Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
அரசு அடக்குமுறை – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Sat, 26 Nov 2022 04:36:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 தமுஎகச மாநில துணைச் செயலாளர் அ.கரீம் எழுதிய “முகாம்” புத்தகத்தின் நூல் வெளியீட்டு விழா https://may17iyakkam.com/89541/protests/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%a4%e0%ae%ae%e0%af%81%e0%ae%8e%e0%ae%95%e0%ae%9a-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2/ https://may17iyakkam.com/89541/protests/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%a4%e0%ae%ae%e0%af%81%e0%ae%8e%e0%ae%95%e0%ae%9a-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2/#respond Fri, 25 Nov 2022 04:34:46 +0000 https://may17iyakkam.com/?p=89541

தமுஎகச மாநில துணைச் செயலாளர் அ.கரீம் எழுதிய “முகாம்” என்னும் புத்தகத்தின் நூல் வெளியீட்டு விழா இன்று (25-11-2022 வெள்ளி) மாலை 6 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று வாழ்த்துரையாற்றுகிறார்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89541/protests/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%a4%e0%ae%ae%e0%af%81%e0%ae%8e%e0%ae%95%e0%ae%9a-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2/feed/ 0
நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை அடையாளம் காட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திடு! நேரடி குற்றவாளிகள் மட்டுமல்லாது துப்பாக்கிசூட்டின் மறைமுக குற்றவாளிகளை கண்டறிய உயர்மட்ட விசாரணை அமைத்திடுக! https://may17iyakkam.com/89364/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%9c%e0%af%86%e0%ae%95%e0%ae%a4%e0%af%80%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85/ https://may17iyakkam.com/89364/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%9c%e0%af%86%e0%ae%95%e0%ae%a4%e0%af%80%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85/#comments Thu, 20 Oct 2022 14:37:49 +0000 https://may17iyakkam.com/?p=89364

நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை அடையாளம் காட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திடு! நேரடி குற்றவாளிகள் மட்டுமல்லாது துப்பாக்கிசூட்டின் மறைமுக குற்றவாளிகளை கண்டறிய உயர்மட்ட விசாரணை அமைத்திடுக! – மே பதினேழு இயக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் அளித்துள்ள அறிக்கையில், இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

தூத்துக்குடி நகரில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மக்களின் உயிருக்கு ஆபத்தாக மாறிய நிலையில் அதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக போராடி வந்தனர். அதன் உச்சகட்டமாக 2018-ம் ஆண்டு துவங்கிய போராட்டத்தின் 100-வது நாளின் போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதிப் பேரணி சென்றனர். அப்போது பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 வயது மாணவி ஸ்னோலின் உட்பட 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை கண்டித்து அப்போது பல இடங்களில் மே பதினேழு இயக்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது. சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் இது குறித்து ஐநா மனித உரிமை அவையில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பதிவு செய்தார். காவல்துறை மற்றும் அதிகார வர்க்கத்தினை கேள்விக்குட்படுத்தியதால், இந்தியா திரும்பும் போது பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் உபா சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டார். மேலும் அவர் மீது தூத்துக்குடியில் வழக்கு பதியப்பட்டு இன்றும் சிபிசிஐடி விசாரணைக்குள் உள்ளார்.

அதன் பின், துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு ஏற்பட்டது, காயங்கள் ஏற்பட்டது, அப்போதைய சூழல், அதற்கான காவல்துறையின் நடவடிக்கைகள், துப்பாக்கி சூட்டிற்கான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா உள்ளிட்ட பலவற்றை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழ் நாடு அரசு அமைத்தது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விசாரணையின் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 18-ம் தேதி தமிழ் நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அது தற்போது சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டதன் மூலம் பல முக்கிய தகவல்களை வெளிவந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிய பேரணி முன்னரே அறிவிக்கப்பட்டும் அதற்கு மாவட்ட நிர்வாகம் மிகத் தாமதமாக தடை விதித்ததும், அந்த செய்தியை மக்களிடம் கொண்டு செல்லாததும் சம்பவம் நடைபெறுவதற்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் அலட்சியத்துடன் இருந்ததும் தெரியவருகிறது. திருநெல்வேலி சரக டிஐஜி கபில் குமார் சரத்கர், தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், நுண்ணறிவுத்துறை ஐஜி கே.என்.சத்யமூர்த்தி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகிய முக்கிய காவல்துறை தலைமைகள் பொறுப்பற்றத்தன்மையுடன் நடந்துகொண்டதாக அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.

அதேபோல், பொதுமக்கள் யாரும் வன்முறையில் ஈடுபடாத நிலையில் அவர்களின் தலை, மார்பு என முக்கிய உடற்பகுதிகளை குறி வைத்து காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் என்கிறது அறிக்கை. இதன் மூலம் கொலை செய்யும் நோக்கத்துடனே இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது உறுதியாகிறது. சுடலைக்கண்ணு என்ற காவலர் மட்டும் தானியங்கி துப்பாக்கியால் 17 சுற்றுகள் சுட்டுள்ளார். உயர் அதிகாரிக்கு தெரியப்படுத்தாமல் காவல்துறையினர் தன்னிச்சையாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமாக திருநெல்வேலி சரக டிஐஜி, தென்மண்டல ஐஜி, தூத்துக்குடி எஸ்பி, வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறையினர் என 17 பேரை அருணா ஜெகதீசன் அறிக்கை குற்றம்சாட்டுகிறது. இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உடனடியாக கைது செய்து குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ் நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. உண்மை இவ்வாறு இருக்க, நடிகர் ரஜினி காந்த் போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்று கூறி பழியை பொதுமக்கள் மீது போட முயன்றதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும், அப்போதைய முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துப்பாக்கி சூடு குறித்து தொலைக்காட்சி ஊடகங்களில் பார்த்து தெரிந்துகொண்டதாக கூறியிருந்தார். ஆனால், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், நுண்ணறிவுத்துறை ஐஜி கே.என்.சத்யமூர்த்தி ஆகியோர் அவருக்கு தொடர்ந்து தகவல் தெரிவித்துக்கொண்டே இருந்ததாக அறிக்கையில் வெளியாகியுள்ளது. இதன் மூலம், திரு எடப்பாடி பழனிச்சாமி தமிழ் நாட்டு மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளார்.

அதேவேளை, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற பாஜகவின் அரசியல் அழுத்தம் காரணமாக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நெருக்கடியில் இருந்துள்ளார். மேலும், தமிழ் நாடு காவல்துறை திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை என்பதும் புலப்படுகிறது. எனில், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார், அவர்கள் அவ்வாறு உத்தரவிடுவதற்கு என்ன நோக்கம், கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் காவல்துறையினருக்கு வந்தது ஏன் போன்ற கேள்விகளுக்கான பதிலை அறிக்கை வெளிப்படுத்தவில்லை.

ஸ்டெர்லைட்-வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர். எனவே, ஒன்றிய பாஜக அரசின் அழுத்தத்தின் காரணமாக, ஒன்றிய அரசின் உளவுத்துறையின் உத்தரவின் கீழ் தமிழ்நாட்டு காவல்துறை துப்பாக்கி சூட்டை நடத்தியதாக ஐயம் எழுகிறது. ஆகையால், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் மறைமுக குற்றவாளிகளை கண்டறிந்து உண்மையை வெளிக்கொண்டு வர, உயர்மட்ட விசாரணை குழு ஒன்றை அமைத்து, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், நுண்ணறிவுத்துறை ஐஜி கே.என்.சத்யமூர்த்தி ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் கோருகிறது.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் ஆணையம் பரிந்துரைத்துள்ளபடி உரிய இழப்பீடுகளை உடனே வழங்குவதோடு, அவர்களது குடும்பத்தினர் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் கோருகிறது. மேலும், இத்தகைய பயங்கரவாதத்திற்கு பின்புலமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு தமிழ்நாட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என திமுக அரசு கொள்கைத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். அதுவே உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் நீதியாக அமையும்.

மே பதினேழு இயக்கம்
9884864010
20/10/2022 

]]>
https://may17iyakkam.com/89364/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%9c%e0%af%86%e0%ae%95%e0%ae%a4%e0%af%80%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85/feed/ 1
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மறைந்த கவிஞர் சாக்கிய முகிலன் அவர்களின் ‘அரசு எந்திரம் எதைக் கிழித்தது’ நூல் வெளியீட்டு விழா https://may17iyakkam.com/89338/protests/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/ https://may17iyakkam.com/89338/protests/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/#respond Sun, 16 Oct 2022 13:36:22 +0000 https://may17iyakkam.com/?p=89338

மறைந்த கவிஞர் சாக்கிய முகிலன் அவர்கள் எழுதிய ‘அரசு எந்திரம் எதைக் கிழித்தது’ நூல் வெளியீட்டு விழா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை சார்பாக 14-10-2022 வெள்ளிக்கிழமை மாலையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பஜார் வீதி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89338/protests/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0
பி.எஃப்.ஐ.-எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அலுவலகங்கள் மற்றும் தலைவர்கள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபட்டதோடு எவ்வித ஆதாரமும் இல்லாமல் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் அமலாக்கத் துறையை (ED) கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றிய காணொளி. https://may17iyakkam.com/89155/videos/important-videos/%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%90-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%90-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-2/ https://may17iyakkam.com/89155/videos/important-videos/%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%90-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%90-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-2/#respond Wed, 28 Sep 2022 17:13:16 +0000 https://may17iyakkam.com/?p=89155 பி.எஃப்.ஐ.-எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அலுவலகங்கள் மற்றும் தலைவர்கள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபட்டதோடு எவ்வித ஆதாரமும் இல்லாமல் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் அமலாக்கத் துறையை (ED) கண்டித்து, ஆலந்தூர் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு (AAIK) ஒருங்கிணைப்பில், சென்னை ஆலந்தூர் மண்டித் தெருவில் 27-09-2022 செவ்வாய் மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றிய காணொளி.

காணொளி உதவி: Roots Tamil

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89155/videos/important-videos/%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%90-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%90-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-2/feed/ 0
பி.எஃப்.ஐ.-எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அலுவலகங்கள் மற்றும் தலைவர்கள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபட்டதோடு எவ்வித ஆதாரமும் இல்லாமல் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் அமலாக்கத் துறையை (ED) கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/89151/activities/protests-activities/%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%90-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%90-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/ https://may17iyakkam.com/89151/activities/protests-activities/%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%90-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%90-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/#respond Tue, 27 Sep 2022 17:06:04 +0000 https://may17iyakkam.com/?p=89151

பி.எஃப்.ஐ.-எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அலுவலகங்கள் மற்றும் தலைவர்கள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபட்டதோடு எவ்வித ஆதாரமும் இல்லாமல் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் அமலாக்கத் துறையை (ED) கண்டித்து, ஆலந்தூர் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு (AAIK) ஒருங்கிணைப்பில், சென்னை ஆலந்தூர் மண்டித் தெருவில் இன்று (27-09-2022) மாலை 4:30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார். அனைவரும் வருக.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89151/activities/protests-activities/%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%90-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%90-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை முடக்குவதற்காக நடத்தப்படும் என்.ஐ.ஏ வின் சோதனையும், அதன் தலைவர்கள் கைதும் கண்டிக்கத்தக்கது! https://may17iyakkam.com/89101/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%86%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-4/ https://may17iyakkam.com/89101/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%86%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-4/#respond Thu, 22 Sep 2022 17:03:50 +0000 https://may17iyakkam.com/?p=89101

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை முடக்குவதற்காக நடத்தப்படும் என்.ஐ.ஏ வின் சோதனையும், அதன் தலைவர்கள் கைதும் கண்டிக்கத்தக்கது! – மே 17 இயக்கம்

இந்துத்துவ பாசிச அமைப்பு தொடங்கப்பட்டு நூறாவது ஆண்டான 2025க்குள் இந்தியா முழுவதும் தனது பாசிசம் வேரூன்றி இருக்க வேண்டும் என்று விரும்பும் இந்துத்துவ பாசிச சக்திகள், தனது நோக்கத்திற்கு எதிராக யாரெல்லாம் இருப்பார்களோ அவர்களை முடக்கும் வேலையை செய்ய தொடங்கி விட்டது என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீதான தொடர் தாக்குதலின் (சோதனை, கைது) வழியாக புரிந்து கொள்ள முடிகிறது.

தொடர்ச்சியாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது பல்வேறு மாநிலங்களில் சோதனை நடவடிக்கை என்ற பெயரில் அத்து மீறுவதும் அதன் தலைவர்களை எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் தேசிய புலனாய்வு முகமை என்ற சர்வ அதிகாரம் படைத்த அமைப்பின் மூலம் கைது செய்வதும் அதன் மூலம் வெகுஜன மக்கள் மத்தியில் இஸ்லாமிய எதிர்ப்பை உருவாக்கி அதன் மூலம் இந்துத்துவ பாசிச கட்டமைப்பை வலுப்படுத்த பிஜேபி நினைக்கிறது.

இந்துத்துவ பாசிச சக்திகளின் இந்த தாக்குதல் என்பது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்போடு நின்றுவிடப் போவதில்லை. பாசிசத்திற்கு எதிராக நிற்கும் அனைத்து ஜனநாயக சக்திகளின் மீதும் இது தொடரத்தான் போகிறது. இதனை சட்டத்தின் வழி செய்வதற்காக தான் தேசிய புலனாய்வு முகமை மற்றும் பல புதிய சட்ட திருத்தங்கள், மசோதாக்கள், சட்டங்கள் நாடாளுமன்றத்தின் வழியாக நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பது தொடக்கம் தானே ஒழிய, அது முடிவல்ல. அந்த பாசிச கரங்கள் இந்தியாவின் ஜனநாயக விழுமியங்கள் அனைத்தின் மீதும் தனது கோர தாண்டவத்தை நிகழ்த்த இருக்கிறது என்பதுதான் உண்மை.

ஆகவே இந்த அத்துமீறல்களை உடனடியாக கண்டிக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் தார்மீக கடமை என்று மே 17 இயக்கம் நினைக்கிறது. இந்த நேரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு ஆதரவாக நிற்க வேண்டியது ஜனநாயகத்தின் கடமை என்ற அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தேசிய புலனாய்வு முகமையின் சோதனையையும், அதன் தலைவர்கள் கைதையும் மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89101/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%86%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-4/feed/ 0
வருமான வரி சோதனை மூலம் எஸ்.டி.பி.ஐ. கட்சியை அச்சுறுத்த நினைக்கும் ஒன்றிய பாஜக அரசினை வன்மையாக கண்டிக்கின்றோம்! https://may17iyakkam.com/89059/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8/ https://may17iyakkam.com/89059/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8/#respond Mon, 19 Sep 2022 06:10:01 +0000 https://may17iyakkam.com/?p=89059 வருமான வரி சோதனை மூலம் எஸ்.டி.பி.ஐ. கட்சியை அச்சுறுத்த நினைக்கும் ஒன்றிய பாஜக அரசினை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தில் செப்டம்பர் 13 இரவு ஒன்றிய வருமான வரித் துறையினர் புகுந்து சோதனையிட்டுள்ளனர். எவ்வித முகாந்திரமும் இல்லாமல் ஒன்றிய பாஜக அரசின் ஏவலின் பேரில், சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல், அச்சுறுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டு இந்த சோதனையை நடத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி மீதான ஒன்றிய பாஜக அரசின் இந்த அத்துமீறலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகர மாமன்ற உறுப்பினராக எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளார். காவிகளின் கோட்டையாக கருதப்படும் பகுதியில் சிறுபான்மை இசுலாமியர் ஒருவர் அனைத்து தரப்பு மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றதை பாஜகவினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆகையால் பொதுமக்கள் மத்தியில் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் வருமான வரித்துறையினர் செயல்பட்டுள்ளனர்.

மேலும், கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அலுவலகம் கட்சியின் அரசியல் அலுவல் பயன்பாடுகளை தாண்டி மக்கள் சேவை மையமாக செயல்படுகிறது. நாள்தோறும் பொதுமக்கள் பலர் வந்து செல்லும் இடமாக உள்ளது. இப்படியான பொது நீரோட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகம் செயல்படுவதை தடுக்கும் நோக்கத்திலும், இங்கு வந்து செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் ஒன்றிய பாஜக அரசினால் இந்த வருமான வரி சோதனை ஏவப்பட்டுள்ளது. மூன்று மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கைப்பற்ற ஏதுமில்லாமல் வெறுங்கையுடன் வருமான வரித்துறையினர் திரும்பி சென்றதன் மூலமே இதனை அறிந்துகொள்ள முடிகிறது.

எஸ்.டி.பி.ஐ. கட்சி ஜனநாயக ரீதியாக சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும் ஓர் அரசியல் அமைப்பு. குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வாதாரப் போராட்டக் களங்கள் அனைத்திலும் முற்போக்கு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் அமைப்பாகவும், தமிழீழத்தில் நடைபெற்றதை இனப்படுகொலை என அங்கீகரிக்கும் அமைப்பாகவும் உள்ளது. ஆண்டுதோறும் மே மாதத்தில் நடைபெறும் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வில் தவறாது பங்கேற்கும் அமைப்பாகும்.

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத செயற்பாடுகளை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சமரசமில்லாமல் தொடர்ந்து போராடி வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் பல்வேறு அடக்குமுறைகளை ஜனநாயக ரீதியாக எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஜனநாயக வெளியினை தடுத்திடவும், அதன் ஜனநாயக குரலை ஒடுக்கவும் ஒன்றிய அரசின் ஒரு நிறுவனமான மத்திய வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் எஸ்.டி.பி.ஐ. கட்சியினை முடக்கிவிட முடியாது என்பதனையும், இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி சட்டரீதியாக எதிர்கொள்ளும் என்பதனையும் மே பதினேழு இயக்கம் அறியும்.

ஒன்றிய பாஜக அரசு ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளி பாசிசத்தின் மூலம் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயலுகின்றது. அதன் ஒரு பகுதியாகவே எஸ்.டி.பி.ஐ. கட்சி போன்ற ஜனநாயக அமைப்புகளை முடக்க முயலுகிறது. இந்த சூழலில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு உறுதுணையாக மே பதினேழு இயக்கம் இருக்கும் என்பதை உறுதிபட கூறுகிறோம். ஒன்றிய பாஜக அரசின் நெருக்கடிகளை மே பதினேழு இயக்கமும் சந்தித்துள்ளது என்ற வகையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் இணைந்து ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோத செயல்களை மே பதினேழு இயக்கம் எதிர்கொள்ளும் என கூறிக்கொள்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89059/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8/feed/ 0
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியின் ஒற்றுமை அணிவகுப்பு பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து தோழர்களை கைது செய்த காவல்துறையின் ஜனநாயக விரோத செயலை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது https://may17iyakkam.com/87525/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%86%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-3/ https://may17iyakkam.com/87525/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%86%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-3/#respond Wed, 09 Mar 2022 06:32:54 +0000 https://may17iyakkam.com/?p=87525 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) கட்சியின் சார்பாக கடந்த மார்ச் 6 அன்று, தாம்பரம் மற்றும் சேலம் நகரங்களில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஒற்றுமை அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முந்தைய நாள் வரை அனுமதி வழங்குவதாக காவல்துறை கூறிய நிலையில், பேரணிக்கான ஏற்பாடுகளை பிஎஃப்ஐ கட்சி செய்திருந்தது. ஆனால் பேரணி துவங்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பேரணிக்கான அனுமதியை மறுப்பதாக கூறி, பேரணி செல்ல முயன்ற அனைவரையும் காவல்துறை கைது செய்தது.

கொரானா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி அளித்து பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல்துறையின் கடமையாகும். பேரணிகள் நடத்துவது வழக்கமாக நடைபெறும் ஓர் அரசியல் நிகழ்வாகும். அதுவும் ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் விதமாக மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஒற்றுமை அணிவகுப்பை நடத்த பிஎஃப்ஐ கட்சி முயன்றுள்ளது. அதனை காவல்துறை மறுத்துள்ளது ஜனநாயக விரோத செயலாகும்.

அதேவேளை தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனையின் இந்திய மருத்துவர்கள் சங்கம் (ஐஎம்ஏ) சார்பாக ஆர்எஸ்எஸ் தொடர்புடைய பேரணிக்கு அனுமதி அளித்ததோடு, தாம்பரம் ஆணையர் இரவி கொடியசைத்து துவக்கி வைத்தும் உள்ளார். இதே போல், இதற்கு முன்னரும் ஆர்எஸ்எஸ் பேரணிகளுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. கலவரத்தை உண்டுபண்ணும் நோக்கில், சமூகத்தில் பிளவை உண்டாக்கும் பேரணிகளுக்கு அனுமது அளிப்பதும், ஜனநாயக சக்திகளின் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பதும், காவல்துறையின் ஜனநாயக விரோத போக்கை காட்டுகிறது.

காவல்துறையின் இத்தகைய ஜனநாயக விரோத செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. சமூகநீதியை, மத நல்லிணக்கத்தை முன்னெடுத்து செல்லும் தமிழ்நாட்டில், காவல்துறையின் போக்கு அதற்கு எதிர்மறையாக அமைவது தமிழ்நாட்டை பின்னோக்கி தள்ளும். தமிழ்நாடு அரசு இதனை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்

98848641010

]]>
https://may17iyakkam.com/87525/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%86%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-3/feed/ 0
தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூல் பக்கம் முடக்கம்! சனநாயக வெளியை முடக்கும் முகநூல் நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்! https://may17iyakkam.com/87068/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-65/ https://may17iyakkam.com/87068/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-65/#respond Wed, 12 Jan 2022 18:07:53 +0000 https://may17iyakkam.com/?p=87068

தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூல் பக்கம் முடக்கம்! சனநாயக வெளியை முடக்கும் முகநூல் நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூல் பக்கம் (fb.com/thirumurugan.gandhi.may17) நேற்று (11-01-22) முடக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் ஏதும் அறிய முடியவில்லை. முகநூல் நிர்வாகம் இது தொடர்பான எந்த ஒரு எச்சரிக்கையோ அறிவிப்போ வழங்கவில்லை. தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூல் பக்கத்தை முடக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்துள்ளது. முகநூல் நிர்வாகத்தின் இத்தகைய சனநாயகமற்ற செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தனிப்பட்ட முகநூல் கணக்கு துவங்குவதற்கு முகநூல் நிர்வாகம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. திருமுருகன் காந்தி என்ற பெயரில் கணக்கு துவங்கினால் அடுத்த நொடியே அந்த கணக்கு முகநூல் நிர்வாகத்தால் முடக்கப்படுகிறது. அதே போல், ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் அவர்களின் பெயரில் துவங்கப்பட்ட தனிப்பட்ட கணக்கும் தடுக்கப்பட்டு, தகுந்த அடையாளச் சான்றுகள் அளித்தும் கணக்கை அணுகுவதற்கு எவ்வித காரணமுமின்றி முகநூல் நிர்வாகம் மறுக்கிறது.

மேலும், மே பதினேழு இயக்கத் தோழர்கள் சிலரது நீண்டகால கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது அல்லது அதன் செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மே பதினேழு இயக்கம் மற்றும் தோழர் திருமுருகன் காந்தியின் முகநூல் பக்கங்களின் பதிவுகள் அப்பக்கங்களை பின்தொடர்பவர்களை சென்றடையாமல் மட்டுப்படுத்தப்பட்டு அதன் செயல்பாடுகள் கடந்த காலங்களில் முடக்கப்பட்டுள்ளது. இதில், தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூல் பக்கமானது தகுந்த சான்றுகள் அளிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட (Blue Tick) பக்கமாகும்.

இவை அனைத்திலும், முகநூல் நிர்வாகம் முறையான எச்சரிக்கையோ அறிவிப்போ வழங்கவில்லை. மேலும் இது குறித்து முறையிடுவதற்கான அனைத்து வழிகளையும் அடைத்தும் வைத்துள்ளது. இது, மே பதினேழு இயக்கத்தின் செயல்பாட்டை முழுவதுமாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே முகநூல் நிர்வாகம் செயல்படுவதை காட்டுகிறது. அதன் உச்சம் தான் தற்போது தோழர் திருமுருகன் காந்தியின் முகநூல் பக்கம் முடக்கம்.

முகநூல் மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் மே பதினேழு இயக்கத்தின் மீதான அடக்குமுறை தொடர்கிறது. பல்லாயிரக்கணக்கான சந்ததாரர்களை கொண்டிருந்த மே பதினேழு இயக்கத்தின் யூடியூப் சானலும் எச்சரிக்கை அளிக்காமல் முடக்கப்பட்டது. இதனால் பல்லாண்டு ஆவணங்களான காணொலிகளை இழந்தோம். இது குறித்து மே பதினேழு இயக்கம் மக்கள் மன்றத்தில் பல முறை முறையிட்டுள்ளது.

மே பதினேழு இயக்கம் சமூக வலைத்தளங்களில் செயல்படுவதற்கான சனநாயக வெளியை முடக்குவது கருத்துரிமைக்கு எதிரானதாகும். தோழர் திருமுருகன் காந்தியின் முகநூல் பக்கம் மீண்டும் செயல்பட முகநூல் அனுமதிக்க வேண்டும். இதற்கான அழுத்தத்தை சனநாயக ஆற்றல்கள் உண்டாக்க வேண்டுமென வேண்டுகோள் வைக்கின்றோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010 / contact.may17@gmail.com

]]>
https://may17iyakkam.com/87068/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-65/feed/ 0
மக்கள் கண்காணிப்பகம் மீதான ஒன்றிய அரசின் சிபிஐ சோதனை; மனித உரிமைகள் அமைப்புகளை மிரட்டும் மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் https://may17iyakkam.com/87065/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4/ https://may17iyakkam.com/87065/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4/#respond Tue, 11 Jan 2022 18:06:07 +0000 https://may17iyakkam.com/?p=87065

மக்கள் கண்காணிப்பகம் மீதான ஒன்றிய அரசின் சிபிஐ சோதனை; மனித உரிமைகள் அமைப்புகளை மிரட்டும் மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் – மே பதினேழு இயக்கம்

தமிழ்நாட்டில் 1995ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் சார்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பு தான் மதுரையை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவரும் மக்கள் கண்காணிப்பகம். இந்த அமைப்பு வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது நடத்தப்பட்ட மனித உரிமை மீறலாகட்டும், ஆந்திர காவல்துறையால் தமிழர்கள் சுட்டுகொல்லப்பட்ட நிகழ்வாகட்டும், ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக போராடிய மக்களை சுட்டுக்கொன்ற கொடுமையாகட்டும் இவை அனைத்திற்கெதிராகவும் போராடி அதை வெளிவுலகுக்கு கொண்டு வந்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்கு நடத்தி நிவாரணமும் வாங்கிக்கொடுத்த அமைப்பு மக்கள் கண்காணிப்பகம். இப்படிப்பட்ட அமைப்பின் மீது ஒன்றிய அரசு காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு பதிவு செய்து, அதன் அலுவலகத்தில் சிபிஐ-யைக் கொண்டு கடந்த 08-01-22அன்று சோதனையிட்டிருக்கிறது. மக்கள் கண்காணிப்பகம் மீதான ஒன்றிய அரசின் ஒடுக்குமுறையை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

பாஜக அரசு பதவியேற்றதிலிருந்தே மனித உரிமைகள் அமைப்புகளை அச்சுறுத்துவதும், அவர்கள் மீது பொய்வழக்கு போட்டு அவர்களின் செயல்பாடுகளை முடக்குவதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. சமீபத்தில் கூட இந்தியாவில் வெளிநாட்டு பங்களிப்புகள் (ஒழுங்குமுறை) சட்டத்தின் (எஃப்சிஆர்ஏ) கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த 22,000 க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பெரும்பாலனவற்றை நீக்க மோடி அரசின் கீழ் இயங்கும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதற்காகவே ஐந்து ஆண்டுகளுக்கு முன் எளிமையாக இருந்த நிறுவனத்தை புதுப்பிக்கும் வழிமுறையில் பிரிவு 12(4) திருத்தம் கொண்டுவந்து மிகக்கடுமையாக மாற்றியமைத்தது. அதன்படி அரசை எதிர்த்து பேசக்கூடாது என்று உறுதிவாங்குவதற்காக பொதுநலனுக்கும் தேசத்திற்கும் எதிராக செயல்பட மாட்டோமென்ற சான்றிதழ் பெற வேண்டுமென்று நிபந்தனையை விதித்தது. அதுமட்டுமில்லாமல் நேரடியாகவே 160 தன்னார்வ நிறுவனங்களின் மீது தடையும் விதித்தது. அதில் அன்னை தெரசா அவர்களால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் ஒன்று.

இந்த வரிசையில் தான் மக்கள் கண்காணிப்பகத்தின் செயல்பாடுகளை முடக்க ஒன்றிய அரசு 2012ஆம் ஆண்டே சில அடக்குமுறைகளை மேற்கொண்டது. அயல்நாடுகளில் இருந்து நிதிபெற 2012இல் ஒரு முறை, 2013இல் இரண்டு முறை என மொத்தம் மூன்று முறை தடைவிதித்தனர். இதனை எதிர்த்து மக்கள் கண்காணிப்பகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதில் ஒன்றிய அரசு விதித்த தடை செல்லாது என்று தீர்ப்பு வந்தது. இதனையெடுத்து பதவிக்கு வந்த பாஜக மோடி அரசு 29.10.2016ஆம் ஆண்டு வெளிநாட்டில் நிதிபெறுவதற்கான உரிமத்தை புதுபிக்க கொடுத்த விண்ணப்பத்தை ஏற்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து மக்கள் கண்காணிப்பகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அது இந்த 2022 ஆம் ஆண்டு இந்த மாதம் சனவரி 24ஆம் தேதி விசாரணைக்கு வரவிருந்தது. இந்நிலையில் ஏற்கனவே 2012இல் போடப்பட்டு முடிந்துவிட்ட ஒரு வழக்கில் தற்போது 06-01-2022இல் புதிதாக வழக்கு பதிந்து, 07-01-2022 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் பெற்று, 08-01-2022 அன்று அதை வைத்து மக்கள் கண்காணிப்பகத்தின் மீது சோதனை போட்டிருப்பது என்பது மக்கள் கண்காணிப்பகத்தின் தமிழ்நாடு, இந்தியா தாண்டிய அதன் செயல்பாடுகளை முடக்குவதற்கு தான் என்பது தெள்ளத்தளிவாக தெரிகிறது.

மக்கள் கண்காணிப்பகம் சனநாயக கோரிக்கைகளுக்காகவும், பாசிச எதிர்ப்பு செயல்பாடுகளுக்காகவும், அரச வன்முறைக்கு எதிராகவும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து இந்திய அரசியல் சாசனத்திற்குட்பட்டு செயல்படும் ஓர் அமைப்பாகும். இதன் தலைவரான தோழர்.ஹென்றி டிபேன் அவர்களும் சர்வதேச அளவில் இந்திய சமூகத்தில் இருக்கும் அவலங்களை அம்பலப்படுத்தியும், அதற்குரிய சட்டங்களையும், பரிந்துரைகளையும், தீர்மானங்களையும் கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருபவர். இந்த வகையில் மக்கள் கண்காணிப்பகம் மற்றும் தோழர்.ஹென்றி டிபேன் மீதான அடக்குமுறை என்பது தமிழகத்தின் முன்னனி சனநாயக அமைப்பு மீதான நெருக்கடியாகும். இது தடுக்கப்படவில்லையெனில் இது போன்ற ஒடுக்குமுறைகள் விரிவடையலாம் என்பதால், சனநாயக அமைப்புகள் இச்சமயத்தில் ஒன்றுபட்டு இந்துத்துவ பாசிச அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டுமென மே 17 இயக்கம் அழைப்பு விடுக்கிறது. மேலும் மக்கள் கண்காணிப்பகம் மீதான ஒன்றிய அரசின் இந்த அடக்குமுறையை மே 17 இயக்கம் கண்டிப்பதோடு இதுபோன்ற நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் கோருகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/87065/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4/feed/ 0