Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
rajiv gandhi case – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Thu, 28 Apr 2016 02:51:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 161வது பிரிவை பயன்படுத்தி ஏழு தமிழர்களை விடுதலை செய்க ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/58190/activities/release-sevan-innocent-tamils-using-section-161/ https://may17iyakkam.com/58190/activities/release-sevan-innocent-tamils-using-section-161/#respond Tue, 26 Apr 2016 02:43:40 +0000 http://may17iyakkam.com/?p=58190 ஈழவிடுதலைக்கு எதிராக பல்வேறு நடவெடிக்கைகளை பாஜக அரசு எடுத்த பொழுது பாராளுமன்றத்தில் 37 எம்.பிகளை வைத்து ஏதும் பேசாமல் கள்ள மெளனம் காத்த ஜெயலலிதாவின் அரசினை நம்புவதற்கு ஈழ ஆதரவாளர்கள், பொதுவெளியில் அடுத்தவர் காலில் விழுந்து எழாத ’ரத்தத்தின் ரத்தம்’ அல்ல..

ஈழ அகதிகளை சித்தரவதை செய்யும் அரசின் சொந்தக்காரர் தனது சுயநலத்திற்காக ஈழ கோரிக்கையை பயன்படுத்துவதை ஏற்க இயலாதது.
ஏழு தமிழர் விடுதலையை தனக்குரிய 161 பிரிவின் கீழ் இன்றும் கூட விடுதலை செய்துவிடக் கூடிய அதிகாரம் இருந்தும், விடுதலையை மறுக்கும் அதிமுக அரசின் சூது புரியாததும் இல்லை.

ஏழு தமிழர்களை விடுதலை செய்வோம் என்று கோரிக்கையை முதன்மைப்படுத்த மறுக்கும் திமுகவையும், தனது பெரியாரிய தொண்டர் குடும்பத்திற்கு ‘பார்ப்பனிய’ இந்திய அரசு நிகழ்த்திய கொடூர ஒடுக்குமுறைக்கு சுண்டுவிரலை கூட உயர்த்தாத தி.கவின் தலைமையையும் அம்பலப்படுத்துவோம்.

பாஜக, காங்கிரஸ் என தமிழின விரோத நிலைப்பாடு கொண்ட கட்சிகளுக்கு தமிழினத்தின் மனசாட்சியினை அறிவிக்க ஒன்று கூடுங்கள்.
’அதிமுகவும், திமுகவும் தொடர்ந்து தமிழினத்தினை ஏமாற்ற அனுமதியோம்’ எனும் தோழர்கள் கைகோர்க்க வாருங்கள்.

நாம் ஒன்றாக எழுந்தால் எழுவர் விடுதலை தேர்தலுக்கு முன்பே சாத்தியமாகும்.
ஆயிரமாய் திரண்டால் ஏழு தோழர்களும் இரண்டொரு வாரத்தில் நம் வீட்டிற்கு விருந்துண்ண அழைத்துச் செல்லலாம்.
உங்களது நேரத்தில் ஓரிரு மணித்துளியை எழுவர் விடுதலைக்கு செல்வழிக்கும் பட்சத்தில் 25 வருட தாயின் தவிப்பினை தீர்த்துவைக்கும் வலிமை நமக்கு வந்து சேரலாம்.

ஒன்று சேர்வோம். ஏழு தமிழர்களை மீட்போம்.

]]>
https://may17iyakkam.com/58190/activities/release-sevan-innocent-tamils-using-section-161/feed/ 0
ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய் கோரிக்கை ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/57956/activities/%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/ https://may17iyakkam.com/57956/activities/%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/#respond Sun, 07 Feb 2016 05:14:24 +0000 http://may17iyakkam.com/?p=57956 நேற்று 07.02.16 அன்று பத்தாண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள பேரறிவாளன் அபுதாஹிர் உள்ளிட்ட சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி நடத்திய கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பேசியதன் எழுத்து வடிவம்.

முக்கியமானதொரு காலகட்டத்திலே மிகமுக்கியமான கோரிக்கையை கையிலேடுத்து போராடிக் கொண்டிருக்கிற மனிதநேய மக்கள் கட்சிக்கும் அதன் தோழர்களுக்கும் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக முதலில் நன்றியையும் எங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியாவில் இன்று பாசிச பங்கரவாத ஆட்சி நடந்துகொண்டிருக்கிற சூழலிலே இந்த ஜனநாயக போராட்டத்தை கோரிக்கையை வலியுறுத்தி நாம் இங்கு ஓன்றுகூடி நிற்கிறோம். இங்கு கூடியிருக்கிற பல்லாயிரக்கணக்கான தோழர்களாகிய நாம் இந்தியாவை ஜனநாயகப்படுத்தும் பணியிலும் அதனை நாகரிகப்படுத்தும் விதமாகவும் மரணதண்டனையை நீக்க வேண்டுமென்று கோரி கடந்த காலங்களில் தமிழகம் போராடியது.

அன்பான தமிழர்களே 2011ல் மூன்று தமிழருக்கு தூக்கு என்றவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்துகொண்டு நமக்காக யாராவது அந்த சட்டமன்றத்தில் பேசமாட்டார்களா? என்று நாங்கள் எல்லோரும் தவித்துக்கொண்டிருந்த நேரத்திலே மூன்று பேரின் தூக்குகயின்றை தமிழக அரசு இரத்து செய்யவேண்டுமென்று சட்டமன்றத்திலே முதல் குரல் எழுப்பியவர் எங்கள் அருமை தோழர் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசியர் ஜவஹரில்லா அவர்கள். அந்த தகுதியோடு தான் அவர்கள் இன்றும் அந்த் அகோரிக்கைகாக பல்லாயிரணக்கான மக்களை திரட்டி போராடிக்கொண்டிருக்கின்றார்.

அது மட்டுமில்லை நண்பர்களே தமிழகத்தின் எந்த ஜனநாயக கோரிக்கையானலும் அது கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு என்றாலும் சரி, கல்பாக்கம் அணு உலை எதிர்ப்பு என்றாலும் சரி, நியுட்ரொனோ மீத்தேன் கெயில் என்ற தமிழகத்தை பாதிக்கிற எல்லா கோரிக்கைகளிலும் ஜனநாயக சக்திகளோடு இனைந்தே அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் போராடிவந்து கொண்டிருக்கிறது என்பதையும் இந்த தருணத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இப்போது நாம் பேசும் ஆயுள்சிறைவாசிகளின் விடுதலை என்பதும் அந்த ஜன்நாயக கோரிக்கைகளின் அடிப்படையிலேயேதான். என்ன செய்தார்கள் நம் தோழர்கள் பேரறிவாளன்,சாந்தன்,முருகன்,அபுதாஹிர் உள்ளிட்டோர். ஏன் இந்த கொடுமையான சிறைவாசம். இந்த நாட்டில் கொலை செய்த கொலைகாரர்களான சுப்ரமணிய சாமி, மோடி போன்றோரெல்லாம் வெளியே சுதந்திரமாக நாடமாடிக்கொண்டிருக்கும் போது ஒரு தவறும் செய்யாத எங்கள் தோழர்கள் 20,25ஆண்டுகளாக இருட்டறை சிறையில் வாடுகிறார்கள் இது என்ன நியாயம்.

ஆர்.எஸ்.எஸ் போன்ற கொலைகார கூட்டமெல்லாம் சுதந்திரமாக நாட்டில் உலவுவரமுடிகிறது. சிறுபாண்மையின மக்கள், தேசிய இனமக்கள் ஒடுக்கப்பட்ட மக்களெல்லாம் சிறையில் வாடுவதா? இதை கேட்டால் பயங்கரவாதிகள் என்று ஆர்.எஸ்.எஸ் கூட்டம் சொல்கிறது. ஆர்.எஸ்.எஸ் தனது தமிரை தமிழகத்திற்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள் உங்களை கையாழுவது எப்படி பெரியார் உட்பட பலரும் எங்களுக்கு சொல்லி சென்றிருக்கிறார்கள். ஆகவே தோழர்களே

தமிழக அரசு 161ஆவது பிரிவை பயன்படுத்தி உடனடியாக விடுதலை செய்யவேண்டும். எங்கள் தோழர்கள் கூடிய விரைவில் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் , அவர்களின் குடும்பங்களோடு அவர்கள் இணைய வேண்டும் எங்கள் தோழர்கள் நிலவின் ஒளியை பார்க்கவேண்டும். இதனை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். இல்லையென்றால் இந்த தேர்தலில் அதன் பாதிப்பை இங்கு கூடியிருக்கிற பல்லாயிரக்காண தோழர்களும் தமிழகத்திலுள்ள ஜனநாயக சக்திகளும் உங்களுக்கு புரியவைப்பார்கள். தமிழகத்தில் கடந்த தேர்தகளில் எல்லாம் சின்ன கட்சிகளும் இயக்கங்களும் தான் வெற்றி தோல்வியை நிர்ணயத்திருக்கிறார்கள் என்ற ஏதார்த்த உண்மையை புரிந்துகொண்டு முடிவெடுங்கள்.

எங்கள் தோழர்கள் அபுதாஹிர் பேரறிவாளன் சாந்தன் முருகன் இராபர்ட் பயஸ் ரவிச்சந்திரன் நளினி உள்ளிட்ட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சி நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் மே பதினேழு இயக்கம் ஆதரவளிக்கும் என்று சொல்லி நிறைவு செய்கிறேன் நன்றி.

 

]]>
https://may17iyakkam.com/57956/activities/%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/feed/ 0
ஏழு தமிழர் விடுதலை கோரிக்கை அனைத்து கட்சி தலைவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு https://may17iyakkam.com/58103/activities/seven-innocent-tamils-release/ https://may17iyakkam.com/58103/activities/seven-innocent-tamils-release/#respond Mon, 04 Jan 2016 10:05:33 +0000 http://may17iyakkam.com/?p=58103 பேரறிவாளன் உள்ளிட்ட தமிழர் எழுவர் விடுதலைக்கு அரசமைப்புச் சட்டத்தின் 161ஆம் உறுப்பு தரும் அதிகாரத்தை தமிழக முதல்வர் அவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை !

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழர் எழுவர் விடுதலைக்கான கூட்டியக்கத்தின் சார்பில் இன்று 4.01.2016 நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழகத்திலுள்ள அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் மே 17இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் கலந்துகொண்டார்.
——————————————————————————
சென்னையில் இன்று 04.01.2016 அன்று நடைபெற்ற தமிழர் எழுவர் விடுதலை இயக்க செய்தியாளர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் விவரம்:

மாண்புமிகு தமிழக முதல்வர் கவனத்துக்கு…
அறிவு உள்ளிட்ட தமிழர் எழுவர் விடுதலைக்கு அரசமைப்புச் சட்டத்தின் 161ஆம் உறுப்பு தரும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டுகோள்.

இராசீவ் கொலை வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவரின் விடுதலைக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்து விட்டதாக வந்துள்ள செய்திகள் சரியானவை அல்ல.

இந்தியக் குற்ற நடைமுறைச் சட்டத்தின் தண்டனைக் கழிவு விதிகள் தொடர்பாக சென்ற 2015 திசம்பர் 2ஆம் நாள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிமான்கள் அடங்கிய முழு ஆயம் (புல் பெஞ்ச்) வழங்கியுள்ள தீர்ப்புதான் இவ்வாறு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

சென்ற 2014 பிப்ரவரி19ஆம் நாள் மேற்கூறிய எழுவரையும் விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அரசு இந்திய அரசுக்கு எழுதிய மடலை எதிர்த்து இந்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் குற்ற நடைமுறைச் சட்ட விதிகளின் படி மத்திய, மாநில அரசுகளுக்குள்ள அதிகாரம் தொடர்பாக ஒரு கேள்விப் பட்டியல் தயாரித்து, அந்தக் கேள்விகளுக்கு விடை காண ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசமைப்புச் சட்ட முழு ஆயம் அமைத்தது.

இந்த ஆயம் திசம்பர் 2ஆம் நாள் வழங்கியுள்ள தீர்ப்புதான் மேற்சொன்னவாறு எழுவர் விடுதலைக்குத் தடை என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
உச்ச நீதிமன்ற முழு ஆயம் இப்போது வழங்கியுள்ள தீர்ப்பை அப்படியே ஏற்றுக் கொண்டோமானால் மாநில சுயாட்சி – இந்தியக் கூட்டாட்சி தத்துவம் கேள்விக்குறி ஆகி விடும் ஆபத்தும் உள்ளது.

ஆனாலும், தண்டனைக் கழிவு தொடர்பாகக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மாநில அரசுகளுக்குள்ள உரிமைகளை இந்தத் தீர்ப்பு பெரிதும் கட்டுப்படுத்தியுள்ள போதிலும்; அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 மாநில ஆளுநருக்கு வழங்கும் அறுதி அதிகாரத்தில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மாநில அரசின் பரிந்துரைப்படியே மாநில ஆளுநர் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த இயலும் என்பதை ஏற்கெனவே நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
எனவே, தமிழர் எழுவர் தொடர்பாக மட்டுமின்றி, நீண்ட பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் வாழ்நாள் சிறைப்பட்டோர் தொடர்பாகவும் கூட, தமிழக அரசு ஒரு முடிவெடுத்து அவர்கள் வாழ்வில் விளக்கேற்ற அரசமைப்புச் சட்ட 161ஆம் உறுப்பைப் பயன்படுத்த இதுவே தக்க தருணம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இதற்கும் மேலே, இராசீவ் கொலை வழக்கில் புலனாய்வு அதிகாரியாக இருந்து பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்த திரு தியாகராஜன் தாம் செய்த பிழையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருப்பதையும் கருத்திற்கொண்டால் இந்த எழுவரின் விடுதலையை இனியும் தள்ளிப் போடுவது நீதியாகாது எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இவர்களின் நன்னடத்தை, விடுப்பே இல்லாத 24-ஆண்டுச் சிறைவாசம், புலனாய்வு அதிகாரியே இவர்கள் நிரபராதிகள் என்று முன்வைக்கும் சட்ட வாக்குமூலம், இதனால் இவர்களின் குற்றத் தன்மையின் மேல் எழுந்துள்ள சந்தேகம், இவர்களின் தூக்கை உறுதி செய்த நீதியரசர் கே.டி தாமஸ் அவர்களே “விலங்குகளைப் போல் அடைபட்டு கிடக்கும் இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று இப்பொழுது கொடுக்கும் அழுத்தம் என இவர்கள் பக்கத்து நியாயங்கள் மானுடம் போற்றும் எவரையும் பதற வைக்கும்.

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேற்சொன்ன காரணிகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு அறிவு உள்ளிட்ட எழுவரையும், மிகநீண்ட காலமாகச் சிறையில் வாடும் வாழ்நாள்
சிறைப்பட்டோரையும் விரைவில் விடுதலை செய்யக் கருணையோடு ஆய்வு செய்ய வேண்டுகிறோம். வருகிற சனவரி 17ஆம் நாள் தொடங்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டை இதற்குரிய நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

]]>
https://may17iyakkam.com/58103/activities/seven-innocent-tamils-release/feed/ 0