”அனைவருக்கும் உணவு”
“பட்டினியில்லா இந்தியா”
என்ற நிலையை இந்தியர்களுக்கு கிடைக்க மரபணு மாற்று உணவே எதிர்காலத்தில் சிறந்த வழியென்று பசுமை புரட்சி என்ற பெயரில் இயற்கை விவாசயத்தை அழித்த, பராம்பரிய நெல்வகைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்ற, கூடங்குளம் மீத்தேன் போன்ற மக்கள் நலனுக்கெதிரான திட்டங்களை அரசின் கைகூலியாக நின்று செயல்படுத்த உதவுகிற, ஈழத்தில் போரில் எஞ்சிய ஈழமக்களை கொல்ல இனப்படுகொலை இலங்கையோடு சேர்ந்து வடக்கின் வசந்தம் என்ற திட்டத்திற்கு முன் நின்ற, கார்ப்ரேட்டுகளின் நம்பிக்கை நட்சத்திரமான எம்.எஸ். சுவாமிநாதன் இரண்டு நாட்களுக்கு முன் காட்டாங்குளத்தூரிலுள்ள எஸ்.ஆர்.எம் பல்கழைகழகத்தில் நடந்த ’INDIAN GENTIC CONGRESS 2015’ என்ற விழாவில் இதனை தெரிவித்துள்ளார்.
மக்கள் விரோத திட்டங்கள் அனைத்திற்கும் அரசின் கைகூலியாக இருந்து கொண்டு அதை அனைத்து மக்களுக்குமானது என்று சொல்லும் அரசின் ஏஜெண்ட் இப்போது புதுமுழக்கத்தோடு வர ஆரம்பித்திருக்கிறார்.அதுதான் ”பசியில்லாத இந்தியா” என்று.
உணவு பொருட்களை டன்கணக்கில் மத்திய அரசு விணாக்குகிறது அப்படி செய்யாதீர்கள் ஏழைக்களுக்கு கொடுங்கள் என்று உச்சநீதிமன்றம் சொன்னபிறகும் உணவு பொருட்களை வீணாக்கினாலும் விணாக்குவோம் ஆனால் ஏழைகளுக்கு கொடுக்க மாட்டோம் என்று இன்று வரை பிடிவாதம் பிடிக்கும் அரசின் அயோக்கியத்தனத்தை தடுத்து நிறுத்தினாலே பசியில்லா இந்தியா உருவாகும்.
விவாசாயிகளே விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள் என்று ஆண்ட முன்னாள் பிரதமரும், விவாசாய நிலத்தை விவாசாயிகளை கேட்கமாலேயே பெருநிறுவனங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்ற சட்டத்தை கொண்டுவந்திருக்கின்ற இந்நாள் மோடியின் கொள்கையையும் எறித்து போட்டாலே உணவு உற்பத்தி பெருகி பசியில்லா இந்தியா உருவாகும்.
இதை போன்ற எதையும் பேசமாட்டோம் ஆனால் பெருநிறுவனங்கள் அந்நிய நிறுவனங்களின் லாபத்திற்காக மரபணு மாற்றம் என்ற விசத்தை திணிப்பீர்கள் என்றால் முதலில் எதிர்க்க வேண்டியதும் அம்பலப்படுத்த வேண்டியதும் எம்.எஸ்.சுவாமிநாதன்களைத்தான் .