Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
மீத்தேன் திட்டம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Fri, 28 Feb 2020 18:22:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 எடப்பாடி அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பும், பெட்ரோகெமிக்கல் ரத்து அறிவிப்பும் தேர்தலுக்கான முன்னோட்டமே தவிர அனைத்தும் பொய் https://may17iyakkam.com/82547/articles/%e0%ae%8e%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/ https://may17iyakkam.com/82547/articles/%e0%ae%8e%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/#respond Fri, 28 Feb 2020 18:22:52 +0000 http://may17iyakkam.com/?p=82547 எடப்பாடி அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பும், பெட்ரோகெமிக்கல் ரத்து அறிவிப்பும் தேர்தலுக்கான முன்னோட்டமே தவிர அனைத்தும் பொய்

கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்றும், இரண்டு நாட்களுக்கு முன்பு கடலூர் நாகை மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதி அளித்த சுமார் 50,000கோடி மதிப்பிலான பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்திற்கான உரிமையை ரத்து செய்வதாகவும் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டு கொண்டிருக்கிறது.எடப்பாடி அரசு உண்மையிலேயே மக்களின் மீதும், மண்ணின் மீதும் அக்கறை கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்றால் நாமும் பாராட்டி இருக்கலாம். ஆனால் உண்மை வேறு.

அதாவது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்கள் எதுவும் இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு காரணமாக பாதிக்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இதன்மூலம் ஏற்கனவே 600க்கு மேல் அனுமதி இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிற ஓஎன்ஜிசி நிறுவன எண்ணெய் கிணறுகளாகட்டும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு எண்ணெய் கிணறுகளாகட்டும், அதுபோக சமீபத்தில்தான் வேதாந்தா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை பல்வேறு இடங்களில் கிணறுகளை தோண்டுவதற்கான அனுமதி கொடுத்து விட்டார்கள். மேலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த சம்பந்தப்பட்ட மக்களிடம், மாநில அரசிடம் அனுமதி தேவையில்லை என்று சட்டத்திருத்தத்தையும் செய்துவிட்டார்கள். இந்த சூழ்நிலையில் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு என்பது வெற்று காகிதமே.

அதேபோல பெட்ரோகெமிக்கல் அரசாணை ரத்து என்பது அதைவிட பெரிய பித்தலாட்டம். அதாவது 2008 ஆம் ஆண்டு கடலூர் நாகை ஆகிய மாவட்டங்களில் நாகர்ஜுனா குழுமத்தின் (NOCL) சார்பில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் தொடங்க 02.07.2008 அடிக்கல் நாட்டப்பட்டது. அந்ததிட்டம் தொடங்குவதற்கான தமிழக அரசின் அரசாணை 17.7.2017 அன்று வெளியிடப்பட்டது.

ஆனால் கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏற்பட்ட தானே புயல் போன்ற பல்வேறு கால சூழ்நிலையால் 2000ஏக்கரிலான அதன் கட்டுமானம் 70% தொடங்க படாமலேயே இருந்தது. இதனால் அந்த நிறுவனம் சுமார் 8800 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டு இறுதியில் 2018ல் அந்நிறுவனம் திவாலாகி விட்டதென்று மத்திய அரசின் திவால் சட்ட ஆணையம் அறிவித்துவிட்டது. இப்படி திவாலாகி விட்ட நிறுவனத்தை தான் ஏதோ மக்கள் நலன் கருதி எடப்பாடி அரசு வலுகட்டாயமாக இரத்து செய்துவிட்டதை போன்ற ஒரு பிம்பம் கட்டி எழுப்பப்படுகிறது.

அதைவிட பெரிய பித்தலாட்டம் அந்த திவாலான நிறுவனத்தை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சேட்டர்ஜி குழுமம் வாங்கி பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தை தொடங்கபோகிறார்கள். இதை அந்த நிறுவனமமே இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருக்கிறார்கள்.https://www.business-standard.com/…/tcg-in-talks-with-globa… அதுதான் பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அறிவித்து விட்டார்களே பின்னர் எப்படி பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தை சேட்டர்ஜி குழுமம் செயல்படுத்து மென்று நீங்கள் நினைக்கலாம்.அதில் தான் எடப்பாடி அரசின் சூழ்ச்சியை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

அதாவது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டத்திற்கு எந்த பிரச்சனையில்லை என்று சொல்லியிருக்கிறார்களே. ஆக நாகர்ஜீனா குழுமம் ஏற்கனவே பெட்ரோ கெமிக்கலுக்கு அனுமதி வாங்கி இருக்கிறார்கள்.அதனை இப்போது சேட்டர்ஜி குழுமம் வாங்குகிறது. ஆகவே இதற்கென்று தனி அனுமதி தேவையில்லை. எனவே எப்போதும் போல இனியும் கடலூர், நாகப்பட்டினம் பகுதிகளில் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் தங்கு தடையின்றி இயங்கும்.

ஆக, தமிழக எடப்பாடி அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பும், பெட்ரோ கெமிக்கல் அனுமதி இரத்து அறிவிப்பும் தேர்தலுக்கான நாடகமே ஒழிய,இதனால் ஒரு பயனுமும் இல்லை. இதனை நம்பி நாம் நம் மண்ணுக்கான போராட்டத்தை நிறுத்தவேண்டாம்.

மே 17 இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/82547/articles/%e0%ae%8e%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/feed/ 0
மத்திய, மாநில அரசுகளே! இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக! https://may17iyakkam.com/82427/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be/ https://may17iyakkam.com/82427/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be/#respond Thu, 13 Feb 2020 19:56:56 +0000 http://may17iyakkam.com/?p=82427 மத்திய, மாநில அரசுகளே! இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக!

தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இயங்கும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிவாயு இதுவரை லாரிகளில் தான் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் தொழிற் நிறுவனங்களுக்கு அதிக செலவாகிறது என்பதற்காக தமிழகம் முழுவதும் எரிவாயு குழாய் பதித்து அதன் மூலம் சம்பந்தப்பட்ட தொழிற் நிறுவனங்களுக்கு நேரடியாக எரிவாயுவை கொடுக்கும் திட்டத்தை மத்திய மோடி அரசு 2015ஆம் ஆண்டில் அறிவித்தது. அதன்படி சென்னை எண்ணூர்-திருவள்ளூர்-பெங்களூர்- புதுச்சேரி-நாகப்பட்டினம்-மதுரை-தூத்துக்குடி-இராமநாதபுரம் (ETBPNMTPL) ஆகிய ஊர்களில் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்க ஒ.என்.ஜி.சியும் இந்தியன் ஆயில் கார்ப்ரேசனும் முனைந்தது.

இந்த நிலையில் இந்த திட்டத்தின் ஒரு பகுதியான இராமநாதபுரம் ஒன்.ஜி.சி நிலையத்திலிருந்து தூத்துக்குடிக்கு (142கிலோமீட்டர்) எரிவாயுவை கொண்டுசெல்லும் திட்டத்திற்கு 2017ஆம்ஆண்டு மத்திய மோடி அரசு அனுமதியளித்தது. அதன்படி இந்த திட்டம் தொடங்குவதற்கான பூர்வாங்க வேலைகளை தொடங்கினார்கள்.(பார்க்க படம்:01) இடம் தேர்வு, குழாய் பதிப்பதற்கான டெண்டர் அரசின் ஏனையதுறைகளின் அனுமதி என்று ஒருவழியாக 2018அக்டோபரில் தமிழக சுற்றுப்புறச்சூழல் அனுமதி தவிர்த்து ஏனைய அனைத்து அனுமதியும் கிடைத்துவிட்டது.

தமிழக அரசு 16.02.2018அன்று தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, குளத்தூர் கிராமத்தில் மக்களின் கருத்து கேட்பு கூட்டம் என்ற ஒன்றை இந்த திட்டம் தொடர்பாக ஏற்பாடு செய்தது, அதில் தூத்துக்குடியில் இயங்கும் தொழிற் நிறுவனங்கள் செலவை குறைப்பதற்காக எங்களது விவசாய நிலத்தை தரமுடியாது என்று ஒருமித்த குரலில் விவசாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால். மக்கள் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழக அரசு மத்திய அரசுக்கு எழுதிவிட்டது. https://www.tnpcb.gov.in/pdf_2018/Minutes_iocl27318.pdf
இதனால் தான் சுற்றுப்புறச்சூழல் அனுமதி மட்டும் இந்த திட்டத்திற்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்றக்கூடாதென்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் செல்வம் என்பவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மே15’2019 அன்று அனைத்து நடைமுறைகளையும் நிறைவேற்றமால் இந்ததிட்டத்தை தொடங்கக்கூடாதென்று இடைக்கால தடைபோட்டது.

இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்ததேவையில்லை. அரசின் சுற்றுப்புறச்சூழல் அனுமதி தேவையில்லை என்று சட்டத்தை மாற்றியதன் அடிப்படையில் இப்போது நீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்ட திட்டத்தை எந்தவித சுற்றுப்புறச்சூழல் அனுமதியும் இல்லாமல், மக்களின் எதிர்ப்பினையும் மீறி குழாய் பதிக்கும் வேலையை தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிருக்கிறது.

குறிப்பாக நேற்று தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் பகுதியில் விவசாய நிலத்தில் குழாய் பதிக்கவந்த இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் கம்பெனிகாரர்கள் உள்ளூர் மக்களின் கடுமையான எதிர்ப்பினால் திரும்ப போயிருக்கிறார்கள். (பார்க்க படம் 02.). ஏற்கனவே ஸ்டெர்லைட் போன்ற நச்சுஆலையால் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற சூழலில் இப்போது உணவை தரும் விவசாய நிலத்தை பிடுங்கி அவர்களை உள்நாட்டிலேயே அகதிகளாக்க மத்திய மாநில அரசுகள் நினைக்கிறதா?

ஆகவே தூத்துக்குடிமக்களின் வாழ்வாதரத்தை பாதிக்கும் இந்த எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறுத்தவேண்டுமென்று மே 17இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

]]>
https://may17iyakkam.com/82427/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be/feed/ 0
வேதாந்தா நிறுவனத்திற்காக தமிழ்நாட்டை அழிப்பதா? மோடியின் கார்ப்ரேட் பாசத்திற்கு தமிழ்நாடு பலிகடாவா? https://may17iyakkam.com/82183/articles/general-articles/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/ https://may17iyakkam.com/82183/articles/general-articles/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/#respond Mon, 20 Jan 2020 16:35:58 +0000 http://may17iyakkam.com/?p=82183 வேதாந்தா நிறுவனத்திற்காக தமிழ்நாட்டை அழிப்பதா? மோடியின் கார்ப்ரேட் பாசத்திற்கு தமிழ்நாடு பலிகடாவா?

தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியை அழித்து தமிழர்களை அகதிகளாக மாற்றியே தீருவோமென்று பிஜேபியின் மோடி அரசு சபதமெடுத்து வேலைசெய்கிறது. அதனால் தான் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலாமாக அறிவிக்கக்கோரி தமிழர்கள் நாம் போராடினால் பிஜேபி காவிரி தண்ணீர் உரிமையை மறுத்து காவிரி டெல்டாவை ONGCக்கும், தூத்துக்குடியில் அப்பாவி தமிழர்கள் 14பேரை சுட்டுக்கொன்ற வேதாந்தாவுக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த தமிழர்களிடத்திலும் மிகப்பெரிய எதிர்ப்பை உண்டாக்கியிருக்கிற சூழலில்,

இதுபோதாதென்று ஏற்கனவே எரிகிற நெருப்பில் விறகை அள்ளிபோடுவதைப் போல இப்போது இந்த திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட கார்ப்ரேட் கம்பெனிகள் சுற்றுப்புறச்சூழல் அனுமதியும், மக்கள் கருத்து கேட்பும் கேட்கத்தேவையில்லையென்றும் நான்கு நாட்களுக்கு முன்னால் சனவரி 16’2020அன்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பார்க்க படம் 01. அதாவது நேரிடையாக இப்படிச்சொன்னால் மக்கள் மத்தியில் தனது சதி அம்பலமாகுமே என்று மறைமுகமாக ஹட்ரோ கார்பன் போன்ற அதிக செலவுள்ள சுற்றுபுறச்சூழலை கெடுக்கும் திட்டங்கள் அனைத்தும் ’ A’ கிரேட்க்குள் இருந்தது. இதனை தற்போது வெளியிட்டிருக்கிறதிருத்தப்பட்ட ஆவணத்தில் தரை (ON SHORE) மற்றும் கடல் (OFFSHORE) திட்டங்கள் இனிமேல் ‘B2’ என்கிற அதிக பாதிப்பில்லாத சின்ன திட்டங்கள் இடம் பெறும் கிரேட்டுக்கு மாற்றியிருக்கிறது மத்திய மோடி அரசு. இதன் மூலம் இனி ஹைட்ரோ கார்பன் மீத்தேன் எண்ணெய் எடுத்தல் போன்ற திட்டங்களுக்கு சுற்றுப்புறச்சுழல் அனுமதியும், மக்கள் கருத்து கேட்பும் தேவையில்லை என்ற மத்திய அரசின் சதி நிறைவேறியிருக்கிறது. https://cdn.thewire.in/…/Amendment-Notification-Hydrocarbon…

இதைவிட கொடுமை இந்த அறிக்கையை மத்திய அரசு யாரைக்கேட்டுக்கொண்டு வெளியிட்டது என்பது தான். அது வேறு யாருமில்லை! தூத்துக்குடியில் 14 பேர் துள்ளத்துடிக்க சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு காரணமான வேதாந்தாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டுதான் இந்த வேலையை மோடி அரசு செய்திருக்கிறது. அதாவது கடந்த வருடம் ஏப்ரல் 04,2019 அன்று மத்திய அரசுக்கு வேதாந்தா நிறுவனம் சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதில் வேதாந்தா நிறுவனம் எங்களுக்கு நாகப்பட்டினம் காரைக்கால் பகுதிகளைச் சுற்றி ஹட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கிடைத்திருக்கிறது. ஆகவே எங்களுக்கு 2006 சட்டத்திலுள்ள சுற்றுபுறச்சுழல் அனுமதி வாங்குவது மற்றும் மக்கள் கருத்து கேட்பு என்ற இரண்டு விதிகளையும் மாற்றித்தரவேண்டுமென்று கேட்டு எழுதியிருந்தது. பார்க்க படம்02 https://cdn.thewire.in/…/Vedanta-Part-2-Cover-Letter-4-Apri…

இந்த கட்டளையை ஏற்றுத்தான் நான்கு நாட்களுக்கு முன்னால் மோடி இனி ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு சுற்றுபுறச்சூழல் அனுமதியும், மக்களிடம் கருத்து கேட்கவும் தேவையில்லை என்று ஒரு கார்ப்பரேட் முதலாளிக்காக 7.5 கோடி தமிழர்களின் வாழ்வை சூனியமாக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

மோடி அரசின் இந்த தமிழின துரோகத்தை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க கூடாது. தமிழர்கள் என்ன மோடி அரசின் பலி ஆடுகளா?

மே17இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/82183/articles/general-articles/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/feed/ 0
தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து பேசிய வழக்கில் திருமுருகன் காந்தி அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது https://may17iyakkam.com/81136/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/ https://may17iyakkam.com/81136/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/#respond Sun, 01 Sep 2019 14:41:44 +0000 http://may17iyakkam.com/?p=81136 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் மீத்தேன் திட்டத்தின் ஆபத்துக்களை விளக்கி அத்திட்டத்தை எதிர்த்து 2018ம் ஆண்டு பேசியதற்கு காவல்துறையினர் திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கிற்கு தற்போது நீதிமன்றம் திருமுருகன் காந்தி அவர்களுக்கு பிணை வழங்கியிருக்கிறது. அந்த வழக்கிற்காக திருமுருகன் காந்தி நேற்று ஆகஸ்ட் 30, 2019 ஒரத்தநாடு நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி ஆஜரானார்.

தொடர்ச்சியாக ஏவப்படும் அரசின் அடக்குமுறைகளை மே பதினேழு இயக்கம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்.

]]>
https://may17iyakkam.com/81136/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/feed/ 0
கும்பகோணத்தில் ஜூன் 30 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திட்டமிட்டிருந்த ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாட்டிற்கு தமிழக அரசு தடை https://may17iyakkam.com/80859/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d-30-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d/ https://may17iyakkam.com/80859/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d-30-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d/#respond Fri, 28 Jun 2019 16:44:23 +0000 http://may17iyakkam.com/?p=80859 கும்பகோணத்தில் ஜூன் 30 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திட்டமிட்டிருந்த ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.

உள்ளரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மாநாட்டினை அரசு தலையிட்டு தடுப்பதென்பது ஒரு மோசமான சர்வாதிகாரப் போக்கினையே காட்டுகிறது. சமீப காலங்களில் உள்ளரங்குகளில் நடத்தக் கூடிய நிகழ்வுகளிலும் அரசு தலையிட்டு அனுமதி பெற வேண்டும் என சொல்லி தடுப்பதும், அரங்கு உரிமையாளர்களை மிரட்டுவதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. ஜனநாயகத்தை கொலை செய்யும் போக்குடன் தமிழக அரசு நடந்து கொண்டிருக்கிறதா என்ற கேள்வியினையும் எழுப்ப வேண்டியிருக்கிறது.

மாநாட்டில் உரையாற்றுகின்ற தலைவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பேசுவார்கள் என்றும் ரகசிய தகவல் கிடைத்திருப்பதாகவும், இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறை அனுமதி மறுப்பு அறிக்கையினை தெரிவித்திருக்கிறது.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்த்துப் பேசினாலே சட்டம் ஒழுங்குக்கு எதிரானது என்று சொல்வது என்ன மாதிரியான நிலைப்பாடு? நாம் என்ன ஹிட்லரின் ஆட்சியிலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?
காவிரி டெல்டாவினை பாலைவனமாக்கக் கூடிய மிக மோசமான ஹைட்ரோகார்பன் திட்டத்தினைக் குறித்து பேசவே கூடாது என்பது கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் செயல்.

இந்த அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, சட்டப் போராட்டம் நடத்தி, மக்களின் துணையுடன் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு மீண்டும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்படும்.
மாநாட்டினை தடுக்கும் மோடி-எடப்பாடி அரசின் அடக்குமுறையினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

– மே பதினேழு இயக்கம்

]]>
https://may17iyakkam.com/80859/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d-30-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஜூன் 30 அன்று கும்பகோணத்தில் நடைபெற உள்ள ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு https://may17iyakkam.com/80852/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95/ https://may17iyakkam.com/80852/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95/#respond Tue, 25 Jun 2019 18:15:57 +0000 http://may17iyakkam.com/?p=80852 ஜூன் 30 அன்று கும்பகோணத்தில் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற உள்ளது. அதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (25-6-19) சென்னையில் நடைபெற்றது.
இப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தபசிகுமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன், தமிழர் விடியல் கட்சியின் மாணவர் பாசறை பொறுப்பாளர் நவீன் ஆகியோர் பங்கேற்றனர்.

]]>
https://may17iyakkam.com/80852/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95/feed/ 0
ஹைட்ரோகார்பன் திட்டத்தினை கைவிட வலியுறுத்தி நடைபெற்ற மனித சங்கிலி நிகழ்வில் மே 17 இயக்கம் பங்கேற்ப்பு https://may17iyakkam.com/80843/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%b9%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/ https://may17iyakkam.com/80843/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%b9%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/#respond Tue, 25 Jun 2019 18:07:51 +0000 http://may17iyakkam.com/?p=80843 ஹைட்ரோகார்பன் திட்டத்தினை கைவிட வலியுறுத்தி, பல்வேறு கட்சிகள், அமைப்புகள், பொதுமக்களை ஒருங்கிணைத்து பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் ஒருங்கிணைத்து நடத்திய, மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை மனித சங்கிலி நிகழ்வில் திருத்துறைப்பூண்டியில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

]]>
https://may17iyakkam.com/80843/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%b9%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0
ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு – கும்பகோணத்தில் திரண்டிடுவோம்! https://may17iyakkam.com/80820/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%b9%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/ https://may17iyakkam.com/80820/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%b9%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/#respond Mon, 17 Jun 2019 17:01:37 +0000 http://may17iyakkam.com/?p=80820 கும்பகோணத்தில் திரண்டிடுவோம்!

*ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு*


சூன் 30, ஞாயிறு பிற்பகல் 2 மணி முதல்
பெரியார் அரங்கம் (எஸ்.இ.டி மகால்), குடந்தை.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளும், தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

தமிழ் மண்ணைக் காத்திட திரண்டிடுவோம்.
அனைவரும் வாருங்கள்!

– பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

]]>
https://may17iyakkam.com/80820/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%b9%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/feed/ 0
கதிராமங்கலம் மக்களுக்கு குரல் கொடுக்கச் சென்ற பேராசிரியர் த.செயராமன் அவர்களை உடனே விடுதலை செய்! https://may17iyakkam.com/79929/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ https://may17iyakkam.com/79929/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#respond Sat, 02 Feb 2019 17:53:46 +0000 http://may17iyakkam.com/?p=79929 கதிராமங்கலம் மக்களுக்கு குரல் கொடுக்கச் சென்ற பேராசிரியர் த.செயராமன் அவர்களை உடனே விடுதலை செய்! – மே பதினேழு இயக்கம்

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் துரப்பணப் பணியினை எதிர்த்து கதிராமங்கலம் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். இந்நிலையில் இன்று காவல்துறையின் பாதுகாப்புடன் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினர் வாகனங்களில் வந்து குழாய் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இதனால் சந்தேகமுற்ற கதிராமங்கலம் மக்கள் அங்கு என்ன வேலை நடக்கிறது என தெரிந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுடன் வந்த பேராசிரியர் த.செயராமன் அவர்களை எந்த அடிப்படையுமின்றி, கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றிருக்கிறார்கள் காவல்துறையினர். இந்த அராஜகப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செயராமன் மற்றும் ராஜூ ஆகியோர் குடந்தை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த பிரச்சினையும் செய்யாமல் கேள்வி கேட்க சென்றால் கூட சிறை என்பது இங்கு சர்வாதிகார அரசு இருப்பதையே காட்டுகிறது. இந்த நேரத்தில் பேராசிரியர் செயராமன் அவர்களுக்கும், கதிராமங்கலம் மக்களுக்கும் துணை நிற்க வேண்டியது அனைவரின் கடமை.

பேராசிரியர் த.செயராமன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

]]>
https://may17iyakkam.com/79929/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/ 0
தோழர்  திரு பெ.மணியரசன் அவர்கள் தஞ்சையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/77816/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5-2/ https://may17iyakkam.com/77816/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5-2/#respond Wed, 13 Jun 2018 16:59:55 +0000 http://may17iyakkam.com/?p=77816 தோழர்  திரு பெ.மணியரசன் அவர்கள் தஞ்சையில் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், தாக்கிவிட்டு ஓடிய மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் 12-6-18 அன்று நடைபெற்றது.

இதில் மே பதினேழு இயக்கத் தோழர்களும் பங்கேற்றனர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று அறிவித்த காவல்துறை தோழர்களை கைது செய்தது. ஜனநாயகத்திற்கான இடைவெளி முற்றிலுமாக தமிழ்நாட்டில் முடக்கப்பட்டுக் கொண்டே வருகிறது என்பதையே இந்த நடவடிக்கை நமக்கு காட்டுகிறது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதைக் கூட அனுமதிக்க மறுக்கும் சூழல் என்பது அவசரநிலை காலத்தை நினைவூட்டுவதாகவே இருக்கின்றன.
கைது செய்யப்பட்ட தோழர்கள் இரவு விடுவிக்கப்பட்டனர்.

]]>
https://may17iyakkam.com/77816/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5-2/feed/ 0