Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
UN – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Fri, 29 Sep 2017 08:04:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 தோழர்​ திருமுருகன் காந்தி மீண்டும் கைது. https://may17iyakkam.com/75790/protests/thirumurugan-gandhi-praveen-arrested-again/ https://may17iyakkam.com/75790/protests/thirumurugan-gandhi-praveen-arrested-again/#respond Fri, 29 Sep 2017 06:36:44 +0000 http://may17iyakkam.com/?p=75790 இன்று தமிழ்புலிகள் கட்சியின் சார்பாக ஐ.நாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை மிரட்டிய சிங்கள அரசை கண்டித்து நடந்த இலங்கை துணைதூதரகம் முற்றுகை போராட்டத்தில் ஆதரவு தெரிவிக்கச் சென்று விட்ட தேநீர் கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி. தோழர் பிரவிண் குமார் இரண்டு பேரையும் திடிரென்று வந்த காவல்துறை வாகனம் எந்த அறிவிப்புமின்றி தரதரவென தோழர்களை இழுத்து சென்றிருக்கிறது.

இடம்:நுங்கம்பாக்கம் F3 காவல்நிலையம் – Chennai.

]]>
https://may17iyakkam.com/75790/protests/thirumurugan-gandhi-praveen-arrested-again/feed/ 0
​ஹைத்தியில் சிறுமிகள் மீதான இலங்கை ராணுவத்தினரின் பாலியல் குற்றங்கள் பற்றிய ஐ.நா அறிக்கை https://may17iyakkam.com/58651/articles/srilankan-army-child-abuse-in-haithi/ https://may17iyakkam.com/58651/articles/srilankan-army-child-abuse-in-haithi/#respond Sun, 16 Apr 2017 17:01:39 +0000 http://may17iyakkam.com/?p=58651

இலங்கையின் ராணுவத்தினர், ஐ.நாவின் அமைதிப்படைப் பிரிவில் ஹைத்தி நாட்டில் பணி புரிந்த பொழுதில் அந்நாட்டு சிறுவர்/சிறுமிகளை பாலியல் உறவிற்கு பயன்படுத்தியது ஐ.நாவின் அறிக்கையில் அம்பலமாகி இருக்கிறது.

2004ம் வருடத்திலிருந்து 2007வரையிலான காலகட்டத்தில் 134 இலங்கை ராணுவத்தினர் கிட்டதட்ட 9 சிறுவர் சிறுமிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒரு நாளில் நான்கு முறைக்கு மேல் இவர்கள் பாலியல் உறவிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இலங்கையின் இந்த படையினரில் 114 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். இருந்த போதிலும் இதுவரை இவர்கள் எவருமே தண்டிக்கப்பட்டதில்லை.

2007இல் ஐ.நாவிற்கு இலங்கை படையினர் குறித்தான சந்தேகம் எழுந்து விசாரித்த பொழுது இது அம்பலமாகி இருக்கிறது. இவ்வாறு பயன்படுத்தப்பட்ட சிறுமி இலங்கையின் ராணுவத்தளபதி குறித்த விவரங்களை பதிவு செய்திருக்கிறாள். பெருத்த உடலும், மீசையும், தங்க மோதிரமும் அணிந்த அந்த தளபதி இதுவரை தண்டிக்கப்பட வில்லை. மற்றொரு சிறுமி கிட்டதட்ட 11 இலங்கை ராணுவத்தினரை அடையாளம் காட்டி இருக்கிறாள். இதில் ஒரு இலங்கை ராணுவ கார்ப்பரேல் ‘இடுப்பிற்கும், தோள்பட்டைக்கும் இடையில் புல்லட் தழும்பு வித்தியாசமான முறையில் இருந்திருக்கிறது’ என்று பதிவு செய்திருக்கிறாள்.

இந்த இலங்கை ராணுவத்தினர் இவ்வாறு இச்சிறுவர்/சிறுமிகளை பயன்படுத்திக் கொள்வதற்காக சிறிதளவு பணம், பிஸ்கட்டுகள், ஜீஸ் போன்றவற்றை கொடுத்து ஏமாற்றி இருக்கிறார்கள். 12 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் இவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
139 இலங்கை ராணுவத்தில் இந்த கொடூர கும்பல்களை கண்டறிந்து தண்டிக்கமுடியாத சர்வதேசம் எவ்வாறு இரண்டு லட்சம் இலங்கை ராணுவத்தின் குற்றங்களை கண்டறிந்து தண்டிக்கப் போகிறது.

புலம்பெயர் தமிழர்களே, ஹைத்தி சிறுவர்-சிறுமியருக்கு ஆதரவை வழங்குங்கள். இச்செய்தியை உலக நாடுகளுக்கு கொண்டு செல்லுங்கள். இது குறித்து அசோசியேட்டட் ப்ரஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஹைத்தி அரசினை தொடர்பு கொள்ளுங்கள். இலங்கையின் முகத்திரையை உலக அளவில் கிழித்தெறிய கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்துவோம். குழந்தைகள் உரிமைக்காக போராடுபவர்கள் முதல் அனைவரிடத்திலும் இச்செய்தியை பரப்புவது இலங்கையை அம்பலப்படுத்த உதவும்.

இந்திய அரசின் நட்பு நாட்டின் யோக்கியதையை இச்செய்தி அம்பலப்படுத்தி இருக்கிறது.
’உங்கள் நண்பனைப் பற்றிச் சொல்லுங்கள், உங்களைப் பற்றி கூறுகிறேன்’ என்ற பழமொழியைக் கொண்டு இந்திய அரசின் யோக்கியதையை புரிந்துகொள்ளுங்கள்.. இலங்கையை நட்பு நாடென்று சொல்லும் இந்திய அரசவர்க்கம் எப்படி நாகரீகமடைந்தவர்களுக்கான அரசாக இருக்க முடியும்.

இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையையும் சர்வதேச விசாரணையையும் கொண்டுவர தொடர்ந்து போராடுவோம்.

இலங்கை மீதான தனது ஜி.எஸ்.பி வரிச்சலுகை தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முயன்று கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் ஈழத்தமிழ் தோழமைகள் இது குறித்து கவனத்திற்கு கொண்டு செல்வதும், பொருளாதாரத் தடையை நீட்டிக்க வழிவகை செய்வதும் குறைந்த பட்ச தேவையாக இருக்கிறது. இது குறித்து உங்கள் கவனத்திற்கு இச்செய்தியை கொண்டு வருகிறோம்.
ஐ.நா வின் விசாரணையில் கண்டறியபப்ட்ட நேரடி குற்றவாளிகளையே தண்டிக்காத இலங்கை அரசு எப்படி ஐ.நா மனித உரிமை தீர்மானங்களை மதித்து நடக்குமென்கிற கேள்வி எழுப்பப்பட வேண்டும். லத்தீன் அமெரிக்க நாடுகள், கரீபியன் நாடுகள் உள்ளிட்டவற்றில் இது குறித்த பிரச்சாரம் செய்வது காலத்தின் தேவை. அமெரிக்காவை, இங்கிலாந்தை மட்டுமே நம்பி மோசம் போன நண்பர்களும் இது குறித்து சிந்திகக் வேண்டும்.

இலங்கையை தனிமைப்படுத்துவதும், அம்பலப்படுத்துவதும் நமது போராட்டத்தினை வலுப்படுத்தும். இதுகுறித்து மேற்குலகில் கவன ஈர்ப்பு போராட்டங்கள் தேவைப்படுகின்றன. ஈழத் தமிழ் இளைஞர்கள் இச்செய்திகளின் அடிப்படையில் போராட்டங்களை துவக்குவது நலம். பிற நாடுகளின் ஆதரவை நாம் வெல்ல முடியும்.

மனித குல எதிரியை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம். ஈழ விடுதலைப் போராடத்தில் வெற்றி ஈட்டும் வரையிலும், இலங்கை தண்டிக்கப்படும் வரையிலும் மே17 இயக்கம் சமரசமில்லாமல் போராடும்.

முன்னேறுவோம். பலவீனமாய் நிற்கும் எதிரியை மேலும் அம்பலப்படுத்துவோம், தனிமைப்படுத்துவோம்.

மே பதினேழு இயக்கம்.

( குறிப்பு: இந்தச் செய்தி வெளியாகி 4 நாட்கள் ஆன பொழுதிலும் கவனத்திற்கு கொண்டு வராத இந்திய ஊடகங்களின் இருட்டடிப்பினை உடைத்து சமூகவலை தளம் மூலமாக செய்தியை உலகிற்கு கொண்டு செல்வோம்.)

]]>
https://may17iyakkam.com/58651/articles/srilankan-army-child-abuse-in-haithi/feed/ 0
என்னவாகும் நடப்பு ஐநா கூட்டத்தொடர் https://may17iyakkam.com/58313/articles/un-34-tamil-genocide/ https://may17iyakkam.com/58313/articles/un-34-tamil-genocide/#respond Sat, 18 Feb 2017 09:52:44 +0000 http://may17iyakkam.com/?p=58313 2012லிருந்து வருடந்தோறும் எது நடக்கிறதோ இல்லையோ ஈழத்தில் நடந்த இனப்படுகொலை சம்பந்தமான ஐநா கூட்டம் தவறாமல் ஜெனிவாவில் நடக்கும். அதுபோல தான் இந்தமுறையும் 34வது கூட்டத்தொடர் வரும் 27ஆம் தேதி தொடங்க விருக்கிறது.

வழக்கபோல தமிழர்கள் பிரச்சனையை தீர்க்கிறோமென்ற பெயரில் வல்லரசு நாடுகள் இலங்கையில் தங்களது நலனை முன்னிறுத்த முண்டியடிக்கும், இலங்கையோ தங்களது சிங்கள பொளத்த பேரினவாத்த்தை காக்க காவடி தூக்கும், இந்தியாவோ இந்தியாவின் பாதுகாப்பே கேள்வி குறியானலும் தமிழனுக்கு ஒரு தீர்வும் கிடைத்து விடக்கூடாதென்று மும்முரமாக வேலைசெய்யும். நாமோ ஒன்றரை லட்சம் மக்களையும் இனப்படுகொலைக்கு பலியாக கொடுத்துவிட்டு வானத்திலிருந்து தேவதூதன் யாராவது வரமாட்டார்களா? எம் மக்களின் விடிவுக்கு வழி ஏதும் பிறக்குமா? என்று தன்னை சுற்றி நடக்கும் எந்த சதிகளையும் பற்றி தெரியாமல் இருப்போம். இந்த காட்சிதான் கடந்த நாண்காண்டுகளாக ஜெனிவாவில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இந்த காட்சிகளுக்கு நடுவே உண்மையான தமிழ்ர்களுக்கான தீர்வு குறித்து பேசுபவர்களின் குரல் வலிமையற்றதாக மாற்றப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் மீண்டும் ஒரு கூட்டம் ஆரம்பிக்கவிருக்கிறது.

இந்த கூட்டத்தொடரில் கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்காவால் முன்மொழியப்பட்டு இலங்கை அரசும் ஏற்றுக்கொண்ட 30வது கூட்டத்தின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான மீளாய்வாக இந்த கூட்டம் நடக்கவிருக்கிறது. இந்த மீளாய்வு கூட்டம் 2016மார்ச் மாதமே நடத்திருக்கவேண்டும் ஆனால் இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி இனப்படுகொலை இலங்கை அரசும் அமெரிககவும் கேட்டுக்கொண்டதற்கிணைங்க ஐநா அவை தீர்மானத்தில் உள்ளதை நிறைவேற்ற கால அவகாசம் அளித்தது. இதனால் தான் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது நடக்கவிருக்கிறது. ஆனால் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் ஒரு நல்லிணக்க செயலிலும் ஈடுபடாத இலங்கை அரசு இப்போது மேலும் ஒன்றரை வருடம் அவகாசத்தை ஐநாவில் கேட்க இருக்கிறது. இதனை

//”இந்தத் தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம். ஆனால், அதற்கு காலஅவகாசம் தேவை”என்று அண்மையில் லண்டனில் சத்தம் ஹவுசில் நிகழ்த்திய உரையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தார்.//

ஏற்கனவே கொடுத்த அவகாசத்தின் போது ஏதும் செய்யாத இலங்கை அரசு இப்போது ஏன் மீண்டும் மீண்டும் அவகாசம் கேட்கிறதென்றால் தமிழர்களுக்கான தீர்வை தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு ஒன்றுமில்லாமல் ஆக்குவதும். அதே நேரத்தில் இனப்படுகொலை தடயங்களை அழித்து இனப்படுகொலையாளர்களை காக்கவும் இந்த கால அவகாசத்தை இலங்கை எடுத்துக்கொள்ளும்.

மேலும் எவ்வளவு அவகாசம் கொடுத்தாலும் இலங்கை அரசு தமிழர்களுக்கு எந்த தீர்வையும் பெற்றுத்தராது என்பதை தாண்டி இலங்கை அரசின் கீழ் தமிழர்களுக்கு ஒருநாளும் தீர்வே கிடைக்காது என்பது தான் வரலாற்று உண்மை. இதையே தான் சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது. உதாரணத்திற்கு

”இலங்கையில் எந்தவித விசாரணை ஆணையமும் அமைக்கப்படமாட்டாது என்று இலங்கை அதிபர் சிறிசேனா திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.”

”இலங்கை இராணுவ வீரர்கள் மீது எந்தவொரு விசாரணையும் வர நாங்கள் ஒருபோது அனுமதிக்கமாட்டோம் மேலும் வெளிநாட்டு நீதிபதியையோ அல்லது கலப்பு விசாரணையையோ எங்கள் அரசாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளது இலங்கை பிரதமர் இரணில் விக்ரமசிங்கே”

”யுத்தக்குற்றங்கள் தொடர்பாக விசாரணை எதுவும் தேவையில்லை என மிகத் தெளிவாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் தொடர்பான அந்த அலுவலகத்துக்குப் பொறுப்பாக இருக்க கூடிய முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயகக்க குமாரதுங்க, தெளிவாகவே சொல்லிவிட்டார்”

மேலும் ”தமிழ் பெண்களை இலங்கை இராணுவம் பாலியல் துன்புறுத்தல் செய்வது இன்றும் தொடர்கிறதென்று இலங்கையின் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்கவே சில நாட்களுக்கு முன் சொல்லியிருந்தென்றால்” உண்மை நிலவரத்தை இதற்கு மேல் நாம் தனியாக தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன?

ஆகவே தமிழர்கள் தங்களது பூர்விக இடத்திலேயே பாதுகாப்பற்ற ஒரு மோசமான சூழலில் இருக்கும் போது இலங்கை அரசுக்கு மேலும் கால நீடிப்பு கொடுப்பது என்பதோ அல்லது தொடர்ந்து கொலை செய்துகொண்டே இருக்கும் சிங்கள பேரினவாதத்தின் கீழாக தமிழர்களை இருக்க வைப்பது என்பதோ எஞ்சியிருக்கிற தமிழர்களையும் கொலைசெய்வதற்கு சமம்.ஆகவே ஐநா அவை தமிழர்களுக்கு என்ன தேவை என்பதை அறியும் விதமாக பொதுவாக்கெடுப்பையும், இனப்படுகொலை குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவதுமே தமிழர்களுக்கான உண்மையான நீதியாக இருக்கும்.

ஆனால் இதை செய்யுமா வல்லரசுகளின் ஐநா? என்பதே நம்முன் இருக்கிற கேள்வி…

]]>
https://may17iyakkam.com/58313/articles/un-34-tamil-genocide/feed/ 0