Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
மே 17 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Sat, 25 Feb 2023 14:27:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் https://may17iyakkam.com/90095/may17/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/ https://may17iyakkam.com/90095/may17/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/#respond Sat, 25 Feb 2023 14:27:13 +0000 https://may17iyakkam.com/?p=90095

திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 7 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது.

அரங்கு எண்: 83

அரசியல், சமுகம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, இலக்கியம் சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் அரங்கில் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் வருக.

தொடர்புக்கு: 8939782116

]]>
https://may17iyakkam.com/90095/may17/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0
பேனா சின்னத்தை கடலில் அமைக்க மே பதினேழு இயக்கம் ஆதரவளிக்கவில்லை என்னும் நிலைப்பாட்டை விளக்கி சென்னை மாவட்ட ஆட்சியர் திருமிகு அமிர்தஜோதி அவர்களிடம் கடிதம் https://may17iyakkam.com/90090/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae/ https://may17iyakkam.com/90090/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae/#respond Sat, 25 Feb 2023 14:25:30 +0000 https://may17iyakkam.com/?p=90090

மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு மு. கருணாநிதி அவர்களுக்கு வங்கக்கடலில் தமிழ்நாடு அரசு சார்பில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடந்த ஜனவரி 31 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துக்களை பதிவு செய்திருந்தார். அந்த கூட்டத்தின் குறிப்புகள் (Minutes of Meeting) என்று ஓர் ஆவணம் வெளியாகியது. அதில் மே பதினேழு இயக்கம் பதிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில், தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கூறியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு, பேனா சின்னம் அமைக்க ஆதரவளிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, பேனா சின்னத்தை கடலில் அமைக்க மே பதினேழு இயக்கம் ஆதரவளிக்கவில்லை என்னும் நிலைப்பாட்டை விளக்கி, சென்னை மாவட்ட ஆட்சியர் திருமிகு அமிர்தஜோதி அவர்களை 24-02-2023 வெள்ளி அன்று தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நேரில் சந்தித்து, கருத்துக்கேட்பு கூட்டத்தின் கருத்தை திருத்திக்கொள்ளுமாறு கடிதம் அளித்தார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/90090/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae/feed/ 0
தமிழரை சுட்டுக்கொன்ற கர்நாடகா! கர்நாடக வனத்துறையினரின் கொடூர செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்! குற்றவாளி கர்நாடக வனத்துறையினரை உடனடியாக கைது செய்! https://may17iyakkam.com/90066/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/ https://may17iyakkam.com/90066/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/#respond Sat, 18 Feb 2023 08:40:51 +0000 https://may17iyakkam.com/?p=90066

தமிழரை சுட்டுக்கொன்ற கர்நாடகா! கர்நாடக வனத்துறையினரின் கொடூர செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்! குற்றவாளி கர்நாடக வனத்துறையினரை உடனடியாக கைது செய்! – மே பதினேழு இயக்கம்

சேலம் மாவட்டத்தின் கர்நாடக எல்லை அருகே ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ராஜா என்பவர் உயிரிழந்துள்ளார். மீன்பிடித்ததற்காக தமிழர்களை சுட்டுக்கொல்லும் அளவிற்கு கர்நாடக அதிகாரிகளிடம் இனவெறி போக்கு அதிகரித்துள்ளது வருந்தத்தக்கது. தமிழர்கள் மீது வன்மத்துடன் துப்பாக்கி சூடு நடத்தி தமிழரை கொலை செய்த கர்நாடகாவின் இந்த காட்டுமிராண்டி செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடக எல்லைப்பகுதியதாக உள்ளது பாலாறு. இந்த பாலாறு காவிரியில் கலக்கும் நீர்ப்பகுதியில் மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதியை சேர்ந்த தமிழ்நாட்டு மீனவர்கள் காலங்காலமாக பரிசலில் மீன்பிடித்து வருவது வழக்கம். அப்படியாக கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இரவு கொளத்தூர் கோவிந்தப்பாடியை சேர்ந்த காரவடையான் என்ற ராஜா உள்ளிட்ட 7 பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் அனைவரும் தப்பி ஓடியுள்ளனர். அதில் ராஜா மட்டும் திரும்பவில்லை. இந்நிலையில், 16-ம் தேதி அவரது உடல் பாலாற்றங்கரையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக மீன்பிடிக்கும் எல்லை வனப்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதும் அதில் ராஜா என்பவர் உயிரிழந்துள்ளதும் அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. கர்நாடக பகுதிக்குள் மீன்பிடிக்க தடையுத்தரவு உள்ள நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதில்லை. இருந்தும் தமிழர்கள் மீது எல்லைப்பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்துள்ளது கர்நாடக வனத்துறையினரின் தமிழர்கள் மீதான வன்மத்தையே காட்டுகிறது. எல்லை தாண்டி மீன்பிடித்திருந்தாலும் கொலை செய்யுமளவிற்கு கொடிய குற்றமல்லவே. மேலும், கர்நாடக வனத்துறையினர் இதற்கு முன்னரும் இதுபோல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் என்ற தகவல், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடுஞ்செயல் என்பதையே காட்டுகிறது.

காவிரி நீர் பிரச்சனையில் தமிழர்கள் மீது கர்நாடகா நீண்டகாலமாகவே வன்மத்துடன் தாக்குதல் நடத்திவந்துள்ளது. காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்யும் அதிகப்படியான மழை காரணமாக இப்பிரச்சனை சில ஆண்டுகளாக இல்லாத நிலையில், தமிழ்நாடு-கர்நாடக இடையே புதியதொரு பிரச்சனையை ஆளும் கர்நாடக பாஜக அரசின் மூலம் ஒன்றிய பாஜக அரசு உருவாக்க முனைகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அண்டை மாநிலங்களுடன் மோதல் போக்கை வளர்ப்பதன் மூலம் மாநிலங்களிடையே ஒற்றுமையை தடுத்து, மாநிலங்கள் மீது ஒன்றிய அரசு அதிகாரத்தை செலுத்த முனைகிறது.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்வதை வேடிக்கை பார்க்கும் இந்திய ஒன்றிய அரசு, சமீபத்தில் தனது கடற்படையை கொண்டே தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது கர்நாடக வனத்துறையினர் மூலம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி, கர்நாடக எல்லைப்பகுதியில் மீண்டும் பதற்றத்தை உருவாக்க நினைக்கிறது. தமிழர்கள் மீதான வெறுப்பை வளர்த்தெடுப்பதன் மூலம் கர்நாடகாவில் பாஜக அரசியல் லாபம் அடைய முயற்சிக்கிறது. இந்திய ஒற்றுமை பேசும் பாஜக அரசு, தமிழர்கள்-தமிழ்நாட்டுடன் மட்டும் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டிய அவசியம் என்ன, தமிழர்களை இந்தியர்களாக கருதுவதில்லையா, தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாக கருதுவதில்லையா என்ற கேள்வி எழுகிறது.

கர்நாடக வனத்துறையினரின் இந்த போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த தாக்குதலில் உயிரிழந்த ராஜா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம். உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம். தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த கர்நாடக வனத்துறையினரை தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தமிழ்நாட்டு வனப்பகுதி நீர்நிலைகளில் தமிழர்கள் பாதுகாப்புடன் மீன்பிடிப்பதை உறுதி செய்திட வேண்டும். எல்லைப்பகுதிகளில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க நிரந்தரத் தீர்வை கண்டறிய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/90066/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உட்பகுந்து ஜனநாயக சக்திகளை கொடூரமாக தாக்கிய ஆர்எஸ்எஸ்-ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்! https://may17iyakkam.com/90052/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf/ https://may17iyakkam.com/90052/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf/#respond Mon, 13 Feb 2023 09:25:43 +0000 https://may17iyakkam.com/?p=90052

ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உட்பகுந்து ஜனநாயக சக்திகளை கொடூரமாக தாக்கிய ஆர்எஸ்எஸ்-ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்! – மே பதினேழு இயக்கம்

நேற்று (12.02.2023) ஞாயிற்றுக்கிழமை ஒரிசா மாநிலம் புவனேஸ்வரியில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் அமைப்பு சட்டமும் கல்வியும்’ என்கிற தலைப்பில் அரைநாள் கருத்தரங்கை ஒரிசாவை மையமாகக் கொண்ட குடிமக்கள் இயக்கமும், தமிழகத்தின் வான்முகில் அமைப்பும் இணைந்து நடத்தி இருக்கிறது.

இந்த கருத்தரங்கில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்த்த பேராசிரியர் சுர்ஜித் மஜீம்தார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி இருக்கிறார். அவர் பேச ஆரம்பிக்கும் பொழுது வேண்டுமென்றே அரங்கிற்குள் இருந்த சிலர் கூச்சலிட்டு கருத்தரங்கில் தொல்லை கொடுத்திருக்கிறார்கள்.

உடனே பேராசிரியர் சுர்ஜித் மஜிம்தார் அவர்கள் உங்களுக்கு என்ன சந்தேகம் என்றாலும் கேளுங்கள் பதில் சொல்கிறேன். ஏன் தேவையில்லாமல் கூச்சலிடுகிறீர்கள் என்றும், கேள்வி பதில் என்ற ஒரு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது அதில் கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறோம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் மீண்டும் மீண்டும் அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.

இதனால் சந்தேகமடைந்த விழா ஏற்பாட்டாளர்கள் கூச்சலிட்டவர்களிடம் உங்களது அடையாள அட்டையை காட்டுங்கள் நீங்கள் எந்த கல்லூரி மாணவர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அப்போது அவர்கள் அடையாள அட்டையை கொடுக்காமல் விழா ஏற்பாட்டாளர்களை தாக்கி ஆரம்பித்து அரங்கையும் சேதப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களை தடுக்க முயன்ற வான்முகில் அமைப்பின் செயற்பாட்டாளர் தோழர் பிரிட்டோ உட்பட, வழக்கறிஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

தோழர் பிரிட்டோ தமிழ்நாட்டில் பல்வேறு மக்கள் போராட்டங்களில் பங்கெடுத்தவர். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயல்படுபவர். நீண்டநாள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாட்டிலிருந்து சென்ற தோழர் பிரிட்டோ வன்முறையாளர்களை தடுக்கமுயன்ற போது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.

இறுதியில் கூச்சலிட்டவர்களை விசாரிக்கும் பொழுது அவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் மற்றும் ஆர்எஸ்எஸ்சின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-ஐ சேர்ந்தவர்கள் என்றும், இந்த கருத்தரங்கை நடக்க விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு உள்ளே நுழைந்தவர்கள் என்றும் அதில் பெரும்பாலானவர்கள் மாணவர்களே இல்லை என்பதும் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ்-ஏபிவிபி-யின் இந்த கொடூர தாக்குதலில் விழா ஏற்பாட்டுளர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு பேர் மருத்துவமனையில் சேரும் அளவிற்கு கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள். கலவரம் செய்த இரண்டு பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது என்றாலும் கலவரத்தை தூண்டிய ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இந்தியா முழுவதும் பல்வேறு கல்வி நிலையங்களில் நடைபெறும் இது போன்ற கருத்தரங்குகளை நடத்தவிடாமல் செய்வதே ஆர்எஸ்எஸ்-ஏபிவிபி-யின் நோக்கமாக உள்ளது. முற்போக்கு கருத்துக்கள் மாணவர்கள் மத்தியில் விவாதிக்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. டில்லி நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் என இவர்கள் தொடர்ச்சியாக கலவரங்களை உண்டுபண்ணி வருகின்றனர்.

ஆர்எஸ்எஸ்-ஏபிவிபி-யின் இத்தகைய அராஜக போக்கு உடனடியாக தடுத்துநிறுத்தப்பட வேண்டும். இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களில் ஏபிவிபி தடை செய்யப்பட வேண்டும். ஒரிசாவில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, அதற்கு பின்னணியாக செயல்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. தாக்கப்பட்ட தோழர் பிரிட்டோ உள்ளிட்டவர்களுக்கு மே பதினேழு இயக்கம் உறுதுணையாக நிற்கும் என கூறிக்கொள்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/90052/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf/feed/ 0
பிபிசி ஆவணப்பட திரையிட மே 17 இயக்கத்திற்கு அனுமதி மறுத்த திமுக, காவல்துறையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை https://may17iyakkam.com/90049/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%ae/ https://may17iyakkam.com/90049/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%ae/#respond Mon, 13 Feb 2023 09:24:18 +0000 https://may17iyakkam.com/?p=90049

பிபிசி ஆவணப்பட திரையிட மே 17 இயக்கத்திற்கு அனுமதி மறுத்த திமுக, காவல்துறையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை. அனைவரும் மெளனம் கலைப்போம். இசுலாமியர் இனப்படுகொலை ஆவணத்தை மக்களிடம் கொண்டு செல்வோம்.

]]>
https://may17iyakkam.com/90049/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%ae/feed/ 0
தழல் ஈகியர் முருகதாசன் அவர்களின் 14-வது நினைவு நாள் https://may17iyakkam.com/90043/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85/ https://may17iyakkam.com/90043/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85/#respond Sun, 12 Feb 2023 09:18:51 +0000 https://may17iyakkam.com/?p=90043

2009-ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்தேறிய இனப்படுகொலையை தடுக்கத் தவறிய சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை கண்டித்து ஜெனீவாவில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிர்நீத்த தழல் ஈகியர் முருகதாசன் அவர்களின் 14-வது நினைவு நாள். முருகதாசன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது!

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/90043/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85/feed/ 0
அவையம் வாசிப்பு வட்டம் வழங்கும் காதலும் கலைஞனும் – புத்தகமும் வாசிப்பும் – உரையாடல் https://may17iyakkam.com/90040/may17/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88/%e0%ae%85%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5-2/ https://may17iyakkam.com/90040/may17/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88/%e0%ae%85%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5-2/#respond Sat, 11 Feb 2023 18:00:28 +0000 https://may17iyakkam.com/?p=90040

அவையம் வாசிப்பு வட்டம் வழங்கும்

காதலும் கலைஞனும் – புத்தகமும் வாசிப்பும் – உரையாடல்

சிறப்புரை – சாகித்திய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர்.
திரைப்பட வசனகர்த்தா,
லட்சுமி சரவணகுமார் அவர்கள்

தேதி : 14-02-2023, செவ்வாய்

இடம் : திசை புத்தக நிலையம், ஆவின் பால் நிலையம் அருகில், காமராசர் அரங்கம் எதிரில், தேனாம்பேட்டை, சென்னை.

தொடர்புக்கு : 98840 82823

]]>
https://may17iyakkam.com/90040/may17/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88/%e0%ae%85%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5-2/feed/ 0
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 77-வது நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது https://may17iyakkam.com/90037/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-2/ https://may17iyakkam.com/90037/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-2/#respond Sat, 11 Feb 2023 17:57:57 +0000 https://may17iyakkam.com/?p=90037

தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதியும், உழைப்பாளர் நாளை முதன் முதலில் முன்னெடுத்தவருமான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 77-வது நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/90037/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-2/feed/ 0
200-வது நாளை எட்டியுள்ள பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்! மக்கள்திரள் போராட்டத்திற்கு ஆதரவாக துணைநிற்போம்! https://may17iyakkam.com/90034/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/200-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d/ https://may17iyakkam.com/90034/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/200-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d/#respond Sat, 11 Feb 2023 17:56:30 +0000 https://may17iyakkam.com/?p=90034

200-வது நாளை எட்டியுள்ள பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்! மக்கள்திரள் போராட்டத்திற்கு ஆதரவாக துணைநிற்போம்! – மே பதினேழு இயக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைக்கபோவதாக கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் ஒன்றிய-மாநில அரசுகள் அறிவித்து அதற்கான நிலங்களை கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 13 கிராம மக்களின் வாழ்வாதாரம் அடியோடு நசுக்கப்படும் என்பதனால் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து அம்மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் இன்றுடன் (11-02-2023 சனிக்கிழமை) 200-வது நாளை எட்டியுள்ளது. மக்களின் இந்த தொடர் போராட்டம் வெல்ல மே பதினேழு இயக்கம் தனது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

விமான நிலைய அறிவிப்பு வெளியானது முதல் அரசு எதேச்சதிகாரமாக செயல்பட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறாக நிலங்களை பல்வேறு வழிமுறைகளில் முறைகேடாக கையகப்படுத்தி வருகிறது. அப்போதே, முதலாளிகளின் வளர்ச்சிக்காக மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை நிறுத்திட, விமான நிலையத் திட்டத்தை கைவிட மே பதினேழு இயக்கம் வலியுறுத்தியது. சுமார் 20,000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கிட்டத்தட்ட 5000 ஏக்கர் நிலப்பரப்பில் கொண்டுவரப்படும் இந்த திட்டத்தினால், ஏகனாபுரம் கிராமம் உள்ளிட்ட 13 கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் நசுக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலில் ஏற்படும் சீர்கேடு மற்றும் சென்னை நகருக்கு ஏற்படும் வெள்ள அபாயம் உள்ளிட்டவற்றை விளக்கி மே பதினேழு இயக்கம் எச்சரித்துள்ளது.

பரந்தூர் விமான நிலையம் சென்னையின் விமான நெரிசலுக்கு தீர்வாக அமையாது என்ற நிலையில் அதற்காக 13 கிராம மக்கள் கொடுக்கப் போகும் விலை மிக அதிகம் என்பதை உணர்ந்த அம்மக்கள், தீர்வு வழங்க முன்வராத அரசை கண்டித்தும், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடக் கோரியும் போராட்டத்தை துவங்கினர். இதற்காக, பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர்-விவசாயிகள் நலக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 200 நாட்களாக போராடி வருகின்றனர்.

போராட்டம் துவங்கியது முதல் அப்பகுதி திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க முயன்ற அரசியல் கட்சிகள்-அமைப்புகளின் தலைவர்களை, செயற்பாட்டாளர்களை காவல்துறை தடுத்துநிறுத்தி கைது செய்தது. போராட்டக்களத்திற்கு செல்ல முயன்ற மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டார். அரசின் இந்த ஜனநாயக விரோதச் செயலை மே பதினேழு இயக்கம் அப்போதே கண்டித்தது. இப்போது வரை ஏகனாபுரம் பகுதியில் அத்தகைய சூழல் தான் நிலவுகிறது.

விமான நிலைய திட்டத்திற்கு எதிராக ஏகனாபுரம் கிராம சபை இதுவரை 4 முறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சுற்றுவட்டார கிராமங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இத்திட்டத்தை கைவிட வேண்டி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். பெரும்பான்மை மக்கள் ஒத்துக்கொண்டால் மட்டுமே திட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக அரசு, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நிலங்களை முறைகேடாக கையகப்படுத்தும் வேலையிலும், தொழிற்துறை அமைச்சகம் திட்டப்பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு தீர்வு வழங்காமல் போராடும் மக்களின் விருப்பத்திற்கு எதிராக பரந்தூர் விமான நிலையத் திட்டப் பணிகளை திமுக அரசு தொடர்ந்து முன்னெடுப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 200 நாட்களாக போராடி வரும் மக்களின் கோரிக்கைக்கு திமுக அரசு செவிசாய்க்க வேண்டும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டுமென 200 நாட்களாக போராடி வரும் மக்களின் சார்பாக மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

ஜனநாயக வழியில் 200 நாட்களாக போராடி வரும் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களின் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் தன் முழு ஆதரவை அளிக்கிறது. இந்நாளில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் வேல்முருகன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் தோழர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பங்கேற்கும் 200-வது நாள் பொதுக்கூட்டத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். 200 நாட்களாக மன உறுதியோடு தொடர்ந்து போராடி வரும் மக்களின் போராட்டம் வெல்ல முற்போக்கு ஜனநாயக அமைப்புகள், பொதுமக்கள் என அனைவரும் ஆதரவளித்து துணைநிற்போம் என மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 

]]>
https://may17iyakkam.com/90034/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/200-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d/feed/ 0
அதிமுக-திமுக அரசுகளின் வஞ்சகத்தால் சிறையிலேயே மடிந்தார் சகோதரர் அபுதாகிர்! நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை உடனடியாக விடுவித்திடுக! https://may17iyakkam.com/90030/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5/ https://may17iyakkam.com/90030/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5/#respond Fri, 10 Feb 2023 14:00:49 +0000 https://may17iyakkam.com/?p=90030

அதிமுக-திமுக அரசுகளின் வஞ்சகத்தால் சிறையிலேயே மடிந்தார் சகோதரர் அபுதாகிர்! நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை உடனடியாக விடுவித்திடுக! – மே பதினேழு இயக்கம்

கோவை சிறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த ஆயுள் சிறைவாசியான சகோதரர் அபுதாகிர் அவர்கள் உடல்நிலை நலிவுற்று சிறையிலேயே மரணமடைந்திருக்கிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சிக்குரியது. ஏழு தமிழர் விடுதலையோடு அபுதாகிர் உள்ளிட்ட நீண்டகால ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்காக மே பதினேழு இயக்கம் தொடர்ந்து போராடி வந்துள்ளது. இந்நிலையில் அபுதாகிர் அவர்களை மீட்க இயலாமல் போனது வருத்தமளிக்கிறது. ஆயுள் சிறைவாசிகள் விடுவிப்பில் முந்தைய அதிமுக அரசு நன்னடத்தைகள் அல்லாத கட்டுப்பாடுகளை விதித்து அரசாணை வெளியிட்டதாலும், திமுக அரசு அதனை நீட்டித்ததாலும், விடுதலை தள்ளிப்போக, அபுதாகிர் அவர்கள் சிறையிலேயே மடிந்து போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை என்பதை சுட்டிக்காட்டி இசுலாமிய ஆயுள் சிறைவாசிகளை நீண்டகாலமாக சிறையிலேயே வைத்து கொடுமைப்படுத்தும் நிகழ்வு நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது. அதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம் தமிழ்நாட்டில் நீண்டகால இஸ்லாமிய சிறைவாசிகள் விடுவிக்கப்படாமல் சிறையிலே வைக்கப்பட்டுள்ள கொடுமை நடந்து வருகிறது. குறிப்பாக கோவை சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் சிறைவாசிகள் அநேகர் உண்டு. அப்படியானவர்களில் ஒருவர்தான் அபுதாகிர் அவர்கள்.

அபுதாகிர் அவர்கள் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து போகும் ஒருவித அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாகவே கடும் அவதிக்குள்ளாகி வந்தார். அரசிடம் பல முறை முறையிட்டும் முந்தைய அதிமுக அரசு மனிதாபிமான அடிப்படையில் கூட அவரை விடுவிக்க மறுத்துவிட்டது. அதே நிலையை தற்போதைய அரசும் கடைபிடித்து வருகிறது. இதனால் தகுந்த சிகிச்சை பெற முடியாமல் அபுதாகிர் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி சிறையிலேயே மடிந்துபோகும் நிலை ஏற்பட்டது. திமுக அரசின் இத்தகைய போக்கு கண்டனத்திற்குரியது.

பெருந்தலைவர்கள் பிறந்த நாளில் மாநில அரசின் உரிமையான அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161-ன் கீழ் நீண்டகால சிறைவாசிகளை விடுவிப்பது தமிழ்நாட்டில் இருந்து வரும் வழக்கம் ஆகும். அப்படியாக 14 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் முடித்த ஆயுள்சிறைவாசிகளை கடந்த காலங்களில் திமுக மற்றும் அதிமுக அரசுகள் விடுவித்து வந்துள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா-ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு 1500 பேரை அதிமுக அரசும், கடந்த 2021-ம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு 700 பேரை தற்போதைய திமுக அரசும் 10 ஆண்டுகளுக்கு மேலான ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதாக அறிவித்தது. அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்பது வருந்தத்தக்கது.

ஏழு தமிழர்கள் மற்றும் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலையை தடுக்கும் வகையில், குறிப்பாக இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் வகையில், குறிப்பிட்ட வகையான வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க இயலாது என்று பாஜகவுடன் கூட்டணியில் இருந்த முந்தைய அதிமுக அரசு கட்டுப்பாடுகள் விதித்து அரசாணை வெளியிட்டிருந்தது. இது, மாநிலங்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை முந்தைய அதிமுக அரசு அடகு வைப்பதாக அமைந்தது. புதிதாக பதவியேற்ற திமுக அரசும் அதே அரசாணையை நீட்டித்ததுடன், முன்விடுதலை தொடர்பான வழிமுறைகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்தது. இதனால் நீண்டகால ஆயுள் சிறைவாசிகள், குறிப்பாக இஸ்லாமிய சிறைவாசிகளின் முன்விடுதலை தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. இது சிறைவாசிகளை வஞ்சிப்பதாகும்.

தமிழ்நாடு அரசு நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்வதில் தனது உரிமையை பயன்படுத்த தயங்குவதனால் பலர் சிறையிலேயே வாழ்நாளை கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது. சிறை என்பது குற்றவாளிகளை நல்வழிப்படுத்தி மீண்டும் சமூகத்துடன் இயைந்து வாழ புனர்வாழ்வு அளிக்கும் நோக்கத்துடன் செயல்படுவை. ஆனால் அபுதாகிர் போன்றோர் தங்களது வாழ்வை சிறையிலேயே முடிக்கும் நிலைக்கு தள்ளுகிறது. மேலும், அரசியல் மற்றும் காலசூழல் காரணமாக அநீதி இழைக்கப்பட்டவர்களும் சிறைவாசிகளாகின்ற நிலையில், ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மீண்டும் தங்கள் வாழ்வை பெற வாய்ப்பு அளிக்கப்பட வேண்டியது அவசியம்.

இத்தகைய காரணங்களால், அபுதாகிர் உள்ளிட்ட 10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் கடந்த 13 ஆண்டுகளாக போராடி வருகிறது. 2012-ம் ஆண்டில் அபுதாகிர் அவர்களை விடுவிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் குரல் கொடுத்தது. நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய கூட்டங்கள் அனைத்திலும் மே பதினேழு இயக்கம் பங்கெடுத்து, அபுதாகிர் உள்ளிட்டோரின் விடுதலைக்காக தொடர்ந்து பேசி வந்துள்ளது.

ஏழு தமிழர்கள் மற்றும் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலையை தடுக்க ஒன்றிய பாஜக அரசின் அழுத்தத்தின் பேரில் முந்தைய அதிமுக அரசு பல ஆண்டுகளாக முன்விடுதலை செய்யாமல் இருந்தது. பின்னர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டிய முன்விடுதலை அறிவிப்பின் போது, கட்டுப்பாடுகளை விதித்து இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை அடைவதை சிக்கலாக்கியது. நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை விடுவிப்போம் என்று தேர்தலில் வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்ற திமுக அரசும், அவர்களது விடுதலையை மறுப்பது அறமற்ற செயலாகும். இஸ்லாமிய சிறைவாசிகளை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

சிறைவாசிகளை விடுவிக்க மாநில அரசுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை பயன்படுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில், தமிழ்நாடு அரசு தனது உரிமையை பயன்படுத்துவதற்கு தயங்குவது, அந்த உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு ஒப்பாகும். ஆகவே, நீதியரசர் ஆதிநாதன் பரிந்துரைக்காக காத்திராமல் நீண்டகால ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010
10/02/2023

]]>
https://may17iyakkam.com/90030/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5/feed/ 0