Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
தற்சார்பு – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Thu, 08 Sep 2022 08:07:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாளில் (செப்டம்பர் 5, 1872) புகழ் வணக்கம் செலுத்துகிறோம்! https://may17iyakkam.com/88940/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5-%e0%ae%89-%e0%ae%9a%e0%ae%bf/ https://may17iyakkam.com/88940/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5-%e0%ae%89-%e0%ae%9a%e0%ae%bf/#respond Mon, 05 Sep 2022 08:05:54 +0000 https://may17iyakkam.com/?p=88940

ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு அடங்க மறுத்து, ஆங்கிலேய அரசுக்கு எதிராக கப்பல் தொழில் தொடங்கி சிறைபட்ட கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாளில் (செப்டம்பர் 5, 1872) புகழ் வணக்கம் செலுத்துகிறோம்! – மே பதினேழு இயக்கம்

‘சாதியெனும் பொய்க்கொண்டுந் தன்சமயப் பேய்கொண்டு
மாதினது நோய்கொண்டும் வாழுயிர்க – ளாதி
மகவென்று நோக்காது மாணாத செய்வர்
தகவென்றும் பேணா தவர்’
– வ.உ.சி அவர்கள், மெய்யறிவு-74

(பொருள்: பெருமை மிகுந்த வாழ்வை பேணாதவரே, சாதி மதம் போன்றவற்றை கடைபிடித்து அனைவரும் ஒரு ஆதியில் பிறந்தவர்கள் என்பதை மறந்து வாழ்வார்)

தமிழக வரலாற்றில் கப்பலோட்டிய தமிழர் என்றும், செக்கிழுத்த செம்மல் என்றும் புகழாரம் சூட்டப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்கள் தமிழர்களின் வீரத்திற்கும், அறத்திற்கும், ஆதிக்க எதிர்ப்பு குணத்திற்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். பெரும் செல்வந்தராகவும், வழக்கறிஞராகவும் இருந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள், ஆலைத் தொழிலாளர்களின் நேர்மையான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடிய காரணத்திற்காகவும், ஆங்கிலேயே ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக இந்தியா-இலங்கை இடைப்பட்ட தமிழர் கடற்பகுதியில் கப்பல் செலுத்தி தற்சார்பான பொருளாதாரத்தை முன்னெடுத்த காரணத்திற்காகவும் ஆங்கிலேய காலனி அரசால் கைது செய்யப்பட்டு கொடுமைக்கு உள்ளானவர். தன் இறுதி காலத்தில் ஏழ்மையின் பிடியில் இருந்தபோதும் வ.உ.சிதம்பரனார் அவர்கள் ஒருபொழுதும் தனது விடுதலை வேட்கையை விட்டுக்கொடுத்ததில்லை.

1906-ம் ஆண்டு ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ என்ற பெயரில் அவர் தொடங்கிய சரக்குகள் கப்பல் போக்குவரத்து நிறுவனம் அதுவரை அன்றைய ஆங்கிலேய இந்திய ஒன்றியத்தில் எந்த ஒரு தனி நபரும் முன்னெடுக்காத ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையாகும். அந்த கப்பல் நிறுவனத்தை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்று உள்ளூர் பங்குதார்களும், ‘தங்கள் இலாபம் பறிபோகிறது எனவே இந்நிறுவனத்தை அழித்துவிடவேண்டும்’ என்று ஆங்கிலேய முதலாளிகளும் பெரும் முயற்சியை எடுத்த பொழுதும் அந்த நிறுவனம் வெற்றிகரமாக பீடு நடை போட்டது என்றால் அது வ.உ.சிதம்பரனார் அவர்களின் இடையறாத உழைப்பினால் மட்டுமே.

நேரடியாகவோ, மறைமுகமாகவோ வ.உ.சிதம்பரனார் அவர்களை மிரட்டுவது மூலம் நம்மால் இந்நிறுவனத்தை மூட இயலாது என்பதை ஆங்கிலேய முதலாளிகள் புரிந்து கொண்டனர். எனவே கயமைத்தனமாக வ.உ.சிதம்பரனார் அவர்கள் முன்நின்று நடத்திய அரசியல் கூட்டம் ஒன்றில் காவல்துறையை ஏவி துப்பாக்கிச்சூடு நடத்தியதன் மூலம் அப்பாவி மக்களை பலி கொண்டனர். மேலும் வ.உ.சிதம்பரனார் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு இரண்டு ஆயுள் தண்டனைகள் தரப்பட்டன. ஓர் அரசியல் கைதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை தந்தது இதுவே உலக வழக்கில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு ஆங்கிலேயர்களின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்திருந்தது வ.உ.சிதம்பரனார் அவர்களின் கப்பல் நிறுவனம்.

இதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி பகுதியில் அப்பொழுது இயங்கி வந்த கோரல் மில் என்ற நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஆங்கிலேயே முதலாளிகளால் மிகக் கடுமையாக சுரண்டப்படுவதை அறிந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள் முன்னிலை ஏற்க, 1908-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக ‘ஆங்கிலேயர்களுக்கும், அல்லது ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருக்கும் வேறு யாருக்கும் முடிதிருத்தவோ முகச்சவரம் செய்யவோ மாட்டோம்’ என முகச்சவரம் தொழிலாளர்களால் முடிவெடுக்கப்பட்டது.

“இரங்கசாமி ஐயங்கார் என்னும் ஆங்கிலேயே ஆதரவு நிலைகொண்ட பார்ப்பனர், முகச்சவரம் செய்துகொள்ள வந்தபொழுது ‘கோரல் மில் போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஆங்கிலேயே அரசு சிறப்பு காவல்துறையை வரவழைத்திருக்கிறது’ என்ற செய்தியை கூறி ‘போராட்டம் மிக விரைவில் ஒடுக்கப்படும்’ என்று அதிகாரத் திமிருடன் பேசிய காரணத்திற்காக அவரது முகச்சவரத்தை பாதியில் நிறுத்திவிட்டு அத்தொழிலாளி சென்று விட்டார்” என்ற செய்தி பத்திரிக்கைகளில் வரும் அளவிற்கு இப்போராட்டம் வீரியம் அடைந்து இருந்தது. வேறு வழியில்லாமல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய இடத்திற்கு ஆங்கிலேய முதலாளிகள் தள்ளப்பட்டனர்.

இதுபோன்ற காரணங்களுக்காகவே பொய் வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள், திருநெல்வேலி, கோயமுத்தூர், கண்ணனூர் ஆகிய சிறைகளுக்கு அலைக்கழிக்கப்பட்ட வேலையில் தான், அவரது மன உறுதியை உடைக்க மாடுகளால் இழுக்கப்படும், செக்கை இழுக்க செய்ய ஆங்கில சிறை அதிகாரிகள் கட்டளையிட்டனர். அந்நிகழ்வை பற்றி தனது தன்வரலாற்றில்,

“திங்கட் கிழமை ஜெயிலர் என் கைத்தோல்
உரிந்ததைப் பார்த்தான். உடன் அவன் எண்ணெய்
ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாப்
பகலெலாம் வெயிலில் நடந்து தள்ளிட
அனுப்பினன், அவனுடை அன்புதான் என்னே !”

என்று பாடி வெளிப்படுத்துகிறார் வ.உ.சி அவர்கள்.

ஆனாலும் சிறையில் ஒருபோதும் அவர் மனம் தளர்ந்து விடவில்லை. ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடவில்லை. ஆங்கிலேய ஆதரவு ஏற்கவும் இல்லை.

காட்சன் என்கின்ற ஆங்கிலேய சிறை அதிகாரி வ.உ.சி. அவர்களிடம் ‘கான்விக்ட் வார்டன்’ என்கிற சிறை கைதியே காவலர் பணியை செய்யும் கங்காணி வேலையை அவருக்கு தருவதாகவும், அதை ஏற்றுக்கொள்ளும் தருணத்தில் அவரது சிறை தண்டனை ஆண்டில் ஒவ்வொரு வருடமும் மூன்று மாதம் குறையும் என்றும், உறவினர்களை சந்திப்பதும், அவர்களுக்கு கடிதம் எழுதவும், பெறவும் எளிமையாக இருக்கும் என்றும், மாத விடுப்பு கிடைக்கும் என்றும், அதற்கும் மேலாக நல்ல உடையும் உணவும் கிடைக்கும் என்றும் கூறியபொழுது, “நான் சிறை வந்தது சிறை அதிகாரிகளின் கையாளாக பணியாற்ற அல்ல” என்று அவ்வேலையை மறுதலித்து தனது முழு தண்டனையும் அனுபவிக்க தயாராகவே இருந்தார் என்றால் அவரது மன உறுதி எத்தகையது என்பதை நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

வ.உ.சி. அவர்களின் ஈகம் திட்டமிட்டு தமிழ்நாட்டில் மறைக்கப்பட்டதில் ஆரிய பார்ப்பனக் கும்பலுக்கு பெரும்பங்குண்டு. வ.உ.சி அவர்கள் தொழில் தொடங்கிய காலத்திலிருந்தே ஆரியப் பார்ப்பனர்கள் அவருக்கு எதிராகவும் அவர் மீது பொறாமையும் கொண்டிருந்தனர் என்பதை அவருடைய சுய சரிதையில் இருக்கும் பின்வரும் வரிகளிலிருந்து கண்டுகொள்ள முடியும்.

“பொருடந்த சிற்சிலர் பொறாமைமேற் கொளீஇ
நம்மில் எளியன் நம்மிற் சிறியன்
தம்மினும் புகழினை நண்ணுதல் என்னோ?
அவனை ஒழித்தெலாம் ஆள்வேம்’ என்றே
எமனவர் போல என்மேல் வந்தனர்.”

என்று எழுதிய இந்த வரிகளில் மேற்குறியிட்டு ‘இப் பொறாமை கொண்ட நபரின் பெயராக’ அவரது சுயசரிதையில் ‘நெல்லை பகுதியில் வழக்கறிஞராக இருந்த குருசாமி அய்யர் முதலானோர்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

வ.உ.சிதம்பரனார் அவர்கள் முன்னெடுத்த கப்பல் நிறுவன தொழிலானாலும் சரி, கோரல் மில் போராட்டம் ஆனாலும் சரி ஏகாதிபத்திய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டவை. தன் சொந்த மண்ணின் வளங்கள் அன்னியரால் கொள்ளையடிக்கப்படுவதை கண்டு மனம் பொறுக்காமல் அதை முறியடிக்க வ.உ.சிதம்பரனார் முன்னெடுத்த வேலை திட்டங்களால் அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். அவருக்கு சிறை தண்டனை கொடுக்கப்பட்டதை அறிந்த கணத்திலிருந்து தன் இறுதி காலம் வரை அவரது மனைவி மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். சிறை மீண்ட பின் கடும் ஏழ்மையில் சிக்கிக் கொண்டிருந்தார் வ.உ.சிதம்பரனார் அவர்கள். ஆயினும் தன் இறுதி காலத்தை தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் அர்ப்பணித்து பெரும் பணிசெய்து தமிழர் வரலாற்றில் அழியாப் புகழை பெற்றுச் சென்றார்.

வ.உ.சி அவர்களின் தமிழ்த் தொண்டும் அளப்பரியதே. தமிழில் திருக்குறளின் அறக்கருத்துக்களை ‘வலிந்து பொருள் திரித்து’ சிதைத்த பரிமேலழகரின் உரைக்கு மாற்றாக மற்ற உரையாசிரியர்களின் உரைகளை தேடிச்சென்று இறுதியாக மணக்குடவரின் அறத்துப்பால் உரையினை முதலில் பதிப்பித்தவர் வ.உ.சி அவர்களே. அதன்பின் அவரே திருக்குறளுக்கு உறையும் எழுதினார். அவரது கூற்றுபடி திருக்குறளின் முதல் நான்கு அத்தியாயங்களும் பின்னால் சிறப்புப்பாயிரமாக எழுதி இணைக்கப்பட்டுள்ளது என்றும், அவை திருவள்ளுவாரால் ஆக்கப்பட்டதல்ல என்றும் பொருளாகிறது. திருக்குறள் உரை மட்டுமல்லாமல் பல்வேறு பாக்களையும், மொழிபெயற்புகளையும் தமிழுக்கு தந்தருளிச்சென்றுள்ளார்.

தனிதமிழின் மீது பெரும் பற்று கொண்ட வ.உ.சி அவர்கள், தமிழில் இருந்து வடமொழியாம் சமசுகிருத சொற்கள் நீக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். “சமஸ்கிருத சொற்களை உபயோகிக்க நேரும் இடங்களில் அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு சொற்களையும், அவற்றின் பக்கங்களில் அவற்றுக்குரிய சமஸ்கிருத சொற்களையும் உபயோகித்து தற்கால தமிழ் நாட்டில் வழங்கி வரும் சமஸ்கிருத சொற்களுக்கு எல்லாம் சரியான தமிழ்ச் சொற்களை நம் தமிழ் மக்களுக்குக் கற்பித்து, நாளடைவில் சமஸ்கிருத சொற்களை தமிழில் இருந்து வேரோடு களைந்து விடலாம்” என்று 1915-ஆம் ஆண்டு குமரி மலரில் எழுதி இருந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழ் மொழிக்கு என்று ஒரு தனிநிலப்பரப்பு இருக்கவேண்டும் என்ற அவாவும் அவருக்கு இருந்திருக்க கூடும் என்பதை அவருடைய மெய்யறம் என்ற பாத்தொகுப்பில் 76-வது அதிகாரமாகிய நாடு என்ற தலைப்பில் ‘ஒரு மொழி வழங்குவ தொருதனி நாடு’ என்ற யாப்பில் இருந்து புரிந்து கொள்ளலாம். இங்கனம் தமிழின்பாலும், தமிழ்நாட்டின் பாலும் அன்பு கொண்டவராக விளங்கியவர் வ.உ.சி. அவர்கள்.

ஏகாதிபத்திய எதிர்ப்பும், தற்சார்பு பொருளாதார செயல்திட்டமும் முன்நிறுத்திய தொழிலாளர் உரிமைகள் போராளியும், தமிழ்ப்பற்றாளருமான வ.உ.சிதம்பரனார் அவர்கள் பிறந்த நாளான இன்று மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 

]]>
https://may17iyakkam.com/88940/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5-%e0%ae%89-%e0%ae%9a%e0%ae%bf/feed/ 0
மேட் இன் தமிழ்நாடு, நீட் தேர்வு, பாஜக அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல் https://may17iyakkam.com/86273/videos/may17-in-media/%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4/ https://may17iyakkam.com/86273/videos/may17-in-media/%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4/#respond Fri, 24 Sep 2021 04:47:37 +0000 https://may17iyakkam.com/?p=86273 மேட் இன் தமிழ்நாடு, நீட் தேர்வு, பாஜக அரசியல் போன்றவை குறித்து லிபர்ட்டி தமிழ் ஊடகத்திற்கு மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/86273/videos/may17-in-media/%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4/feed/ 0
இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7-ம் ஆண்டு நினைவை போற்றுவோம்! https://may17iyakkam.com/84549/protests/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%90/ https://may17iyakkam.com/84549/protests/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%90/#respond Sun, 03 Jan 2021 08:17:02 +0000 https://may17iyakkam.com/?p=84549

இயற்கை விவசாயத்தின் மூலம் தன்னிறைவை அடைய முடியும் என்று தற்சார்பு பொருளாதாரத்திற்கு வித்திட்ட, இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7-ம் ஆண்டு நினைவை போற்றுவோம்!

மே பதினேழு இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/84549/protests/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%90/feed/ 0
ஒரே நாடு ஒரே பொதுத்தேர்வு தனியார்மயமாக்கப்படும் கல்வி – தோழர் திருமுருகன் காந்தி நேரலை காணொளி https://may17iyakkam.com/83218/videos/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5/ https://may17iyakkam.com/83218/videos/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5/#respond Sun, 03 May 2020 17:06:52 +0000 http://may17iyakkam.com/?p=83218 ‘பறிபோகும் மாநில உரிமைகள்’

*ஒரே நாடு ஒரே பொதுத்தேர்வு தனியார்மயமாக்கப்படும் கல்வி குறித்து முகநூல் நேரலை*

நாளை (மே 3) காலை 11 மணிக்கு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மே பதினேழு இயக்க முகநூலில் நேரலை காணொளி

]]>
https://may17iyakkam.com/83218/videos/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5/feed/ 0
கொரோனாவிலிருந்து விடுபடவும் மக்களின் தற்சார்பு வாழ்வுக்குமான பரிந்துரைகள் – இடுக்கண் களை https://may17iyakkam.com/83213/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f/ https://may17iyakkam.com/83213/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f/#respond Sat, 02 May 2020 19:22:46 +0000 http://may17iyakkam.com/?p=83213 ‘இடுக்கண் களை’ என்கிற பெயரில் இந்த கொரோனா தொற்றிலிருந்து விடுபடவும், அதற்கு பின்பான காலத்தில் மக்கள் தற்சார்பாக தங்களது வாழ்வை அமைத்துக் கொள்ளவும் உதவும் பரிந்துரைகளை மக்களிடமே கேட்டிருந்தோம். பல்வேறுப்பட்ட ஆக்கப்பூர்வ யோசனைகளை மக்கள் தந்தவண்ணம் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று இணைப்பில் இருக்கிறது. இன்னும் இதுபோல நிறைய பயனுள்ள பரிந்துரைகள் கீழ்க்காணும் லிங்கை அழுத்திச் சென்றால் ‘ இடுக்கண் களை’ முகநூலில் இருக்கிறது.

இடுக்கண் களைகொரோனா தடுப்பு குறித்தான பொதுமக்களின் பரிந்துரைகள்- 30 இந்தோனேசியாவில் 'பனை கள்'ளை கொண்டு…

Publiée par இடுக்கண் களை sur Vendredi 1 mai 2020

வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

 

மே 17 இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/83213/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f/feed/ 0
கொங்கு முதலாளிகளுக்கு கடன் மூட்டை, குஜராத்தி மார்வாடிகளுக்கு 68,000 கோடி கடன் தள்ளுபடி. https://may17iyakkam.com/83184/articles/%e0%ae%95%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f/ https://may17iyakkam.com/83184/articles/%e0%ae%95%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f/#respond Tue, 28 Apr 2020 16:09:59 +0000 http://may17iyakkam.com/?p=83184 கொங்கு முதலாளிகளுக்கு கடன் மூட்டை, குஜராத்தி மார்வாடிகளுக்கு 68,000 கோடி கடன் தள்ளுபடி.

”…வாருங்கள் தமிழகத்து இந்துக்களே!!
மார்வாடிகளை வாழவைப்போம், முஸ்லீம் தமிழர்களை விரட்டுவோம், பிற தமிழன் தலையிலே மிளகாய் அரைப்போம்..பாரத் மாதாக்கீ ஜே!!!” என பாஜக-இந்துத்துவ அமைப்புகள் அழைக்கின்றன. நீங்கள் தயாரா..

வட இந்தியா மார்வாடி-பனியா முதலாளிகளுக்கு ரூ68,000 கோடி கடனை தள்ளுபடி செய்திருக்கின்றன வங்கிகள். இன்று வெளியான அர்.டி.ஐ செய்தி அம்பலப்படுத்துகிறது. கடந்த வாரம் கோவையின் கொடீசியா எனும் சிறு-குறு தொழில் வர்த்தகக் கழகம் இந்தியா முழுவதுமுள்ள சிறு-குறு தொழில்களுக்கான கடனில்/ வரியில்/வட்டியில் சலுகை கேட்டிருந்தனர். நடுத்தர குடும்பத்தினர் ஈ.எம்.ஐ/ வங்கிக்கடன்/கல்விக்கடன்/வீட்டுக்கடன் கட்ட கால அவகாசம் கேட்டிருந்தனர். ஏழைகள் தமது தொழில்களுக்கான உதவியை கேட்டிருந்தனர். ஆனால் இதுவரை பாஜக இந்துத்துவ மோடி அரசு இதற்கு பதில் சொல்லவில்லை. ஆனால் சத்தமில்லாமல் மார்வாடி-பனியா குஜராத்தி முதலாளிகளுக்கு கடனை தள்ளுபடியே செய்திருக்கின்றன என ரிசர்வ் வங்கியின் ஆர்.டி.ஐ செய்தி சொல்லுகிறது.

‘இந்துக்களே ஒன்று திரள்’ என கொம்பு சீவும் கொங்குப் பகுதி பாஜக/ஆர்.எஸ்.எஸ்/இந்துமுன்னனிக்கு பணமும், பொருளும் கொடுத்து உதவும் தமிழகத்தின் முதலாளிகள் என்ன செய்யப்போகிறார்கள்? ஜி.எஸ்.டி கட்டி, வருமான வரி கட்டி, கடன் கட்டி, கடனுக்கான வட்டிகட்டி தொழில் நசிவடைந்து இருந்தாலும், ‘நான் இந்து’ என நெஞ்சு நிமிர்த்தி நின்று இனிமேலும் நட்டப்படப் போகிறார்களா? அல்லது புத்திசாலித்தனமாக தமிழர் அரசியலில் இணைந்து உரிமையை மீட்கப் போகிறார்களா?

உங்களைக் காப்பாற்ற பொன்னாரோ, சிபி.ராதாகிருஸ்னனோ, வானதி மேடமோ, குருமூர்த்தி/சேகர்/நாராயணன் வகையறாக்கள் வரப்போகிறார்களா? வாய்ப்பே இல்லை நண்பர்களே. இதை அம்பலமாக்கி எதிர்த்து மே17 இயக்கமும், பெரியாரிய-தமிழ்த்தேசிய இயக்கங்களும் பேசி வருகின்றன.

ரிசர்வ் வங்கியின் தகவல்உயர் அதிகாரி அபெய்குமார் இத்தகவலை வெளியிட்டிருக்கிறார். இதில் 68,607 கோடி ரூபாயை செப்டம்பர் 2019லேயே தள்ளுபடி செய்துவிட்டதான தகவல் வெளியிட்டிருக்கிறார். இது பற்றி 2020இல் பிப்ரவரியில் பாராளுமன்றத்தில் கேட்டதற்கு நிர்மலா சீதாராமன் பதில் சொல்ல மறுத்திருக்கிறார். இதை ஒரு ஆர்.டி.ஐ மூலம் விசரித்ததில் உண்மை அம்பலமாகி இருக்கிறது. விவரத்தை பார்ப்போமே.

பல ஆயிரம் கோடி ரூபாய் ஏமாற்றிய முகுல் சோக்சியின் (தற்போது இந்தியாவிலிருந்து தப்பி வெளிநாட்டில் இருக்கிறார்) கீதாஞ்சலி நிறுவனத்திற்கு 5, 492 கோடியும்,

அவரது பிற நிறுவனமான கிலி, நட்சத்திராவிற்கு ரூ1109 கோடி,

சந்தீப் ஜுன்ஜிுன்வாலா, சஞ்சய் ஜுன்ஜிுன்வாலாவின் ரேய் அக்ரோவிற்கு ரூ4314 கோடி(இவர்கள் தேடப்படும் குற்றவாளிகள்),

ஜத்தின் மேத்தாவிற்கு 4,076 கோடி ரூபாய் (இவர் சிபிஐயால் விசாரிக்கப்படுகிறவர்),

ரோட்டோமேக் பேனா நிறுவனத்தின் கோத்தாரி குடும்பத்திற்கு 2850 கோடி ரூபாய்,

பாபா ராம் தேவ், பால்கிருஸ்சனின் ருச்சி சோயாவிற்கு 2212 கோடி ரூபாய்,

குவாலியரின் ஜீம் டெவலப்பர்ஸ் 2012 கோடி ரூபாய்,

அகமதாபாத்தின் ஹரிஷ் மேத்தாவின் வைர வியாபார நிறுவனத்திற்கான 1962 கோடி ரூபாய்

இதுமட்டுமல்லாமல் விஜய் மல்லாயாவிற்கு 1943 கோடி ரூபாய்

என பட்டியல் நீளமானது. இதில் அதிகமாக வைர வியாபாரிகள். பெரும்பாலோனொர் தேடப்படும் குற்றவாளிகள்

தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகள், பாஜக, ஆர்,எஸ்.எஸ். இந்து முன்னனிக்கு ஆதரவளிக்கும் தமிழர்களே என்ன செய்யப் போவதாக திட்டம் வைத்திருக்கிறீர்கள்?.

சிந்திக்காவிடில் தமிழர்களாகிய நாம் சிதைக்கப்படுவோம். விழித்தெழுவீர்களா!

– தோழர் திருமுருகன் காந்தி

(இந்தத் தகவலை சிறு-குறு தொழிலில் ஈடுபட்டிருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், பிற மக்களுக்கும் பகிர்ந்து/அனுப்பி இந்துத்துவ அரசியலை அம்பலப்படுத்த உதவுங்கள்)

]]>
https://may17iyakkam.com/83184/articles/%e0%ae%95%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f/feed/ 0
‘இடுக்கண் களை’ – தற்சார்பு சிந்தனைகளை வரவேற்கிறோம் https://may17iyakkam.com/82910/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/ https://may17iyakkam.com/82910/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#respond Fri, 03 Apr 2020 09:18:31 +0000 http://may17iyakkam.com/?p=82910 ‘இடுக்கண் களை’ – தற்சார்பு சிந்தனைகளை வரவேற்கிறோம்


வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.

வெள்ளமாகப் பெருகி வருகின்ற துன்பங்களும், அறிவு உடையவன் தன் உள்ளத்திலே நினைத்தபோது, அவனைவிட்டு மறைந்து போய்விடும்.

தமிழர்களுக்கும், மாந்த இனத்திற்கும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த பேரிடரை எதிர்கொள்ளும் விதமாக நீங்கள் மேற்கொள்ள விரும்பும் புதிய யோசனைகள், சிந்தனைகள், வழிகாட்டுதல்கள், தகவல்கள் ஆகியவற்றை மக்களுக்கு பயன்படும் விதமாக அனைவரிடத்திலும் கொண்டு செல்ல மே17 இயக்கம் விரும்புகிறது. இந்த இக்கட்டான காலத்தில் தனியார்மயம் நம் மக்களுக்கான பேருதவியாய் அமையாது என்பது அறிந்த பின்னர், நமக்கான கட்டமைப்பு சிந்தனைகளை வலுப்படுத்துவோம்.
லாபநோக்கமின்றி, மக்கள் நலனை முன்னிறுத்தி முன்மொழியப்படும் அறிவியல், சமூக சிந்தனைகள், யோசனைகள், வழிகாட்டுதல்களை நீங்கள் எமக்கு தெரியப்படுத்துங்கள். அவசியமேற்படின் உரிய நபர்களிடத்தில் அவற்றைக் கொண்டு சேர்த்து அனைவரும் பயன்பெற முயல்வோம். இந்த யோசனைகள் மருத்துவத்துறையினரால் ஏற்கப்படுவதாகவும், அறிவியல்பூர்வமானதாகவும் அமைய வேண்டுமென அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் சிந்தனைகள், வழிகாட்டுதல்களை கிருமி தடுப்பு, நோய் தடுப்பு, மருத்துவ உபகரணங்கள், மருந்து தொடர்பான ஆய்வுகள்-தரவுகள் என்பதிலிருந்து உணவு/ உற்பத்தி சங்கிலியை வலுப்படுத்துவது, பசியாற்றுதல், அன்றாட தேவை சார்ந்த (பல்பொடியிலிருந்து, கிருமி நாசினி, சோப்பு என இதர தேவைகள்) தற்சார்பு பொருட்களை உருவாக்குதல் என எந்த வகையிலும் அமையலாம். இதே போன்ற பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறவர்களும் உங்கள் விருப்பங்களை தெரியப்படுத்தலாம்.

தொடர்பு கொள்ளும் முறை: உங்கள் யோசனைகளின் விவரங்களோடு உங்கள் தொடர்பு எண் அனுப்பவும். உங்கள் பரிந்துரைகள், யோசனைகள் குறித்து விவாதிக்க தொடர்பு எண் தேவைப்படுகிறது. உங்கள் அனுமதியின்றி உங்கள் தகவல்கள் பொதுவெளியில் பதிவு செய்யப்படாது.

தொடர்பு மின்னஞ்சல்: tnrespond@gmail.com

தொடர்பு/வாட்ஸ் அப் எண் :8939256289

மே17இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/82910/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/ 0