​நன்கொடை​

எங்களுடைய போராட்டத்தினை பரவலாக்குவதற்கும், பிரச்சாரங்களை தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கொண்டு செல்வதற்கும், தமிழரைப்பற்றிய செய்திகளை கருத்தாக்கங்களை ஆவணப்படுத்துவதற்கும், புத்தகங்களை கொண்டு வருவதற்கும், தொடர்ச்சியான செயல்பாட்டுத் தளத்தில் இயங்கும் தோழர்களை ஆதரிப்பதற்கும், எங்களது ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் , தமிழகத்தினை சேர்ந்த தமிழர்கள் நிதி உதவி அளித்து எங்கள் கரங்களை வலுப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பெரும்பாலும் மே பதினேழு இயக்கத் தோழர்களின் சொந்த உழைப்பில் நட்த்தப்படும் பணிகள், நிதி நெருக்கடி காலங்களில் போதுமானதாக அமையாததால் பெரும் பணிகள் தடைப்பட்டு நிற்கின்றன. எங்கள் மீதான பொய் வழக்குகளை நடத்த இயலாமலும், பிரச்சார புத்தகங்களை அச்சிடாமல் வைப்பதும் அதிகம் நிகழ்கிறது. ஆகவே எங்களது பணிகளுக்கு உங்களிடமிருந்து தொடர்ச்சியான மாத உதவி தொகையினையும், பெரும் நிகழ்ச்சிகளுக்கு உதவிகளையும் எதிர்பார்க்கிறோம். தமிழ்ச் சமூகம் எங்களோடு கைகோர்க்கும் என்கிற நம்பிக்கையோடு உரிமையாய் நிதி கேட்கிறோம்.

குறிப்பு: அறம் சார்ந்து புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழ மக்களிடம் நிதி வாங்குவதை தவிர்க்கிறோம். அதனால் நிதி அனுப்பும் நண்பர்கள் தான் பங்களிப்பதற்கு முன் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
உதவி பற்றிய விவரங்களை தவறாமல் [email protected] என்னும் மின்னஞ்சலிலும் +91 9884072010 என்னும் எண்ணிலும் தெரிவியுங்கள்.