Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
கல்வி – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Wed, 03 Aug 2022 15:09:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 கள்ளக்குறிச்சியில் கேள்விக்குள்ளாகும் திமுகவின் சமூகநீதி – மே 17 இயக்கக் குரல் தலையங்கம் https://may17iyakkam.com/88777/protests/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d/ https://may17iyakkam.com/88777/protests/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d/#respond Wed, 03 Aug 2022 15:09:43 +0000 https://may17iyakkam.com/?p=88777 கள்ளக்குறிச்சியில் கேள்விக்குள்ளாகும் திமுகவின் சமூகநீதி
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

எளிய மக்கள் மீதான காவல்துறையின் வன்முறைக்கு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக அரசு முடிவுகட்டாமல், கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராமல் செயலற்று நிற்பதை மக்கள்விரோத நடவடிக்கையாகவே பார்க்க இயலும். காவல்துறை நேரடியாக முதல்வர் கட்டுப்பாட்டில் இயங்கும் துறையாக இருக்கும் பட்சத்தில் இவ்வகையான தோல்வி நிர்வாகத் தோல்வியாக பார்க்க இயலாது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/88777/protests/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d/feed/ 0
கள்ளக்குறிச்சி போராட்டம் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் அறிக்கை https://may17iyakkam.com/88727/protests/privatization/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/ https://may17iyakkam.com/88727/protests/privatization/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/#respond Sun, 17 Jul 2022 12:53:33 +0000 https://may17iyakkam.com/?p=88727 மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் அறிக்கை

‐—————————————————–

தனியார் பள்ளிகள் மீதான வெகுமக்களின் நீண்டநாள் அதிருப்தியின் வெளிப்பாடாகவே கள்ளக்குறிச்சியில் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. கொரொனோ தொற்றுக்காலத்தில் இப்பள்ளிகள் நடத்திய வசூல் கொள்ளை, குழந்தைகளை வைத்து நடத்திய சுரண்டல் என நீண்ட பட்டியல் உண்டு. கொரோனோ உருவாக்கிய வேலையிழப்பு, பொருளாதார இழப்பு என பல்வேறு நெருக்கடிகளைக் கடக்க இயலாத நிலையில் துவளும் பெற்றோர்கள், தொடர் செய்தியாக இதே போன்று பள்ளிக்குழந்தைகள் மீது வளாகங்களில் நடக்கும் வன்முறைகள் என தொடர்ந்து நிகழும் அநீதிகளின் தொகுப்பாகவே மக்கள் போராட்டம் நிகழ்கிறது. துறையூர் அருகே சில மாதங்களுக்கு முன்பு இதே போல நீட் பயிற்சி வகுப்பிற்கு சென்ற மாணவி சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து போனது உட்பட இப்போராட்டம் பல நிகழ்வுகளின் வெளிப்பாடே.

இதே போன்று சென்னையில் நடக்கும் வீடு இடிப்புகள், ஆக்கிரமிப்பினை அகற்றுகிறோம் எனும் பெயரில் சாமானியர் மீது நடக்கும் அரச கொடுமைகள் தொடர்ந்த வண்ணமுள்ளது. உச்சநீதிமன்றமும் சாமானிய மக்களின் மீது தங்களது தீர்ப்புகளை எழுதி தம்மை நேர்மையான, கடுமையான அமைப்பு என கட்டமைக்கிறது.

காவல்துறை, கலெக்டர், தாசில்தார் என விரியும் அதிகாரவர்க்கமும், நீதித்துறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அமைப்புகள். இவைகள் அரசியல்படுத்தப்படாத அதிகார மையங்கள். மக்களோடு தொடர்பற்றும், மக்களுக்கு பதில்சொல்லவேண்டிய நெருக்கடியற்று தன்னிச்சையாக இயங்குகின்றன. இந்நிறுவனங்களின் வரம்புமீறல்களை, சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை கேள்வி எழுப்ப வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் மெளனம் காப்பதும், கொள்கை முடிவெடுக்காமல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதாலேயே இது போன்ற போராட்டங்கள் தவிர்க்க இயலாததாகிறது.

கள்ளக்குறிச்சியில் நடக்கும் போராட்டத்தை வன்முறை என மட்டும் சுருக்குவது அதிகாரவர்க்கத்தின் கையாலகத்தன்மையைத்தான் சொல்லுகிறது. அதிகாரவர்க்கம் நடத்தும் கொள்ளை, மக்கள் விரோத செயல்பாடுகள், இந்துத்துவ மனநிலை, காவல்நிலைய மரணங்கள், எதேச்சதிகாரத்தினை இதற்கு மேலும் திமுக அரசு கட்டுப்படத்தாமலும், கேள்விக்குட்படுத்தாமலும் செல்லுமானால் திமுக மக்கள் ஆதரவை விரைவில் இழக்கும்.

மக்கள் நலத்தின் மீதான கொள்கைப்பற்று இல்லாத அதிகாரவர்க்கம் ஆபத்தானது, அதன் இயல்பிலேயே பாசிசத் தன்மை கொண்டது. அரசியல் சாசனத்தின் வரையரைகளை சூத்திரமாகவும், சட்டத்தினை கைவிலங்காகவும் மக்கள் மீது சுமத்தும் எவ்வகையான அதிகாரவர்க்கமும் வீழ்ந்து போகும்.

சென்னையில் நடக்கும் குடிசை அகற்றம், வீடு இடிப்புகளுக்கு எதிர்வினையாக பெரும் எழுச்சி நடக்கும் முன்னர் திமுக கண்களைத் திறந்தால் அவர்களுக்கு நல்லது. அதிகாரிகளின் முடிவுகளின் படியும், மக்கள் விரோத நீதிமன்ற தீர்ப்புகளின் படியே நடப்போம் என முடிவெடுத்தார்களெனில், எதேச்சதிகாரத்தின் கூட்டாளிகளாகவே மக்கள் உங்களை அவதானிப்பார்கள். இதே நிலை தான் அதிமுகவிற்கும் நடந்தது. நீதிமன்றங்களில் சாமானியர்களுக்கான கொள்கையை முன்வைத்து வாதாடுவதும், சமூகவிரோத அதிகாரிகளை அகற்றவதுமாக அரசியலை முன்னெடுக்கவேண்டிய காலமிது.

காவல்நிலையத்தில் நடக்கும் மரணங்கள், கொலைகளை தடுப்பதற்குரிய எவ்வித அக்கரையுமற்று இயங்கும் தலைமைக் காவலர், கள்ளக்குறிச்சியில் நடக்கும் போராட்டத்தை வன்முறை என்று மட்டுமே சுருக்குவது எவ்வகையிலும் அரசிற்கும், மக்களுக்கும் பயன்படாது.

இந்த அதிகாரிகளை முறைப்படுத்தி, மக்கள் சேவகம் செய்ய வைக்கவே சட்டமன்றமும், உறுப்பினர்களும், அமைச்சர்களும், முதலமைச்சர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதை நீங்கள் முறைப்படுத்தவில்லையெனில், மக்களே நேரடியாக போராட்டங்கள் மூலம் கேள்வி எழுப்புவார்கள்.

அதிகாரிகள், நீதிமன்றம் மக்களுடன் நிற்கவில்லையெனில், ஆட்சியாளர்கள் மக்களுடன் நிற்கவேண்டும். இச்சமநிலை மாறினால் மக்கள் தம் உரிமைக்காக களம் காண்பார்கள்.

தோழர் திருமுருகன் காந்தி ,
ஒருங்கிணைப்பாளர் மே பதினேழு இயக்கம்

]]>
https://may17iyakkam.com/88727/protests/privatization/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/feed/ 0
தென்னக இரயில்வே பணிக்கான தேர்வெழுத தமிழக மாணவர்கள் வடநாடு செல்ல வேண்டும் என்ற அறிவிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/87875/activities/protests-activities/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9/ https://may17iyakkam.com/87875/activities/protests-activities/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9/#respond Fri, 06 May 2022 15:13:12 +0000 https://may17iyakkam.com/?p=87875

தென்னக இரயில்வே பணிக்கான தேர்வெழுத தமிழக மாணவர்கள் வடநாடு செல்ல வேண்டும் என்ற தென்னக இரயில்வே துறையின் அறிவிப்பை கண்டித்தும், தென்னக இரயில்வே தேர்வுகளை தமிழ்நாட்டிலேயே நடத்திட வலியுறுத்தியும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் கோவை இரயில் நிலையம் முன்பு 05-05-2022 வியாழன் மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87875/activities/protests-activities/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9/feed/ 0
“சமஸ்கிருதமே செத்த மொழி. பிணத்திற்கு எதற்கு மருத்துவ ஆசை!” – தோழர் திருமுருகன் காந்தி https://may17iyakkam.com/87854/protests/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa/ https://may17iyakkam.com/87854/protests/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa/#respond Tue, 03 May 2022 16:53:33 +0000 https://may17iyakkam.com/?p=87854

“சமஸ்கிருதமே செத்த மொழி.
பிணத்திற்கு எதற்கு மருத்துவ ஆசை!”
– தோழர் திருமுருகன் காந்தி

]]>
https://may17iyakkam.com/87854/protests/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa/feed/ 0
சென்னை ஐஐடியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தலித் மாணவிக்கு நீதி வழங்கிடு! ஐஐடி நிர்வாகம், பேராசிரியர்கள், காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடு! https://may17iyakkam.com/87650/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/ https://may17iyakkam.com/87650/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/#respond Thu, 31 Mar 2022 06:33:36 +0000 https://may17iyakkam.com/?p=87650

சென்னை ஐஐடியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தலித் மாணவிக்கு நீதி வழங்கிடு! ஐஐடி நிர்வாகம், பேராசிரியர்கள், காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடு! – மே பதினேழு இயக்கம்

மேற்கு வங்கத்தை சேர்ந்த தலித் மாணவி ஒன்றிய அரசின் உயர் தொழிற்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் பிஎச்டி படிப்பை கடந்த 2017 முதல் மேற்கொண்டு வருகிறார். இவர் சக மாணவர்களால் இரண்டு முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டும் தொடர்ந்து 4 ஆண்டுகளாக பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார். புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத ஐஐடி நிர்வாகம், ஓராண்டிற்கு பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறை, மாணவர்களின் பாலியல் சுரண்டலுக்கு துணை போன பேராசியர்கள் என அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

அதே மேற்கு வங்கத்தை சேர்ந்த முதல் குற்றவாளியான உயர்சாதியை சேர்ந்த கிங்ஷீக்தேவ் ஷர்மா மற்றும் சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோர் தலித் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, தவறான முறையில் புகைப்படம் எடுத்து அவரை தொடர்ந்து பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இதனால் அந்த மாணவி 3 முறை தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தனது பிஎச்டி இணை வழிகாட்டியிடம் புகாரளித்த போது அவர் மாணவியை சாதிரீதியாக கொச்சைப்படுத்தியதோடு, மாணவர்களின் பாலியல் சுரண்டலுக்கு துணை போயுள்ளார். மேலும், மாணவி தனது ஆய்வை தொடர்வதற்கும் தடையாக இருந்துள்ளார்.

பல்வேறு தரப்பிலிருந்து ஊக்கம் கிடைத்ததால் ஐஐடி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். அதனை ஐஐடி நிர்வாகம் முறையாக விசாரிக்காததோடு, மாணவி தனது ஆய்வை சமர்ப்பிக்கும் வரை குற்றம்சாட்டப்பட்ட மாணவர்கள் தமது ஆய்வை சமர்ப்பிக்கவும், ஐஐடி வளாகத்திற்குள் நுழையவும் தடை விதித்தது. ஆனால், மாணவர்கள் தொடர்ந்து இணையம் வழியாக அதே மாணவியின் வகுப்பில் கலந்துகொண்டு ஆய்வை தொடர்ந்து வருகின்றனர். மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து மாணவி ஆய்வகத்தை பயன்படுத்துவதற்கும், ஆய்வுக்கான வேதிப்பொருட்களை பெறவும் தடை ஏற்படுத்தியுள்ளனர்.

இறுதியாக அந்த மாணவி மயிலாப்பூர் மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் காவல்துறை உரிய விசாரணை மேற்கொள்ளாமலும், குற்றத்திற்கு ஆதாரமான மாணவர்களின் செல்ஃபோன்களை கைப்பாற்றாமலும் காலம் தாழ்த்தியுள்ளனர். ஓராண்டிற்கு பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதிலும் பாலியல் வன்கொடுமை பிரிவுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. தேசிய மகளிர் ஆணையம் தலையிட்ட பின்பு, 9 மாதங்களுக்கு பிறகும் நடவடிக்கை எதுவும் எடுக்காதது தற்போது தெரிய வந்துள்ளது. காவல்துறையினரின் விசாரணையை காட்டி ஐஐடி நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

கடந்த 4 ஆண்டுகளாக மாணவி உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐஐடி நிர்வாகம், வழிகாட்டியாக இருக்கும் பேராசிரியர்கள், காவல்துறை என அனைத்து தரப்பிலிருந்தும் நீதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு முதன்மை காரணமாக இருப்பது மாணவியின் சாதி. பட்டியல் சமூகத்தவர்கள், சிறுபான்மையினர்கள் மீது உயர்சாதி பார்ப்பனர்களால் நிரம்பியுள்ள ஐஐடியின் ஒடுக்கமுறை பலமுறை நடந்தேறியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பாத்திமா லத்தீப் என்னும் மாணவி தனது மரணத்திற்கு உயர்சாதி பார்ப்பனரான சுதர்சன் பத்மநாபன் என்ற பேராசிரியர் தான் காரணம் என்று கூறியும் இன்றளவும் பெரிய நடவடிக்கை எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

ஐஐடியில் தொடரும் சாதிய பாகுபாடும், அதனால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்கள் மரணிப்பதும் தொடர் நிகழ்வாகி போனது. குற்றச்செயல்களில் உயர்சாதி பார்ப்பனர்கள் ஈடுபடுவதால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாதது இதற்கு காரணமாக அமைகிறது. தற்போது மேற்கு வங்கத்தை சேர்ந்த தலித் மாணவியின் புகாரின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததோடு, குற்றச்செயலுக்கு உடந்தையாகவும் இருந்துள்ளனர். காவல்துறையினரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் குற்றத்தை மூடி மறைக்க முயன்றுள்ளனர்.

ஐஐடியில் தொடரும் சாதி அடிப்படையிலான குற்றச்செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு மேற்கு வங்க தலித் மாணவியின் புகாரை கொண்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. புகாரளித்தும் நடவடிக்கை மேற்கொள்ள ஐஐடி நிர்வாகத்தினர் மீதும், குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர்கள் மீதும், தகுந்த நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீதும் அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/87650/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/feed/ 0
இல்லம் தேடி கல்வி திட்டம், தமிழர்களின் மதம் குறித்த சர்ச்சையினால் ஏற்படும் அரசியல் மாற்றம் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல் https://may17iyakkam.com/86564/videos/important-videos/%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/ https://may17iyakkam.com/86564/videos/important-videos/%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/#respond Sun, 07 Nov 2021 18:26:11 +0000 https://may17iyakkam.com/?p=86564 இல்லம் தேடி கல்வி திட்டத்தை ஆர்எஸ்எஸ் கைப்பற்றும் அபாயம் குறித்தும், தமிழர்களின் மதம் குறித்த சர்ச்சையினால் ஏற்படும் அரசியல் மாற்றம் குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அரண் செய் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/86564/videos/important-videos/%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/feed/ 0
இல்லம் தேடி கல்வி என்பது ஆர்.எஸ்.எஸ். வளரவே உதவும். இத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்க! https://may17iyakkam.com/86524/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81/ https://may17iyakkam.com/86524/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81/#respond Thu, 28 Oct 2021 18:00:43 +0000 https://may17iyakkam.com/?p=86524

இல்லம் தேடி கல்வி என்பது ஆர்.எஸ்.எஸ். வளரவே உதவும். இத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்க! – மே பதினேழு இயக்கம்

தமிழ்நாடு அரசு சார்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம், ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள, ‘கற்பித்தல் பணிக்காக தன்னார்வத் தொண்டர்களை பயன்படுத்திக்கொள்ளுதல்’ என்னும் கூற்றின் மறுவடிவமாக அமைந்துள்ளதை காண முடிகிறது. ஆர்எஸ்எஸ் தொண்டர்களை கொண்டு இந்துத்துவ கருத்தியலை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் இந்த முறை மிகவும் ஆபத்தானது. இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மனுதரும சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட குலக்கல்வித் திட்டத்தின் நவீன வடிவமாக 2020-ம் ஆண்டு மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. இந்த கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போது, மே பதினேழு இயக்கம் தமிழ்நாடு முழுக்க பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள் என மிகக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு முற்போக்கு, சனநாயக அமைப்புகள் புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்ததன் விளைவாக, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதை அன்றைய அதிமுக அரசு தவிர்த்தது.

புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்பதாக புதியதாக பதவியேற்ற திமுக அரசு அறிவித்து, தமிழ்நாட்டிற்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என முதளமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். ஆனால், சமீபகாலமாக பள்ளிக் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதை காண முடிகிறது.

புதிய கல்விக் கொள்கையில் உள்ள கற்றல், கற்பித்தல் முறையில் தொண்டு நிறுவனங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது என்ற அடிப்படையில், கடந்த அதிமுக ஆட்சியின் போது அகஸ்தியா என்ற தொண்டு நிறுவனத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. திமுக ஆட்சியிலும் அது தொடர்ந்த நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், அரசின் கொள்கைக்கு மாறாக எந்த நிறுவனம் செயல்பட்டாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று கூறினார்.

அதேபோல், கொரோனா கால கற்றல் குறைபாட்டை கண்டறியும்படி 3, 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு NAS எனப்படும் தேசிய திறனறித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள 3, 5, 8, 10 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முறையை பின்பற்றி கொண்டு வரப்பட்டதாகும். மாணவர்களை தரம் பிரித்து தொழிற்கல்வி பயிற்சி என்ற குலக்கல்வித் திட்டத்தை திணிக்கும் இந்த திறனறித் தேர்வின் மூலம் பெறும் மதிப்பெண் மாணவர் தேர்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு விளக்கம் கொடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த தன்னார்வலர்களை கற்றல், கற்பித்தலுக்கு அனுமதிப்பது, ஆர்எஸ்எஸ்-பாஜக கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒரு திட்டமே. தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதில், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் மட்டும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. எனில், கற்றல், கற்பித்தல் முறையில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுமென்றால், அது ஏதோ ஒரு வகையில் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய நிறுவனமாகவே இருக்கும். அப்படியென்றால், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் ஆஎஸ்எஸ் கண்ட கனவுத் திட்டமாக அமைத்திடும் நிலை உருவாகியுள்ளது.

‘இல்லம் தேடி கல்வி’ திட்டம், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களையும், 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அனுமதிப்பது மிகவும் ஆபத்தான முடிவாகும். இதன் மூலம் ஆர்எஸ்எஸ் தனது இந்துத்துவ கருத்துக்களை மாணவர்களிடையே திணித்திட வழிவகுக்கும். தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் தகுதித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் போது, கற்பித்தலுக்கு எவ்விதத்திலும் தொடர்பற்ற தன்னார்வலர்களை பயன்படுத்துவது நேரெதிர் விளைவுகளையே உண்டாக்கும். மேலும், இல்லம் தேடி கல்வி கற்றுக்கொடுக்கும் நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நிலை மோசமான நிலையில் இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு முற்றிலும் நிராகரித்துள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையிலான மாற்றுத் திட்டங்கள் பள்ளிக் கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்படுவது கண்டனத்திற்கு உரியதாகும். தமிழ்நாட்டிற்கென கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அப்படியான கல்விக் கொள்கை ஏதும் உருவாக்கப்படாத நிலையில், பள்ளி கல்வித்துறையில் அரசு பல்வேறு புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்வி எழுகிறது. இல்லையென்றால், தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கவில்லையா? இல்லை, பள்ளி கல்வித்துறை ஆஎஸ்எஸ் சார்பு அதிகாரிகளால் இயக்கப்படுகிறதா?

தமிழ்நாடு அரசு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக தமிழ்நாட்டில் புகுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டிற்கென கல்விக் கொள்கை உருவாக்கப்படும் வரை பள்ளி கல்வித்துறையில் புதிய திட்டங்கள் கொண்டுவருவதை அனுமதிக்கக்கூடாது என்றும், இதுவரை கொண்டுவரப்பட்ட திட்டங்களை திரும்பப் பெற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மாநில சுயாட்சியை நோக்கி நகர வேண்டிய சூழலில், ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களை மாவட்ட நிர்வாகங்களை போல நடத்த துவங்கியுள்ளது சனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அப்படியான பாசிச திட்டத்தின் ஒரு பகுதியாக ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை இருக்கும் போது, அதன் தாக்கம் தமிழ்நாட்டில் எள்ளளவும் ஏற்படக்கூடாது என்பதே சனநாயகத்தை விரும்புவோரின் எண்ணமாக உள்ளது. புதிய கல்விக் கொள்கை தடுத்து நிறுத்தப்படுவதோடு, கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வருவதற்காக முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். அதுவே ஒன்றிய அரசின் அச்சுறுத்தல்களிலிருந்து நம்மை காப்பாற்றும்.

மே பதினேழு இயக்கம்
9884864010 

]]>
https://may17iyakkam.com/86524/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81/feed/ 0
‘நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்’ – நீதியரசர் ஏ.கே.இராசன் அறிக்கை சொல்வது என்ன? – இராணிப்பேட்டையில் நடைபெற்ற கருத்தரங்கம் https://may17iyakkam.com/86435/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a-7/ https://may17iyakkam.com/86435/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a-7/#respond Sun, 17 Oct 2021 14:31:40 +0000 https://may17iyakkam.com/?p=86435

‘நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்’ – நீதியரசர் ஏ.கே.இராசன் அறிக்கை சொல்வது என்ன? – மே 17 இயக்கத்தின் கருத்தரங்கம் அக்டோபர் 16 சனிக்கிழமை மாலை, இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கருத்துரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/86435/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a-7/feed/ 0
பள்ளிகள் திறப்பை அச்சுறுத்தும் மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/86376/protests/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81/ https://may17iyakkam.com/86376/protests/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81/#respond Fri, 08 Oct 2021 06:12:33 +0000 https://may17iyakkam.com/?p=86376

பள்ளிகள் திறப்பை அச்சுறுத்தும் மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

கல்வியின் நோக்கம் மனிதத் தன்மையை போற்றுவதும், ஞானத்தை வளர்ப்பதும், சமத்துவத்தை நடைமுறைப்படுத்திடவும் ஊக்குவிக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் நம்பினார். அது போல் கல்வி, பகுத்தறிவு சுயமரியாதை ஆகிய மூன்றும் மட்டும் தான் விளிம்பு நிலையில் உள்ள மக்களை முன்னேற்றும் என்று தந்தை பெரியார் முழங்கினார். அதைத்தான் சிதைக்க அனைத்து முயற்சிகளையும் பாஜக எடப்பாடி அரசின் மூலம் மேற்கொண்டது. எனவே தற்போது பதவியேற்றுள்ள திமுக அரசு, கட்டாயக் கல்வி உரிமைச்சட்ட்த்தின் முக்கிய கூறாக விளங்கும் மாணவர் – ஆசிரியர் விகிதாச்சாரத்தை கடைபிடித்து, கடந்த ஆட்சியினால் நிரப்பப்படாத காலிப்பணியிடங்களையும், மாணவர் – ஆசிரியர் விகிதத்தின் அடிப்படையில் உபரி பணியிடங்களை, கூடுதல் தேவை பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டு மீதமுள்ள கூடுதல் தேவை பணியிடங்களையும் நிரப்பினால் மட்டுமே மாணவர்கள் கல்வித் தரம் உயரும்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/86376/protests/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81/feed/ 0
தமிழர்களை அடிமைப்படுத்திய பார்ப்பனர்களின் குலக்கல்வி – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/86132/protests/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ https://may17iyakkam.com/86132/protests/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#respond Thu, 16 Sep 2021 05:00:15 +0000 https://may17iyakkam.com/?p=86132

தமிழர்களை அடிமைப்படுத்திய பார்ப்பனர்களின் குலக்கல்வி
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ராஜாஜிக்கு எதிரான இந்தப் போரை ஆரிய – திராவிட போர் என அடையாளப்படுத்தியது பார்ப்பனக் கூட்டம். பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்க “பார்ப்பானே! தமிழ்நாட்டை விட்டு வெளியேறு!” என்ற இயக்கத்தை பெரியார் முன்னெடுத்து, “பார்ப்பனர்களை சமூக விலக்கம் செய்யுங்கள்; அவர்களுக்கு யாரும் துணி துவைக்காதீர்கள்; சவரம் செய்யாதீர்கள்; வயலில் உழாதீர்கள்; குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பார்ப்பானை அழைக்காதீர்கள்; பார்ப்பான் பூசாரியாக இருக்கும் கோயிலுக்குப் போகாதீர்கள்; பட்டினி கிடக்க நேரிட்டாலும் பார்ப்பான் உணவு கடைகளை புறக்கணியுங்கள்; பார்ப்பனப் பத்திரிகைகளை வாங்காதீர்கள்!” என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. இதனால் மக்களிடையே நடமாட முடியாத சூழ்நிலையை பார்ப்பனர்களுக்கு உருவானது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

]]>
https://may17iyakkam.com/86132/protests/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/ 0