Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
போரூர் எரி – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Tue, 29 Dec 2015 07:41:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 போரூர் ஏரி குறித்தான பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு https://may17iyakkam.com/57861/activities/save-porur-lake-protests/ https://may17iyakkam.com/57861/activities/save-porur-lake-protests/#respond Tue, 29 Dec 2015 07:41:55 +0000 http://may17iyakkam.com/?p=57861 போரூர் ஏரி குறித்தான பசுமை தீர்ப்பாயத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு:

சென்னை போரூர் ஏரியின் ஒரு பகுதியை தனியாருக்கு (இராமசந்திரா மருத்துவமனைக்கு) தாரைவாக்க தமிழக பொதுப்பணித்துறையால் ஏரியின் குறுக்கே போடப்பட்டிருந்த மணல் தடுப்பை உடனடியாக நீக்க வேண்டுமென்று கடந்த டிசம்பர் 24ஆம் தேதி சென்னையிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை போருரில் உள்ள ஏரியானது சென்னையின் பல பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.அப்படிப்பட்ட அந்த ஏரியை அரசியல் சுயநலத்திற்காக முற்றிலும் மூட தொடர்ந்து ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகள் முயன்று வருகின்றன.அதாவது 1912ஆம் ஆண்டின் கணக்குபடி 823 ஏக்கர் பரப்புளவில் 82மில்லியன் கன அடி தண்ணிரை தேக்கக்கூடிய அளவு இருந்த ஏரி.இன்று பதியாக ஆக்கிரமிக்கப்பட்டு வெரும் 46மில்லியன் கன அடி தண்ணிரைத்தான் தேக்கிவைக்க முடிகிறது.

இப்படி ஏற்கனவெ சீரழித்தது பத்தாதென்று அந்த ஏரியின் ஒரு பகுதியை இராமசந்திரா மருத்துவமனைக்கு எம்.ஜி,ஆர் கொடுத்து விட்டார் என்று சொல்லி ஏரியின் குறுக்கே மணலை கொட்டி ஏரியை மூடும் வேலையை கடந்த ஜீலை மாதம் தமிழக அரசின் பொதுப்பணித்துறை முன்னிற்று செய்தது. இதனை அறிந்த மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் இயக்கங்களும் சில அரசியல் கட்சிகளும் அதனை கடுமையாக எதிர்த்தோம் .குறிப்பாக மே 17 இயக்கமாகிய நாம் தொடர்ந்து பலகட்ட தொடர் பிரச்சாரங்களை முன்னேடுத்தோம். அது

  • ஜீலை 06’2015ல் போரூர் ஏரியை காக்க வாருங்களென்று முகநூல் வழியாக முதன்முதலாக அழைப்பு விடுத்தோம்.
  • ஜீலை 09’2015ல் போரூர் ஏரியை நேரில் பார்வையிட்டு அங்கிருந்தப்படியே அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அனைவரும் பங்குபெறும் அலோசனை கூட்டம் நடத்துவதென்றும், உடனடியாக பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி ஏரியின் நிலவரத்தை ஊடகங்களின் வழியாக தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதெனவும் முடிவு எடுக்கப்பட்டது.
  • ஜீலை10’2015 அன்று அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
  • ஜீலை 11’2015 ஜீனியர் விகடன் பத்திரிக்கையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கினைப்பாளரால் ஏரியின் நிலவரம் குறித்தான விரிவான பேட்டி கொடுக்கப்பட்டது.
  • ஜீலை 12’2015அன்று பல்வேறு இயக்கங்கள் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கல்ந்துகொண்ட அலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் வரும்ஜீலை 25’2015ல் அனைவரும் கலந்துகொள்ளும் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது.
  • ஜீலை 17’15 அன்று சன்நீயூஸ் தொலைகாட்சியில் நடந்த விவாதத்திலும் ஏரி காக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கினைப்பாளரால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
  • ஜீலை 18’2015 முதல் 40ஆயிரம் துண்டறிக்கைகள் ஏரியின் பாதுகாப்பின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு கொண்டுவர விநியோகிக்கப்பட்டது.
  • ஜீலை 19 & 20 ’2015 அன்று ஏரியின் ஆக்கிரமிப்பு மற்றும் ஏரியை பாதுகாப்பதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விளக்க தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட்டது.
  • ஜீலை 25’2015ல் போருர் ஏரியை காப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் மனித சங்கிலி போரூரில் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சிகளை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் என்று திரண்டுவந்திருந்தனர்.

இப்படி பல்வேறு கட்ட தொடர் போராட்டத்தின் விளைவாக மேகநாதன் எனபவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி கடந்த டிசம்பர் 24ஆம் தேதி போரூர் ஏரியின் குறுக்கே போட்டப்பட்டிருக்கும் மணல் தடுப்பை உடனடியாக அகற்ற வேண்டுமென்று நீதிபதிகள் மிகமுக்கிய தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு போடப்பட்டிருக்கும் மணல் தடுப்பை உடனடியாக எடுக்க வேண்டும். மேலும் ஏரியை ஆக்கிரமித்துள்ள மற்ற இடங்களை அடையாளம் கண்டு அதனையும் உடனடியாக மீட்டு போரூர் ஏரியை பாதுகாக்க வேண்டும்.

மே 17 இயக்கம்

]]>
https://may17iyakkam.com/57861/activities/save-porur-lake-protests/feed/ 0