Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
வாழ்த்துக்கள் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Sun, 15 Jan 2023 14:23:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் https://may17iyakkam.com/89881/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2/ https://may17iyakkam.com/89881/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2/#respond Sun, 15 Jan 2023 14:21:40 +0000 https://may17iyakkam.com/?p=89881

தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். இத்திருநாளில் ஆரியம் அகல, தமிழ் மொழி செழிக்க, தமிழர் வளம்பெற,தமிழ்நாடு உயர்ந்தோங்க, சாதி ஒழிந்த, அன்பும் அறமும் நிறைந்த தமிழ்த்தேசியம் அமைக்க உறுதிபூணுவோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89881/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2/feed/ 0
தோழர் திருமுருகன் காந்தியின் புத்தாண்டு செய்தி https://may17iyakkam.com/89786/videos/important-videos/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-69/ https://may17iyakkam.com/89786/videos/important-videos/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-69/#respond Sun, 01 Jan 2023 06:54:54 +0000 https://may17iyakkam.com/?p=89786 2023 ஆங்கில புத்தாண்டு பாசிசத்தை வீழ்த்தி தமிழர் உரிமையை நிலைநாட்டும் புத்தாண்டாக அமையட்டும். தோழர் திருமுருகன் காந்தியின் புத்தாண்டு செய்தி.

மே17 இயக்கம்

]]>
https://may17iyakkam.com/89786/videos/important-videos/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-69/feed/ 0
திசை புத்தக நிலையம் குறித்து மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி https://may17iyakkam.com/89448/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf/ https://may17iyakkam.com/89448/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf/#respond Mon, 07 Nov 2022 11:39:22 +0000 https://may17iyakkam.com/?p=89448

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் பதிவு:

‘தமிழனோட வரலாறை தெரிஞ்சிக்கனும்னா என்ன புத்தகம் படிக்கனும்’

‘.. எல்லா பிரச்சனையும் தீர்க்கரதுக்கு வழி யாராவது சொல்லி இருக்காங்களா?’

‘..அரசியலைப் பற்றி தெரிஞ்சிக்கனும், எப்படி தெரிஞ்சிக்கிறது தோழர்?’

‘நம்மை சுத்தி நடக்கரதை புரிஞ்சிக்கனும். யார்கிட்ட கேட்டா தெரிஞ்சிக்கலாம், அண்ணே’

‘..நீங்க எதைப்படிச்சி இதெல்லாம் தெரிஞ்சிக்கிறீங்க?..’

இப்படி எண்ணற்ற கேள்விகளை புது இளம் தோழர்களை சந்திக்கும் போதெல்லாம் எதிர்கொள்கிறோம். பெரியாராக, அம்பேத்கராக, மார்க்ஸாக நம்முடைன் உரையாடும் நூல்களே இக்கேள்விகளை திறக்கும் சாவியாக உள்ளது. இந்த புத்தகங்களையெல்லாம் ஒருசேர எங்கே பார்ப்பது எனும் கேள்விக்கான விடையை தோழர்கள் கண்டடைந்திருக்கிறார்கள். கடுமையான கூட்டு உழைப்பாலும், பங்களிப்பினாலும் புத்தகக்கடையை உருவாக்கி உள்ளார்கள். குழந்தைகள், இளம் தோழர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை கண்டடைய விரும்பும் நூல்களை தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தி இருக்கிறார்கள். இந்த புத்தகத்திற்கான நோக்கத்தை வெளிப்படுத்த ‘திசை’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். அனைவரும் எளிமையாக வந்தடையும் வகையில் இடம் ஒன்றை தேர்ந்தெடுத்து கடையாக்கி உள்ளார்கள். இந்த புத்தக நிலையத்தை உங்கள் அனைவரின் ஆதரவோடு தொடர்ந்து வெற்றிகரமாக கொண்டு செல்ல விரும்புகிறார்கள். எம் தோழர்கள் சுட்டும் ‘திசை’யை நீங்களும் விரும்புவீர்கள்.


விரைவில் ‘திசை’யைக் காண்பீர்கள்.

]]>
https://may17iyakkam.com/89448/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf/feed/ 0
வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போர் தொடுத்த மாவீரன் பகத் சிங் பிறந்தநாள் இன்று (28-09-1907) https://may17iyakkam.com/89161/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1/ https://may17iyakkam.com/89161/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1/#respond Wed, 28 Sep 2022 17:15:52 +0000 https://may17iyakkam.com/?p=89161

வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போர் தொடுத்த மாவீரன் பகத் சிங் பிறந்தநாள் இன்று (28-09-1907)

“பிற்போக்குவாத, பழமைவாத, மதவெறியர்களின் அரசியல் நடவடிக்கைகளின் பின்னணியில் ஒரு சரியான அறிவியல்பூர்வமான புரிதல் இல்லாதன் விளைவாக, தங்களை ஆன்மீகரீதியாக நிலைநிறுத்திக் கொள்வதற்கும், தங்களுடைய சொந்த உணர்ச்சிகளுக்கெதிரான போராட்டத்திற்கும், விரக்தியை வெல்வதற்கும், சொந்த சௌகரியங்கள், குடும்பங்கள் – ஏன், வாழ்க்கையையே விட்டுக்கொடுப்பதற்கு மனதைப் பக்குவப்படுத்துவதற்கும் உதவக்கூடிய வகையில் பகுத்தறிவுக்கொவ்வாத நம்பிக்கைகளும் இறைமைக் கொள்கையும் அவர்களுக்குத் தேவைப்பட்டன.” 

]]>
https://may17iyakkam.com/89161/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1/feed/ 0
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் மணிவிழா நிகழ்வு https://may17iyakkam.com/89131/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95-2/ https://may17iyakkam.com/89131/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95-2/#respond Tue, 27 Sep 2022 16:54:23 +0000 https://may17iyakkam.com/?p=89131

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் (ஆகஸ்ட் 17) மணிவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 60 நாள் தொடர் நலத்திட்ட உதவிகள் வழங்குவதன் 40-வது நாளில், பெசன்ட்நகர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பாலவாக்கம் விஷ்ராந்தி முதியோர் இல்லத்திற்கு மதிய உணவு மற்றும் புடவை வழங்கும் நிகழ்வு 24-09-2022 சனிக்கிழமை முற்பகலில் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89131/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95-2/feed/ 0
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் மணிவிழா – தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்பு https://may17iyakkam.com/89113/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f/ https://may17iyakkam.com/89113/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f/#respond Sat, 24 Sep 2022 17:10:35 +0000 https://may17iyakkam.com/?p=89113

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் (ஆகஸ்ட் 17) மணிவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 60 நாள் தொடர் நலத்திட்ட உதவிகள் வழங்குவதன் 40-வது நாளில், பெசன்ட்நகர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பாலவாக்கம் விஷ்ராந்தி முதியோர் இல்லத்திற்கு மதிய உணவு மற்றும் புடவை வழங்கும் நிகழ்வு இன்று (24-09-2022) சனிக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89113/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f/feed/ 0
தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையின் பல்வேறு இடங்களில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை https://may17iyakkam.com/89057/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-144-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1/ https://may17iyakkam.com/89057/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-144-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1/#respond Mon, 19 Sep 2022 06:00:24 +0000 https://may17iyakkam.com/?p=89057

தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 17 அன்று சென்னையின் பல்வேறு இடங்களில் மே பதினேழு இயக்கம் சார்பாக தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில், கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம் எதிரில், முகப்பேர் கிழக்கு பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு, சேத்பட் பகுதி, அண்ணா சாலை அரசினர் தோட்டம் அருகில் ஆகிய இடங்களில் உள்ள பெரியாரின் சிலைக்கு பறையிசையுடன் முழக்கங்கள் இட்டவாறு அணிவகுத்து சென்று மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி, தோழர் பிரவீன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர். விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்கள் தி நகரில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89057/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-144-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1/feed/ 0
‘மானமும், அறிவும் மனிதற்கு அழகு’ என்றுரைத்த தந்தை பெரியார் அவர்களின் 144-வது பிறந்தநாளில் (செப் 17, 1897) தமிழினத்தின் உரிமைகளை மீட்க உறுதி ஏற்போம்! https://may17iyakkam.com/89008/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d/ https://may17iyakkam.com/89008/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d/#respond Sat, 17 Sep 2022 14:33:46 +0000 https://may17iyakkam.com/?p=89008

‘மானமும், அறிவும் மனிதற்கு அழகு’ என்றுரைத்த தந்தை பெரியார் அவர்களின் 144-வது பிறந்தநாளில் (செப் 17, 1897) தமிழினத்தின் உரிமைகளை மீட்க உறுதி ஏற்போம்! – மே பதினேழு இயக்கம்

“பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இப்பகுத்தறிவில் மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்”
– தந்தை பெரியார் அவர்கள், விடுதலை 1973

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவராலும் பகுத்தறிவு பகலவன் என்றும், சுயமரியாதை சுடர் என்றும் அன்போடு அழைக்கப்படும் தந்தை பெரியார் அவர்களது பெரும் பணியை ஓரிரு பக்கங்களில் விளக்கி விடுவது முடியாத காரியமே. சாதிக்கு எதிராகவும், மத-சாஸ்திர புரட்டுகளுக்கு எதிராகவும், பெண் அடிமைத்தனத்திற்கு எதிராகவும், மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும், உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டி பிழைக்கும் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் தன் வாழ்நாளின் இறுதி மூச்சு வரையிலும் போராடி தமிழர் பெருநிலத்தின் தன்மானம் காக்கவும், சமூகநீதி நிலைபெறும் உறுதியாக நின்றவர் தந்தை பெரியார் அவர்கள் ஆவார்.

இந்த மண்ணில் வந்தேறி குடியமர்ந்த ஆரிய பார்ப்பன பழமைவாத கும்பலுக்கு எதிராக திராவிட சித்தாந்தத்தை முழுமைப்படுத்தி இந்திய ஒன்றியத்திலேயே ‘சாதிப் பின்னொட்டுகளை தங்கள் பெயரோடு சேர்த்துக் கொள்ளப் போவதில்லை’ என்று ஒட்டுமொத்த சமூகத்தையும் தன்னிச்சையாக முடிவெடுக்க வைத்த பெரியாரின் பேரூழைப்பால் தமிழ்நாடு இன்றளவும் பெரியார் மண் என்றே அழைக்கப்படுகிறது.

பெரியாரின் முதன்முதல் எதிரி சாதிதான் என்று சொன்னால் அது மிகையாகாது. “சாதியின் கொடுமையால், நாற்றமெடுத்த மலத்தை விட மனிதன் கேவலப்படுத்தப் படுகிறான் (திராவிடன்-1929)” என்று மனம் வேதனைப்பட்ட அவர் தந்தை பெரியார் அவர்கள், “சட்டத்தால் சாதியை ஒழிக்க முடியாது (விடுதலை-1960)” என்று அறுதியிட்டு கூறி, “சாதியை ஒழிக்க விரும்புவோர் மேடைப் பிரசங்கம் மட்டும் செய்தால் போதாது, சுயசாதி திருமணத்தை அறவே ஒழித்து கலப்புத் திருமணத்தை மட்டுமே செய்ய வேண்டும் (விடுதலை-1947)” என்றும் சாதி ஒழிப்பிற்காக வழிவகை செய்தார். இன்றளவும் அதனடிப்படையிலேயே வேத சடங்குகள் மறுத்த சுயமரியாதைத் திருமணங்கள் பெரியாரிய தொண்டர்களால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

சாதி பெரியாருக்கு முதல் எதிரி என்றால், அந்த சாதி அமைப்பையும் அதன் வழியே ‘சக மனிதர்களை தொடக்கூடாது, பார்க்கக் கூடாது, அவர்களது மூச்சுக்காற்று கூட தங்கள் மீது படக்கூடாது’ என்ற அளவிற்கு தீண்டாமையை கடைபிடிக்கவும் காரணமாய் அமைந்து இருக்கும் இந்து மதமும், அம்மதத்தின் தலைமை இடத்தில் அமர்ந்துகொண்டு சாதிய அடுக்குகளை காப்பாற்றிக் கொண்டிருக்கும் பார்ப்பணியமும் அடுத்த எதிரி. சாதியை ஒழிக்கும் வழி முறையில் முதன்மையானது இந்து மதத்தை ஒழிப்பதே என்பதில் உறுதியாக இருந்த பெரியார் “இந்து மதம் ஒழிந்தால்தான் சாதி ஒழியும்; இந்து மதம் ஒழிந்தால் பார்ப்பனியமும் அதே நேரத்தில் ஒழிந்துபோகும் ( விடுதலை-1947)” என்று அறுதியிட்டுக் கூறுகிறார். அதோடு நில்லாமல் “சாதிக்கு அடிப்படையாக இருப்பது எது? இந்து மதம். அதை ஆதரித்து நிற்பவை எவை? இதிகாசம், சாஸ்திரம், புராணம் முதலிய கட்டுக்கதைகள். இவைகளுக்கான அடிப்படையாக உள்ளவை எவை? இந்துமதக் கடவுள்கள் என்று கூறப்படும் முழுக் கற்பனைகள் (விடுதலை-1947)” என்றும் கூறுகிறார்.

இன்றளவும் இந்திய ஒன்றியம் முழுவதும் கலவரங்களை உருவாக்கவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான சமூக விரோத செயல்களை முன்னெடுக்கவும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளால் நடத்தப்படுகின்ற ‘விநாயகர் சதுர்த்தி’ என்ற விழாவைப் பற்றி கடுமையாக கண்டித்து தன் காலத்திலேயே பேசியவர் தந்தை பெரியார் அவர்கள். குறிப்பாக இந்துத்துவவாதிகள் விநாயகர் சதுர்த்தி முன்னெடுக்கப்படும் அதே நாளில் திராவிடர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிடும் பொழுது “தமிழ்நாடெங்கும் புத்தர் விழா கொண்டாடி, வருணாசிரமவாதிகள் பெரும்பாலும் ‘மூல தெய்வம்’ என்று கருதுகின்றபடியாக உருவாக்கியிருக்கும் செயற்கை உருவ கணபதி அறிகுறியை மக்கள் உள்ளத்திலிருந்து அழித்துவிடவேண்டும் என்று திராவிடர் கழகத் தோழர்களை, குறிப்பாக இளைஞர்களை வேண்டிக்கொள்கிறேன் (விடுதலை-1953)” என்று தன் உள்ளக் கிடக்கை வெளிப்படுத்துகிறார்.

சாதி மதம் இரண்டுக்கும் அடுத்தபடியாக பெரியார் முக்கியத்துவம் கொடுத்தது பெண்ணடிமை ஒழிப்பு இருக்கும், பெண் கல்விக்கும் என்று சொன்னால் மிகச் சரியாக இருக்கும். “பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல் சாதிக்காரன் கீழ் சாதிக்காரனை நடத்துவதை விட, பணக்காரன் ஏழை நடத்துவதை விட, எஜமான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும் (குடியரசு-1931)” என்று மன வேதனைபடும் பெரியார் அவர்கள், “ஆண்கள் செய்யும் எல்லா வேலைகளையும் சேவைகளையும் பெண்களாலும் செய்ய முடியும் என்பேன் (குடியரசு-1946)” என்று பெண் விடுதலைக்கான முழக்கத்தை எழுப்புகிறார்.

ஒட்டுமொத்த திராவிட சமூகத்திற்குமே கல்வி என்பது அடிப்படை உரிமை என்றும், அதுவே தன்மானம் காக்கும் தன்னிகரில்லா கருவி என்றும் உறுதிபடக் கூறி வரும் பெரியார், பெண்களுக்கான கல்வியை மேலும் பன்மடங்கு வலியுறுத்தி பேசுகிறார். “தனி உரிமை உலகில், பெண்கள் சுதந்திரம் வேண்டும் என்பவர்கள் பெண்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் தங்கள் ஆண் பிள்ளைகளை லட்சியம் செய்யாமல் பெண்களுக்கு செலவு செய்து படிக்க வைக்க வேண்டும். வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு தொழில் கற்றுக் கொடுக்க வேண்டும். தாய் தகப்பனார் பார்த்து ஒருவனுக்கு பிடித்துக் கொடுப்பது என்று இல்லாமல் பெண்ணாகவே பார்த்து தகுந்த வயதும் தொழிலும் ஏற்பட்ட பிறகு ஒருவனை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும் (குடியரசு-1936)” என்ற பெரியாரின் கூற்றுகளின் வழியே பெண்கல்விக்கு அவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

பெரியார் மீது அவதூறு கூறும் பலரும் ‘பெரியார் பொருளாதாரப் பார்வை கொண்டவர் அல்ல’ என்பதுபோல் கருத்துக் கூற கேட்டிருக்கலாம். ஆனால் பெரியார் அவர்கள் இந்திய ஒன்றியத்தின் சாதிய சமூகத்தில் நிலவி வரும் பொருளாதார தன்மையையும், இச்சமூகத்தில் எவ்வாறு சமதர்மத்தை நிலை நிறுத்த முடியும் என்பதையும் நன்கு உணர்ந்தே தன்னுடைய எழுத்துக்களில் மிக கவனமாக பொருளாதார தீர்வுகளையும், சமதர்ம தீர்வுகளையும் முன்வைத்துள்ளார். “நமது நாட்டில் சமூக துறையிலேயே, பிறவியிலேயே பொருளாதார உரிமை அநேக மக்களுக்கு தடுக்கப்படுகிறது. புரோகிதன், உத்தியோகஸ்தர், வக்கீல், வியாபாரி, முதலாளி ஆகியவர்களின் கூட்டத்திற்குத்தான் பொருளாதார உரிமைகள் இருக்கிறதே ஒழிய, மற்ற மக்களுக்கு வயிற்றுக்கு எவ்வளவு வேண்டும் என்கிற அளவுக்கு உட்பட்ட அடிமை உரிமை தானே இருந்து வருகிறது. முற்கூறிய கூட்டங்களுக்கு பொருளாதார உரிமை என்பது பிறவிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதுடன் மற்றவர்களுக்கு அதற்கு அருகரில்லாமல் இருக்கும் படியான நிர்ப்பந்தங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. (குடியரசு-1931)” என்று பெரியார் கூறுகிறார்.

பொதுவுடமை தன்மைகொண்ட கூட்டுறவு முறைகளை முன்னிறுத்தியே எப்பொழுதும் பேசி வந்த தந்தை பெரியார் அவர்கள், இம்முறைக்கு எடுத்துக்காட்டாக கூறுவதும் பொதுவுடமை அரசியலை முன்னிறுத்தி ஆட்சி செய்த ரஷ்ய ஒன்றியத்தை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ரஷ்ய ஒன்றியத்திற்கும், இந்திய ஒன்றியத்திற்கும் இடையிலான சமூக கட்டமைப்பு படிநிலை வேறுபாடுகளையும், அதன் பண்பு மாற்றங்களையும் மனதில் கொண்டு வருண ஒழிப்பு போராட்டத்தை முன் எடுக்காமல் வர்க்கத்தை மட்டும் ஒழிப்பதன் மூலம் இங்கு சமதர்மத்தை நிறுவி விட முடியாது என்பதில் கடைசி வரை உறுதியாக இருந்தார்.

“முதலாளி தொழிலாளி என்ற முறையும் வர்ணாசிரம தர்மம் முறையில் பட்டது என்பதை மறந்துவிடாதீர்கள். அந்த முறையில்தான் இப்பொழுது நமது நாட்டில் மஞ்சள் புரோகிதர்களும், மஞ்சளும் கறுப்பும் கலந்த அரசர்களும், ஜமீன்தார்களும், வியாபாரிகளும் இருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் (குடியரசு-1931)” என்று எடுத்துரைக்கிறார்.

பட்டியல் சமூக மக்களின் விடுதலையே சாதி ஒழிப்பில் முக்கிய பங்கு என்பதை பலமுறை முன்னெடுத்து பேசி வந்த தந்தை பெரியார் அவர்கள் “உத்தியோகம் கல்வி முதலிய விஷயங்களில் ஆதிதிராவிடர் என்பவர்களுக்கு தனிச் சலுகை காட்டி சீக்கிரத்தில் நம்மோடு சரி சமத்துவம் அடையும்படியான நிலைமையை ஏற்படுத்த வேண்டியது நமது கட்சியின் தனிப்பட்ட கடமைகளில் ஒன்று (குடியரசு-1940)” என்று முழங்கியவர் தந்தை பெரியார் அவர்கள். கோயில் வளாகங்களில் மட்டும் பட்டியல் சமூக மக்கள் அனுமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளாத பெரியார் அவர்கள், கோயில் கருவறைக்குள்ளும் அவர்கள் செல்ல வேண்டும் என்று தொடர்ச்சியாக பேசி வந்தார். “கோயில் நுழைவுவால் உங்கள் பாமரத் தன்மை போய்விடுமா? இழிவு போய்விடுமா? ஆகவே உறுதியோடு கேளுங்கள், பார்ப்பனர் மட்டும் ஏன் அந்த சாமிக்கு பூஜை செய்துவர வேண்டும்? நான் மட்டும் ஏன் அவிழ்த்துக் கொடுத்து விட்டு அப்பால் வர வேண்டும்? கோயில் கட்டிடத்துக்குள் வந்தால் சாமி சாகவில்லையே.. இனி அந்த கற்ப அறைக்குள் போனால் மட்டும் எப்படி சாகும் என்று.! (விடுதலை 1948)” என்று பட்டியல் சமூக விடுதலைக்காக போராடியவர் தந்தை பெரியார் ஆவார்.

இன்றளவும் இந்திய ஒன்றியத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இன்னபிற சமூக வளர்ச்சி குறியீடுகளும் தமிழ்நாடு தனித்து விளங்குவதற்கு பெரியாரின் வாழ்நாள் உழைப்பு முதன்மை காரணம் என்றால் அது மிகையாகாது. தமிழ்நாட்டின் கடைசி கருப்புச் சட்டைக்காரர் இருக்கும் வரையில் ஆர்எஸ்எஸ் போன்ற பாசிச சக்திகளை தடுக்கவும், சாதி-மதத்திற்கு எதிரான புரட்சிக் குரல் எழுப்பவும் தயங்கமாட்டார் என்பதனாலேயே தமிழ்நாடு தன்னை பெரியார் மண் என்று பெருமையுடன் அழைத்துக் கொள்கிறது. அதன் காரணமாகவே தந்தை பெரியாரும் புரட்சியாளர் என்று அழைக்கப்படுகிறார்.

பகுத்தறிவு பகலவன், சுயமரியாதை சுடரொளி புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்த நாளில் சாதி, மத, பெண்ணடிமை இழிவுகள் நீங்க, சமூகநீதி, சமநீதி, சமத்துவம் மலர உழைப்போம் என்றும், அவரது வாழ்நாள் முழக்கமான ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை சமரசமின்றி முழங்குவோம் என்றும் உறுதி ஏற்று மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 

]]>
https://may17iyakkam.com/89008/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d/feed/ 0
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாளில் (செப்டம்பர் 5, 1872) புகழ் வணக்கம் செலுத்துகிறோம்! https://may17iyakkam.com/88940/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5-%e0%ae%89-%e0%ae%9a%e0%ae%bf/ https://may17iyakkam.com/88940/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5-%e0%ae%89-%e0%ae%9a%e0%ae%bf/#respond Mon, 05 Sep 2022 08:05:54 +0000 https://may17iyakkam.com/?p=88940

ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு அடங்க மறுத்து, ஆங்கிலேய அரசுக்கு எதிராக கப்பல் தொழில் தொடங்கி சிறைபட்ட கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாளில் (செப்டம்பர் 5, 1872) புகழ் வணக்கம் செலுத்துகிறோம்! – மே பதினேழு இயக்கம்

‘சாதியெனும் பொய்க்கொண்டுந் தன்சமயப் பேய்கொண்டு
மாதினது நோய்கொண்டும் வாழுயிர்க – ளாதி
மகவென்று நோக்காது மாணாத செய்வர்
தகவென்றும் பேணா தவர்’
– வ.உ.சி அவர்கள், மெய்யறிவு-74

(பொருள்: பெருமை மிகுந்த வாழ்வை பேணாதவரே, சாதி மதம் போன்றவற்றை கடைபிடித்து அனைவரும் ஒரு ஆதியில் பிறந்தவர்கள் என்பதை மறந்து வாழ்வார்)

தமிழக வரலாற்றில் கப்பலோட்டிய தமிழர் என்றும், செக்கிழுத்த செம்மல் என்றும் புகழாரம் சூட்டப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்கள் தமிழர்களின் வீரத்திற்கும், அறத்திற்கும், ஆதிக்க எதிர்ப்பு குணத்திற்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். பெரும் செல்வந்தராகவும், வழக்கறிஞராகவும் இருந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள், ஆலைத் தொழிலாளர்களின் நேர்மையான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடிய காரணத்திற்காகவும், ஆங்கிலேயே ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக இந்தியா-இலங்கை இடைப்பட்ட தமிழர் கடற்பகுதியில் கப்பல் செலுத்தி தற்சார்பான பொருளாதாரத்தை முன்னெடுத்த காரணத்திற்காகவும் ஆங்கிலேய காலனி அரசால் கைது செய்யப்பட்டு கொடுமைக்கு உள்ளானவர். தன் இறுதி காலத்தில் ஏழ்மையின் பிடியில் இருந்தபோதும் வ.உ.சிதம்பரனார் அவர்கள் ஒருபொழுதும் தனது விடுதலை வேட்கையை விட்டுக்கொடுத்ததில்லை.

1906-ம் ஆண்டு ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ என்ற பெயரில் அவர் தொடங்கிய சரக்குகள் கப்பல் போக்குவரத்து நிறுவனம் அதுவரை அன்றைய ஆங்கிலேய இந்திய ஒன்றியத்தில் எந்த ஒரு தனி நபரும் முன்னெடுக்காத ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையாகும். அந்த கப்பல் நிறுவனத்தை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்று உள்ளூர் பங்குதார்களும், ‘தங்கள் இலாபம் பறிபோகிறது எனவே இந்நிறுவனத்தை அழித்துவிடவேண்டும்’ என்று ஆங்கிலேய முதலாளிகளும் பெரும் முயற்சியை எடுத்த பொழுதும் அந்த நிறுவனம் வெற்றிகரமாக பீடு நடை போட்டது என்றால் அது வ.உ.சிதம்பரனார் அவர்களின் இடையறாத உழைப்பினால் மட்டுமே.

நேரடியாகவோ, மறைமுகமாகவோ வ.உ.சிதம்பரனார் அவர்களை மிரட்டுவது மூலம் நம்மால் இந்நிறுவனத்தை மூட இயலாது என்பதை ஆங்கிலேய முதலாளிகள் புரிந்து கொண்டனர். எனவே கயமைத்தனமாக வ.உ.சிதம்பரனார் அவர்கள் முன்நின்று நடத்திய அரசியல் கூட்டம் ஒன்றில் காவல்துறையை ஏவி துப்பாக்கிச்சூடு நடத்தியதன் மூலம் அப்பாவி மக்களை பலி கொண்டனர். மேலும் வ.உ.சிதம்பரனார் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு இரண்டு ஆயுள் தண்டனைகள் தரப்பட்டன. ஓர் அரசியல் கைதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை தந்தது இதுவே உலக வழக்கில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு ஆங்கிலேயர்களின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்திருந்தது வ.உ.சிதம்பரனார் அவர்களின் கப்பல் நிறுவனம்.

இதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி பகுதியில் அப்பொழுது இயங்கி வந்த கோரல் மில் என்ற நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஆங்கிலேயே முதலாளிகளால் மிகக் கடுமையாக சுரண்டப்படுவதை அறிந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள் முன்னிலை ஏற்க, 1908-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக ‘ஆங்கிலேயர்களுக்கும், அல்லது ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருக்கும் வேறு யாருக்கும் முடிதிருத்தவோ முகச்சவரம் செய்யவோ மாட்டோம்’ என முகச்சவரம் தொழிலாளர்களால் முடிவெடுக்கப்பட்டது.

“இரங்கசாமி ஐயங்கார் என்னும் ஆங்கிலேயே ஆதரவு நிலைகொண்ட பார்ப்பனர், முகச்சவரம் செய்துகொள்ள வந்தபொழுது ‘கோரல் மில் போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஆங்கிலேயே அரசு சிறப்பு காவல்துறையை வரவழைத்திருக்கிறது’ என்ற செய்தியை கூறி ‘போராட்டம் மிக விரைவில் ஒடுக்கப்படும்’ என்று அதிகாரத் திமிருடன் பேசிய காரணத்திற்காக அவரது முகச்சவரத்தை பாதியில் நிறுத்திவிட்டு அத்தொழிலாளி சென்று விட்டார்” என்ற செய்தி பத்திரிக்கைகளில் வரும் அளவிற்கு இப்போராட்டம் வீரியம் அடைந்து இருந்தது. வேறு வழியில்லாமல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய இடத்திற்கு ஆங்கிலேய முதலாளிகள் தள்ளப்பட்டனர்.

இதுபோன்ற காரணங்களுக்காகவே பொய் வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள், திருநெல்வேலி, கோயமுத்தூர், கண்ணனூர் ஆகிய சிறைகளுக்கு அலைக்கழிக்கப்பட்ட வேலையில் தான், அவரது மன உறுதியை உடைக்க மாடுகளால் இழுக்கப்படும், செக்கை இழுக்க செய்ய ஆங்கில சிறை அதிகாரிகள் கட்டளையிட்டனர். அந்நிகழ்வை பற்றி தனது தன்வரலாற்றில்,

“திங்கட் கிழமை ஜெயிலர் என் கைத்தோல்
உரிந்ததைப் பார்த்தான். உடன் அவன் எண்ணெய்
ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாப்
பகலெலாம் வெயிலில் நடந்து தள்ளிட
அனுப்பினன், அவனுடை அன்புதான் என்னே !”

என்று பாடி வெளிப்படுத்துகிறார் வ.உ.சி அவர்கள்.

ஆனாலும் சிறையில் ஒருபோதும் அவர் மனம் தளர்ந்து விடவில்லை. ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடவில்லை. ஆங்கிலேய ஆதரவு ஏற்கவும் இல்லை.

காட்சன் என்கின்ற ஆங்கிலேய சிறை அதிகாரி வ.உ.சி. அவர்களிடம் ‘கான்விக்ட் வார்டன்’ என்கிற சிறை கைதியே காவலர் பணியை செய்யும் கங்காணி வேலையை அவருக்கு தருவதாகவும், அதை ஏற்றுக்கொள்ளும் தருணத்தில் அவரது சிறை தண்டனை ஆண்டில் ஒவ்வொரு வருடமும் மூன்று மாதம் குறையும் என்றும், உறவினர்களை சந்திப்பதும், அவர்களுக்கு கடிதம் எழுதவும், பெறவும் எளிமையாக இருக்கும் என்றும், மாத விடுப்பு கிடைக்கும் என்றும், அதற்கும் மேலாக நல்ல உடையும் உணவும் கிடைக்கும் என்றும் கூறியபொழுது, “நான் சிறை வந்தது சிறை அதிகாரிகளின் கையாளாக பணியாற்ற அல்ல” என்று அவ்வேலையை மறுதலித்து தனது முழு தண்டனையும் அனுபவிக்க தயாராகவே இருந்தார் என்றால் அவரது மன உறுதி எத்தகையது என்பதை நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

வ.உ.சி. அவர்களின் ஈகம் திட்டமிட்டு தமிழ்நாட்டில் மறைக்கப்பட்டதில் ஆரிய பார்ப்பனக் கும்பலுக்கு பெரும்பங்குண்டு. வ.உ.சி அவர்கள் தொழில் தொடங்கிய காலத்திலிருந்தே ஆரியப் பார்ப்பனர்கள் அவருக்கு எதிராகவும் அவர் மீது பொறாமையும் கொண்டிருந்தனர் என்பதை அவருடைய சுய சரிதையில் இருக்கும் பின்வரும் வரிகளிலிருந்து கண்டுகொள்ள முடியும்.

“பொருடந்த சிற்சிலர் பொறாமைமேற் கொளீஇ
நம்மில் எளியன் நம்மிற் சிறியன்
தம்மினும் புகழினை நண்ணுதல் என்னோ?
அவனை ஒழித்தெலாம் ஆள்வேம்’ என்றே
எமனவர் போல என்மேல் வந்தனர்.”

என்று எழுதிய இந்த வரிகளில் மேற்குறியிட்டு ‘இப் பொறாமை கொண்ட நபரின் பெயராக’ அவரது சுயசரிதையில் ‘நெல்லை பகுதியில் வழக்கறிஞராக இருந்த குருசாமி அய்யர் முதலானோர்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

வ.உ.சிதம்பரனார் அவர்கள் முன்னெடுத்த கப்பல் நிறுவன தொழிலானாலும் சரி, கோரல் மில் போராட்டம் ஆனாலும் சரி ஏகாதிபத்திய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டவை. தன் சொந்த மண்ணின் வளங்கள் அன்னியரால் கொள்ளையடிக்கப்படுவதை கண்டு மனம் பொறுக்காமல் அதை முறியடிக்க வ.உ.சிதம்பரனார் முன்னெடுத்த வேலை திட்டங்களால் அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். அவருக்கு சிறை தண்டனை கொடுக்கப்பட்டதை அறிந்த கணத்திலிருந்து தன் இறுதி காலம் வரை அவரது மனைவி மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். சிறை மீண்ட பின் கடும் ஏழ்மையில் சிக்கிக் கொண்டிருந்தார் வ.உ.சிதம்பரனார் அவர்கள். ஆயினும் தன் இறுதி காலத்தை தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் அர்ப்பணித்து பெரும் பணிசெய்து தமிழர் வரலாற்றில் அழியாப் புகழை பெற்றுச் சென்றார்.

வ.உ.சி அவர்களின் தமிழ்த் தொண்டும் அளப்பரியதே. தமிழில் திருக்குறளின் அறக்கருத்துக்களை ‘வலிந்து பொருள் திரித்து’ சிதைத்த பரிமேலழகரின் உரைக்கு மாற்றாக மற்ற உரையாசிரியர்களின் உரைகளை தேடிச்சென்று இறுதியாக மணக்குடவரின் அறத்துப்பால் உரையினை முதலில் பதிப்பித்தவர் வ.உ.சி அவர்களே. அதன்பின் அவரே திருக்குறளுக்கு உறையும் எழுதினார். அவரது கூற்றுபடி திருக்குறளின் முதல் நான்கு அத்தியாயங்களும் பின்னால் சிறப்புப்பாயிரமாக எழுதி இணைக்கப்பட்டுள்ளது என்றும், அவை திருவள்ளுவாரால் ஆக்கப்பட்டதல்ல என்றும் பொருளாகிறது. திருக்குறள் உரை மட்டுமல்லாமல் பல்வேறு பாக்களையும், மொழிபெயற்புகளையும் தமிழுக்கு தந்தருளிச்சென்றுள்ளார்.

தனிதமிழின் மீது பெரும் பற்று கொண்ட வ.உ.சி அவர்கள், தமிழில் இருந்து வடமொழியாம் சமசுகிருத சொற்கள் நீக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். “சமஸ்கிருத சொற்களை உபயோகிக்க நேரும் இடங்களில் அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு சொற்களையும், அவற்றின் பக்கங்களில் அவற்றுக்குரிய சமஸ்கிருத சொற்களையும் உபயோகித்து தற்கால தமிழ் நாட்டில் வழங்கி வரும் சமஸ்கிருத சொற்களுக்கு எல்லாம் சரியான தமிழ்ச் சொற்களை நம் தமிழ் மக்களுக்குக் கற்பித்து, நாளடைவில் சமஸ்கிருத சொற்களை தமிழில் இருந்து வேரோடு களைந்து விடலாம்” என்று 1915-ஆம் ஆண்டு குமரி மலரில் எழுதி இருந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழ் மொழிக்கு என்று ஒரு தனிநிலப்பரப்பு இருக்கவேண்டும் என்ற அவாவும் அவருக்கு இருந்திருக்க கூடும் என்பதை அவருடைய மெய்யறம் என்ற பாத்தொகுப்பில் 76-வது அதிகாரமாகிய நாடு என்ற தலைப்பில் ‘ஒரு மொழி வழங்குவ தொருதனி நாடு’ என்ற யாப்பில் இருந்து புரிந்து கொள்ளலாம். இங்கனம் தமிழின்பாலும், தமிழ்நாட்டின் பாலும் அன்பு கொண்டவராக விளங்கியவர் வ.உ.சி. அவர்கள்.

ஏகாதிபத்திய எதிர்ப்பும், தற்சார்பு பொருளாதார செயல்திட்டமும் முன்நிறுத்திய தொழிலாளர் உரிமைகள் போராளியும், தமிழ்ப்பற்றாளருமான வ.உ.சிதம்பரனார் அவர்கள் பிறந்த நாளான இன்று மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 

]]>
https://may17iyakkam.com/88940/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5-%e0%ae%89-%e0%ae%9a%e0%ae%bf/feed/ 0
பார்ப்பனர்களின் குலக்கல்வித் திட்டத்தை தகர்த்தெறிந்த செயல் வீரர் ஐயா காமராசர் அவர்களின் 119-வது பிறந்தநாளில் (ஜூலை 15, 1903) மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது! https://may17iyakkam.com/88723/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2/ https://may17iyakkam.com/88723/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2/#respond Fri, 15 Jul 2022 05:54:54 +0000 https://may17iyakkam.com/?p=88723

பார்ப்பனர்களின் குலக்கல்வித் திட்டத்தை தகர்த்தெறிந்த செயல் வீரர் ஐயா காமராசர் அவர்களின் 119-வது பிறந்தநாளில் (ஜூலை 15, 1903) மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது!

“இன்றைய காமராஜ் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்தது இல்லை. நமது மூவேந்தர்கள், அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லாம் நமது கல்விக்கு வகை செய்யப்படவில்லை.” – தந்தை பெரியார் அவர்கள்

மூன்றுமுறை தமிழ்நாட்டின் முதல்வராக, அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக, அரசியலில் எளிமையானவராக வாழ்ந்து காட்டிய செயல் வீரர் ஐயா காமராசர் அவர்களின் பெரும் பணி தமிழகத்தின் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு துறைகளில் இன்றும் குன்றின் மேல் இட்ட விளக்காய் ஒளிர்கிறது.

1952-ம் ஆண்டு ராஜாஜியால் முன்மொழியப்பட்ட கல்வித் திட்டம் வேத-மனுதர்ம காலத்து சாதி-வருண-குல வழியிலான வேலைகளை பரம்பரை பரம்பரையாக செய்ய கூறும் குலக்கல்வித் திட்டத்தை ஒத்து இருந்தது. மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லவும், மாலை நேரத்தில் அவர்கள் குடும்பம் முன்னெடுக்கும் குடும்ப வேலையையும் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என்று ராஜாஜி அறிவித்தார். மேலும் பணப்பற்றாக்குறை என்று கூறி 6,000 பள்ளிகளை மூடினார். ஆனால் அப்பற்றாக்குறை புதிய சமஸ்கிருத பள்ளிகளை திறப்பதை தடுக்கவில்லை.

இதை தந்தை பெரியார் மிகக் கடுமையாக எதிர்த்தார். இது சூத்திரர்கள் என்று அவர்களால் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் முன்னேற்றத்தை தடுப்பதற்காக பார்ப்பனர்களால் செய்யப்படுகின்ற சதி என்று முழங்கினார். இக்குலக்கல்வி திட்டத்தை திரும்பப் பெறும்வரை போராட்டங்கள் முடியாது என்று தொடர் போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினார். அதேவேளையில் இதற்கு இணையாக ‘குலக்கல்வித் திட்டத்தை எதிர்க்கும் குரல்’ காங்கிரசிலும் கேட்கத் தொடங்கியது. அக்குரல் செயல் வீரர் ஐயா காமராஜர் அவர்களுடையது.

சிறுவயதிலேயே மிகக் குறைந்த பள்ளிக்கல்வி மட்டுமே கற்கும் வாய்ப்புப் பெற்ற ஐயா காமராஜர் அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் மிக நன்றாக தெரிந்திருந்தது. கல்வி அறிவே ஏழை மக்களையும், சாதி மதத்தால் ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களையும் அடுத்த படிக்கு முன்னேற்றும் என்பதை முழுமையாக நம்பிய செயல்வீரர் ஐயா காமராசர் அவர்கள், ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை வெகுவாக எதிர்த்தார். தந்தை பெரியாரின் தொடர் போராட்டத்தின் விளைவாக ராஜாஜி பதவி விலக நேர்ந்தது பெரியாரின் முழு ஆதரவும் அறிவுரையும் பெற்ற ஐயா காமராஜர் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் ராஜாஜி மூடிய 6,000 பள்ளிகளையும் மீண்டும் திறந்தார். அதுதவிர மேலும் 14,000 பள்ளிகளை திறக்க உத்தரவிட்டார்.

தனது ஆட்சிக்காலத்தில் முதல் ஐந்தாண்டு திட்டத்தில் 21,500 பள்ளிகளையும், இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் 26,500 பள்ளிகளையும் திறக்க முடிவெடுத்தார். அவரது ஆட்சி காலத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை 25 லட்சத்தில் இருந்து 41 லட்சமாக உயர்ந்தது. மேலும் குழந்தைகள் பள்ளி செல்ல அவர்களது குடும்ப பொருளாதாரம் தடையாக இருப்பதை கண்டு நீதிக்கட்சி காலத்தில் ‘திராவிட இயக்க முன்னோடி’ ஐயா பிட்டி தியாகராயர் அவர்கள் முன்னெடுத்து செயல்படுத்திய மதிய உணவுத்திட்டத்தை தமிழக அரசு பள்ளிகள் முழுவதும் செயல்படுத்த உத்தரவிட்டார். இத்திட்டம் தமிழகத்தின் கல்விகற்போர் எண்ணிக்கையை எதிர்ப்பார்க்கா வண்ணம் உயர்த்தியது. அதுமட்டுமல்லாமல் பள்ளி சீருடை திட்டத்தையும் அறிமுகப்படுத்தியவர் அவரே. சீருடை மட்டுமல்லாமல் புத்தகங்கள், நோட்டுகள் முதலியவையும் இலவயமாக தரப்பட்டன.

ஐயா காமராசர் அவர்கள் முன்னெடுத்த இத்தகைய கல்வி திட்டங்களே தமிழகத்தின் அடிப்படைக் கல்வித்தரம் அதிகரிப்பதற்கு காரணாக இருந்தது. தந்தை பெரியார் அவர்களின் கல்விக் கனவை செயல்படுத்திக் காட்டிய ஐயா காமராசர் தான் இறுதி காலம் வரை பெரியாரின் மேல் பெருமதிப்பு வைத்திருந்தார். தன் தாயாரின் மரணத்தின் போது கூட கலங்காமல் நின்றிருந்த ஐயா காமராசர் அவர்கள், தந்தை பெரியாரின் மரணத்தின் போது உடைந்து போய் அமர்ந்திருந்ததை வரலாறு பதிவு செய்துள்ளது. “எல்லாமே பெரியாரால் நடந்தது” என்று தன் அதிகாரிகளிடம் கூறும் ஐயா காமராசர் அவர்களுக்கு பெரியாரின் இழப்பு பேரிழப்பாகத்தான் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

தந்தை பெரியாரின் பெருமதிப்புக்குறியவரும், பார்ப்பன குலக்கல்வி திட்டத்தை முறியடித்து தமிழகத்தின் கல்வி எதிர்காலத்தை காத்தவருமான செயல் வீரர் ஐயா காமராசர் அவர்களின் 119-வது பிறந்தநாளில் மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/88723/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2/feed/ 0