மே 17 இயக்கம் பங்குபெற்ற லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பாலஸ்தீன மக்களுக்காக மாபெரும் பேரணி மற்றும் போராட்டம் !
கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஒரு மாபெரும் போராட்டம் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் அரசின் வான் தாக்குதலை கண்டித்து வில்ஷிர் கூட்டாட்சி கட்டிடம் முன்பு நடைபெற்றது. 1200 பேருக்கு மேல் பங்குபெற்ற இந்த போராட்டத்தில் இஸ்ரேலிய தீவிரவாத இளைஞர்கள் குழப்பத்தை விளைவிக்கும் வண்ணம் போராட்டத்தில் இருந்த ஒருவரிடம் பாலஸ்தீன கோடியை பறித்து, கால்களால் மிதித்து அவமதித்தனர். மேலும் கொடியை எடுக்க சென்ற இளைஞர்களையும் உதைத்து தனது இனக்கொலை வெறியை காட்டியிருந்தார். காவல்துறையும் இஸ்ரேலிய இளைஞர் ஆதரவாக செயல்பட்டது. பாலஸ்தீன போராளிகளை நோக்கி துப்பாகியால் சுட்டும் கைது செய்தும் வன்மமாக நடந்துகொண்டது.
இன்று ஜூலை 20ஆம் தேதி, காஸா கடற்கரையில் விளையாடி குழந்தைகள் மீதி வான் குண்டுகள் போட்டு கொலை செய்த இஸ்ரேலிய அரசை கண்டித்தும், இஸ்ரேலுக்கு பண உதவி வழங்கும் அமெரிக்க அரசை கண்டித்தும் போராட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது. பெருந்திரளான மக்கள் பங்கெடுத்த போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள், பாலஸ்தீனர்கள், அமெரிக்கர்கள், அல்ஜீரியர்கள், ஆப்ரிக்கர்கள், சிரியர்கள், தமிழர்கள், சீனர்கள், எரித்திரியர்கள் என்று பலரும் வந்திருந்தனர்.
மாலை 3:00 மணிக்கு அமெரிக்க கூட்டாட்சி கட்டிடம் முன்பு தொடங்கிய ஆர்பாட்டம், இரண்டு மணி நேரம் அதிரும் கோஷங்களுடன் நீடித்த பிறகு மாலை 6 மணியளவில் 2000 பேருக்கு மேல் கொண்ட நீண்ட பேரணியாக இஸ்ரேலிய தூதரகம் நோக்கி புறப்பட்டது. இஸ்ரேலிய தூதரகம் முன்பு கடுமையான ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
அனைத்து மக்களும் தனது கோரிக்கையாக இஸ்ரேல் ஒரு இனப்படுகொலை நாடு, ஜெர்மானியர்கள் செய்த இனப்படுகொலைக்கு இணையான இனப்படுகொலை என்றும், போர்குற்றம், குழந்தைகளை இனப்படுகொலை செய்தல் என்று பல்வேறு வகையான விசாரணை வேண்டும் என்று அழுத்தமாக வைத்தனர். போரை உடனே நிறுத்த வேண்டி இஸ்ரேல் அரசுக்கும், அமெரிக்க தொடர்ந்து செய்து வரும் 4 பில்லியன் டாலர் நிதியை உடனே நிறுத்த கோரி அமெரிக்க அரசுக்கும் கடுமையாக கோரிக்கை வைத்து போராட்டம் செய்தனர். தமிழர்கள் சார்பாக மே 17 இயக்கம் இந்த போராட்டத்தில் பங்கு கொண்டது. மேலும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் DC முன்பாக ஒரு பிரம்மாண்ட போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதே நாளில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மீண்டும் ஒரு ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
போராட்டத்தின் போது பாலஸ்தீன போராளி ஒருவர் நமக்கு அளித்த கானொளியில் தமிழீழ போராட்டத்தையும் அங்கீகரித்து பாலஸ்தீன போராளிகள் துணை நிற்பதாக கூறினார்.