Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
பெண் உரிமைகள் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Mon, 12 Dec 2022 05:42:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழிகாட்டும் அனல் மேலே பனித்துளி – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/89720/protests/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/ https://may17iyakkam.com/89720/protests/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/#respond Sun, 11 Dec 2022 05:40:00 +0000 https://may17iyakkam.com/?p=89720 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழிகாட்டும் அனல் மேலே பனித்துளி
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், அந்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுக்க முயற்சிப்பதில் வரும் சிக்கல்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை தாண்டி, எப்படி இந்த கடினமான கட்டத்தை எதிர் கொண்டு கடந்து வர வேண்டும் என்பது தான் இப்படத்தின் முக்கிய கரு.

“உயிரை விட மானம் பெருசு தான். ஆனா என்னை பொருத்த வரைக்கும் மானம்கிறது என் உடம்புலயும் நான் போடுற டிரஸ்லையும் இல்ல; நான் வாழுற வாழ்க்கைல தான் இருக்கு.” என்கிறது. இதனை பாதிக்கப்படும் பெண்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து, இதுநாள் வரையில் கற்பிக்கப்பட்ட அனைத்து பிற்போக்கான கருத்துக்களையும் தூக்கியெறிந்து விட்டு இனி வரும் காலங்களில் எதற்கும் அஞ்சாமல் இது போன்ற அநியாயங்களை தைரியமாக எதிர்த்து நிற்க வேண்டும் என்ற கருத்தை ஆழமாக சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.

நம் சமூகத்தில் குறைந்தபட்சம் ஒரு நபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று அவர்களின் நிலையை புரிந்து உறுதுணையாக இருப்பதாக திரையில் ஒரு கதாப்பாத்திரம் தோன்ற 30 வருடங்கள் ஆகிறது. நிஜ வாழ்க்கையில் அவ்வளவு எளிதில் ஒரு சாமானிய பெண்ணின் வாழ்வில் அப்படி ஒரு ஆதரவு சுலபத்தில் கிடைப்பதில்லை.

மேலும் வாசிக்க:

மே 17 இயக்கக் குரல்
9884864010

]]>
https://may17iyakkam.com/89720/protests/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/feed/ 0
மதுவால் அதிகரிக்கும் குடும்ப வன்முறை – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/89121/protests/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f/ https://may17iyakkam.com/89121/protests/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f/#respond Mon, 26 Sep 2022 15:13:46 +0000 https://may17iyakkam.com/?p=89121 மதுவால் அதிகரிக்கும் குடும்ப வன்முறை
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் பெரும்பாலாலும் ‘கணவர் அல்லது அவரது உறவினர்களால் கொடுமைப்படுத்தப்படுவதாக’ பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக குடிபோதையில் பெண்களைக் கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் அன்றாட நிகழ்வாகி விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மது அருந்தும் கணவனால் மனைவி படும் துயரங்கள் சொல்லி மாளாது. தினமும் அடி உதைகளைத் தாங்கிக் கொண்டு திருப்பி அடிக்க முடிந்தாலும் அடிக்காத ஒரு அடிமையாக, ஒரு குடி நோயாளியின் மனைவி ஆகி விடுகிறார்.

கணவன் குடிக்கக் கூடாது என்ற பதற்றம் ஒரு புறம், கணவனை யாரும் எதுவும் தவறாக பேசிவிடக் கூடாது என்ற சுய மரியாதை மறுபுறம். இவை அனைத்திலும் சோர்ந்து விடாது கணவனை மதுவிலிருந்து மீட்கவும், சமூகத்தில் நிமிர்ந்து நன்னடை போடவும் போராடிக் கொண்டிருக்கும் பெண்களும் ஒரு வகையில் போராளிகளே.

மதுவினால் பெண்களுக்கு ஏற்படும் இந்த பாதிப்புகளுக்கு அரசும் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் மது குடிப்பதை அரசுகளும் சட்டபூர்வ அங்கீகாரம் அளித்து அரசின் வருமானத்திற்காக குடி மக்களின் வாழ்க்கை தரத்தையே சீரழிக்கின்றன.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

]]>
https://may17iyakkam.com/89121/protests/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f/feed/ 0
பட்டிமன்றங்களும் ஆணாதிக்க சிந்தனையும் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/89065/protests/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/ https://may17iyakkam.com/89065/protests/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/#respond Mon, 19 Sep 2022 06:15:19 +0000 https://may17iyakkam.com/?p=89065 பட்டிமன்றங்களும் ஆணாதிக்க சிந்தனையும்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

“அம்மா நீங்க பேசும் போது சொன்னீங்க தாலி நாய் கழுத்துல மாட்டுன சங்கிலி மாதிரினு, ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோங்க ஊருக்கு நாய் புடிக்குற வண்டி வந்தா எல்லா நாயையும் புடிப்பாங்க கழுத்துல சங்கிலி இருந்தா அது யாருக்கோ சொந்தமான நாய்னு விட்டுட்டு போயிடுவாங்க, அதுக்கு தான் இதுவும்” என்று கூறி விடைபெற்றுக்கொண்டார். உடனே அந்த அரங்கம் முழுவதும் இருந்த அனைவரும், பெண்கள் உட்பட, கைதட்டி ரசித்துச் சிரித்தனர்.

ஒரு பெண் பிறந்ததில் இருந்து தந்தைக்கு அடிமை, திருமணமான பிறகு கணவனுக்கு அடிமை, வயதான பின் மகனுக்கு அடிமை எனும் மனுதர்ம கோட்பாட்டை வெவ்வேறு வடிவத்தில் ஏற்றுக்கொண்டு, அந்த பிற்போக்கான மனநிலையிலேயை அறிவார்ந்தவர்கள் எனும் நிலையில் நின்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் தமிழ் இலக்கிய மன்றத்தில் உரையாற்றும் போது “மஞ்சள் முகமே வருக, மங்கள விளக்கே வருக” என ஆரம்பிக்கும் திரையிசை பாடல் ஒன்றை பாடி “அந்த காலத்தில் எல்லாம் பெண்கள் மஞ்சள் பூசிய முகத்துடன் மங்களகரமாக பார்க்க லட்சனமாக இருந்தார்கள். ஆனால் இப்போது இருக்கும் பெண்கள் அழகுப்படுத்தி கொள்கிறேன் என்ற பெயரில் குரங்கு மாதிரி மாறுகிறார்கள்” என்று பேசுகிறார்.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/89065/protests/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/feed/ 0
மாணவி ஸ்ரீமதியின் பிணக்கூறாய்வுகளுக்கு இடையேயான முரண்பாடு – மே 17 இயக்கக் குரல் தலையங்கம் https://may17iyakkam.com/88891/protests/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ https://may17iyakkam.com/88891/protests/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#respond Fri, 26 Aug 2022 16:51:25 +0000 https://may17iyakkam.com/?p=88891 மாணவி ஸ்ரீமதியின் பிணக்கூறாய்வுகளுக்கு இடையேயான முரண்பாடு
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

இரண்டாவது அறிக்கையின் படி மாணவியின் உடலில் பல்வேறு காயங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் அறிக்கையில் இல்லாத காயங்கள் பற்றிய குறிப்புகள் இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கின்றன. எலும்பு முறிவு ஏற்பட்ட தடயங்கள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவரங்கள் போராடிய பொதுமக்களின் கேள்வியை நியாயப்படுத்துவது போலவே அமைந்திருக்கிறது. முதலில் நடந்த பிணக்கூறாய்வில் பதிவு செய்யப்படாத தடயங்களை இரண்டாவது ஆய்வு வெளிப்படுத்துவதால் காவல்துறையின், மருத்துவத்துறையின் நேர்மை கேள்விக்குள்ளாகிறது. ஒரு இளம்மாணவிக்கு நிகழ்ந்த இந்த கொடூர மரணத்தை குறித்து ஏன் அதிகாரவர்க்கம் நேர்மையாக நடக்க மறுக்கிறது எனும் கேள்விக்கான பதில் என்னவாக இருக்க முடியும்?

வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/88891/protests/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/ 0
பில்கிஸ் பானோ, ஜாக்கியா ஜாஃப்ரி – இரு பெண்களுக்கு நேர்ந்த அநீதி – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/88861/protests/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9c/ https://may17iyakkam.com/88861/protests/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9c/#respond Sun, 21 Aug 2022 17:47:02 +0000 https://may17iyakkam.com/?p=88861 பில்கிஸ் பானோ, ஜாக்கியா ஜாஃப்ரி – இரு பெண்களுக்கு நேர்ந்த அநீதி
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

5 மாத கர்ப்பிணிப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து அவளின் 3 வயதுக் குழந்தையை சுவரில் அடித்துக் கொன்ற சனாதன பார்ப்பன காட்டுமிராண்டிகளை மாலை அணிவித்தது, இனிப்பு வழங்கி சிறை வாயிலில் வரவேற்றனர். இந்த, இந்துவெறி “குஜராத் மாடலை” தான் மோடி இந்தியா முழுவதும் நிறுவிடப் பதைக்கிறார்.

கட்டுரையை வாசிக்க:

மே 17 இயக்கக் குரல்
9444327010 

]]>
https://may17iyakkam.com/88861/protests/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9c/feed/ 0
கார்கி பேசும் அறம் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/88774/protests/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-17-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95/ https://may17iyakkam.com/88774/protests/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-17-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95/#respond Tue, 02 Aug 2022 15:04:59 +0000 https://may17iyakkam.com/?p=88774 கார்கி பேசும் அறம்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

இந்திய சமூகத்தில் பிறந்த ஒரு பெண்ணுக்கு தான் பிறந்த நோடியிலிருந்து, இறக்கும் தருணம் வரை ஒவ்வொரு முடிவுக்கும் ஆயிரம் தடைகள், பல கடுமையான விமர்சனங்கள், வசவுகள் என வந்து குவிந்தவண்ணமே இருக்கும். இப்படியான ஒரு சூழலில் வளர்ந்த கார்கி எனும் பெண் தன் வாழ்க்கையின் மிக முக்கியமான, கடினமான அதே சமயம் அறம் சார்ந்து நிற்கக் கூடிய ஒரு முடிவு எடுக்கிறார்.

கட்டுரையை வாசிக்க

]]>
https://may17iyakkam.com/88774/protests/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-17-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95/feed/ 0
அன்னை முத்துலட்சுமி அம்மையார் அவர்களின் நினைவுநாளில் (ஜூலை 22, 1968) மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது! https://may17iyakkam.com/88739/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae/ https://may17iyakkam.com/88739/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae/#respond Fri, 22 Jul 2022 15:46:04 +0000 https://may17iyakkam.com/?p=88739

ஆங்கிலேய இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், பெண் குழந்தைகளை சீரழிக்கும் இந்து மத சாதிக்கொடுமையான தேவதாசி முறையை ஒழிக்க பாடுபட்டவரும், சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்ற பெண் உறுப்பினருமான அன்னை முத்துலட்சுமி அம்மையார் அவர்களின் நினைவுநாளில் (ஜூலை 22, 1968) மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது!

இந்துத்துவ சனாதன ஆட்சி காலம் தொடங்கி, முகலாயர் ஆட்சி கடந்து, ஆங்கிலேயர் ஆட்சியிலும் கூட இந்து மதம் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் மக்களின் வீட்டுப் பெண்கள் படிப்பதற்கோ, வேலைக்கு செல்வதற்கோ, சொத்துரிமை கோருவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் இந்தியாவிலேயே முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை போராடி வென்று காட்டியவர் அன்னை முத்துலட்சுமி அம்மையார் ஆவார்.

அன்னை முத்துலட்சுமி அம்மையார் அவர்களின் வாழ்க்கை பெரும் போராட்டம் நிறைந்தது. அவரது பள்ளிப் படிப்பு முடித்து, மருத்துவக் கல்லூரியில் சேர முற்பட்டபோது இந்து சனாதன சமூகத்தை சேர்ந்த பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். ஆயினும் பல தடைகளைத் தாண்டி அவர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து தருணத்தில், அவ்வகுப்பில் படித்து ஒரே மாணவியாக அவர் மட்டுமே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு கேலிப்பேச்சுகளுக்கும் செவி கொடுக்காமல் மருத்துவ பட்டத்தை பெற்று அன்றைய ஆங்கிலேய ஆட்சிக்குட்பட்ட இந்திய நிலப்பரப்பில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை வென்று காட்டினார். அத்தோடு இல்லாமல் இங்கிலாந்து லண்டன் மாநகரில் மருத்துவமனையில் பயிற்சிகளும் மேற்கொண்டார்.

அன்னை முத்துலட்சுமி அம்மையார் சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிய ஒரே பெண் மருத்துவராகவும் விளங்கினார். அக்காலகட்டத்தில் அம்மருத்துவமனையில் குழந்தைகளுக்கு என்று ‘தனி வார்டு’ அமைக்க கோரிக்கை விடுத்து அதை வென்று காட்டினார். அதுமட்டுமல்லாமல் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

அவரது மருத்துவ சேவைகள் ஒருபுறமிருக்க, பெண் விடுதலைக்காக அவர் முன்னெடுத்த செயல்பாடுகள் இன்றளவும் அவர் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றன. இளம் வயதில் ஆண், பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதை கடுமையாக எதிர்த்து சட்டமன்றத்தில் குரல் எழுப்பினார். தன் சமகாலத்தில் இயங்கிவந்த பல்வேறு பெண் மருத்துவர்களின் கருத்துக்களை தொகுத்து சட்டமன்றத்தில் உரையாற்றிய அன்னை முத்துலட்சுமி அம்மையார், “ஒரு இளம்பெண், குழந்தையின் கள்ளம் கபடம் அற்ற இயல்பை இழக்கிறாள். வெட்கப்பட்டு பேசாது ஒதுங்கி நிற்கிறாள். வீட்டிலுள்ள வயதான பெண்களின் வழிமுறைகளை பின்பற்ற தொடங்குகிறாள். வீட்டில் உள்ள பெண்களுக்கு வெளியில் இருந்த பொழுது போக்கும் இல்லாததால், இந்த பெண்ணின் மூளையில் முற்றிய பெண்களின் பாலுறவு கருத்துக்களை அவர்கள் புகுத்துக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு அப்பெண் மாப்பிள்ளையின் பெற்றோர்கள் சொத்து ஆகிறாள். அவளது இயல்பான செயல்பாடுகளுக்கு தடைகள் விதிக்கப்படுகின்றன. அவள் மாமியார், மற்றும் அயலார் முன் ஓடி விளையாடவோ, சத்தமாக பேசவோ, உரக்க சிரிக்கவோ கூடாது. இவ்வாறு அவளது மிக ஒளி வாய்ந்த பருவமாயக்கிய இளம்பெண் பருவம், அவளிடமிருந்து பறிக்கப்படுகிறது. அவளுக்கு குழந்தை பருவமும், முதிர்ந்த பெண்ணின் பருவமும் மட்டுமே தெரியும்.” என்று சிறு குழந்தையாக இருக்கும்பொழுது கட்டாய திருமணம் செய்து வைக்கப்படும் பெண் குழந்தைகளின் மனநிலையைப் பற்றி தெளிவாக விளக்கிச் சொன்னார். மேலும் பல போராட்டங்களுக்கு பிறகு குழந்தை திருமணத்தை தடை செய்யும் ‘சாரதா சட்டம்’ என்ற சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு முன்னோடியான போராட்டங்களை முன்னெடுத்தவர் அன்னை முத்துலட்சுமி அவர்களில் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றளவும் அன்னை முத்துலட்சுமி அம்மையாரின் புகழ் ஓங்கி ஒலிக்கச் செய்யும் அவரது பெருமுயற்சி, இந்து சனாதன மதத்தில் இளம் பெண்களை பொட்டு கட்டி தேவதாசி என்ற பட்டத்தை சுமத்தி இழிவுக்கு உள்ளாக்கும் மூடப் பழக்கத்தை ஒழித்துக் கட்டியது ஆகும். தந்தை பெரியார் அவர்களின் பேராதரவு பெற்ற இப்போராட்டத்தில் சட்டசபையின் கேள்வி நேரத்தில் அன்றைய காங்கிரஸ் உறுப்பினராக இருந்த சத்தியமூர்த்தி என்ற பார்ப்பனர், “தேவதாசி முறை என்பது கடவுளுக்கு சேவை செய்வது. அது புனிதமானது” என்று கருத்து தெரிவித்த பொழுது, அன்னை முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் “அப்படி என்றால் உங்கள் வீட்டுப் பெண்களை அப்புனித செயலில் ஈடுபடுத்தலாமே. ஏன் ஒவ்வொரு முறையும் பிறர் வீட்டுப் பெண்களையே ஈடுபடுத்துகிறார்கள்?” என்று எதிர் கேள்வி எழுப்பியது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நிகழ்வாகும்.

இதுமட்டுமல்லாது, இன்று இந்திய ஒன்றியம் எங்கும் ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கும் சென்னை அடையாறு பகுதியில் இருக்கும் புற்றுநோய் மருத்துவமனை அன்னை முத்துலட்சுமி அம்மையார் அவர்களின் பெருமுயற்சியால் தொடங்கப்பட்டதே ஆகும். தன் ஒரே தங்கையை புற்றுநோய்க்கு பலி கொடுத்த அம்மையார் அவர்கள் புற்றுநோக்கான ஆய்வுகூடத்தை உருவாக்க போராடி பின்பு அரசு உதவியோடு செயல்படுத்தியும் காட்டினர். இன்று பல்வேறு ஏழை எளிய மக்களின் உயிர்காக்கும் அருமருந்தாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இவ்வாறு உருவானதே.

பெண்களின் உயர்வுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் அன்னை முத்துலட்சுமி அம்மையார் ஆவார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் ரிட்ரேட் என்ற கட்டிடத்தில் ஆதரவற்ற இளம் பெண்களுக்கு பாதுகாப்பும் ஆதரவும் தரும் விடுதி ஒன்றை தொடங்கி நடத்தி வந்தவர். அதுமட்டுமல்லாமல் கல்லூரியில் படிக்கும் முன் வந்த பெண்களுக்கு அக்கல்லூரி விடுதியில் இடம் கொடுக்க மறுத்து அவர்களின் கல்வி நிலையை கேள்விக்குள்ளாக்கிய காலத்தில், தனது சொந்த வீட்டையே அவர்களுக்கு விடுதியாக மாற்றி கொடுத்து அப்பெண்களின் கனவை நனவாக்கியவர். இம்முயற்சியே பிற்காலத்தில் சென்னையில் புகழ்பெற்ற ‘அவ்வை இல்லம்’ என்ற பெண்கள் விடுதியாக உருவெடுத்தது.

இவ்வாறு ‘தன் சொல்லும், செயலும் பெண்களின் விடுதலைக்காகவே’ என்று பாடுபட்ட அன்னை முத்துலட்சுமி அம்மையார் அவர்களின் நினைவுநாளாகிய இன்று அவர்தம் வழியில் பெண்ணுரிமைக்காகவும், பெண்விடுதலைக்காகவும் பாடுபடுவோம் என்று உறுதி ஏற்று மே பதினேழு புகழ் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/88739/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae/feed/ 0
களப்பணியில் வெற்றிகண்ட மே 17 தோழர்கள்: போக்சோவில் கைதான நாகை ஆசிரியரின் குற்றப் பின்னணி என்ன? – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/87956/protests/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae/ https://may17iyakkam.com/87956/protests/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae/#respond Fri, 13 May 2022 16:56:28 +0000 https://may17iyakkam.com/?p=87956 களப்பணியில் வெற்றிகண்ட மே 17 தோழர்கள்: போக்சோவில் கைதான நாகை ஆசிரியரின் குற்றப் பின்னணி என்ன?
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

அரசு அதிகாரிகள் மெத்தனமாக செயல்படும் தருவாயில், நேரடியாக களத்தில் இறங்கிய மே 17 இயக்கத் தோழர்கள், நிகழ்வுகளை மிகவும் நுணுக்கமாக கண்காணித்து புலப்பட்ட அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி குற்றவாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவதை உறுதி செய்தனர்.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/87956/protests/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae/feed/ 0
இந்தியாவில் போராட்டக்களத்தில் குதித்து சிறை சென்ற முதல் பெண்ணான தோழர் நாகம்மையார் அவர்களின் 89 வது நினைவுநாளில் புகழ்வணக்கம் செலுத்துகிறோம் (மே 11, 1933) https://may17iyakkam.com/87934/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/ https://may17iyakkam.com/87934/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/#respond Wed, 11 May 2022 16:41:32 +0000 https://may17iyakkam.com/?p=87934

இந்தியாவில் போராட்டக்களத்தில் குதித்து சிறை சென்ற முதல் பெண்ணான தோழர் நாகம்மையார் அவர்களின் 89 வது நினைவுநாளில் புகழ்வணக்கம் செலுத்துகிறோம் (மே 11, 1933)

“ஒத்துழையாமை இயக்க மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டில் இருக்கும் இரண்டு பெண்களிடம் இருக்கிறது”

1922 ம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தந்தை பெரியார் தலைமையில் நடந்த போராட்டத்தை நடத்தி வந்த அன்னை நாகம்மையார் மற்றும் அன்னை கண்ணம்மாள் அவர்கள் இருவரை பற்றியும் திரு.காந்தியடிகள் அவர்கள் கூறிய வரிகள் இவை. அத்தகைய வீரமிக்க போராட்டக் வரலாறு கொண்டவர் அன்னை நாகம்மையார் அவர்கள் ஆவார்.

பிறந்த குடும்பமும், தான் திருமணம் செய்த தந்தை பெரியாரின் குடும்பமும் ஆரிய பிற்போக்குத்தனத்தை கொண்டிருந்தாலும் தந்தை பெரியாரின் தொடர் அறிவுரைகளாலும், முயற்சிகளாலும் சுயமரியாதைப் பாதையில் செல்லத் தொடங்கினார். பெரியாருடன் எல்லா போராட்டங்களிலும் முன் நின்ற அவர், சிறை செல்லவும் தயங்கியவர் இல்லை.

அவர் முன்நின்ற போராட்டங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. 1920 ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்க போராட்டம்.

2. 1921 ம் ஆண்டு கள்ளுக்கடை மறியல் போராட்டம். இப்போராட்டத்தில் அன்னையார் ஈடுபட்டதும் அன்றைய ஆங்கிலேய அரசு அதுவரை போட்டிருந்த 144 தடை உத்தரவை நீக்கியது.

3. 1924 ம் ஆண்டு வைக்கம் போராட்டம். பெரியாரின் கைதுக்குப் பிறகு போராட்டத்தை தொடர்ந்து அன்னை கண்ணம்மாள் அவர்கள் உள்ளிட்ட பெண்கள் முன்னெடுக்க போராட்டம் தொடர்ந்தது. அப்பொழுது அங்கு வந்த ஒரு பார்ப்பன காவல்துறை அதிகாரி தன் காவலர்களிடம் “பெண்கள் என்பதால் தனிச் சலுகை காட்டவேண்டாம். ஆண்களை எப்படி அடக்குவீர்களோ அப்படியே செயல்படுங்கள்” என்று உத்தரவிட்டார்.

1930 ம் ஆண்டு குடியரசு, Revolt பத்திரிக்கைகள் அன்னையார் அவர்களின் பொறுப்பிலேயே இயங்கின. திராவிட இயக்க வீராங்கனையும், சுயமரியாதை சுடருமான அன்னை நாகம்மையார் அவர்களின் நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/87934/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/feed/ 0
சென்னை ஐஐடியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தலித் மாணவிக்கு நீதி வழங்கிடு! ஐஐடி நிர்வாகம், பேராசிரியர்கள், காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடு! https://may17iyakkam.com/87650/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/ https://may17iyakkam.com/87650/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/#respond Thu, 31 Mar 2022 06:33:36 +0000 https://may17iyakkam.com/?p=87650

சென்னை ஐஐடியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தலித் மாணவிக்கு நீதி வழங்கிடு! ஐஐடி நிர்வாகம், பேராசிரியர்கள், காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடு! – மே பதினேழு இயக்கம்

மேற்கு வங்கத்தை சேர்ந்த தலித் மாணவி ஒன்றிய அரசின் உயர் தொழிற்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் பிஎச்டி படிப்பை கடந்த 2017 முதல் மேற்கொண்டு வருகிறார். இவர் சக மாணவர்களால் இரண்டு முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டும் தொடர்ந்து 4 ஆண்டுகளாக பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார். புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத ஐஐடி நிர்வாகம், ஓராண்டிற்கு பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறை, மாணவர்களின் பாலியல் சுரண்டலுக்கு துணை போன பேராசியர்கள் என அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

அதே மேற்கு வங்கத்தை சேர்ந்த முதல் குற்றவாளியான உயர்சாதியை சேர்ந்த கிங்ஷீக்தேவ் ஷர்மா மற்றும் சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோர் தலித் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, தவறான முறையில் புகைப்படம் எடுத்து அவரை தொடர்ந்து பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இதனால் அந்த மாணவி 3 முறை தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தனது பிஎச்டி இணை வழிகாட்டியிடம் புகாரளித்த போது அவர் மாணவியை சாதிரீதியாக கொச்சைப்படுத்தியதோடு, மாணவர்களின் பாலியல் சுரண்டலுக்கு துணை போயுள்ளார். மேலும், மாணவி தனது ஆய்வை தொடர்வதற்கும் தடையாக இருந்துள்ளார்.

பல்வேறு தரப்பிலிருந்து ஊக்கம் கிடைத்ததால் ஐஐடி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். அதனை ஐஐடி நிர்வாகம் முறையாக விசாரிக்காததோடு, மாணவி தனது ஆய்வை சமர்ப்பிக்கும் வரை குற்றம்சாட்டப்பட்ட மாணவர்கள் தமது ஆய்வை சமர்ப்பிக்கவும், ஐஐடி வளாகத்திற்குள் நுழையவும் தடை விதித்தது. ஆனால், மாணவர்கள் தொடர்ந்து இணையம் வழியாக அதே மாணவியின் வகுப்பில் கலந்துகொண்டு ஆய்வை தொடர்ந்து வருகின்றனர். மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து மாணவி ஆய்வகத்தை பயன்படுத்துவதற்கும், ஆய்வுக்கான வேதிப்பொருட்களை பெறவும் தடை ஏற்படுத்தியுள்ளனர்.

இறுதியாக அந்த மாணவி மயிலாப்பூர் மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் காவல்துறை உரிய விசாரணை மேற்கொள்ளாமலும், குற்றத்திற்கு ஆதாரமான மாணவர்களின் செல்ஃபோன்களை கைப்பாற்றாமலும் காலம் தாழ்த்தியுள்ளனர். ஓராண்டிற்கு பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதிலும் பாலியல் வன்கொடுமை பிரிவுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. தேசிய மகளிர் ஆணையம் தலையிட்ட பின்பு, 9 மாதங்களுக்கு பிறகும் நடவடிக்கை எதுவும் எடுக்காதது தற்போது தெரிய வந்துள்ளது. காவல்துறையினரின் விசாரணையை காட்டி ஐஐடி நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

கடந்த 4 ஆண்டுகளாக மாணவி உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐஐடி நிர்வாகம், வழிகாட்டியாக இருக்கும் பேராசிரியர்கள், காவல்துறை என அனைத்து தரப்பிலிருந்தும் நீதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு முதன்மை காரணமாக இருப்பது மாணவியின் சாதி. பட்டியல் சமூகத்தவர்கள், சிறுபான்மையினர்கள் மீது உயர்சாதி பார்ப்பனர்களால் நிரம்பியுள்ள ஐஐடியின் ஒடுக்கமுறை பலமுறை நடந்தேறியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பாத்திமா லத்தீப் என்னும் மாணவி தனது மரணத்திற்கு உயர்சாதி பார்ப்பனரான சுதர்சன் பத்மநாபன் என்ற பேராசிரியர் தான் காரணம் என்று கூறியும் இன்றளவும் பெரிய நடவடிக்கை எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

ஐஐடியில் தொடரும் சாதிய பாகுபாடும், அதனால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்கள் மரணிப்பதும் தொடர் நிகழ்வாகி போனது. குற்றச்செயல்களில் உயர்சாதி பார்ப்பனர்கள் ஈடுபடுவதால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாதது இதற்கு காரணமாக அமைகிறது. தற்போது மேற்கு வங்கத்தை சேர்ந்த தலித் மாணவியின் புகாரின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததோடு, குற்றச்செயலுக்கு உடந்தையாகவும் இருந்துள்ளனர். காவல்துறையினரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் குற்றத்தை மூடி மறைக்க முயன்றுள்ளனர்.

ஐஐடியில் தொடரும் சாதி அடிப்படையிலான குற்றச்செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு மேற்கு வங்க தலித் மாணவியின் புகாரை கொண்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. புகாரளித்தும் நடவடிக்கை மேற்கொள்ள ஐஐடி நிர்வாகத்தினர் மீதும், குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர்கள் மீதும், தகுந்த நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீதும் அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/87650/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/feed/ 0