பாலஸ்தீன இனப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

- in பரப்புரை
25-7-2014 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைப் போரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்திருந்தது. இந்த போராட்டத்தில் பல்வேறு அமைப்புக்களை சார்ந்த தோழர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். 

போராட்டத்தில் பங்கேற்ற மக்கள், இஸ்ரேல் அமெரிக்க நாடுகளை கண்டித்தும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையை நினைவு படுத்தியும் பதாகைகை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தை சார்ந்த தோழர் பிரவின், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த தோழர் ஆளூர் ஷாநவாஸ், திராவிட விடுதலை கழகத்தை சார்ந்த தோழர் வழக்கறிஞர் அருண், தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சியை சார்ந்த தோழர் தமிழ் சமரன், மனித நேய மக்கள் கட்சியை சார்ந்த தோழர் சலீம் அகமது, இந்திய தவ்கீத் சமாத் கட்சியை சார்ந்த தோழர் எஸ்.எம்.பார்கர், இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தை சார்ந்த தோழர் உமர்கையான், பொறியாளர் தோழர் ஏழுமலை மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். போராட்டத்தின் போது வந்த மழைத்தூரல்களையும் பொருட்ப்படுத்தாது பாலஸ்தீன மக்களின் துயரங்களை நெஞ்சில் சுமந்தவாறு பதாகைகளை ஏந்தி நின்று தமிழர்கள் என்றும் தமிழீழ விடுதலையை போன்றேப் பாலஸ்தீன விடுதலைக்கும் துணைநிர்ப்போம் என்பதை வெளிப்படுத்தினர்.




Leave a Reply