– தொழிற்சங்கத்தில் சேர்ந்ததால் பழிவாங்கும் நடவடிக்கையாக 24-12-2013 முதல் வேலை தர மறுத்துவிட்ட 65 தொழிலாளர்களுக்கு ஆல் கார்கோ லாஜிஸ்டிக் நிர்வாகத்தின் சட்டவிரோத கதவடைப்பை தமிழக அரசு தடை செய்யக் கோரியும்
– ஆல் கார்கோ லாகிச்டிக் லிமிடெட் ( All Cargo Logistics Ltd) கம்பெனியில் பணிபுரியும் 480 நாட்கள் முடித்த அனைவரையும் நிரந்தர தொழிலாளர்கள் என்று தமிழக அரசு உத்தரவிட வேண்டியும்
4-ஜூலை-2014 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக திருவெற்றியூர் பெரியார் நகரிலிருந்து ஊர்வலமாக சென்று ஆல் கார்கோ லாஜிஸ்டிக் லிமிடெட் கம்பெனி கேட் முன் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள் முருகன் கலந்துகொன்டு உரையாற்றினார்.