகழ்ச்சி மதுரை மீனாட்சி பஜாரில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு கைகளில் சித்ரவதைக்கு எதிரான பதா கைகளை ஏந்தி, ஈழத்தில் பலியான பெண்கள் படங்களுடன் மனிதச்சங்கிலி போல் நின்றனர்.

தொடர்ந்து நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தி ஏற்றி, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அஞ்சலி செலுத்தினர்.

ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறுகையில், தங்கள் அடிப்படை உரிமைக்காக 60 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிய ஈழத்தமிழர்கள் 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டனர்.  போர் முடிந்ததாக அறிவித்த பிறகும், அங்கு இன அழிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன் முறை தொடர்கிறது. போர் காலங்களில் தமிழ் பெண்கள் பாலியல் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட ஆதாரங்கள் வெளிவந்தன.
டிவி செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா உள்ளிட்ட பல பெண்கள் இனப்படுகொலையில் மிக கொடுமையாக சித்ரவதைக்கு ஆளாகி கொலையாகியுள்ளனர்.

இப்படி பலியானவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த கூடல் நடந்துள்ளது. இப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை கைது செய்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=336181&cat=504

Isaippiriyaa remembered in Tamil Nadu as icon of Tamil resistance
[TamilNet, Friday, 27 June 2014, 23:19 GMT]

Activists across Tamil Nadu gathered at the city of Mathurai on the occasion of ‘International Day in Support of Victims of Torture’ on Thursday, paying tribute to slain LTTE media specialist Shoba alias Isaippiriyaa and thousands like her, who faced torture, abuse and death at the hands of Colombo’s genocidal military. Condemning the section of personalities within the UN and the international Establishments for their complicity in Tamil genocide, the Tamil Nadu activists further asserted that a sovereign Tamil Eelam alone was the remedy for the injustice and crimes committed against Eezham Tamils.

Hundreds of Tamil activists gathered at Meenaakshi Bazar in Mathurai to remember the Eezham Tamils who suffered and who continue to endure abuse and torture by the occupying military of genocidal Sri Lanka.

The activists held placards asserting that Tamil Eelam is the only remedy for the victims of genocide.

Instead of considering Isaippiriyaa and those like her as mere victims of war-crimes, the activists in Tamil Nadu have chosen to remember them as icons of Tamil resistance against genocide.

Posters about the event also drew parallels between Isaipiriyaa and Ka’n’naki, the protagonist of the Chilappathikaaram epic belonging to the first half of first millennium AD.

The iconographic representation of Ka’n’naki was later evolved into goddess Paththini. The Tamil literary heritage, right from the times of Chilappathikaaram, has a long tradition in making epics out of tragedies, political injustices and social injustices. 

Leave a Reply