Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
பாசிச எதிர்ப்பு – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Sat, 24 Dec 2022 15:23:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 பாசிச, சனாதனத்தை வீழ்த்த , சமூகநீதி ஜனநாயகம் காக்க, அண்ணல், ஐயா, கீழ் வெண்மணி நினைவுப் பொதுக்கூட்டம் https://may17iyakkam.com/89766/activities/public-meetings/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ https://may17iyakkam.com/89766/activities/public-meetings/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#respond Sat, 24 Dec 2022 15:23:36 +0000 https://may17iyakkam.com/?p=89766

பாசிச, சனாதனத்தை வீழ்த்த , சமூகநீதி ஜனநாயகம் காக்க, அண்ணல், ஐயா, கீழ் வெண்மணி நினைவுப் பொதுக்கூட்டம் இன்று (24-12-2022) மாலை 4 மணிக்கு சென்னை எண்ணூர்-கத்திவாக்கம் கடைவீதியில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89766/activities/public-meetings/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/ 0
பாபர் மசூதி அராஜகமாக இடிக்கப்பட்ட கருப்பு நாளில் வேலூரில் நடைபெற்ற வழிபாட்டுரிமைப் பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/89707/activities/protests-activities/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%82%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%bf-2/ https://may17iyakkam.com/89707/activities/protests-activities/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%82%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%bf-2/#respond Wed, 07 Dec 2022 07:14:26 +0000 https://may17iyakkam.com/?p=89707

டிசம்பர் 6, பாபர் மசூதி அராஜகமாக இடிக்கப்பட்ட கருப்பு நாளில் தமுமுக ஒருங்கிணைத்த வழிபாட்டுரிமைப் பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் 06-12-2022 செவ்வாய் மாலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். முன்னதாக அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89707/activities/protests-activities/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%82%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%bf-2/feed/ 0
புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி அண்ணலின் உருவ சிலைக்குவ மாலை அணிவித்து மரியாதை https://may17iyakkam.com/89701/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3-6/ https://may17iyakkam.com/89701/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3-6/#respond Wed, 07 Dec 2022 07:09:12 +0000 https://may17iyakkam.com/?p=89701

புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி, மே பதினேழு இயக்கத்தின் சார்பாக, 06-12-2022 செவ்வாய் காலை சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அண்ணலின் உருவ சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே பதினேழு இயக்கத் தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89701/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3-6/feed/ 0
புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த நாளையொட்டி அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை https://may17iyakkam.com/87745/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3-4/ https://may17iyakkam.com/87745/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3-4/#respond Fri, 15 Apr 2022 14:20:59 +0000 https://may17iyakkam.com/?p=87745

புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த நாளையொட்டி, மே பதினேழு இயக்கத்தின் சார்பாக 14-04-2022 காலை சென்னை கோடம்பாக்கத்திலுள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மே பதினேழு இயக்கத் தோழர்கள் பறையிசைத்துக் கொண்டே அணிவகுத்து சென்று முழக்கங்கள் இட்டவாறு மரியாதை செலுத்தினர். விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87745/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3-4/feed/ 0
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த நாளில் நடைபெற்ற மண்ணுரிமை மீட்பு – நீலச்சட்டை அணிவகுப்பு https://may17iyakkam.com/87719/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0-5/ https://may17iyakkam.com/87719/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0-5/#respond Thu, 14 Apr 2022 14:00:17 +0000 https://may17iyakkam.com/?p=87719

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த நாளில், மக்கள் விடுதலை முன்னணி (PLF) சார்பாக மண்ணுரிமை மீட்பு – நீலச்சட்டை அணிவகுப்பு பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகில் இன்று (14-04-2022) காலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்று உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87719/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0-5/feed/ 0
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்தநாளில் புகழ்வணக்கம் செலுத்துவோம் – ஏப்ரல் 14, 1891 https://may17iyakkam.com/87710/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d-3/ https://may17iyakkam.com/87710/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d-3/#respond Thu, 14 Apr 2022 13:53:58 +0000 https://may17iyakkam.com/?p=87710

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்தநாளில் புகழ்வணக்கம் செலுத்துவோம் – ஏப்ரல் 14, 1891

“சாதி கூடாது என்றால் உங்களுடைய இலட்சிய சமூகம் எப்படிப்பட்டது என்ற கேள்வி நிச்சயம் எழக்கூடும். என்னுடைய இலட்சிய சமூகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.”
அண்ணல் அம்பேத்கர் அவர்கள்

இந்திய ஒன்றியத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதையும், இந்து மதத்தின் சனாதன வர்ணாசிரம கொடுமையால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓட்டுரிமை, இடஓதுக்கீடு போன்ற அடிப்படை உரிமைகளை போராடி பெற்றுத் தந்தவரும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சிறப்புரிமைகள், பெண்களுக்கான சொத்துரிமை போன்ற சட்டங்களை நிறைவேற்றாத காங்கிரஸ் அரசை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியையே துறந்தவருமான புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கனவுதான் மேற்கூறப்பட்ட சமூகம்.

இங்கிலாந்து இலண்டன் நகரின் வழக்கறிஞர் பட்டப்படிப்பு படிக்கும் அளவிற்கு கடும் உழைப்பை கொண்டிருந்தாலும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தன்னளவில் சந்தித்த சாதிய தீண்டாமைக் கொடுமைகள் கணக்கிலடங்ககாதவை. அத்தகைய கொடுமைகளே அண்ணல் அவர்களை சாதியின் தோற்றம் குறித்த காரணங்களைத் தேடச்செய்தன. அத்தேடலின் முடிவில் இந்துமதமும், அதன் சாதிய அடுக்கும், அதன் உச்சியில் அமர்ந்து அதிகாரம் செலுத்தும் பார்ப்பனர்களும், அவர்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட பார்ப்பனியக் கட்டமைப்புமே தீண்டாமையின் ஊற்றுக்கண் என்பதை புரிந்து கொண்டார். அந்த கணம் முதல் இந்து மதத்தை ஒழிப்பதே சாதி ஒழிப்பிற்கு ஒரேவழி என்றும் உணர்ந்து கொண்டார்.

அதை தன் எழுத்துக்களில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“பார்ப்பனர், சத்ரியர், வைசியர், சூத்திரர் எனும் பழைய முத்திரைகளை ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த சதுர்வர்ண முறையை நான் அறவே வெறுக்கிறேன். என் முழு இயற்கையும் அதை எதிர்த்து எழுகிறது.”

‘அன்பே ஒற்றை வழி’ என்று போதித்த புத்தரின் தத்துவத்தை உணர்ந்த அண்ணல் அவர்கள் ‘வெறுக்கிறேன்’ என்று கூறும் அளவிற்கு இந்து மதம் தீண்டாமைப் புரையோடிய மதமாய் இருந்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்து என்பதையே அண்ணல் ஏற்றுக்கொள்ளவில்லை. “இந்து சமூகம் என்பதே வெறும் கற்பனையான ஒன்றுதான். இந்து என்ற பெயரே ஓர் அன்னியப் பெயர்தான். இந்து சமூகம் என்று சொல்லப்படுவதெல்லாம் பல சாதிகளின் தொகுப்பே ஆகும். இந்து முஸ்லிம் கலவரம் ஏற்படும் சமயங்கள் தவிர்த்த பிற சமயங்களில் ‘பிற சாதிகளோடு தம் சாதிக்கு உறவு உண்டு’ என்பதை எந்த சாதியும் உணர்வதில்லை.” (சான்று: டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் – தொகுதி 1) என்று கூறுகிறார். மேலும் இந்த கற்பனை மதம் கூட காட்டுமிராண்டித்தனமானது என்பதாக “இந்திய சமுதாயத்தைத் தவிர வேறு எந்த நாகரிக சமுதாயத்திலும் நாகரிகமற்ற பழங்காலத்திற்குறிய மிச்ச சொச்ச சின்னங்கள் நிலவி வருவதை காண முடியாது.” என்றும் கூறுகிறார்.

இந்துவாக வளர்க்கப்பட்ட ஒருவன் மனிதத் தன்மையற்று இருப்பதை உணர்ந்த அண்ணல் “கிறித்தவ தொண்டு நிறுவனங்கள் பழங்குடியினருக்கு செய்யும் ஊழியங்களை ‘இந்து’ ஒருவன் செய்ய முடியுமா? செய்ய முடியாது என்றே கூறுவேன். காரணம் இந்த பழங்குடி மக்களை நாகரீக மக்களாக்குவது என்றால் அவர்களோடு இணைந்து அவர்களை உறவினாராக நடத்த வேண்டும். அவர்களுக்குள் ஒருவாராகவே வாழவேண்டும். தோழமை உணர்வை வளர்க்கவேண்டும்.

சுருக்கமாக சொல்வதென்றால் அவர்களை நேசிக்கவேண்டும். ஒரு இந்து இவற்றையெல்லாம் செய்வது சாத்தியப்படுமா?” (சான்று: டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் – தொகுதி 1) என்று சனாதனவாதிகளை பார்த்து கேள்விகளைத் தொடுத்தார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களை பொறுத்த மட்டில் சாதிதான் முதன்மை முரண். அதை தனது பேச்சிலும், எழுத்திலும், நாடாளுமன்ற உரைகளிலும் ஒவ்வொரு கணமும் முழங்கியுள்ளார். இந்தியாவில் சாதிகள் என்ற நூலில் “கோட்பாட்டு அளவிலும் நடைமுறையிலும் சாதிப் பிரச்சினை மிகப்பெரியதொன்றாகும். சாதிச் சிக்கல் ஒரு வட்டாரச் சிக்கல்; ஆயினும் மிகப் பரந்த அளவில் தீங்கு விளைவிக்கும் வல்லமை கொண்டது. ஏனெனில் இந்தியாவில் சாதிமுறை உள்ளவரை இந்துக்கள் கலப்பு மணம் செய்ய மாட்டார்கள்; அன்னியருடன் சமூக உறவு கொள்ள மாட்டார்கள்; இந்துக்கள் உலகின் பிற பகுதிகளுக்குப் பிழைக்கச் சென்றாலும் இந்திய சாதி உலகளாவியதொரு சிக்கலாக உருக்கொள்ளும்.” என்று எச்சரிக்கிறார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்தியா என்ற நிலப்பரப்பு ஒரு ஒன்றியமாக இருக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக நின்றிருந்தார். அந்த ஒன்றியத்தின் உறுப்புக்கலான மாநிலங்கள் தன்னாட்சி கொண்டாதாக இருக்கவேண்டும் என்ற பொருளில் “இன்று நமக்கும், நாளை நமது சந்ததிகளுக்கும் இந்திய ஐக்கிய மாநிலங்கள் முற்றிலுமாக சுய ஆட்சிக்கும் (Self Government) நல்லாட்சிக்கும் வழி செய்தல்” என்றே தனது விருப்பத்தை தெரிவித்தார்.

அதிலும் சிறுபான்மையினர் (இசுலாமியர்கள், கிறித்தவர்கள் முதலானோர்), பட்டியல் சமூக மக்கள் ஆகியோரின் நலன்கள் பாதிக்கும் வண்ணம் இந்தியா வடிவமைக்கப்பட்டுவிடக்கூடாது என்று கவலைப்பட்டார். அதன் உச்சபட்சமாக, இந்திய தேர்தல் முறையில் பெரும்பான்மை சமூக ஆட்சி என்று ஒன்று உருவாகக்கூடாது என்றும், மீறி உருவானால் அது சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் சமூகத்தினரின் உரிமைகளை பறித்துவிடும் என்று எச்சரித்து அதை தடுப்பதற்கான ஒரு வரைவையும் முன் மொழிந்தார் (சான்று: சமூகத் தடையும் அதைத் தாக்கும் வழியும் – கட்டுரை).

1. பெரும்பான்மை ஆட்சி, தத்துவ ரீதியில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை, நடைமுறையில் நியாயமற்றது. ஒரு பெரும்பான்மைச் சமூகத்திற்கு ஓரளவு (relative) பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படலாம். ஆனால் அறுதிப் பெரும்பான்மையை (absolute majority) அது கோர முடியாது.

2. ஒப்பீட்டு அடிப்படையில் ஓரளவு பெரும்பான்மை பிரதி நிதித்துவம் சட்டசபையில் கொடுக்கப்படும் போது, அதன் எண்ணிக்கை சிறிய சிறுபான்மை வகுப்பினரின் உதவியுடன் தனது ஆட்சி அமைப்பதைச் சாத்தியமாக்குமளவுக்கு இருக்கக் கூடாது.

3. சபையில் இடப் பங்கீடு செய்கையில், பெரும்பான்மை வகுப்பும் ஒரு பெரிய சிறுபான்மை வகுப்பும் இணைந்து, மற்ற சிறுபான்மை வகுப்புகளின் வகுப்புகளின் நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கூட்டணி அமைய முடியாதவாறு இருத்தல் வேண்டும்.

4. அனைத்துச் சிறுபான்மை வகுப்பினரும் இணைந்து பெரும்பான்மையைச் சார்ந்திராமல் அவர்களே ஆட்சி அமைக்க முடியும் என்ற அடிப்படையில் இடங்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்

5. பெரும்பான்மையிடமிருந்து எடுக்கப்பட்ட உபரி இடங்களின் எண்ணிக்கை சிறுபான்மை வகுப்புக்களிடையே பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு வினியோ கிக்கும் போது, சமூக, பொருளாதார, கல்வி நிலைகளில் மேம்பாடு அடைந்துள்ள பெரிதான சிறுபான்மைக்கு இடங்களைக் குறைந்த எண்ணிக்கையில் ஒதுக்கியும். சமூக நிலைகளில் தாழ்ந்துள்ள சிறிய சிறுபான்மை வகுப் பினர்க்கு அதிக இடங்களையும் ஒதுக்கியும் நேர்மாறான விகிதத்தில் பங்கீடு செய்ய வேண்டும்.

இதையும் மீறி அமையும் பெரும்பான்மை ஆட்சி எப்படி இருக்கும் என்பதையும் அவர் கணித்திருந்தார். “இந்தியாவின் வருங்கால அரசியலமைப்பில் பெரும்பான்மையோர் ஆட்சி ஏற்பட்டால், அது நிச்சயம் சாதி இந்துக்களின் ஆட்சியாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த சாதி இந்துக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு நியாயம், நீதி, சமத்துவம், மனசாட்சி எல்லாம் பலியிடப்படும். சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் சிறுபான்மை வகுப்பினரின் நலன் புறக்கணிக்கப்படும்; அவர்களது குடிஉரிமைகள் காற்றிலே பறக்க விடப்படும் என்பதில் ஐயமில்லை. ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் மற்ற சிறுபான்மை வகுப்பினரும் அஞ்சுவது இதுதான்.” (சான்று: டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் – தொகுதி 3, பக்கம் 42)

மேலும் “இக்கண்ணோட்டத்துடன் பார்க்கையில், சிறுபான்மை வகுப்பினருக்கு சட்டப் பேரவைகளிலும் நிர்வாக அமைப்பிலும் நாட்டின் பொதுப்பணிகளிலும் தக்க பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்; பெரும்பான்மை வகுப்பினர் ஒரு சமுதாயத்திற்கும் மற்றொரு சமுதாயத்தினருக்கும் வேறுபாடு காண்பிக்கும் வகையில் மத்திய, மாநில சட்டப் பேரவைகள் சட்டங்களை இயற்றுவதற்குத் தடை செய்யும் வண்ணம் அவர்களது அதிகாரங்களுக்கு வரையறை விதிக்கப்பட வேண்டும்.” என்றும் வலியுறுத்தினார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வர்க்கம் பற்றிய பார்வையும் தனித்தன்மை உடையது. இந்திய நிலப்பரப்பில் வர்க்கத்தின் இருப்பை ஒப்புக்கொள்ளும் அண்ணல் அதனை முதன்மை முரணாக பார்ப்பதை ஏற்கவில்லை. வருணமும், சாதியும் வர்க்கத்தோடு கலந்திருப்பதை பின்வருமாறு சுட்டிக்காடுகிறார்.

“இந்துக்கள் பலத்தரப்பட்ட சாதியினராகப் பிரிக்கப்பட்டு இருப்பது போலவே, சாதிகளும் சாதியின் பலவகைப்பட்ட வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்து எனப்படுபவர் சாதி உணர்வுள்ளவராகவே இருக்கின்றார். அதோடு வர்க்க உணர்வும் அவருக்கு உண்டு. அவர் சாதி உணர்வு உள்ளவரா அல்லது வர்க்க உணர்வு உள்ளவரா என்பது அவரை எதிர்க்கின்ற சாதியைப் பொறுத்து வெளிப்படுகிறது. அவரது எதிர்ப்புக்குப் பாத்திரமாகும் சாதி அவர் சார்ந்திருக்கும் வர்க்கத்தைச் சார்ந்த சாதியாக இருந்தால் அவர் சாதி உணர்வு உள்ளவராக இருக்கிறார். அவ்வாறின்றி அந்தச் சாதி அவரது வர்க்கத்தைச் சாராததாக இருந்தால் அவர் வர்க்க உணர்வு உள்ளவராக இருக்கிறார்” (சான்று: இந்து மதத்தின் அடையாளங்கள் – கட்டுரை). மேலும் “ஏனைய பொருளாதாரமல்லாத அனைத்து விசயங்களும் சமமாக இருக்கும் ஒரு சூழலில் மட்டுமே பொருளாதார மனிதன் இருக்க முடியும்” என்ற புரட்சியாளர் மார்க்ஸ் அவர்களின் மேற்கோளை சுட்டிக்காட்டி இந்திய சமூகத்தில் சாதி முரணே முதன்மை என்றும் கூறுகிறார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தீவிரமாக எதிர்த்த இந்து மத நூல்களில் முதன்மையானவை மநு மற்றும் பகவத் கீதை ஆகும். பகவத் கீதையை பற்று கூறும் போது “இது ஒரு மதநூலும் இல்லை, தத்துவ நூலும் இல்லை. இதில் நாம் எடுத்தாள்வதற்கு எதுவும் இல்லை” என்கிறார்.

இன்றைய அரசியல் சூழலில் ‘இந்து ராஜ்ஜியம்’ அமைக்க காவி கும்பல்கள் முயல்வதை பற்றி அன்றே அண்ணல் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். “இந்து ராச்சியம் என்பது, உண்மையில் நடை முறைக்கு வருமேயானால், சந்தேகமின்றி – இது இந் நாட்டுக்கு ஏற்படப்போகும் மிகப்பெரிய ஆபத்தாகும். இந்துத்துவம் என்பது – சுதந்திரம், சமத்துவம், சகோத ரத்துவம் இவற்றுக்கு நேர்விரோதமானது. அந்த அடிப் படையில், இது ஜனநாயகத்துக்கு எதிரானது. எப்பாடு பட்டாகிலும் இந்து ராச்சியம் தடுத்து நிறுத்தப்பட்டே ஆக வேண்டும்.”
(சான்று: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 8, பக்கம் : 356) என்று தன் எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மாபெரும் முன்னெடுப்பு லட்சக்கணக்கான பட்டியல் சமூகத்தினரோடு புத்த மதத்திற்கு மாறியதே. அன்றைய தருணத்தில் “நீண்ட நாட்களுக்கு முன்பே நான் கூறினேன், ‘நான் இந்துவாகப் பிறந்தாலும் ஒருபோதும் இந்துவாக சாக மாட்டேன்’. நேற்று அதை நிருபித்தும் காட்டினேன். நான் தற்பொழுது மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறேன். நான் ஒரு கொடூரத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறேன்.” என்று கூறினார்.

சாதி ஒழிப்பே மக்களாட்சியை தரும் என்று பறைசாற்றிய அண்ணல் “உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிதுகூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்று திரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமற் போகும்.” என்றே கூறுகிறார். அதுவே நாம் முன்னிறுத்தும் தமிழ்தேசியத்தின் அடிப்படையும் ஆகும்.

சாதியே முதன்மை முரண் என்றும், இந்து சனாதன மத ஒழிப்பே முதன்மை பணியென்றும், ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியல் சமூக மக்களின் சமூக அரசியல் பொருளாதார உரிமை மீட்பே இறுதி இலக்கென்றும் வாழ்ந்து காட்டிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/87710/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d-3/feed/ 0
மண்ணுரிமை மீட்பு – நீலச்சட்டை அணிவகுப்பு – அழைப்பு https://may17iyakkam.com/87701/protests/caste/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/ https://may17iyakkam.com/87701/protests/caste/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/#respond Wed, 13 Apr 2022 13:44:51 +0000 https://may17iyakkam.com/?p=87701

ஏப்ரல் 14, 2022 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த நாளில், மக்கள் விடுதலை முன்னணி (PLF) சார்பாக மண்ணுரிமை மீட்பு – நீலச்சட்டை அணிவகுப்பு காலை 10 மணியளவில் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்கின்றார். வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87701/protests/caste/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/feed/ 0
திரிபுராவில் ஆர்எஸ்எஸ்-பாஜக நடத்திவரும் அராஜகத்தை கண்டித்து நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/86282/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa/ https://may17iyakkam.com/86282/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa/#respond Sat, 25 Sep 2021 06:57:37 +0000 https://may17iyakkam.com/?p=86282

திரிபுராவில் ஆர்எஸ்எஸ்-பாஜக நடத்திவரும் அராஜகத்தை கண்டித்து கம்யூனிச கட்சிகள் சார்பாக 24-09-21 வெள்ளி அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/86282/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa/feed/ 0
கொங்கு நாடு பிரிவினை சதியில் பாஜகவின் பின்னணி – தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல் https://may17iyakkam.com/85694/videos/%e0%ae%95%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%bf/ https://may17iyakkam.com/85694/videos/%e0%ae%95%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%bf/#respond Thu, 15 Jul 2021 13:04:07 +0000 https://may17iyakkam.com/?p=85694 கொங்கு நாடு பிரிவினை சதியில் பாஜகவின் பின்னணி, பாஜக தலைவராக அண்ணாமலை, பாஜகவின் வளர்ச்சி, நீட் தேர்வு போன்றவை குறித்து லிபர்டி தமிழ் ஊடகத்திற்கு மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்.

]]>
https://may17iyakkam.com/85694/videos/%e0%ae%95%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0
2021 சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு – மே 17 இயக்கம் https://may17iyakkam.com/84936/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/2021-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/ https://may17iyakkam.com/84936/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/2021-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/#respond Tue, 16 Mar 2021 17:26:27 +0000 https://may17iyakkam.com/?p=84936

தமிழ்நாட்டின் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான மே பதினேழு இயக்கத்தின் நிலைப்பாடு குறித்து விளக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (16-03-2021) காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் நடைபெற்றது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு, மே பதினேழு இயக்கத்தின் தேர்தல் நிலைப்பாட்டினை எடுத்துரைத்தார்.

2021 சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு – மே 17 இயக்கம்

வருகின்ற தேர்தலானது மதவெறி/சாதிவெறி அரசியலை வளர்க்கின்ற பாஜகவிற்கும், ஏனைய சனநாயக ஆற்றல்களுக்கும் இடையேயான தேர்தலாக அமைந்திருக்கிறது. எனவே பாஜகவையும், அதனோடு கூட்டணி அமைத்திருக்கின்ற அதிமுகவையும் மே17 இயக்கம் முற்றிலும் நிராகரித்து, அவர்கள் படுதோல்வி அடையச் செய்யவேண்டுமென தமிழக மக்களை மே17 இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

அதிமுக-பாஜகவின் மக்கள் விரோத கொள்கையினால் பலியான தங்கை அனிதா, தங்கை ஸ்னோலின் ஆகியோரை நினைவில் ஏந்தி இந்த கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர தமிழக மக்களை மே 17 இயக்கம் உரிமையோடு வேண்டுகிறது.

பெட்ரோல்-டீசல் மீதான எக்சைஸ் வரியில் பாஜக டில்லி அரசு எதிர்பார்த்ததைவிட 1 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாயை கடந்த வருடத்தில் ஈட்டியது. இந்த வரியானது மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய வரி வருவாயை பாஜக-மோடி அரசு கொடுக்க மறுக்கிறது.

இதே போல ஜி.எஸ்.டியில் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய பங்கினை பகிர்ந்து கொடுக்காமல் நிதியை முடக்குகிறது. மாநில அரசின் மீது கடன்சுமையை அதிகரிப்பதன் மூலம் மாநில சுயாட்சி பகுதிகளை மோடி அரசு முடக்கி வருகிறது.

மத்திய அரசிடம் வாங்கிய கடன் நிலுவை இருக்கும் பட்சத்தில் மாநில அரசானது சுயமாக வளர்ச்சிக்கான நிதியை திரட்டிக்கொள்ள இயலாது எனும் விதியை பயன்படுத்தி தமிழகத்தினை மேலும் மேலும் முடக்குகிறது.

தமிழகத்தில் நிலம் வைத்திருப்பவர்கள் 73 லட்சம் மக்கள். இவர்களில் 92% மக்கள் 2.5 ஏக்கர் நிலத்திற்கும் குறைவாக வைத்திருக்கும் சாமானிய பாட்டளி மக்கள். இவர்களது நிலங்களை 4 வழிச்சாலை, எட்டு வழிச்சாலை, உயர்மின்னழுத்த கோபுரம் , தேர்வாய் கண்டிகை, காவிரி குண்டாறு, வளர்ச்சி திட்டம் எனும் பெயரில் கிட்டதட்ட 1 லட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தியது அதிமுக-பாஜக அரசு. இதே போல மீனவர்களின் நிலங்களும் சாகர்மாலா திட்டமான சிறு-குறு துறைமுகங்கள், அனல்மின் நிலையங்கள், நிலக்கரி கிடங்குகள் என பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு தனியார் வருவாய்க்கான கட்டமைப்புகளாக மாற்றப்பட்டுள்ளன.

1,60,000 கோடி ரூபாய் நட்டத்தை தமிழக மின்வாரியம் எதிர்கொண்டது. இது தனியார் கொள்முதல் காரணமாக நடந்திருக்கிறது. இதே போன்ற நிலையே அரசு போக்குவரத்துக் கழகத்திற்கும் நிகழ்கிறது. தமிழக மருத்துவ-சுகாதார கட்டமைப்பு-மருத்துவ கல்வி சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ரேசன் கடைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 47,000 கோடி மானியத்தை மோடி அரசு குறைக்கிறது. இந்த பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்ட மாநிலமான தமிழகம் கடுமையான பாதிப்பை சந்திக்கும்.

இந்த அதிமுக அரசானது தமிழ்நாட்டுக்கான வரி உரிமை, வரிநிலுவை, பேரிடர்கால உதவி ஆகியவற்றை பாஜகவிடம் விட்டுக்கொடுத்திருக்கிறது. சூழலியலை பாதிக்கும் திட்டங்களான அனல்மின்நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைகள்-பாரத்மாலா, ஹைட்ரோகார்பன் திட்டம், சாகர்மாலா திட்டங்கள் ஆகியன தமிழ்நாட்டுக்கு எவ்வகையிலும் வேலைவாய்ப்பையோ, வருமானத்தையோ ஈட்டித்தராத நிலையில் தமிழக உழவர்கள், மீனவர்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கிறது எனத் தெரிந்தும் பாஜகவின் இத்திட்டங்களுக்கு அதிமுக அரசு அடிபணிந்து தமிழர்களை வஞ்சித்தது. புதிய கல்வி கொள்கை, நீட்தேர்வு ஆகியன தமிழக மாணவர்களுக்கு விரோதமானவை என அறிந்தும் பாஜகவின் திட்டங்களை அதிமுக ஏற்றது. நிலுவையில் உள்ள சென்னை வெள்ளம், கஜா, வர்தா, ஒக்கி, நிவர், வறட்சி உள்ளிட்ட பேரிடர் கால உதவித் தொகையை பாஜக அரசு நிறுத்தி வைத்திருப்பதை எவ்வகையிலும் போராடி அதிமுக பெற்றிடவில்லை. புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்தும், கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை பெற்றுத்தராமலும், வறட்சிக்கான நிவாரணத்தை தராமலும் அதிமுக அரசு உழவர்களை வஞ்சித்தது. மேலும் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமென அறிவித்தாலும் அதை நடைமுறைப்படுத்தாமல், ஹைட்ரோகார்பன் திட்டங்களை விரிவாக்கம் செய்ய அனுமதிக்கிறது. பெட்ரோல்-சமையல் எரிவாயு விலையேற்றத்தை பாஜக தொடர்ந்து செய்து வருவதை எதிர்கொள்ளாத அதிமுக, பாஜகவிற்கு ஆதரவான பெரும் பணக்காரர்களின் நலனுக்காக தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்திருக்கிறது. சாதிக்கொடுமைகளை எவ்விதத்திலும் தடுக்க முன்வராமல் ஆணவப்படுகொலைகள், சாதிய வன்முறைகள் அதிகரிக்க அதிமுக அரசு துணை போனது என குற்றம் சாட்டுகிறோம். சாதிய வன்முறைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது கொடும் வழக்குகள் ஏவப்பட்டன. இதே போல சனநாயகரீதியில் போராடிய பல்லாயிரக்கணக்கானோர் மீதும் சட்டங்கள் ஏவப்பட்டு ஒடுக்குமுறைக்குள்ளாகினர். எட்டுவழிச்சாலை, டாஸ்மாக், ஜல்லிக்கட்டு போராட்டங்களில் ஏவப்பட்ட வன்முறை, ஸ்டெர்லைட்டில் உச்சத்தைத் தொட்டது. 15 பேர் படுகொலை செய்யப்பட்டதை தமிழினம் மறவாது.

தனியார்மயம், வேலைவாய்ப்பிழப்பு, தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் வேலையில்லாமல் போவது, சிறு-குறு தொழில்கள் மீதான வரி-கடன் நெருக்கடி என தமிழகத்தின் பொருளாதாரத்தினை பாஜக முறித்தது. இதை அதிமுக எதிர்கொள்ளாமல் தவிர்த்தது. ரேசன்கடைகள், விவசாய கொள்முதல் உள்ளிட்டவை திட்டமிட்டு முடக்கப்பட்டன. குடியுரிமை திருத்தச்சட்டத்தினை சிறுபான்மை மக்கள் விரோதமாக பாஜக கொண்டு வந்ததை அதிமுக ஆதரித்தது. உபா (UAPA), என்.ஐ.ஏ உள்ளிட்ட கொடும் அடக்குமுறை சட்டங்கள், மாநில உரிமையை பறிக்கும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது அதிமுக.

தமிழ்மொழி நிராகரிப்பு, தொல்லியல் வளர்ச்சி முடக்கம், தமிழர் பண்பாட்டின் மீது சமஸ்கிருத தாக்கம் ஆகியவற்றை செய்துவரும் பாஜகவின் மதவெறி பிரிவுகளை அதிமுக ஊக்குவிக்கிறது. பெண் குழந்தைகள் மீதான தாக்குதல் , தலித்துகள் மீதான தாக்குதல் உள்ளிட்ட சமூக பாதுகாப்பின்மை அதிகரித்த அதிமுக ஆட்சி மேற்கூறிய பலவேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்படட்டும்.

7 தமிழர் விடுதலை இஸ்லாமிய அரசியல் சிறைவாசிகள் விடுதலை போன்றவற்றில் அதிமுக அரசு மனித உரிமை விரோதமாக நடந்து கொண்டது.

தமிழீழ தமிழர்களின் கோரிக்கையான தமிழீழ விடுதலை இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ஆகியன அதிமுக அரசால் இந்திய அரசுக்கு எடுத்துச் செல்லப்படவேயில்லை. நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கான சட்டமன்ற தீர்மானங்கள் இன்றளவும் ஏட்டளவிலேயே உள்ளன.

மேற்கூறிய சீரழிவிற்கு எதிராக போராடி வரும் கட்சிகள் குறிப்பாக, மக்களை திரட்டி, மே 17 இயக்கம் உள்ளிட்ட அரசியல் இயக்கங்களோடு இயங்கிய கட்சிகளை மே 17 இயக்கம் வாழ்த்துகிறது, ஆதரிக்கிறது. இவ்வாறாக செயல்பட்ட மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம், மமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்டிபிஐ, ஆதித்தமிழர் பேரவை, விடுதலை தமிழப்புலிகள் கட்சி உள்ளிட்டவர்களை ஆதரிக்கிறோம்.

இவ்வாறான மக்கள் போராட்டங்களில் பங்கேற்காத, அதிமுக-பாஜக அரசினை, மதவெறி, சாதி வெறி பாசிச போக்குகளை மக்கள் எதிரிகளாக அடையாளம் காட்டாமல் திசை திருப்புகின்ற மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளை நிராகரிக்கின்றோம். இவர்களால் தமிழக எதிர்கால அரசியல் சிதைக்கப்படும் எனும் எச்சரிக்கையுணர்வை மக்களிடம் பகிர விரும்புகிறோம்.

இவ்வாறான விடயங்களை கணக்கில் எடுத்து தமிழக மக்கள் இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் எனவும், பாஜக-அதிமுக கொடுங்கோல் ஆட்சியாளர்களை வீழ்த்தும் ஆற்றல்கொண்ட மக்கள் சார்ந்த வேட்பாளர்களை ஆதரித்து இந்த ஆட்சியை அகற்ற ஒன்றுபடுவோம். சாதி, மதம் கடந்து தமிழர்களாக ஒன்றுபட்டு தமிழ்நாட்டை, தமிழினத்தை, தமிழ் மொழியை காக்க பிரச்சாரத்திற்கு அனைவரும் முன்வரவேண்டுமென உரிமையுடன் வேண்டுகிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/84936/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/2021-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/feed/ 0