நேற்று நடந்த ஐநா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை அமைச்சர் மங்கள சமரவீராவின் பேச்சு பல சந்தேகங்களையும் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கான நீதியை சர்வதேசத்தின் துணையுடன் நீர்த்துப்போகச்செய்யுமோ என்ற அச்சத்தையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்த கூட்டத்தொடரில் வெளியிடப் பட்டிருக்க வேண்டிய ஐநாவின் அறிக்கை அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நிர்பந்தத்தால் வெளியிடப் படவில்லை எனபது ஒருபுறமிருக்க.நேற்றைய இலங்கை அமைச்சரின் பேச்சும் அதனை வேடிக்கை பார்த்த சர்வதேச நாடுகளின் மவுனமும் பல சந்தேகங்களை தமிழர்கள் மத்தியில் எழுப்புகிறது.
குறிப்பாக இலங்கை அமைச்சரின் நேற்றைய பேச்சின் போது
//The previous government failed to implement the recommendations of the commissions that were setup at that time including that made up by the LLRC, action is now being taken to explore steps that be taken in this regard. The contents of the report of the OHCHR investigation on Sri Lanka will be taken into account by domestic investigation and judicial mechanisms which we are in the process of setting up, disclosed yesterday, Sri Lanka’s External Affairs Minister r Mangala, at the 28th Regular Session of Human Rights Council in Geneva.//அதாவது முந்தைய இலங்கை அரசு LLRC அறிக்கையின் அடிப்படையிலான பரிந்துரைகளை நிறைவேற்ற வில்லையென்றும் அதனை இந்த அரசு நிறைவேற்றும். அதே நேரத்தில் ஐநாவின் மனித உரிமை ஆணையம் நடத்திய விசாரணையை போல் உள்நாட்டு விசாரணையை தொடங்க அனைத்து வேலைகளையும் செய்ய ஆரம்பித்துவிட்டோம்.//
அமைச்சரின் இந்த பேச்சில் தமிழர்களுக்கு இரண்டு பெரும் அபத்தங்களை இனப்படுகொலை இலங்கை அரசு செய்திருக்கிறது.
1.1948முதல் இன்றுவரை இலங்கையில் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலையே என்றும் இதன் அடிப்படையில் உண்மையான இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை ஐநா சபை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட தமிழரகள் நிறைவேற்றியுள்ள நிலையில்.அதனை மறுத்து 2002 லிருந்து 2009 போர் காலங்களை மட்டுமே விசாரிக்கும் அதுவும் உள்நாட்டிலேயே விசாரிக்கும் LLRC என்னும் அயோக்கியத்தனத்தை தான் தனது அரசும் செய்யுமென்று இலங்கை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
2.உள்நாட்டு விசாரணையை சர்வதேச தரத்துடன் செய்ய ஆரம்பித்துள்ளோம் என்று இலங்கை சொல்வதன் மூலம் ஐநாவின் விசாரணை என்று ஏதும் தேவையில்லை யென்றும். ஏற்கனவே ஐநாவால் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கை இனி வெளியிட தேவையில்லை எனவும் இலங்கை மறைமுக சொல்கிறது.
இப்படிப்பட்ட அயோக்கியத்தனத்தை இலங்கையின் புதிய அரசு செய்கிறபோது ஈழத்தமிழர்களை நாங்கள் தான் தீர்மானங்கள் மூலம் காப்பாற்ற போகிறோமென்று வாய்கிழிய பேசிய அமேரிக்காவும் சரி ஏனைய நாடுகளும் சரி கள்ளமவுனம் காப்பது இவர்களும் இந்த அயோக்கியத்தனத்திற்கு உடந்தை தான் என்பதை தெளிவாக காட்டுகிறது.
இதுபோன்ற அயோக்கியர்களை எதிர்க்காமல் விடுதலை என்பது சாத்தியமில்லை.விழிப்புடன் இருப்போம். விடுதலையை நோக்கி முன்னேறி செல்வோம். தமிழீழத்தை அடைவோம்.
மே 17 இயக்கம்.