பான் கீ மூனுக்கு அடுத்து நிலையில் இருக்கும் ஐநாவின் உயரதிகாரி ஜெப்ரி D.பெல்ட்மேன் (Jeffrey D.Feltman) இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் நெருக்குதலால் ஐநாவின் விசாரனை அறிக்கை ஆறுமாத காலம் தள்ளிவைக்கப்பட்ட பிறகு ஐநாவின் உயரதிகாரி ஒருவர் இலங்கைக்கு வருகிறார் என்பதை நாம் கூடுதல் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
மேலும் இவர் ஐநாவின் அதிகாரியாக ஆவதற்கு முன் முப்பது வருடங்களாக அமெரிக்க அரசின் அதிகாரி பணியாற்றியவர். அதாவது எந்த அமெரிக்கா தனது நலனை முன்னிறுத்தி இலங்கையின் மீதான விசாரணை அறிக்கையை தள்ளிவைக்க வேண்டுமென்று ஐநா அவைக்கு அழுத்தம் கொடுத்ததோ அதே அமெரிக்காவின் முன்னாள் அதிகாரி இப்போது இலங்கைக்கு ஐநாவின் அதிகாரியாக போகிறார் என்றால் நாம் இதை மிகவும் உன்னிப்பாக கவனிக்கவேண்டும்.
அது மட்டுமில்லாமல் ஐநா அதிகாரியாக இருக்கும் இவரின் கடந்த கால செயல்பாடுகள் யாவும் அமெரிக்க நலன் சார்ந்தவையாகவே இருந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு இவரின் மீது உண்டு. குறிப்பாக ஐநா இவரை மத்திய கிழக்கு பகுதியில் செயல்பட நியமித்த போது அங்கு தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஈராn அரசை வெளியேற வைத்தார் என்பதோடு இல்லாமல் அமெரிக்க அரசுக்கு சாதகமாக நடந்து கொண்டார்.
அதேபோல மிகச்சமீபத்தில் கடந்த ஜனவரியில் நேபாளத்தில் போராளி மவோயிஸ்ட் குழுவுக்கும் அரசுக்குமிடையே 2006ல் இருந்த அமைதி ஒப்பந்தததை பயன்படுத்தி போராளிகளை கட்டாயப்படுத்தி நேபாள அரசுக்குள்ளாக வாக்களிக்க வைத்த இவரின் செயல்பாடும் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. அதேபோலவே இவர் லெபானானுக்கான அமெரிக்க தூதராக இருந்த போதும் அங்கேயும் தனிநாடு கேட்ட போராளி குழுக்களை ஒடுக்கி அவர்களை நயவஞ்சகமாக அரசில் பங்கெடுக்க வைத்தார்.
இப்படிப்பட்ட ஒரு நபரை திடிரென்று இலங்கைக்கு ஐநா அனுப்புகிறதென்றால் அதை பாதிக்கப்பட்டவர்களாகிய நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. இவர் மேற்சொன்ன நாடுகளில் செய்ததை போல ஏதேனும் திட்டத்துடன் இலங்கைக்கு வருகிறாறா என்பதனையும் நாம் கவனிக்க வேண்டும்.
ஏற்கனவே தமிழீழக்கோரிக்கையை அழிப்பதில் ஆரம்பத்திலிருந்து குறியாக இருக்கும் அமெரிக்க மற்றும் இந்தியா போன்ற நாடுகள் சிங்கள அரசுடன் இணைந்து வேலை செய்து கொண்டிருக்கிறது.அதற்கு தகுந்தாற்போலவே இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றத்தையே தமிழர்களுக்கான திர்வு என்று அமெரிக்காவும் இந்தியாவும் கூறி வருகிறது. அமெரிக்காவின் ஜான் கெர்ரி இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீராவை கடந்த வாரத்தில் சந்தித்த பின் 30ஆண்டுகளாக நடந்த தமிழரக்ளின் பிரச்சனை இந்த ஆட்சி மாற்றத்தின் முலம் முடிவுக்கு வந்துவிட்டது இதை தான் அமெரிக்கா விரும்பியதென்று தெரிவித்திருந்தார்.
இப்படிப்பட்ட சமயத்தில் ஆட்சி மாற்றத்தையும் அல்லது போராளிகளை ஒடுக்கவதையும் அல்லது அமெரிக்க நலனை முன்னிறுத்துவதையுமே வேலையாக கொண்டிருக்கிற அமெரிககாவின் முன்னாள் அதிகாரி த்ற்போது ஐநாவின் அதிகாரியாக இலங்கைக்கு வருகின்றார் என்றால் அந்த வருகை மிகவும் கவலை தரக்கூடியாதாகும்.
விழிப்புடன் இருப்போம். தமிழீழக் கோரிக்கையை ஒரு போதும் தமிழரகள் நாங்கள் கைவிடப்போவதில்லை என்று அறிவிப்போம்.அதுவே தம் தாயக விடுதலைக்காக தன் தலையில் துப்பாக்கி குண்டுகளை வாங்கிய போராளிகளுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்.