Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
ஸ்டெர்லைட் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Sun, 23 Oct 2022 14:27:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு காணொளி https://may17iyakkam.com/89391/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f-3/ https://may17iyakkam.com/89391/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f-3/#respond Sun, 23 Oct 2022 14:24:24 +0000 https://may17iyakkam.com/?p=89391 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையிலான ஆணையம் சமர்ப்பித்த அறிக்கை குறித்த ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் 21-10-2022 வெள்ளி காலை மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்தது. இதில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஊடகவியலாளர்களிடம் உரையாடிய காணொளி.

காணொளி உதவி: ரெட் பிக்ஸ்

யூடியூப் இணைப்பு:

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89391/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f-3/feed/ 0
ஸ்டெர்லைட் படுகொலை உண்மைகளை வெளிக்கொண்டு வந்த அருணா ஜெகதீசன் ஆணையம் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/89388/protests/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f%e0%af%8d/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/ https://may17iyakkam.com/89388/protests/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f%e0%af%8d/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/#respond Sat, 22 Oct 2022 14:19:12 +0000 https://may17iyakkam.com/?p=89388 ஸ்டெர்லைட் படுகொலை உண்மைகளை வெளிக்கொண்டு வந்த அருணா ஜெகதீசன் ஆணையம்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தவர்களை அங்கிருந்த பூங்காவில் மறைந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே துப்பாக்கிச்சூடு நடைபெற்று உள்ளது என்கிறது அறிக்கை.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பல்லாயிரக் கணக்கானவர்களில் படித்த இளைஞர்களை மட்டுமே குறிவைத்து கைது செய்து, சிறையில் அடைத்து இருக்கிறார்கள். அதோடு இரவு நேரத்திலும் வீடுகளில் அத்துமீறி உள்ளே நுழைந்து இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து, இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டிருக்கின்றனர்.

மே 22, 2018 அன்று, உயிரிழப்புகள், சொத்துகள் சூறையாடப்பட்டது போன்ற சம்பவங்கள் நடைபெறும் வரை உளவுத்துறையின் தகவல்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மாவட்ட ஆட்சியர் தனது சாட்சியத்தில் கூறியிருப்பது முற்றிலும் வியப்பை ஏற்படுத்துகிறது.

ஆணையத்தின அறிக்கையில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார், அவர்கள் அவ்வாறு உத்தரவிடுவதற்கு என்ன நோக்கம், சுட்டுக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் காவல்துறையினருக்கு வந்தது ஏன் போன்ற கேள்விகளுக்கான பதில் இல்லாதது ஏமாற்றமே!.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு என்பது மோடியின் நெருங்கிய நண்பரான அனில் அகர்வாலின் வேதாந்த நிறுவனத்தை காப்பாற்ற மோடி அரசு, அதிமுக அரசை ஏவி அன்றைய தலைமை செயலாளரான கிரிஜா வைத்தியநாதன் தலைமையிலான குழுவால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு பச்சைப் படுகொலையாக ஏன் இருக்கக் கூடாது என்கிற ஐயம் மேலோங்குகிறது.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/89388/protests/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f%e0%af%8d/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/feed/ 0
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்பித்த அறிக்கை குறித்து தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல் https://may17iyakkam.com/89382/videos/may17-in-media/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-4/ https://may17iyakkam.com/89382/videos/may17-in-media/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-4/#respond Sat, 22 Oct 2022 13:32:49 +0000 https://may17iyakkam.com/?p=89382 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தமிழ் நாடு அரசு அமைத்திருந்த அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்பித்த அறிக்கையில் வெளிவந்துள்ள பல அதிர்ச்சிகரமான தகவல்கள் குறித்தும், அறிக்கை வெளியிடாத துப்பாக்கி சூட்டின் பின்புலம் குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி லிபர்ட்டி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

யூடியூப் இணைப்பு:

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89382/videos/may17-in-media/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-4/feed/ 0
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையிலான ஆணையம் சமர்ப்பித்த அறிக்கை குறித்த ஊடகவியலாளர்கள் சந்திப்பு https://may17iyakkam.com/89370/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f-2/ https://may17iyakkam.com/89370/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f-2/#respond Fri, 21 Oct 2022 13:21:48 +0000 https://may17iyakkam.com/?p=89370

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையிலான ஆணையம் சமர்ப்பித்த அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை குறித்த நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றை மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்தது. இந்த சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று (21-10-2022 வெள்ளி) காலை நடைபெற்றது. இதில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் பிரவீன் குமார், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அருணா ஜெகதீசன் அறிக்கை அடையாளம் காட்டும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அறிக்கை வெளிப்படுத்தாத காரண காரியங்களை கண்டறிய எடப்பாடி பழனிச்சாமி, கிரிஜா வைத்தியநாதன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், துப்பாக்கி சூட்டிற்கு பின்னால் பாஜக மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சதி வலைப்பின்னல் உள்ளது என்றும் அதனை அறிக்கை வெளிப்படுத்தவில்லை என கூறப்பட்டது.

விரிவான அறிக்கை:

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89370/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f-2/feed/ 0
நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை அடையாளம் காட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திடு! நேரடி குற்றவாளிகள் மட்டுமல்லாது துப்பாக்கிசூட்டின் மறைமுக குற்றவாளிகளை கண்டறிய உயர்மட்ட விசாரணை அமைத்திடுக! https://may17iyakkam.com/89364/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%9c%e0%af%86%e0%ae%95%e0%ae%a4%e0%af%80%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85/ https://may17iyakkam.com/89364/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%9c%e0%af%86%e0%ae%95%e0%ae%a4%e0%af%80%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85/#comments Thu, 20 Oct 2022 14:37:49 +0000 https://may17iyakkam.com/?p=89364

நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை அடையாளம் காட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திடு! நேரடி குற்றவாளிகள் மட்டுமல்லாது துப்பாக்கிசூட்டின் மறைமுக குற்றவாளிகளை கண்டறிய உயர்மட்ட விசாரணை அமைத்திடுக! – மே பதினேழு இயக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் அளித்துள்ள அறிக்கையில், இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

தூத்துக்குடி நகரில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மக்களின் உயிருக்கு ஆபத்தாக மாறிய நிலையில் அதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக போராடி வந்தனர். அதன் உச்சகட்டமாக 2018-ம் ஆண்டு துவங்கிய போராட்டத்தின் 100-வது நாளின் போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதிப் பேரணி சென்றனர். அப்போது பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 வயது மாணவி ஸ்னோலின் உட்பட 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை கண்டித்து அப்போது பல இடங்களில் மே பதினேழு இயக்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது. சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் இது குறித்து ஐநா மனித உரிமை அவையில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பதிவு செய்தார். காவல்துறை மற்றும் அதிகார வர்க்கத்தினை கேள்விக்குட்படுத்தியதால், இந்தியா திரும்பும் போது பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் உபா சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டார். மேலும் அவர் மீது தூத்துக்குடியில் வழக்கு பதியப்பட்டு இன்றும் சிபிசிஐடி விசாரணைக்குள் உள்ளார்.

அதன் பின், துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு ஏற்பட்டது, காயங்கள் ஏற்பட்டது, அப்போதைய சூழல், அதற்கான காவல்துறையின் நடவடிக்கைகள், துப்பாக்கி சூட்டிற்கான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா உள்ளிட்ட பலவற்றை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழ் நாடு அரசு அமைத்தது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விசாரணையின் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 18-ம் தேதி தமிழ் நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அது தற்போது சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டதன் மூலம் பல முக்கிய தகவல்களை வெளிவந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிய பேரணி முன்னரே அறிவிக்கப்பட்டும் அதற்கு மாவட்ட நிர்வாகம் மிகத் தாமதமாக தடை விதித்ததும், அந்த செய்தியை மக்களிடம் கொண்டு செல்லாததும் சம்பவம் நடைபெறுவதற்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் அலட்சியத்துடன் இருந்ததும் தெரியவருகிறது. திருநெல்வேலி சரக டிஐஜி கபில் குமார் சரத்கர், தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், நுண்ணறிவுத்துறை ஐஜி கே.என்.சத்யமூர்த்தி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகிய முக்கிய காவல்துறை தலைமைகள் பொறுப்பற்றத்தன்மையுடன் நடந்துகொண்டதாக அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.

அதேபோல், பொதுமக்கள் யாரும் வன்முறையில் ஈடுபடாத நிலையில் அவர்களின் தலை, மார்பு என முக்கிய உடற்பகுதிகளை குறி வைத்து காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் என்கிறது அறிக்கை. இதன் மூலம் கொலை செய்யும் நோக்கத்துடனே இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது உறுதியாகிறது. சுடலைக்கண்ணு என்ற காவலர் மட்டும் தானியங்கி துப்பாக்கியால் 17 சுற்றுகள் சுட்டுள்ளார். உயர் அதிகாரிக்கு தெரியப்படுத்தாமல் காவல்துறையினர் தன்னிச்சையாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமாக திருநெல்வேலி சரக டிஐஜி, தென்மண்டல ஐஜி, தூத்துக்குடி எஸ்பி, வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறையினர் என 17 பேரை அருணா ஜெகதீசன் அறிக்கை குற்றம்சாட்டுகிறது. இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உடனடியாக கைது செய்து குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ் நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. உண்மை இவ்வாறு இருக்க, நடிகர் ரஜினி காந்த் போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்று கூறி பழியை பொதுமக்கள் மீது போட முயன்றதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும், அப்போதைய முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துப்பாக்கி சூடு குறித்து தொலைக்காட்சி ஊடகங்களில் பார்த்து தெரிந்துகொண்டதாக கூறியிருந்தார். ஆனால், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், நுண்ணறிவுத்துறை ஐஜி கே.என்.சத்யமூர்த்தி ஆகியோர் அவருக்கு தொடர்ந்து தகவல் தெரிவித்துக்கொண்டே இருந்ததாக அறிக்கையில் வெளியாகியுள்ளது. இதன் மூலம், திரு எடப்பாடி பழனிச்சாமி தமிழ் நாட்டு மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளார்.

அதேவேளை, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற பாஜகவின் அரசியல் அழுத்தம் காரணமாக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நெருக்கடியில் இருந்துள்ளார். மேலும், தமிழ் நாடு காவல்துறை திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை என்பதும் புலப்படுகிறது. எனில், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார், அவர்கள் அவ்வாறு உத்தரவிடுவதற்கு என்ன நோக்கம், கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் காவல்துறையினருக்கு வந்தது ஏன் போன்ற கேள்விகளுக்கான பதிலை அறிக்கை வெளிப்படுத்தவில்லை.

ஸ்டெர்லைட்-வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர். எனவே, ஒன்றிய பாஜக அரசின் அழுத்தத்தின் காரணமாக, ஒன்றிய அரசின் உளவுத்துறையின் உத்தரவின் கீழ் தமிழ்நாட்டு காவல்துறை துப்பாக்கி சூட்டை நடத்தியதாக ஐயம் எழுகிறது. ஆகையால், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் மறைமுக குற்றவாளிகளை கண்டறிந்து உண்மையை வெளிக்கொண்டு வர, உயர்மட்ட விசாரணை குழு ஒன்றை அமைத்து, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், நுண்ணறிவுத்துறை ஐஜி கே.என்.சத்யமூர்த்தி ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் கோருகிறது.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் ஆணையம் பரிந்துரைத்துள்ளபடி உரிய இழப்பீடுகளை உடனே வழங்குவதோடு, அவர்களது குடும்பத்தினர் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் கோருகிறது. மேலும், இத்தகைய பயங்கரவாதத்திற்கு பின்புலமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு தமிழ்நாட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என திமுக அரசு கொள்கைத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். அதுவே உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் நீதியாக அமையும்.

மே பதினேழு இயக்கம்
9884864010
20/10/2022 

]]>
https://may17iyakkam.com/89364/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%9c%e0%af%86%e0%ae%95%e0%ae%a4%e0%af%80%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85/feed/ 1
ஸ்டெர்லைட் படுகொலைக்கு உத்தரவிட்டது யார்? – மே 17 இயக்கக் குரல் தலையங்கம் https://may17iyakkam.com/88873/protests/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f%e0%af%8d/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89/ https://may17iyakkam.com/88873/protests/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f%e0%af%8d/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89/#respond Tue, 23 Aug 2022 16:06:58 +0000 https://may17iyakkam.com/?p=88873 ஸ்டெர்லைட் படுகொலைக்கு உத்தரவிட்டது யார்?
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இலங்கையில் நடக்கும் அடக்குமுறைக்கு நிகரான ஒடுக்குமுறைகளை அதிகாரவர்க்கம் ஏவியதை எடப்பாடி அரசு கேள்வி எழுப்பாமல் நடைமுறைப்படுத்தியது. மாறாக, ரஜினிகாந்த் போன்ற நடிகர்களை வைத்து போராடிய மக்கள் மீது அவதூறுகளை ஏவியது. இத்தனை அடக்குமுறைகளையும் அதிகாரவர்க்கமும், அதிமுக அரசும் ஏவியதற்கு காரணம் வேதாந்தா நிறுவனத்திற்கு சாதகமான அவர்களது நிலைப்பாடுகளை அம்பலப்படுத்தியது.

வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/88873/protests/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f%e0%af%8d/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89/feed/ 0
உயிர்ச் சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் – தூத்துக்குடி https://may17iyakkam.com/88264/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/ https://may17iyakkam.com/88264/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#respond Tue, 24 May 2022 18:18:54 +0000 https://may17iyakkam.com/?p=88264

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக, உயிர்ச்சூழல் காக்க களமாடி படுகொலையுண்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக, 24-05-2022 செவ்வாய் மாலை தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலை பெல் ஹோட்டல் கூட்டரங்கில், உயிர்ச் சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மே 17 இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துரை ஆற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/88264/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/ 0
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான சிறப்புச் சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இயற்றிடக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/86050/activities/protests-activities/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0/ https://may17iyakkam.com/86050/activities/protests-activities/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0/#respond Sat, 04 Sep 2021 07:11:25 +0000 https://may17iyakkam.com/?p=86050

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான சிறப்புச் சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இயற்றிடக் கோரி, எஸ்டிபிஐ கட்சி சார்பாக இன்று (04-09-2021 சனி) மாலை 4 மணியளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்கிறார். தோழர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/86050/activities/protests-activities/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0/feed/ 0
தமிழ்நாடு அரசே! ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதிக்காமல் ஆலையை இழுத்து மூடு! https://may17iyakkam.com/85674/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%87-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/ https://may17iyakkam.com/85674/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%87-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/#respond Tue, 13 Jul 2021 12:43:34 +0000 https://may17iyakkam.com/?p=85674

தமிழ்நாடு அரசே! ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதிக்காமல் ஆலையை இழுத்து மூடு! – மே பதினேழு இயக்கம்

நச்சு காற்றை வெளியிட்டதால் மூடப்பட்டிருந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, கொரானா இரண்டாம் அலையில் நாடு முழுவதும் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், கடந்த ஏப்ரல் 27 அன்று உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறக்கப்பட்டது. வரும் ஜூலை 31 அன்று அதன் தற்காலிக இயக்க காலம் முடிவடையும் நிலையில், அதனை மேலும் 6 மாதம் நீட்டிக்க தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தியில் தமிழ்நாடு தன்நிறைவை அடைந்துவிட்ட நிலையில், மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும், மக்களின் விருப்பமின்றி செயல்படும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி மறுத்து, ஆலையை நிரந்தமாக இழுத்து மூட வேண்டும் என தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

வேதாந்தா நிறுவனத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பட்டு வாரியத்தின் தடையாலும், மக்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசின் தடையாலும் மூடப்பட்டிருந்தன. வேதானதா பலமுறை முறையிட்டும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி மறுத்துவிட்டன. 13 பேரின் தியாகத்திற்கு பிறகு சில ஆண்டுகளாக மூடிக்கிடந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையில் ஏற்பட்ட கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்னும் சூழலை பயன்படுத்தி இலவசமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருகிறோம், ஆலையை இயக்க அனுமதி வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் அரசிடம் கேட்டது. அரசு மறுக்க, உச்சநீதிமன்றம் சென்றது வேதாந்தா நிறுவனம். இதனிடையே பெரிய தேர்தல் கட்சிகளை மட்டும் வைத்து அனைத்துக்கட்சி கூட்டி ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய மட்டும் அனுமதிக்க முடிவு செய்து தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதனடிப்படையில் ஜூலை 31 வரை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும்’ஆலையை இயக்க ஏப்ரல் 27 அன்று நீதிமன்றம் அனுமதித்தது.

கடந்தாண்டு கொரோனா பெருந்தொற்று துவங்கியது முதல் இந்தாண்டு இரண்டாம் அலை உருவாகும் வரை ஏறக்குறைய 10 மாத காலம் கிடைத்திருந்தும், தேர்தல்களை நடத்த முனைந்த மோடி அரசு பெருந்தொற்றை சமாளிக்க சரிவர முன்னேற்பாடுகள் செய்யாததால் இரண்டாம் அலையில் மிக மோசமான நெருக்கடியை நாடு சந்தித்தது. தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு திரும்பி விட்டு தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழலை மோடி அரசு உண்டாக்கியது. இச்சூழலை பயன்படுத்தி நாள்தோறும் 1050 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருவதாக கூறி திறக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் மே 19 முதல் இயங்கி வருகிறது. ஆனால் சுமார் 1000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யவே 30 நாட்களுக்கு மேலாக எடுத்துக்கொண்டது. அதாவது சராசரியாக நாளொன்றுக்கு 31 மெட்ரிக் டன் மட்டுமே உற்பத்தி செய்கிறது. இது தமிழ்நாடு அரசையும், நீதிமன்றத்தையும், மக்களையும் ஏமாற்றிய செயலாகும்.

தமிழ்நாட்டில் பெருந்தொற்றின் உச்சத்தில், அதாவது நோய்த்தொற்று எண்ணிக்கை 46,000 என்று இருந்த போது ஆக்ஸிஜன் தேவையானது 820 டன் என்ற அளவிற்கு இருந்தது. பிற நாட்களில் 120-200 டன் மட்டுமே தேவைப்படுகிறது. இதில் 480 டன் ஆக்ஸிஜன் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது. அப்போது சேமிப்பு கொள்ளளவு 900 டன் என்று இருந்தது, தற்போது 4000 டன் என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் ஆக்ஸிஜன் உற்பத்தி எந்திரம் மற்றும் சேமிப்பு கொள்கலன்கள் நிறுவப்பட்டுள்ளன. பெரிய தனியார் மருத்துவமனைகளிலும் அதே நிலை தான். வெளிமாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜன் பெறுவதும் நிறுத்தப்பட்டுவிட்டது. எனில், தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்துகொள்ளும், உச்சபட்ச நிலையையும் சமாளிக்கக்கூடைய அளவிற்கு தமிழ்நாட்டின் கட்டமைப்பு தன்நிறைவை அடைந்துள்ளது. ஆகவே ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் 31 டன் ஆக்ஸிஜன் நிறுத்தப்படுவதால் எவ்வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை.

ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாட்டின் அவமானச் சின்னம். அது அப்புறப்படுத்தப்பட வேண்டும் என மே பதினேழு இயக்கம் தொடர்ந்து கூறி வருகிறது. அதே போல், ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் மீண்டும் மூடப்படுவது கேள்விக்குறியாகும் என்றும், நற்பெயர் பெற்று நிரந்தரமாக தாமிர உருக்காலையை திறக்க முயற்சிக்கும் என முன்னரே எச்சரித்தோம். அதற்கேற்றாற்போல், தூத்துக்குடி, காயல்பட்டினம், திருச்செந்தூர் போன்ற ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உதவிகள் வழங்குவதையும், கட்டமைப்பை மேம்படுத்துவதையும் பல கோடிகளில் செய்து வருகிறது. இது போன்ற செயல்களை காட்டி, தற்போது காலநீட்டிப்பு கேட்கும் ஸ்டெர்லைட் ஆலை, தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அடுத்து நீதிமன்றத்தில் முறையிடும். எனவே ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடு இந்த இடத்திலேயே நிறுத்தப்பட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதால் தமிழ்நாட்டிற்கு இழப்பேதும் இல்லை. மாறாக, அது திறக்கப்பட்டால் பாதிக்கப்பட போவது தமிழர்களே. 4 மாதங்களுக்குள் மூடப்படும் என்று உறுதியளித்த திமுக அரசு, அதற்கான நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது தமிழர்களுக்கு இழைக்கும் துரோகமாகும். எனவே ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு கடுமையான எதிர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு பதிவு செய்ய வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்படுவதை உறுதி செய்து அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதே படுகொலை செய்யப்பட்ட 13 பேருக்கு வழங்கும் நீதியாக இருக்கும்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/85674/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%87-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/feed/ 0
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக்கோரி அமைதி வழியில் நடந்த போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தால் உயிரிழந்த 15 தமிழர்களுக்கு வீரவணக்கம்! https://may17iyakkam.com/85433/protests/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f%e0%af%8d/ https://may17iyakkam.com/85433/protests/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f%e0%af%8d/#respond Fri, 21 May 2021 18:05:22 +0000 https://may17iyakkam.com/?p=85433

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக்கோரி அமைதி வழியில் நடந்த போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தால் உயிரிழந்த 15 தமிழர்களுக்கு வீரவணக்கம்! – மே பதினேழு இயக்கம்

தூத்துக்குடி நகரத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை அனில் அகர்வால் குஜராத் பனியா முதலாளியின் வேதாந்தா என்ற இங்கிலாந்து நாட்டு நிறுவனத்தின் கிளை நிறுவனம். 1994ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனம் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மக்களின் கடுமையான உடல் மற்றும் சுற்றுப்புற பாதிப்புக்கு காரணமாய் இருந்து வந்திருக்கிறது. 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக தூத்துக்குடி சுற்று வாழும் மக்களின் கடுமையான புகார்களுக்கு மத்தியில், 1998ஆம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தால் ‘விதிமுறைகளுக்கு புறம்பாக இந்த ஆலை கட்டப்பட்டதாக’ அறிக்கையும் கொடுக்கப்பட்டது. இருப்பினும் ஆலையின் உடைய கழிவுகளின் பாதிப்பு தொடர்ந்து தூத்துக்குடி பகுதி வாழ் மக்களை சிரமப்படுத்த 2010ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தால் ஆலைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்குவதற்காக உச்ச நீதிமன்றம் சென்ற ஸ்டெர்லைட் நிறுவனம் 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்தி தடையை நீக்கிக் கொண்டது. இருப்பினும் நிறுவனத்தால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளை தொடர்ந்து தூத்துக்குடி மக்கள் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தங்கள் அமைதிவழிப் போராட்டத்தை தொடங்கினர்.

நூறு நாட்களாக நடைபெற்ற இப் போராட்டத்தில் தூத்துக்குடி மக்களும், தூத்துக்குடி முற்போக்கு இயக்கங்களும் தன்னெழுச்சியாக கலந்து கொள்ளவே ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு நெருக்கடிகள் அதிகமாக தொடங்கின. இதைத் தொடர்ந்து 100 வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என்று முடிவு செய்த போராட்டக்காரர்கள் அமைதியான ஊர்வலமாய் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது அந்த ஊர்வலத்தில் திட்டமிட்டு கலவரங்களை செய்து காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 19 வயதே ஆன தங்கை ஸ்னோலின் உட்பட கந்தையா, சண்முகம், கார்த்திக், கிளாஸ்டன், ரஞ்சித் குமார், செல்வசேகர், தமிழரசன், அந்தோணி செல்வராஜ், மணிராஜ், காளியப்பன், ஜெயராமன், ஜான்சி, வினிதா உள்ளிட்ட 15 தமிழர்கள் உயிரிழந்தனர். தங்கை ஸ்னோலின் வாயில் குண்டு பாய்ந்து உயிரிழந்திருந்தார். இந்த படுகொலைகள் தமிழ்நாட்டு மக்களிடையே கடுமையான கோபத்தையும் அதிர்ச்சியையும் மூடியிருந்தன.

ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி அரசு வேதாந்தா நிறுவனத்தின் மீதோ, துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறையின் மீதோ, துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட அதிகாரியின் மீதோ நடவடிக்கை எடுக்காமல் போராடிய போராட்டக்காரர்கள் மீது வழக்குத் தொடுப்பது என்றும், இதுபற்றி வெளியே பேசும் அரசியல் தலைவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவுவது என்றும் தனது பாஜக கட்சியின் மீதான விசுவாசத்தை நிரூபித்துக் கொண்டிருந்தது.

தற்போதைய பண்ருட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவருமான தோழர் வேல்முருகன் அவர்கள் தூத்துக்குடி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினரிடம் ஆறுதல் கூற சென்றதற்காக தமிழக அரசால் கைது செய்யப்பட்டு கடுமையான உடல்நிலை சீர்கேட்டிற்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இக்கொலைகள் பற்றிய உண்மைகளை வெளியே கொண்டுவர செயல்திட்டம் வகுத்து பத்திரிகையாளர் மன்றத்தில் “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அரசு மற்றும் காவி பயங்கரவாத கும்பல்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை” என்று நிரூபித்த சூழியல் போராளி தோழர் முகிலன் அவர்கள் மறுநாளே கடத்தப்பட்டார். மீண்டும் அவர் ஆந்திரப் பகுதியில் ஒரு தொடர்வண்டி நிலையத்தில் கிடைத்த பொழுது கடத்தியவர்களை பற்றி எந்தவித விசாரணையும் தொடங்காமல் அவர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வதிலேயே எடப்பாடி முனைப்பு காட்டியது.

இப் படுகொலைகளை பற்றிய உண்மையை ஐ.நா மன்றத்தில் எடுத்துரைத்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டு பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து கடுமையான தனிமைச் சிறையில் அவரை அடைத்த எடப்பாடி அரசு பல்வேறு இன்னல்களையும், உடல் உபாதைகளையும் உருவாக்கியது.

இவ்வளவு கொடுமைகளையும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை நடத்திவரும் குஜராத் பனியா முதலாளியான அனில் அகர்வால் என்ற தனிமனிதனின் கொள்ளைக்காக அன்றைய தமிழக அரசு செய்தது. இந்த வேதாந்தா நிறுவனம் மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா அரசுக்கு கோடிக்கணக்கில் நிதி கொடுத்து அப்பட்டமாய் வெளியே தெரிந்தது. அது மட்டும் அல்லாமல் ஆஸ்திரேலியா நாட்டின் நிலக்கரி சுரங்கங்களை குத்தகைக்கு எடுக்க இதே அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்திற்கு பிரதமர் மோடியே தூது சென்று அப்பணியை முடித்துத் தந்தார். இதை எதிர்த்து “வேதாந்தா நிறுவனமே வெளியேறு” என்று ஆஸ்திரேலிய மக்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா என்று அல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் வேதாந்தா நிறுவனம் அந்நாட்டு வளங்களை சுரண்டி, சுற்றுசூழலை சீரழித்து வருகிறது. இந்நிறுவனத்தின் முதலாளியான அனில் அகர்வால் தற்போது குடியுரிமை பெற்று இருக்கும் இங்கிலாந்து நாட்டிலேயே இந்நிறுவனத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை, வரி ஏய்ப்பு வழக்குகளும் போடப்பட்டிருக்கின்றன. ஆனாலும் பாரதிய ஜனதா கட்சியின் நெருங்கிய நண்பராக விளங்கும் இவருக்கு ஆதரவாக 15 தமிழர்களை சுட்டு படுகொலை செய்து தன் ஆட்சியை காப்பாற்றிக் கொண்டார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. எல்லாவற்றுக்கும் மேலாக சில நாட்களுக்கு முன்பு கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு “தூத்துக்குடியில் வேன் மீது ஏறி நின்று யாரும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. வேன் மீது ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சொல்லப்படுவது ஒரு கற்பனைக் கதையே” என்று சட்டமன்றத்திலேயே பதில் கூறினார்.

தற்பொழுது கொரோனா நோய்த்தொற்று நேரத்தில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை காரணம் காட்டி மத்திய மாநில அரசுகளின் உதவியோடும், நீதிமன்றத்தின் உதவியோடும் “ஆக்சிசன் தயாரித்துத் தருகிறோம்” என்ற நாடகத்தை ஆடி தனது ஆலையை மீண்டும் தற்காலிகமாக திறந்துள்ளது ஸ்டெர்லைட் நிறுவனம்.

இப்படி அதிகார வர்க்கத்தின் உதவியோடும், கட்சிகளுக்கு நிதி கொடுத்தும் தமிழர்களின் வளங்களைத் திருடி தூத்துக்குடி சுற்றுச்சூழலையும், அங்கு வசிக்கும் மக்களின் உடல் நலத்தையும் சீர்கேடு அடையச் செய்யும் வேதாந்தா நிறுவனம் மீண்டும் இம்மண்ணில் செயல்படத் தொடங்கினால் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 15 தமிழர்களின் ஈகத்திற்கு பொருளே இல்லாமல் போய்விடும்.

பாஜக-அதிமுக மற்றும் அரசு எந்திரம் நடத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலையில் உயிரிழந்த 15 தமிழர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கத்தை செலுத்துவதோடு இத்தகைய அரச பயங்கரவாதம் மீண்டும் நடைபெறாமல் இருக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக இடித்து தரைமட்டம் ஆக்குவதே ஒரே தீர்வு என்று சூளுரைக்கிறது. துப்பாக்கிச்சூட்டிற்கு உத்திரவிட அதிகாரிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

]]>
https://may17iyakkam.com/85433/protests/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f%e0%af%8d/feed/ 0