Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
ஆவணங்கள் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Thu, 02 Jan 2020 17:41:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 2019-ல் மே பதினேழு இயக்கம் கடந்து வந்த பாதைகளில் சில! https://may17iyakkam.com/82006/activities/2019-%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%b4%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8/ https://may17iyakkam.com/82006/activities/2019-%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%b4%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8/#respond Thu, 02 Jan 2020 17:41:03 +0000 http://may17iyakkam.com/?p=82006 2019-ல் மே பதினேழு இயக்கம் முன்னெடுத்த மற்றும் பங்களிப்பு செய்த முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு அளித்திருக்கிறோம். நிகழ்வுகளின் விவரங்களை ஒவ்வொரு படத்திலும் இணைத்திருக்கிறோம்

BSNL ஊழியர் போராட்டத்திற்கு ஆதரவான சுவரொட்டி

ஐ.ஐ.டி-ல் மதவெறி மற்றும் சாதிவெறி பிடித்த பேராசிரியரால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட மாணவி பாத்திமா மரணத்திற்கு நீதி கேட்டு சுவரொட்டி
நவம்பர் 2019

ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளையும், சத்துணவுக் கூடங்களையும் மூடுவதை எதிர்க்கும் ஆசிரியர் அரசு ஊழியர் போராட்டம் வெல்லட்டும்.

திராவிடர் கழகத்தின் சார்பில் திருமுருகன் காந்திக்கு பெரியார் விருது
24 டிசம்பர் 2019

குடியுரிமை திருத்த சட்ட மசோதா எரிப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு
12 டிசம்பர் 2019

மேட்டுப்பாளையம் மரணங்களுக்கு நீதி கேட்டும், நாகை திருவள்ளுவன் கைதைக் கண்டித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம்
09 டிசம்பர் 2019

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் மாலை அணிவிப்பு
06 டிசம்பர் 2019

மேட்டுப்பாளையம் மக்களுக்காக போராடிய நாகை திருவள்ளுவன், வெண்மணி கைதைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்
5 டிசம்பர் 2019

கோவை மேட்டுப்பாளையம் தீண்டாமை ச் சுவர் – மக்கள் கண்காணிப்பகம் நடத்திய கள ஆய்வில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு
04 டிசம்பர் 2019

பாபர் மசூதி தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம்
21 நவம்பர் 2019

சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய தீட்சிதனை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்மணியுடன் சென்று காவல்துறை அதிகாரிகளை சந்தித்தல்.
18 நவம்பர் 2019

பாபர் மசூதி தீர்ப்பு குறித்தான பத்திரிக்கையாளர் சந்திப்பு
09 நவம்பர் 2019

RCEP ஒப்பந்தம் பத்திரிக்கையாளர் சந்திப்பு
01 நவமபர் 2019

கியார் புயல் மற்றும் சுஜித் மரணம் பத்திரிக்கையாளர் சந்திப்பு
29 அக்டோபர் 2019

கீழடியில் மே பதினேழு இயக்கம்
07 அக்டோபர் 2019

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 42வது கூட்டத் தொடரில் மே பதினேழு இயக்கம்:
செப்டம்பர் 2019

வெல்க தமிழ்நாடு – பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் – சென்னை
20 செப்டம்பர் 2019

தந்தை பெரியார் பிறந்த நாளில் மாலை அணிவிப்பு
17 செப்டம்பர் 2019

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாடு
12 ஆகஸ்ட் 2019

கரூரில் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு கருத்தரங்கம்
28 சூலை 2019

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்? – கோவை கருத்தரங்கம்
10 சூலை 2019

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கோவை வர்சினிப் பிரியாவின் இறுதி ஊர்வலத்தில் மே பதினேழு இயக்கம்
29 சூன் 2019

SDPI கட்சியின் சார்பில் திருமுருகன் காந்திக்கு பழனிபாபா விருது
2019 ஜூன் 21

தமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்:
9 சூன் 2019

தமிழீழ மக்களுக்கான 10ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக் கூட்டம் – புதுச்சேரி:
2 சூன் 2019

தமிழீழ மக்களுக்கான வீரவணக்க பொதுக்கூட்டம் – தி.நகர்
19 மே 2019

பொன்பரப்பி சாதிவெறி தாக்குதலைக் கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம்
23 ஏப்ரல் 2019

பொன்பரப்பி சாதிய தாக்குதல் – களத்தில் மே 17 இயக்கம்:
19 ஏப்ரல் 2019

சென்னையில் அம்பேத்கர் பிறந்தநாளில் மாலை அணிவிப்பு
14 ஏப்ரல் 2019

கோவையில் மாபெரும் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்
13 ஏப்ரல் 2019

பாசிசத்தினை வீழ்த்த பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – பத்திரிக்கையாளர் சந்திப்பு
8 ஏப்ரல் 2019

பொள்ளாச்சி வன்கொடுமையை கண்டித்து மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்:
20 மார்ச் 2019

பொள்ளாச்சி வன்கொடுமையை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்:
19 மார்ச் 2019

பொள்ளாச்சி வன்கொடுமை குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தி பொள்ளாச்சியில் நடந்த மனிதச் சங்கிலியில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு
15 மார்ச் 2019

7 நிரபராதி தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட மனித சங்கிலியில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு
09 மார்ச் 2019

தோழர் முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல்! – ஆர்ப்பாட்டம்
27 பிப்ரவரி 2019

தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம், மதுரை
16 பிப்ரவரி 2019

திருப்பூரில் மோடியை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டம்
10 பிப்ரவரி 2019

பெங்களூரில் ராஜபக்சே மற்றும் தி இந்துவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.
09 பிப்ரவரி 2019

புதுக்கோட்டையில் தமிழினம் காப்போம் பொதுக்கூட்டம்
09 பிப்ரவரி 2019

இராசபக்சேவை அழைக்கும் ’ஹிந்து’ பத்திரிக்கைக்கு எதிரான போராட்டம்
08 பிப்ரவரி 2019

கோவையில் சமூக நீதி பாதுகாப்பு கருத்தரங்கம்
06 பிப்ரவரி 2019

மொழிப்போர் ஈகியர் – மாவீரர் முத்துக்குமார் நினைவுப் பொதுக்கூட்டம் – கொளத்தூர், சென்னை
29 சனவரி 2019

மதுரையில் மோடி வருகைக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் கருப்புக் கொடி போராட்டம்
27 சனவரி 2019

உயர்சாதிக்கான 10% இடஒதுக்கீடை ரத்து செய் – கண்டன ஆர்ப்பாட்டம்
19 ஜனவரி 2019

*சென்னை புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகத்தின் 12 புத்தகங்கள் வெளியீடு*
10 சனவரி 2019

]]>
https://may17iyakkam.com/82006/activities/2019-%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%b4%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8/feed/ 0
மதுரை பழங்காநத்தத்தில் “உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. https://may17iyakkam.com/76171/activities/madurai-public-meeting-may-17-movement/ https://may17iyakkam.com/76171/activities/madurai-public-meeting-may-17-movement/#respond Fri, 24 Nov 2017 16:53:04 +0000 http://may17iyakkam.com/?p=76171 மதுரை பழங்காநத்தத்தில் நவம்பர் 19, 2017 ஞாயிறு மாலை “உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. பொதுக்கூட்ட மேடைக்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டலை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர்கொடுத்த, ஈகி சங்கரலிங்கனார் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.தொடர்ச்சியாக மே பதினேழு இயக்கம் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு மாத காலம் சட்டப் போராட்டத்தினை நீதிமன்றத்தில் இந்த பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதி பெறப்பட்டது. இந்த கூட்டத்தின் போது உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி மதுரையில் உண்ணாவிரதம் இருந்த தோழர் பகத்சிங் உள்ளிட்ட 8 தோழர்களுக்கும், இந்தி எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் புலவர் மறவர்கோ மற்றும் ஜெயராமன் ஆகியோருக்கும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினால் சென்னையில் நடத்தப்பட்ட பூணூல் எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்ற தோழர் தமிழ்ப்பித்தன்
அவர்களுக்கும் மே பதினேழு இயக்கம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன் உயிர் நீத்த மே பதினேழு இயக்கத் தோழர் ஆட்டோ நாகராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தினில் மதுரையைச் சேர்ந்த பல்வேறு முற்போக்கு இயக்கங்களின் தோழர்களும், பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தேர்தல் அரசியல் மட்டுமே அரசியலல்ல. இயக்க அரசியல் தமிழ்நாட்டில் வலிமையாக வேண்டியதன் அவசியத்தினை எடுத்துரைக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் அமைந்தது.

தமிழர்களின் அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார உரிமைகள் பறிக்கப்படுவது குறித்தும், அவற்றினை மீட்டெடுக்க நாம் ஒன்று கூட வேண்டியதன் அவசியம் குறித்தும், தற்சார்பு தமிழ்நாட்டை நாம் உருவாக்க வேண்டியதன் அவசியங்கள் குறித்தும், அதற்கு முதல்கட்டமாக நாம் அறிந்து கொள்ள வேண்டியவையும், தேவைகளையும் குறித்து தோழர்கள் விரிவாக உரையாற்றினார்கள். தமிழக மக்கள் முன்னணியின் தோழர் பொழிலன், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், மே பதினேழு இயக்க தோழர்கள் மெய்யப்பன், முகிலன், செல்வா ஆகியோரும், மே பதினேழு ஒருங்கிணைப்பாளர்கள் பிரவீன்குமார், லெனாகுமார், அருள்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் உரையாற்றினர். மே 17 இயக்கத் தோழர் கிட்டு நன்றியுரையாற்றினார்.

மேலும் மே பதினேழு இயக்க தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டபோது தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தோழர்களுக்கு துணை நின்ற தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் நாகை.திருவள்ளுவன் அவர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் மே பதினேழு இயக்கத்தின் மாத இதழான “மே பதினேழு இயக்கக் குரல்” பத்திரிக்கை மதுரையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

 

]]>
https://may17iyakkam.com/76171/activities/madurai-public-meeting-may-17-movement/feed/ 0
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி(GST) போன்றவற்றால் என்ன செய்திருக்கிறது இந்த மோடி அரசு https://may17iyakkam.com/75919/articles/what-demonetisation-and-gst-done-to-people-may-17-movement/ https://may17iyakkam.com/75919/articles/what-demonetisation-and-gst-done-to-people-may-17-movement/#respond Wed, 11 Oct 2017 13:57:13 +0000 http://may17iyakkam.com/?p=75919 பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி(GST) போன்றவற்றால் என்ன செய்திருக்கிறது இந்த மோடி அரசு என்று இன்னும் நம் மக்களுக்கு புரியவில்லை.

அதாவது மோடி ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்ததே பெரிய பெரிய கார்ப்ரேட் முதலாளிகள் தான். எனவே அவர்களுக்கு கூடுமான அளவுக்கு சேவை செய்வதையே முதல் வேலையாகக் கொண்டு மோடி பணியாற்றிவருகிறார். அவர்களுக்கு சேவை என்றால் என்ன அர்த்தம் அவர்களுக்கு வெளிநாட்டில் சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி வாங்கிகொடுப்பது, வெளிநாட்டு கம்பெனிகளோடு இவர்களை இணைத்து ஆயுதங்கள் தயாரிக்க ஓப்பந்தம் போட்டு கொடுப்பது இப்படி புரோக்கர் வேலை செய்வதை சிரமேற்கொண்டு செய்துவருகிறார்.

மேலும் வெறும் ஓப்பந்தங்களை மட்டும் பிடித்துக்கொடுத்தால் எப்படி அதற்கு தேவையான பணத்திற்கு பாவம் அந்த ஏழை! முதலாளிகள் என்ன செய்வார்கள். அதற்கும் மோடி அவர்கள் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளிலிருந்து பணத்தையும் வாங்கி கொடுப்பார். அப்படி வாங்கிய பணத்தை முதலாளிகள் இதுவரை திரும்ப செலுத்தினார்கள் என்ற வரலாறே கிடையாது. இப்படி இவர்கள் வாங்கி குவித்திருக்கும் கடன் மட்டும் 12லட்சம் கோடிக்கு மேல் இருக்கும்.
இப்படி வாங்கிய பணத்தை முதலாளிகள் திரும்ப செலுத்தாத காரணத்தினால் வங்கிகள் திவாலாகும் நிலைமைக்கு வரும். உடனே வங்கிகளை காப்பாற்ற எழை! முதலாளிகள் வாங்கிய பணத்திற்கு நாட்டில் பெரும் செல்வந்தராக இருக்கும் நம்மிடமுள்ள பணத்தை பிடிங்கி வங்கிகளின் கடனை அடைப்பார்கள்.

அப்படி திவாலாகவேண்டிய நிலையிலிருந்து வங்கிகளை காக்கவே பணமதிப்பிழப்பு மற்றும் சேவை வரி போன்றவற்றை கொண்டுவந்து நம் பணத்தையெல்லாம் வங்கிகளுக்கு கொண்டு சென்றார் மோடி. இதோ இப்போது வங்கிகளின் கையில் பணம் அதிகரித்த உடன் மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிவிட்டது. கடந்த ஜீன் மாதம் வரை வங்கிகள் கடனாக கொடுத்து திரும்ப வராது என்று முடிவுக்கு வந்த தொகையின் அளவு 9.53லட்சம் கோடியாக மாறியிருக்கிறது. இதில் கொடுமையென்னவென்றால் ஏற்கனவே அதிக கடனிலிருந்த வங்கிகள் மீண்டும் திரும்ப செலுத்தாத கம்பெனிகளுக்கே லோன் கொடுத்திருக்கிறார்கள். அதிகபட்சமாக கடந்த 15ஆண்டுகளில் இல்லாதளவுக்கு ஜீன் மாதம் மட்டும் 12.5% அதிகமாக கடனை வாரி வழங்கியிருக்கிறார்கள். அதுசரி எவன் அப்பன் விட்டு பணம். https://timesofindia.indiatimes.com/…/articles…/61030217.cms

இப்போது மீண்டும் வங்கிகள் திவாலாகும் மறுபடியும் மோடி அரசு போட்ட எல்லா கோட்டையும் அழிப்பார்கள்.ஆட்டத்தை மீண்டும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிப்பார்கள். ஆகவே மீண்டும் வரிசையில் நிற்க தயாராவோம்.

]]>
https://may17iyakkam.com/75919/articles/what-demonetisation-and-gst-done-to-people-may-17-movement/feed/ 0
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. https://may17iyakkam.com/75913/documents/may-17-movement-participated-in-tmmk-meeting/ https://may17iyakkam.com/75913/documents/may-17-movement-participated-in-tmmk-meeting/#respond Wed, 11 Oct 2017 10:11:53 +0000 http://may17iyakkam.com/?p=75913 மியான்மரில் ரோகிங்கியா இசுலாமியர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும், ரோகிங்கியா அகதிகளை வெளியேற்றக் கூடாது என இந்திய அரசை வலியுறுத்தியும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சேலத்தில் 09/10/2017 திங்கள் அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் அப்துல் சமது மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் அஸ்லாம் பாஷா ஆகியோர் தலைமை வகித்தனர்.

]]>
https://may17iyakkam.com/75913/documents/may-17-movement-participated-in-tmmk-meeting/feed/ 0
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உரிமை முழக்க மாநாடில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. https://may17iyakkam.com/75895/documents/may-17-movement-participated-in-pfi-grand-conference/ https://may17iyakkam.com/75895/documents/may-17-movement-participated-in-pfi-grand-conference/#respond Mon, 09 Oct 2017 13:02:28 +0000 http://may17iyakkam.com/?p=75895 பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப் இந்தியாவின் உரிமை முழக்க மாநாடு நேற்று 8-10-2017 ஞாயிறு மாலை சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற்றது.

இதில் அந்த அமைப்பின் பல்லாயிரக்கணக்கான தோழர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும், முற்போக்கு சக்திகளும், தமிழ்த்தேசியவாதிகளும் நாம் ஒன்றிணைந்து நின்றால் நாம் தான் இந்த மண்ணில் பெரும்பான்மையினர். நாம் ஒன்றிணைந்து இந்த பாசிசத்தினை ஓடச் செய்வோம் என்று பேசினார். தமிழ் மண்ணில் இந்துத்துவ கும்பலின் பிரித்தாளும் சூழ்ச்சி எடுபடாது என்றும் பேசினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினை தடை செய்ய முயலும் பாசிச பாஜக அரசினைக் கண்டித்து பல்வேறு தலைவர்களும் உரையாற்றினர். அதனை தடை செய்வதற்காக தொடர்ந்து அந்த அமைப்பின் மீது தொடர்ந்து பொய்யான அவதூறுகளை பரப்பி, அவர்களை தீவிரவாதிகள் போல சித்தரித்து வரும் தேசிய புலனாய்வு முகமையையும், தேசிய ஊடகங்களையும், ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பல்களையும் தமிழகத்தின் உரிமைக்காக போராடும் பல்வேறு தலைவர்கள் கண்டித்தனர்.

]]>
https://may17iyakkam.com/75895/documents/may-17-movement-participated-in-pfi-grand-conference/feed/ 0
தூய்மை இந்தியா என்ற மோடியின் பித்தலாட்டம் https://may17iyakkam.com/75781/activities/gst-killes-plastic-recycling-clean-india-may17/ https://may17iyakkam.com/75781/activities/gst-killes-plastic-recycling-clean-india-may17/#respond Thu, 28 Sep 2017 06:58:13 +0000 http://may17iyakkam.com/?p=75781 சென்னையின் குப்பை கிடங்குகளான கொடுங்கையூர் மற்றும் பள்ளிக்காரணை குப்பை கிடங்குகளில் பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன. இந்த குப்பைகளை சார்ந்து இயங்கக் கூடிய தொழில்களான குப்பையை அள்ளுதல், குப்பைகளை வாங்கும் சில்லறை வணிகர்கள், மொத்தமாக வாங்குபவர்கள், அதை மறுசுழற்சி செய்யும் தொழிற்கூடங்கள், மறுசுழற்சி செய்தவற்றை மீண்டும் தேவையான பொருட்களாக மாற்றும் உற்பத்தி நிலையங்கள் என அனைத்து தொழில்களும் அதை நம்பி வாழ்ந்து வந்த 2லட்சம் நேரடி தொழிலாளர்களும் 4லட்சம் மறைமுக தொழிலாளர்களும் முற்றிலும் முடங்கிப்போய்கிடக்கிறார்கள். காரணம் மத்திய நரேந்திரமோடி அரசு கொண்டுவந்த சரக்கு மற்றும் சேவை வரி.

இந்த வரியில் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இதுவரை 5%மாக இருந்த வாட் வரி விதிப்பை நீக்கிவிட்டு தற்போது 18%மாக வரியை போட்டிருக்கிறார்கள். இதனால் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களை யாரும் வாங்குமறுக்கிறார்கள். அதனால் யாரும் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை எடுக்கமாட்டேங்கிறார்கள். அதனால் பிளாஸ்டிக் குப்பைகள் மலை போல் தேங்கிகிடக்கிறது. இதே நிலைமை இன்னும் ஒரிரு மாதங்கள் நீடித்தால் மிகப்பெரிய சுகாதார சீரழிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை ஒரு நாளைக்கு 5000டன் கழிவுகள் வருகிறது. இதில் 400 டன் அதாவது 8% பிளாஸ்டிக் கழிவுகள். இதில் 90%மறுசுழற்சி செய்யப்பட்டுவருகிறது.

தற்போது இந்த மறுசுழற்ச்சி முற்றிலும் நின்றுபோய் இருக்கிறது. உதாரணமாக மாதம் 20டன் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்துகொண்டிருந்த ஒரு நிறுவனம் தற்போது 7டன் தான் மறுசுழற்சி செய்கிறது. ஏனென்றால் மறுசுழ்ற்சி செய்த பொருளை வாங்க ஆளில்லை காரணம் அதிகப்படியான 18% வரி.

அதேபோல குப்பை அள்ளுபவர்கள் ஒரு நாளைக்கு 12மணி நேரம் வெலை செய்துமாதம் 10000ரூபாய் சம்பாதித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று அதே உழைப்பை தான அந்த தொழிலாளி போடுகிறார். ஆனால் அவர் வருமானமோ 4000மாக குறைந்து விட்டது காரணம் கழிவுகளை வாங்க ஆளில்லை.

உதாரணமாக ஒருகிலோ பால் பாக்கெட் பிளாஸ்டிக் கவரின் விலை இதுவரை 20ருபாயாக இருந்தது.அது இந்த 18%வரியின் காரணமாக தற்போது 10ருபாயாக குறைந்துவிட்டிருக்கிறது. இதுபோலத்தான் மற்ற கழிவுகளுக்கும்.

தமிழ்நாட்டில் மட்டும் 8000 பதிவு செய்த பிளாஸ்டிக் கூடங்களும், 10000க்கும் மேற்பட்ட பதிவு செய்யாத பிளாஸ்டிக்கூடங்களும் இருக்கின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 2000கோடி வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 10லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயனடைந்து கொண்டிருந்தார்கள். இதெல்லாம் ஒரே நாளில் இந்த மோடி அரசு நீர்மூலம் செய்துவிட்டது.

யோசித்து பாருங்கள் இந்தியாவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான கழிவுகளை உற்பத்து செய்கின்றோம். இதை மறுசுழற்சி செய்யவில்லை யென்றால் அவ்வளவு கழிவுகளையும் என்னசெய்ய முடியும். இதே நிலைமை நீடித்தால் இந்தியா குப்பைநாடாக மாறுவதை தடுக்க முடியாது.

ஒருபுறம் தூய்மை இந்தியா என்ற பெயரில் ஒரு திட்டத்தை கொண்டு வந்து நாட்டு மக்களுக்கு படம் காட்டிக்கொண்டிருக்கும் மோடி அரசாங்கம். மறுபுறம் கழிவுகளுக்கு அதிக வரிபோட்டு இந்தியாவை சுத்தமில்லாமலும் சுகாதாரமில்லாமலும் ஆக்கிக்கொண்டிருக்கிறார்.

ஆதாரங்கள்:

  1.  http://www.newindianexpress.com/cities/chennai/2017/aug/20/18-per-cent-gst-on-recycled-plastic-granules-leaves-rag-pickers-in-distress-1645569–1.html
  2.  http://www.downtoearth.org.in/news/will-india-s-recycling-sector-collapse-under-the-new-gst-regime–58415
  3.  http://indianexpress.com/article/delhi/gst-effect-why-are-capitals-garbage-collectors-refusing-glass-bottles-4765652/
  4.  https://thewire.in/177137/gst-ragpickers-plastic-recycling/

 

]]>
https://may17iyakkam.com/75781/activities/gst-killes-plastic-recycling-clean-india-may17/feed/ 0
தேர்தல் அரசியல் இயக்க அரசியல் ஒரு பார்வை – பாகம் 3 https://may17iyakkam.com/75778/activities/electoral-politics-vs-people-politics-may17-part-3/ https://may17iyakkam.com/75778/activities/electoral-politics-vs-people-politics-may17-part-3/#respond Wed, 27 Sep 2017 15:28:34 +0000 http://may17iyakkam.com/?p=75778 எங்களிடம் மட்டும் ஆட்சியை கொடுத்து பாருங்கள் தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன், அமெரிக்காவாக மாற்றிக்காட்டுகிறேன் என்ற முழக்கம் 60ஆண்டுகளுக்கு மேலாக நமது காதுகளில் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால் உண்மை நிலைமை என்ன தமிழ்நாட்டை சிங்கபூராகவெல்லாம் மாற்ற வேண்டாம் குறைந்த பட்சம் தமிழ்நாட்டை தமிழ்நாடாகவாவது விட்டு வையுங்கள் என்று கேட்கும் அவல நிலைமைக்கு நம்மை ஆட்சி செய்தவர்கள் கொண்டுவந்து
விட்டுவிட்டார்கள். உண்மையிலேயே ஆட்சியிலிருப்பவகளால் இந்திய அரசின் கீழ் இருந்துகொண்டு தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுவரமுடியுமா? முடியாது முடியவே முடியாது என்பது தான் எதார்த்தம்.

எந்தவொரு மாநிலமும் தங்களது மாநிலத்தை முன்னேற்ற நிதி அவசியம். அந்த நிதியை பல்வேறு வரிகளின் மூலமே திரட்டிக்கொள்கிறது. அதன்படி இந்திய அரசியலமைப்பு முறைக்குள் மாநில அரசுகள் வரிவருமானத்தை பெற்று மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியுமா என்றால்? அதற்கு வாய்ப்பேயில்லை. ஏனென்றால் அரசியலமைப்பு சட்டம் எழுதிய காலத்திலிருந்தே வரி முறையில் நீண்ட காலத்துக்கு எந்தவித தடங்களுமில்லாமல் வரி வருமானம் வரும் அனைத்தையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டது. மக்களை நசுக்கி பிழியும் வரிகளை வசூல் செய்யும் முறையை மட்டுமே மாநிலங்களுக்கு ஒதுக்கியது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டபோது மத்திய அரசு பட்டியலுக்கு 12வரிகளை வசூல் செய்யவும், மாநிலங்கள் 19வரிகளை வசூல் செய்யவும் சட்டமியற்றப்பட்டது. அடடே மாநிலங்களுக்கு அதிகமான வரி பட்டியல் இருக்கிறதே என்று உடனடியாக மகிழ்ச்சியடைய வேண்டாம். அதில் தான் சூழ்ச்சியே இருக்கிறது. உதாரணமாக மாநில அரசு பட்டியலிலுள்ள வரிகளில் சிலவற்றை பார்த்தாலே இதை புரிந்துகொள்ளமுடியும். ஆதாவது
கால்நடை மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. ஆனால் யாராவது ஆடு, கோழி, மாடு போன்ற ஏழை மக்கள் பயன்படுத்துவதின் மீது அதிக வரி போடமுடியுமா? இது எவ்வளவு நயவஞ்சகமான வேலை.

இதேபோல இன்னொன்று ’தலைவரி’அதாவது தலை இருப்பவர் மேலெல்லாம் வரி போடும் இந்த அபத்தமும் மாநில அரசிடம் ஓப்படைத்திருக்கிறது. அடுத்த கொடுமை ’நிலவரி’ அதாவது நிலமெல்லாம் மொத்தமாக ஜாமின்தாரிகளிடமிருந்த போது போடப்பட்ட வரிகளை தற்போது நிலங்கள் குடியானவர்க்கும் பிரித்துகொடுத்தவிட்டபின்பு அவர்கள் கடினப்பட்டு உழைக்கும் மக்களிடமிருந்து வரி என்ற பெயரில் பணத்தை பிடுங்க முடியுமா? 1951இல் நிலவரி மூலம் மாநிலங்களுக்கு கிடைத்தவருமானம் 21% அதுவே 1971-72 காலகட்டத்தில் வெறும் 6%மாக குறைந்துவிட்டது.

அடுத்து மின்சார வரி அதுவும் 1991க்கு பிறகு மன்மோகன் அரசு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மத்திய அரசுக்கு கொண்டு போய் விட்டார்கள். இப்படி மாநில அரசுக்கு நிலையற்ற வரிமுறைக்கொண்ட பட்டியலை கொடுத்துவிட்டு மத்திய அரசுக்கு என்றுமே குறையாத வருமானம் வருகின்ற வருமானவரி, கார்ப்ரேசன் வரி, எஸ்டேட் வரி, வெல்த் வரி, எக்சைஸ் டூட்டி போன்றவற்றை எடுத்துக்கொண்டு மாநில அரசுகளை சுரண்டி கொழுக்கிறது. இதனால் மாநில அரசுகள் எப்பொழுதும் மத்திய அரசை நம்பித்தான் இருக்க வேண்டும். மாநில அரசுகள் தனித்து ஒரு ஆணியையும் பிடுங்க முடியாது என்பது தான் எதார்த்தம். இதைத்தான் அரசியல் நிர்ணய சபையில் கே.சந்தானம் அன்றே சொன்னார்.

”மாநில அரசுகள் மத்திய அரசிடம் பிச்சைகாரர்களை போல கையெந்தி நிற்கவேண்டுமென்பதற்காகவே இந்த வரிமுறைகள் உள்ளன”

இதெல்லாம் கடந்த காலங்களில் தற்போது அந்த பிரச்சனையே இல்லை இருந்த கொஞ்ச நஞ்ச வரிவசூல் அதிகாரத்தை பிஜேபி மோடி அரசு GST கொண்டுவந்து மொத்தமாக வாரி சுருட்டிக்கொண்டு போய்விட்டது. இனி இந்தியாவில் மாநில அரசுகள் தம் மக்களுக்கு எந்தவித திட்டங்கள் செய்ய வேண்டுமென்றாலும் மத்திய அரசிடம் உண்மையிலேயே பிச்சை தான் எடுக்க வேண்டும். மேலும் மத்திய அரசு சொல்லுகிற அனைத்திற்கும் கட்டுப்பட்டு அடிமையாக இருந்தால் தான் குறைந்தபட்சமாவது நடக்கும்.

இப்படி ஒரு அரசியல் சட்டத்தை வைத்துக்கொண்டு அதன்மூலம் ஆட்சிக்கு வருபவர்கள் நாங்கள் தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றுவோமென்று சொல்வது ஏமாற்று வேலை தானே?

 

 

]]>
https://may17iyakkam.com/75778/activities/electoral-politics-vs-people-politics-may17-part-3/feed/ 0
லட்சக்கணக்கான குழந்தைகளை கொல்ல துணிந்த மோடி அரசு https://may17iyakkam.com/75747/activities/patent-for-vaccines-sold-to-us-by-indian-government-may-17/ https://may17iyakkam.com/75747/activities/patent-for-vaccines-sold-to-us-by-indian-government-may-17/#respond Wed, 27 Sep 2017 12:49:31 +0000 http://may17iyakkam.com/?p=75747 இந்தியாவில் நுரையீரலை தாக்கும் நிமோனியா தொற்றுநோயால் வருடத்திற்கு இரண்டு லட்சம் குழந்தைகள் இறக்கின்றார்கள். இதனை கட்டுப்படுத்தும் ’தடுப்பூசிகளை’ இந்தியாவிலேயே தயாரித்து ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து இந்த இறப்பு விகிதத்தை குறைக்கவேண்டுமென்பதற்காக யுனிவர்சல் நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் இந்த நுரையீரல் நோய் தடுப்பூசியை (pneumococcal conjugate vaccine) (PCV) கொண்டு வந்தனர்.

இந்த தடுப்பூசி 13வகையான நோய் பரப்பும் பாக்டீரியங்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. இதன்படி இந்த தடுப்பூசியின் விலை 500ரூபாய்க்கு இந்திய சந்தையில் கிடைக்கப்பெற்றது. இது வருங்காலங்களில் இன்னும் விலை குறையுமென்றும் அதனால் இந்த இறப்பு விகிதத்தை குறைக்கலாமென்றும் இந்திய நோய் தடுப்பு துறை
கடந்த மே மாதம் அறிவித்தது.

இதற்கிடையில் அமெரிக்காவானது உலக பொதுவர்த்தக கழகத்தின்(WTO) மூலம் முன்றாம் உலக நாடுகளின் மீது காப்புரிமை சம்பந்தமான சட்டத்தை திணிக்க முயன்றது. அப்போது சீனா இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் கடந்த ஜீன் மாதம் 27ஆம் தேதி இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்வுடனான சந்திப்பிற்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியது.

மே மாதம் அரசு நோய் தடுப்பு துறை இந்த தடுப்பூசிக்கான காப்புரிமையை வைத்திருக்குமென்று சொன்ன மோடி அரசின் சுகாதாரத்துறை அமைச்சர். மூன்று மாதத்திற்கு பின்னர் அதாவது ஆகஸ்ட் 11’2017 அன்று இந்த ’தடுப்பூசியின்’ காப்புரிமையை மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பீ.நாதா அமெரிக்க மருந்து நிறுவனமான பைசர் (Pfizer) நிறுவனத்திற்கு 2026 வரைக்கும் கொடுத்து விட்டொமென்று அறிவித்து விட்டார்.

இந்த பைசர் நிறுவனம் உலகமெங்கும் 2009-2017 காலகட்டங்களில் இந்த தடுப்பூசியால் கொள்ளை லாபத்திற்கு விற்று 35பில்லியன் டாலர் பணம் சம்பாதித்திருக்கீறது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு வருடத்திற்கு இரண்டு லட்சம் குழந்தைகளின் இறப்பை தடுக்கக்கூடிய காப்புரிமையை எந்தவித தயக்கமுமில்லாமல் இந்த மோடி அரசு கொடித்திருக்கிறது.

இதனால் 500ரூபாய்க்கு கிடைத்தவந்த அந்த தடுப்பூசியின் விலை தற்போது 21,000ருபாயாக உயர்ந்திருக்கிறது. இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஏழை மக்களால் தடுப்பூசி வாங்க முடியுமா? அப்படியென்றால் இந்த இரண்டு இலட்சம் என்ற எண்ணிக்கை இனிவரும் காலங்களில் இது மேலும் பல மடங்கு உயரும். இந்தியாவில் குழந்தைகளின் எதிர்காலத்தை இந்த மோடி அரசு அமெரிக்க நிறுவனத்திடம் அடகு வைத்துவிட்டது.

குறிப்புகள்:

https://thewire.in/170285/india-gives-pfizer-patent-for-pneumococcal-vaccine/

https://thewire.in/120122/national-ipr-policy-cautionary-pessimism-continues-washington-d-c/

http://www.thehindubusinessline.com/economy/policy/india-us-lock-horns-over-intellectual-property-at-wto/article9335053.ece

 

]]>
https://may17iyakkam.com/75747/activities/patent-for-vaccines-sold-to-us-by-indian-government-may-17/feed/ 0
பெட்ரோல் விலையேற்றம் உண்மையான காரணம் என்ன? https://may17iyakkam.com/75166/activities/reason-for-petrol-hike-may17-movement/ https://may17iyakkam.com/75166/activities/reason-for-petrol-hike-may17-movement/#respond Mon, 25 Sep 2017 19:40:59 +0000 http://may17iyakkam.com/?p=75166 2014இல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 108ரூபாயாக இருந்தது. அப்போது இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 63.94ரூபாயாக இருந்தது.தற்போது 2017இல் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 56டாலராக அதாவது பாதியளவு குறைந்திருக்கிறது. அப்படியென்றால் பெட்ரோலின் விலையும் பாதியளவு இல்லை குறைந்தளவேனும் குறைந்திருக்க வேண்டுமல்லாவா? ஆனால் அதற்கு நேர் மாறாக மோடி அரசில் தற்போது பெட்ரோல் விலை 72.99ரூபாயாக அதிகரித்திருக்கிறது. பார்க்க படம் 01.

இந்த விவகாரம் தான் கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளால் விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் அதற்கான உண்மையான காரணத்தை மோடியின் அமைச்சர் சொல்லாமல் பெட்ரோலின் விலை வருங்காலத்தில் கட்டுக்குள் கொண்டுவரப்படுமென்று மேம்போக்காக ஒரு பதிலை சொல்லி கடந்துவிட்டார். கச்சா எண்ணெயின் விலை முன்னைவிட பாதியளவு குறைந்திருக்கிற வேளையில் பெட்ரோல் விலை மட்டும் அதிகரித்துக்கொண்டே செல்லுவதற்கான உண்மையான காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்ததில் தான் மோடி அரசின் அயோக்கியத்தனத்தை அறிய முடிந்தது. அதாவது

பெட்ரோல் விலையென்பது கீழ்க்கண்ட அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

1.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 2.கச்சா எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கிற ஆகும் செலவு.
3.மத்திய அரசின் வரி
4.மாநில அரசின் வரி

இதன்படி பார்த்தால் கச்சா எண்ணெயின் விலை பாதியாக குறைந்திருக்கிற நிலையில் குறைந்திருக்க வேண்டிய பெட்ரோலின் விலை மத்திய அரசின் அதிகப்படியான வரியால் குறையவில்லை என்பதுதான் பெட்ரோல் விலையெற்றத்திற்கு பின்னாலுள்ள காரணம். எவ்வளவு வரியை அதிகப்படுத்தி இருக்கிறார்களென்றால் கிட்டதட்ட ஒன்பது மடங்கு வரியை உயர்த்தியிருக்கிறார்கள். பார்க்க படம் 2. இதனால் தான் பெட்ரோல் விலை தற்போது உயர்ந்திருக்கிறது.

மேலும் இந்த மோடி அரசு கொண்டுவந்த ஜீஸ்டி எனும் வரிமுறையை ஏன் பெட்ரோல் டீசலுக்கு பொருந்தாதென்று சொன்னார்களென்றால். அந்த ஜிஸ்டி முறையில் அதிகபட்ச அளவே 28%தான் வரி போடமுடியும். ஆனால் தற்போது பெட்ரோல் டீசலுக்கு மத்திய மற்றும் மாநில அரசி போடும் வரி என்பது கிட்டதட்ட 42.78%.(மத்திய அரசு21.48%, மாநில அரசு 14.98% மற்றவை 6.32%) இவ்வளவு வரியை போட்டு இந்த மோடி அரசு இன்னொரு கேவலமான வேலையையும் செய்திருக்கிறது. அதாவது

மோடி அரசு பதவிக்கு வந்ததிலிருந்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி எங்களின் சீரிய நடவடிக்கையின் மூலம் நாட்டில் அரசின் நிதிபற்றாக்குறையை குறைத்திருக்கிறோமென்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே வந்தார். இவர்கள் எப்படி இந்த நிதிபற்றாக்குறையை குறைத்திருக்கிறார்களென்றால் பெட்ரோல் டீசல் மீதான வரியை கூட்டி அதில் வரும் வருமானத்தின் மூலம் தான் நிதிபற்றாக்குறையை ஓரளவு குறைத்திருக்கிறார்கள். பார்க்க படம் 3. அதாவது

நாட்டில் பெரிய பெரிய பணக்கார முதலாளிகளுக்கு வரிச்சலுகை, 12லட்சம் கோடி அளவுக்கு அவர்கள் வாங்கி தள்ளிய கடன்களை தள்ளுபடி செய்வதென்று மக்கள் நலத்திட்டங்களுக்கு சேர வேண்டிய வரிப்பணத்தை வாரி இறைத்துவிட்டு. அதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பை சாதாரண ஏழை மக்களிடமிருந்து பிடுங்கி நாங்கள் நிதி பற்றாக்குறையை குறைத்து விட்டோமென்று மோடி சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

]]>
https://may17iyakkam.com/75166/activities/reason-for-petrol-hike-may17-movement/feed/ 0
அறவழியில் 6 ஆண்டுகளாக நடந்த நினைவேந்தலை தற்போது கலவரமாக சித்தரிக்கும் காவல்துறை. https://may17iyakkam.com/59394/documents/how-marina-candle-light-vigil-happened-in-past/ https://may17iyakkam.com/59394/documents/how-marina-candle-light-vigil-happened-in-past/#respond Mon, 22 May 2017 16:42:27 +0000 http://may17iyakkam.com/?p=59394 பிரிவு 147, பிரிவு 148, பிரிவு 341, பிரிவு 506/1, பிரிவு 188 அமைதியாக அறவழியில் 7 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்விற்காக கூடிய தோழர்களின் மீது, இந்தாண்டு இந்த பிரிவுகளின் கீழ் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

பிரிவு 147 – கலவரம் செய்ததாக சொல்லி உள்ளார்கள்
பிரிவு 148 – ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தி கலவரம் செய்ததாக
பிரிவு 341 – பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது
பிரிவு 506/1 – சட்டவிரோத உள்நோக்கத்துடன் கூட்டத்தை கூட்டியது.
பிரிவு 188 – அரசு ஊழியரை மதிக்காமல் நடந்து கொண்டது.

மூன்று வயது குழந்தைகள் முதல் வயிற்றில் குழந்தைகளுடன் வந்த பெண்களுடன், வயதான முதியோர்களுடன் தனது ரத்த சொந்தங்கள் இழந்த சோகத்தில் ஏழு ஆண்டுகளாக அஞ்சலி செலுத்தி வந்த அதே மக்கள் மீது மேற்சொன்ன பிரிவுகளில் மோடி-எடப்பாடியின் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
அஞ்சலி செலுத்துவதற்காக கொண்டு வந்த அதிபயங்கர ஆயுதம் மெழுகுவர்த்தி. கிட்டத்தட்ட நிராயுதபாணியான எமது தோழர்கள் கண்ணீரையும் அரசியலையும் முழக்கமிட்டு முள்ளிவாய்க்காலில் மூழ்கிப் போன்வர்களுக்கு தமிழர் கடலில் மரபு வழியிலான நினைவை செலுத்த வந்தவர்கள்தான் கலவரம் செய்தவர்கள், ஆபத்தான ஆயுதம் வைத்திருந்தவர்கள், சட்ட விரோத உள்நோக்குடன் கூடியவர்கள், காவல்துறைக்கு(அரசு ஊழியருக்கு) மதியாமல் நடந்து கொண்டார்கள் என்று சொல்கிறார்கள்.

அன்பான தமிழர்களே! ஜனநாயக சக்திகளே! மேலே சொன்ன குற்றங்களுக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் தண்டனை. இந்த அரசின், இந்த காவல்துறையின் இம்முடிவை உங்கள் பொறுப்பிற்கே விட்டு விடுகிறோம்.

சாட்சிகளாக 7 ஆண்டுகள் நாங்கள் புரிந்த காட்சிகளை தொகுத்து புகைப்படங்களாக கொடுக்கிறோம். பாருங்கள். ஒன்று சேர்வோம்.

]]>
https://may17iyakkam.com/59394/documents/how-marina-candle-light-vigil-happened-in-past/feed/ 0