Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
பொதுக் கட்டுரைகள் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Sat, 19 Dec 2020 14:57:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 கொரோனா காலத்தில் மோடி அரசு அறிவித்த 20 லட்சம் கோடி திட்டம் ஒரு மோசடி. உண்மை அம்பலம் https://may17iyakkam.com/84487/articles/general-articles/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0/ https://may17iyakkam.com/84487/articles/general-articles/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0/#respond Sat, 19 Dec 2020 14:57:21 +0000 https://may17iyakkam.com/?p=84487

கொரோனா காலத்தில் மோடி அரசு அறிவித்த 20 லட்சம் கோடி திட்டம் ஒரு மோசடி. உண்மை அம்பலம்.

2014லிருந்து இந்துத்துவ மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் இந்திய பொருளாதாரம் மிக மோசமான சூழ்நிலையில் இருந்தது. இந்த சமயத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வந்தது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட இந்துத்துவ மோடி அரசு மொத்தப் பழியையும் கொரோனாவின் மேல் போட்டது. மூன்று கட்ட பொது முடக்கத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இந்திய பொருளாதாரம் புதைந்தே போனது.

இந்தியாவெங்கும் ஆறுகோடி சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டது. அதில் வேலை செய்த பல கோடி தொழிலாளர்களின் வாழ்க்கை நிர்கதியானது. பலர் உயிரிழக்கும் சம்பவங்களும், பல தொழிலாளர்கள் கிடைத்ததை எடுத்துக்கொண்டு பல மையில்கள் நடந்தே சொந்த ஊர் போய் சேர்ந்த அவலமும் ஏற்பட்டது. இதனால் ஆளும் இந்துத்துவ மோடி அரசின் மீது மக்களின் கோபம் திரும்பியது. இதனை சரி கட்ட வேண்டி மோடி அரசு தனது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலம் 20 லட்சம் கோடி மதிப்பிலான ‘ஆத்மநிபார்’ என்ற திட்டத்தை நான்கு கட்டங்களாக அறிவித்தது. இதனை பெரிய சாதனையாக அனைத்து மாநிலங்களிலும் பரப்பியது.

தற்போது மோடி அரசு இந்தத் திட்டங்களில் மிகப்பெரிய மோசடியை செய்திருக்கிறது என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

அதாவது மோடி அரசு இதுவரை ஆத்மநிபார் திட்டத்தில் வெறும் மூன்று லட்சம் கோடி மட்டும்தான் ஒதுக்கியிருப்பதாகும், அதிலும் 1.20 லட்சம் கோடி மாநில அரசுகளுக்கு கடனாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மத்திய அரசுக்கு திரும்ப வழங்க வேண்டுமாம். வெறும் மூன்று லட்சத்தை கொடுத்துவிட்டு 20 லட்சம் கோடிக்கு திட்டங்கள் நிறைவேற்றப் பட்டிருப்பதாகவும், இதன் மூலம் இந்திய பொருளாதாரம் உயர்ந்திருக்கிறது என்பது போலவும் தொடர்ந்து பொய்யை மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிற பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்கள் அனைவரும் திரும்ப திரும்ப சொல்லி 130 கோடி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.

ஏற்கனவே கொரோனா காலத்தில் பி.எம் கேர் என்கிற பெயரில் பல ஆயிரம் கோடிகளை சேர்த்துவிட்டு இன்று வரை அதற்கு கணக்கு காட்டாமல் இருப்பது ஒரு பக்கமும் என்றால், தற்போது 20 லட்சம் கோடி என்று அறிவித்து வெறும் 3லட்சம் கோடியை மட்டும் செலவழித்துவிட்டு 17லட்சம்கோடிக்கு கணக்கு காட்டாமல் நாட்டு மக்களை முட்டாளாக்க நினைக்கிறது.

அதோடு ஜிஎஸ்டி என்கிற பெயரில் மாநில மக்களிடம் அதிக வரியை உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் கடன் வழங்கி மாநிலங்களையும் கடனாளி ஆக்கியிருக்கிறது.

130 கோடி மக்களை முட்டாளாக்கியது போதாதென்று மாநிலங்கள் என்ற ஜனநாயக தன்மையையும் இல்லாமல் செய்யும் ஆரிய இந்துத்துவ மோடி அரசின் முகத்திரையை கிழித்து
தமிழ்த்தேசிய இன உரிமையை மீட்போம்.

மே17 இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/84487/articles/general-articles/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0/feed/ 0
மே பதினேழு இயக்கக் குரல் இணையத்தளம் வெளியீடு https://may17iyakkam.com/84406/articles/general-articles/%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%b4%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-3/ https://may17iyakkam.com/84406/articles/general-articles/%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%b4%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-3/#respond Sat, 28 Nov 2020 04:55:26 +0000 https://may17iyakkam.com/?p=84406

நவம்பர் 27 மாவீரர் நாளை முன்னிட்டு, இன்று முதல் மே பதினேழு இயக்கக் குரல் இணையத்தளம் வெளியிடப்படுகிறது. இதில் மே பதினேழு இயக்கக் குரலில் வெளிவரும் கட்டுரைகளோடு, பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வெளிவரும். அனைவரும் இணைந்திருங்கள்.

https://may17kural.com/

]]>
https://may17iyakkam.com/84406/articles/general-articles/%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%b4%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-3/feed/ 0
சென்னை ஐஐடியில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தொடர்ந்து மீறப்படும் இடஒதுக்கீடு நடைமுறை! சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் பாஜக அரசின் செயல்! https://may17iyakkam.com/84385/articles/general-articles/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/ https://may17iyakkam.com/84385/articles/general-articles/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/#respond Sat, 21 Nov 2020 12:50:46 +0000 https://may17iyakkam.com/?p=84385

சென்னை ஐஐடியில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தொடர்ந்து மீறப்படும் இடஒதுக்கீடு நடைமுறை! சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் பாஜக அரசின் செயல்! – மே பதினேழு இயக்கம்

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (Indian Institute of Technology Chennai [IIT]) கல்வி நிறுவனத்தில், பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் துணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீட்டு முறை முறையாக பின்பற்றாதது தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சமீபத்தில் பெறப்பட்ட தரவுகள் காட்டுகின்றன. பட்டியலினத்தவர்கள் (SC), பழங்குடியினர் (ST), BC-MBC மக்களான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஆகியோரை கொண்டு நிரப்பப்பட வேண்டிய இடங்களை முறையாக நிரப்பாமல், அவர்களுக்கான பணியிடங்களை பொதுப்பிரிவினரை கொண்டே முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி நிர்வாகத்தின் இச்செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

பழங்குடியினருக்கான பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் துணைப் பேராசிரியர் பணியிடங்கள் முறையே 23-இல் 1 இடமும், 13-இல் 1 இடமும், 15-இல் 1 இடமும், அதுவே பட்டியலினத்தவர்களுக்கான பணியிடங்கள் முறையே 47-இல் 5 இடங்களும், 27-இல் 4 இடங்களும், 30-இல் 7 இடங்களும், BC-MBC பிரிவினருக்கான பணியிடங்கள் முறையே 84-இல் 29 இடங்களும், 49-இல் 19 இடங்களும், 53-இல் 18 இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. அதாவது சராசரியாக பழங்குடியினருக்கனா மொத்த இடங்களில் வெறும் 6.7% இடங்களும், பட்டியலினத்தவர்களுக்கான மொத்த இடங்களில் 23.3% இடங்களும், BC-MBC பிரிவினருக்கான மொத்த இடங்களில் 33.9% இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன (இணைக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கவும்).

இப்படியாக SC/ST, BC, MBC மக்கள் வஞ்சிக்கப்படும் போது, பொதுப்பிரிவினரின் பேராசிரியர் பணிக்கான 154 பணியிடங்களை 273 பேரை கொண்டும், இணைப் பேராசிரியர் பணிக்கான 90 பணியிடங்களை 156 பேரை கொண்டும், துணைப் பேராசிரியர் பணிக்கான 98 பணியிடங்களை 170 பேரை கொண்டும் நிரப்பியுள்ளனர். இது சராசரியாக 175% ஆகும். அதாவது, பொதுப்பிரிவினருக்கான இடங்களை முழுமையாக நிரப்பியதோடு, SC/ST, BC, MBC மக்களை கொண்டு நிரப்பப்பட வேண்டிய இடங்களை மிக குறைந்த அளவிலேயே இடஒதுக்கீடு முறையில் நிரப்பிவிட்டு, நிரப்பாமல் விட்ட இடங்களை உயர்சாதி பார்ப்பனர்களை கொண்டு பொதுப்பிரிவிலேயே நிரப்பியுள்ளனர். இது இதுஒதுக்கீட்டு நடைமுறையை அப்பட்டமாக மீறிய செயலாகும்.

சென்னை ஐஐடியில் பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு நடைமுறையை முறையாக பின்பாற்றமல் இருப்பது நீண்டகால குற்றச்சாட்டாகும். பணி நியமனங்களில் மட்டுமல்லாது, பணி உயர்விலும் SC/ST, BC, MBC மக்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். சென்னை ஐஐடி என்பது உயர்சாதி பார்ப்பனர்களின் கூடாரமாக உள்ளது. இதனால் மாணவர்களிடம் சாதிய பாகுபாடுகளும் காட்டப்படுகிறது. இதனால் தொடர்ந்து மர்மமான முறையில் மரணங்கள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது. சென்ற வருடம் பாத்திமா லத்தீப் என்னும் மாணவி தனது மரணத்திற்கு காரணமாக பேராசிரியர் சுதர்சன பத்மநாபன் என்பவரை அவர் குறிப்பிட்டுள்ளார். அதே போல், சைவம், அசைவம் என தனித்தனியாக தீண்டாமையை கடைபிடிக்கும் வண்ணம் உணவருந்தும் அறை அமைக்கப்பட்டதும் சர்ச்சைக்குள்ளானது.

சென்னை ஐஐடியில் இத்தகைய பாகுபாடு ஏற்பட இடஒதுக்கீடு மீதான இந்திய ஒன்றிய அரசின் அணுகுமுறை மிக முக்கிய காரணமாக உள்ளது. சென்னை ஐஐடி மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஐஐடி நிறுவனங்களிலும், மத்திய அரசின் அலுவலகங்கள் அனைத்திலும் இடஒதுக்கீடு நடைமுறை முறையாக பின்பற்றப்படுவதில்லை. மோடியின் 6 ஆண்டு கால ஆட்சியில் இது மோசமடைந்துள்ளது. இதற்கு, உயர்சாதி பார்ப்பனர்கள் பயனடையும் வகையில் பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீட்டை கேட்காமலே கொண்டுவந்து உடனடியாக நடைமுறைப்படுத்தியதும், தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வாதாடுவதும் சான்றாக உள்ளது. வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் இதே நிலையை தான் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் தொகை கூடுவதற்கு ஏற்ப கல்விக்கூடங்களை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்திய ஒன்றிய அரசு உணர்ந்துகொள்ளவில்லை. 1951 முதல் 1961 வரை 5 ஐஐடிக்களும், 1994 மற்றும் 2001-இல் தலா ஒன்றும், 2008 முதல் 2012 வரை 9 ஐஐடிக்களும், 2015-2016 காலகட்டத்தில் 8 ஐஐடிக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகை பெருக்கம், மக்களின் வளர்ச்சி போக்கு ஆகியவற்றை கணக்கிடும் போது இது போன்று நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்த நிறுவங்களில் அதிக மாணவர்கள் முயற்சிக்க நுழைவுத்தேர்வு முறையை கொண்டு வந்து, இன்று அதற்காகவே 6ம் முதல் மாணவர்களை தயார்படுத்தும் வணிக முறையாகவே மாறிவிட்டது. அதே போன்ற சூழலை தான் தற்போது நீட் தேர்வு முறை மூலம் மருத்துவ கல்வியில் ஏற்படுத்துகிறது மோடி அரசு.

கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறையின் பலனை SC/ST, BC, MBC மக்கள் பெறுவதை தடுக்கவும், உயர்சாதி பார்ப்பனர்கள் பெருமளவில் பயனடைவதற்கும் பாஜகவின் மோடி அரசு செயல்படுகிறது. இது, சூத்திரர்கள் கல்வி பெறுவதை, செல்வம் சேர்ப்பதை மறுக்கும், சாதி அடிப்படையிலான பாகுபாட்டை நியாயப்படுத்தும், பெண்களை இழிவாக பேசும் மநு சாஸ்திரத்தின் அடிப்படையிலான இந்துத்துவ ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்தும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும். இடஒதுக்கீட்டின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் கல்வியை வணிகமயமாக்குவதையும், இடஒதுக்கீட்டை தடுக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதிலும் மோடி அரசு முழு வேகத்தில் செயல்படுகிறது.

பாஜக அரசின் சமூகநீதிக்கு எதிரான போக்கை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. சென்னை ஐஐடி உட்பட இந்திய ஒன்றிய அரசின் அனைத்து கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறை முழுமையாக முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் சமூகநீதி நிலைபெறுவதை அனைத்து ஜனநாயக அமைப்புகள், கட்சிகள் உறுதி செய்ய வேண்டும். இதற்காக அணிதிரள்பவர்கள் உடன் மே பதினேழு இயக்கம் உறுதியாக நிற்கும் என்பதையும் கூறிக்கொள்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/84385/articles/general-articles/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/feed/ 0
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு வழக்கு: நீதிபதி கிருபாகரன் தீர்ப்பும், 7 தமிழர் விடுதலையும் https://may17iyakkam.com/84315/articles/general-articles/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95-3/ https://may17iyakkam.com/84315/articles/general-articles/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95-3/#respond Sat, 07 Nov 2020 07:35:44 +0000 https://may17iyakkam.com/?p=84315 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு வழக்கு: நீதிபதி கிருபாகரன் தீர்ப்பும், 7 தமிழர் விடுதலையும் – மே17 இயக்கம்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ இடங்களில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தமிழக அரசு நிறைவேற்றி அதனை அன்றே தமிழக ஆளுநருக்கும் அனுப்பி விட்டது. ஆனால் ஆளுநர் கிட்டத்தட்ட இரண்டு மாதம் இது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் தாமதித்தார். எனவே ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு மிகச் சிறப்பான ஒரு தீர்ப்பை முன்வைத்திருக்கிறார்கள்.

அதாவது அரசியலமைப்பு சட்டம் 361 வது பிரிவின்படி ஆளுநர் கட்டாயமாக மாநில அரசுகளின் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீரவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்று இருப்பதை சுட்டிக்காட்டி ஆளுநர் தரப்பு வாதிட்டு வருகிறது. இந்த வாதத்திற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வு.

ஆம். இந்திய அரசியலமைப்பு சட்டம் 361 வது பிரிவின்படி ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என்பது உண்மைதான்.ஆனால் இந்திய அரசியல் சட்டம் 200 ஆவது சட்டத்தின்படி ‘மசோதா மீதான ஒப்புதல்’ (Assent to bill) என்ற பிரிவின் கீழ் ஆளுநர் தனக்கு அனுப்பப்படும் மசோதாவின் மீது விரைவில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் அது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதோ என்பது ஆளுநரின் முடிவு. ஆனால் ஏதேனும் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என்று இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதன் பிறகே நேற்று முன்தினம் தமிழக ஆளுநர் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% மருத்துவ இடங்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவின் மீது கையெழுத்திட்டிருக்கிறார்.

இப்போது இதே 200வது சட்டப்பிரிவின் படி ஏற்கனவே தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியிருக்கிற 7 தமிழர் விடுதலைக்கான மசோதாவின் மீதும் ஆளுநர் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இதனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வின் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு வலியுறுத்தலாம்.

7 தமிழர் விடுதலையில் உண்மையான அக்கறை இருக்குமானால் தமிழக அரசு இதனை உடனடியாக செய்ய வேண்டும்.

மே17 இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/84315/articles/general-articles/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95-3/feed/ 0
தமிழக அரசு கொண்டு வந்திருக்கிற தொழிற்சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்துதல் மட்டும் விரிவாக்குதல் சட்டத்திருத்தத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் https://may17iyakkam.com/84312/articles/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/ https://may17iyakkam.com/84312/articles/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/#respond Sat, 07 Nov 2020 07:32:12 +0000 https://may17iyakkam.com/?p=84312

தமிழக அரசு கொண்டு வந்திருக்கிற தொழிற்சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்துதல் மட்டும் விரிவாக்குதல் சட்டத்திருத்தத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் – மே17 இயக்கம்

தமிழகத்தில் எண்ணற்ற வெளிநாட்டு தொழிற்சாலைகளின் முதலாளிகள் தொழில்கள் தொடங்குகிறார்கள் என்கிற காரணத்தைக் கொண்டு, தமிழ்நாட்டு நிலங்களை தான்தோன்றித்தனமாக எவர் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்கிற வகையில் தமிழக அரசு நேற்று ஒரு சட்டத் திருத்தத்தை வெளியிட்டிருக்கிறது.

அதாவது புதிய தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துதல் மற்றும் விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தம் 2020. அதன்படி இனி தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் தொடங்கும் முதலாளிகள் தங்களது தொழிற்சாலைகளுக்கு தேவையான 120 ஏக்கர் நிலங்களை அரசிடம் அனுமதி பெறாமலேயே எடுத்துக்கொள்ளலாம் என்றும், ஏற்கனவே தொழில்கள் தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் விரிவாக்கத்திற்காக நூறு ஏக்கர் நிலங்களை அரசிடம் அனுமதி பெறாமலேயே சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்ற புதிய சட்டத் திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது.

இதன் மூலம் தமிழர்களின் நிலம் கேள்விகேட்பாரன்றி எவ்வளவு வேண்டுமானாலும் எவர் வேம்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்கிற ஒரு புதிய விதியை தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது.

ஏற்கனவே விவசாய சட்டங்களின் மூலம் விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியே அனுப்பும் வேலை ஒருபக்கம் நடக்கிறது என்றால், இப்போது அவர்களிடமிருந்து நிலங்களையும் பிடுங்கிக் கொண்டால் உள்நாட்டிலேயே அகதியாக மாறும் நிலை உருவாகும். ஆகவே இந்த மோசமான சட்டத்திருத்தத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

மே17 இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/84312/articles/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/feed/ 0
லெப்.கேணல்.திலீபன் எனும் பெருவீரன் https://may17iyakkam.com/84041/articles/%e0%ae%b2%e0%af%86%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ https://may17iyakkam.com/84041/articles/%e0%ae%b2%e0%af%86%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#respond Sat, 03 Oct 2020 14:24:35 +0000 https://may17iyakkam.com/?p=84041

லெப்.கேணல்.திலீபன் எனும் பெருவீரன்.

திலீபனின் உண்ணாநிலைப் போராட்டமென்பது தெற்காசிய அரசியலை புரட்டிப் போட்ட நிகழ்வு. இப்பிராந்தியத்தின் நாடுகளில் தங்குதடையின்றி தன்னால் இராணுவதலையீடு செய்துவிட முடியுமெனும் பேராசை இந்திய வெளியுறவு, பாதுகாப்பு வட்டங்களால் உருவாக்கப்பட்டதை நம்பிய இராஜீவ்காந்தி அரசின் எதேச்சதிகாரப் போக்கை முடிவுக்குக் கொண்டுவந்த பெரும் அரசியல் நிகழ்வே திலீபனின் போராட்டம். இந்திய அரசிற்கு எதிராக பெரும் மக்கள் திரளை இந்தியாவிற்கு வெளியே திரட்டிவிட முடியுமென்பதை இந்தியா எதிர்பார்க்கவில்லை. மேலும் தெற்காசியாவில் விரிந்து கிடந்த ஒரு இனத்தை அரசியலாக பிணைத்த முதல் நிகழ்வு எனவும் இதைச் சொல்ல முடியும். கருப்பு ஜூலை உலக தமிழினத்திற்குள் அதிர்வை ஏற்படுத்தியதெனில், திலீபனின் போராட்டம் தமிழர்களை அரசியல் ஆற்றலாக திரட்டியது. தமிழீழம் மட்டுமல்லாது தமிழ்நாடு, மலேசியா, மாலத்தீவு, மொரீசியஸ் என அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்களை முதன்முறையாக தமிழ்த்தேசிய அரசியலால் ஒன்றிணைக்க இயலுமென்பதை உலகிற்கு காட்டியது.

வங்கதேசத்தில் இராணுவ தலையீடு, மாலத்தீவில் இராணுவ தலையீடு, தென்னிலங்கையில் இராணுவத்தலையீடு என இந்திய இராணுவத் தலையீடுகள் தங்குதடையின்றி இருந்ததை எதிர்கொண்ட முதற்போராட்டம் ஈழத்தில் திலீபனால் வெடித்தது. இந்திய பார்ப்பனீய அதிகார வர்க்கம் வழக்கம்போல தனது மேலாதிக்க திமிரில் உதாசீனப்படுத்தியப் இப்போராட்டம், இந்தியப் படைகளை தனது சொந்தப் படைகள், தம்மைக் காக்க வந்த படைகள் எனக் கொண்டாடிய தமிழர்களை உறக்கத்திலிருந்து கலைத்தது. இந்தியப் படை என்பது ஆதிக்கப் படை, ஆக்கிரமிக்க, சிங்கள அரசிற்கு ஆதரவாகவே களமிறக்கப்பட்டது என்பதை திலீபன் தன் உண்ணாநிலையின் மூலமாக உணர்த்தியதை கண்டுணர்ந்தார்கள். தன் உடல் எவ்வாறு சிறிது, சிறிதாக சிதைக்கப்படுகிறதோ அதுபோல தமிழீழமும் சிதைக்கப்படுமென்பதை திலீபன் தன் உண்ணாநிலையின் மூலமாகக் காட்சிப்படுத்தினார். இவ்வாறான காட்சிப்படுத்தல் இதற்கு முன் எந்த ஒரு உண்ணாநிலைப் போராட்டத்திலும் நடந்ததில்லை. அனைத்தும் மக்கள் முன்பு நிகழ்த்தப்பட்டது.

எளிய கோரிக்கைகளுக்காக, நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கைகளுக்காக, வாக்குறுதி கொடுக்கப்பட்டவற்றை நிறைவேற்று எனும் கோரிக்கைக்காக உறுதியோடு போராடினால் மரணத்தையே இந்திய அரசு பரிசாகத் தருமென்பதை திலீபன் எனும் ஒற்றைத்தமிழன் நிரூபித்துக் காட்டினான். இராணுவம் என்பது அரசியல்-அதிகார வர்க்கத்தின் ஆதிக்கக் கருவி என்பதை செயலற்று நின்று போன இந்திய இராணுவத்தினைச் சுட்டிக்காட்டினார் லெப்.கேணல்.திலீபன். மக்கள் இராணுவமே மக்களுக்காகப் போராடுமென்பதையும், அரசின் இராணுவம் ஆதிக்க நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுமெனும் அரசியல் பாடத்தை நலூர் திடலில் விடுதலைப் புலிகள் நடத்தினார்கள்.

ஒரு பேரரசின் இராணுவத்தை எதிர்த்துப் போர் புரியவேண்டி இருக்கும் எனும் அறத்தை திலீபனின் போராட்டம் மக்களுக்கு உணர்த்தியதே இப்போராட்டத்தின் மாபெரும் அரசியல்-வரலாற்று வெற்றி. இதன் பின்னர் தமிழீழ நிலம் இந்தியப் படைகளை அடித்துவிரட்டும் ஓர்மைக்குள் வந்தடைந்தது. விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாட்டின் அறத்தை அறிந்த மக்கள் பிற போராட்ட குழுக்களிடமிருந்து விலகி புலிகளின் பின்னே அணிதிரண்டார்கள். இப்படியான மக்கள் திரட்சியை எதிர்கொள்ளும் வலிமை இந்திய அரசிற்கு மட்டுமல்ல, உலகின் எந்தப் பேரரசிற்கும் சாத்தியமில்லை என்பதை வியட்நாம் ஏற்கனவே உணர்த்தியிருந்ததை ஏற்காத வீணர்கள் தம் படையினரை தம் அதிகார வெறிக்காக பலி கொடுத்ததை உலகம் கண்டது. அதனால் தான் இந்தியாவின் அமைதிகாப்புப் படை எனும் ஆதிக்கப் போர் ‘இந்தியாவின் வியட்நாம்’ எனப்பட்டது. அவமானத்தின் உச்சிக்குச் சென்ற இந்திய பார்ப்பனீய அதிகாரவர்க்கம் சூழ்ச்சியால் மட்டுமே தமிழர்களையும், புலிகளையும் வெல்ல முடியுமென்பதை 2009 தமிழினப்படுகொலை சுட்டிக்காட்டியது. ஆனால் தமிழீழத்தில் எதிர்கொண்ட அவமானத்திற்குப் பின்னர் இந்திய பார்ப்பனீய அரசு இதன் பின்னரான கடந்த 33 வருடங்களில் ஆதிக்கத்திற்காக தனது இராணுவத்தை அனுப்பத் தலைப்படவில்லை என்பதுவும் திலீபன் ஈட்டிய பெருவெற்றியின் அடையாளம்.

மக்களை அரசியல்படுத்தாமல் போராட்டமில்லை, போராட்டமில்லாமல் சுயமரியாதையில்லை. சுயமரியாதையில்லாமல் விடுதலை என்பது உத்திரவாதமில்லை. இப்பாலபாடத்தை தம்மை அழித்து தமிழர்களுக்கு போதித்தவர் லெப்.கேணல் திலீபன் எனும் பெருங்காட்டை அழித்த நெருப்பின் துளி.

தெற்காசியாவின் மாபெரும் அரசியல்-சமூக-பொருளியல் ஆற்றல் தமிழ்ப் பேரினம்.

இதை மீண்டுமொரு முறை நினைவுபடுத்தவே இந்நாளை திலீபனின் வீரவணக்க நாளாக நினைவு கூறுவோம்.

வீரவணக்கம் லெப்.கேணல் திலீபா, சோசலிசத் தமிழீழம் மலரும். மாவீரனே! உன் புகழ்க்கொடி உயரும்.

]]>
https://may17iyakkam.com/84041/articles/%e0%ae%b2%e0%af%86%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/ 0
திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் https://may17iyakkam.com/84038/articles/general-articles/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae/ https://may17iyakkam.com/84038/articles/general-articles/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae/#respond Sat, 26 Sep 2020 04:00:25 +0000 https://may17iyakkam.com/?p=84038

திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள்

26.09.1987

இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது. திடீரென்று மின்சாரம் தடைபட்டு விட்டது. எங்கும் ஒரே இருள் மயம் காற்றும் பலமாக வீசத் தொடங்கியது பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர் இரு நவீனன்கள், மாத்தயா திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு துங்கினோம்.

பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாக பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழும்பியதும் நான்தான் முதலில் திடுக்கிட்டு எழும்பிளேன். கும்மிருட்டில் என்ன செய்வதென்று தெரியாமல்… “நவீனன் ” என்று அழைத்தபடி திலீபனின் கட்டிலில் கையை வைத்தேன் அவர் ஆடாமல் அசையாமல் படுத்திருந்தார். அதனால் மனம் அமைதியடைந்தது. அவரின் உடல் ‘ஜில்’லென்று பனிக்கட்டியைத் தொடுவது போல் குளிர்ந்து காணப்பட்டது. மனம் ‘பட பட’ வென்று அடிக்கத் தொடங்கியது.

மீண்டும் “நவீனன்” என்று அழைத்தேன். நவீனன் எழும்பிவிட்டான். ஐந்து நிமிடங்களில் மேடையில் ஒரு பெரிய மெழுகுவர்த்தி எரியத் தொடங்கியது…. மெழுகுவர்த்தியின் ஒளியிலே திலீபனின் முகம் நன்றாகத் தெரிந்தது…. ஒரே வினாடித்தான்! அதற்குள் அந்த மெழுகுவர்த்தி காற்றின் வேகத்தினால் அணைந்துவிட்டது. பலத்து வீசிய காற்று அதை மீண்டும் எரிய விடுமா? என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால், ஐந்து நிமிடங்களில் மின்சாரம் வந்துவிட்டது…. திலீபனின் நிலை எல்லையைக் கடந்துவிட்டது என்பது எனக்கு நன்றாக புரிந்துவிட்டது. அதனால், என்மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது…. நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறேன். கணிக்க முடியவில்லை….

மிகவும் மெல்லியதாக அடிக்கிறது… உடனே இரத்த அழுத்தத்தை கணிக்கின்றேன்…. அது மிகவும் குறைவாக இருக்கிறது.. .50/..? என்ற நிலையில் ஒரு நோயாளியால் இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் உயிர் வாழ முடியும் என்பது எனக்குத் தெரியும். உலகமே தலைகீழாகச் சுற்றுவது போல் இருந்தது. திலீபன் அடிக்கடி கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. “வாஞ்சி அண்ணை எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட பலவந்தமாக சுய நினைவற்ற நிலையிலோ தர முயற்சிக்கக்கூடாது… அப்படி என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறக்குமட்டும் எனக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது… சுயநினைவோடு என்றாலும் சரி…. சுயநினைவில்லை என்றாலும் சரி.. இதுக்குச் சம்பதிக்கிறனெண்டு சத்தியம் செய்து தாருங்கோ….” என்று விடாப்பிடியாக நின்று என்னிடம் சத்தியம் வாங்கிய பிறகுதான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் அவர்‌. அப்படியிருக்க, அவர் விருப்பத்துக்கு மாறாக எப்படி அவருக்கு சிகிச்சையளிப்பேன்? எப்படி அவருக்கு நீர் ஊற்றுவேன்? மனித நேயத்தையும்- அதன் தார்ப்பரியங்களையும் மதிக்கும் ஓர் வைத்தியசாலை சேவையாளன் என்ற நிலையைத் திலீபன் விஷயத்தில் நிறைவேற்ற விடாமல் என் கைகளைக் கட்டிப் போட்டது எது?… எது? ஆம் “சத்தியம்!” என்ற இந்த ஐந்து எழுத்துகளுக்காகத்தானே திலீபன் “அகிம்சை” என்ற நான்கு எழுத்துக்களைக்கொண்ட போராட்டக் களத்தில் குதித்தான்.

கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற மூன்று முக்கிய அம்சங்களினால் வேரூன்றி வளர்த்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால் கட்டுப்பாடு” என்ற நல்வழியிலே கொடுத்த சத்தியத்தை காப்பாற்றுவதற்காகத் திலீபனை என் கண்ணெதிரிலேயே “பலி” கொடுப்பதைத் தவிர வேறு வழியொன்றும் எனக்குத் தெரியவில்லை. என் கடமையைச் செய்வதற்காக மேடையின் பின்பக்கம் இறங்கிச் செல்கிறேன். அங்கே பிரதித் தலைவர் மாத்தயா நிற்கிறார். அவரிடம் திலீபனின் உடல் நிலையின் அபாயகரத்தைப் பற்றி எடுத்துரைக்கிறேன். திலீபனின் உடல்நிலை மோசமாகிவிட்ட விடயம் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பரவத் தொடங்கியது விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் பொதுமக்களும் மேடையைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். திலீபனுக்கு கடைசி நிமிடம் வரையும் ஒருவித சிகிச்சையும் அளிக்க முடியாமல்எமது கைகள் கட்டப்பட்டிருந்ததற்கு வேறு முக்கிய காரணமும் ஒன்று இருந்தது.

எமது காதில் விழக்கூடியதாகவே பல எதிரணி உறுப்பினர்களும், எமது இயக்கத்துக்கு எதிரானவர்களும் பேசியதைக் காதல் கெட்டவர்களில் நானும் ஒருவன் “புலிகள் தந்திரமாக மக்கள் மனத்தை மாற்றுவதற்காக உண்ணாவிரதம் என்ற பெயரிலே தண்ணியைக் குடிச்சுகொண்டு இருப்பார்கள்…. ஆர் இதைக் காணப்போகினம்? கடைசியில் 5 தீர்மானங்களும் நிறைவேறுமட்டும் வைத்தியம் செய்து ஆளைச் சாகவிடமாட்டினம்… இதுதான் இந்த சாகும் வரை நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதன் உண்மை….” இப்படியான பேச்சுகளுக்கு உண்மை வடிவம் கொடுத்து, “புலிகள் பொய்யர்கள்” என்ற கெட்ட பெயரை வரவிடாமல் காப்பாற்றுவதற்காகவும் எம் கைகள் கட்டப்பட்டிருந்தனவே தவிர, வேறு ஒன்றுக்காகவும் அல்ல. எம் கைகள் மட்டும் கட்டுப்படாமல் இருந்திருந்தால், எமது உயிரினும் மேலான தியாக தீபம் திலீபனை எமது உயிர்களைக் கொடுத்தாவது காப்பாற்றியிருப்போம்… ஆனால்… முடியவில்லையே? விதி! தன் வலிய கரங்களை மிக நன்றாகவே திலீபனின் கழுத்தில் இறுக்கிவிட்டான்.
உயிருடன் அந்த மனித தெய்வம் நீண்ட நேரம் போராடிக்கொண்டிருப்பதை என் கண்களால் பார்க்க வேண்டியநிலை ஏற்பட்டமைக்காக, நான் வெட்கப்பட்டேன், வேதனைப்பட்டேன். ஆனால், என்ன செய்ய முடியும்? 265 மணித்தியாலங்களில் தனது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்த அந்த தியாகத் திலீபன், இன்று காலை (26.09.1987) 10.48 மணியளவில், எம்மையெல்லாம் இந்த பாழும் உலகில் பரிதவிக்க விட்டுவிட்டுத் தான் மட்டும் போய்விட்டான்.

ஆம் தமிழர்தம் விளக்கு அணைந்துவிட்டது! அணைந்தேவிட்டது! டொக்ரர் சிவக்குமார் அவர்கள், திலீபன் இறந்த பின் அவரைப் பரிசோதனை செய்து தனது இறுதியான முடிவைச் சொல்லிவிட்டு, திலீபனின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்தபோது, மக்கள் கதறி அழத் தொடங்கினார்… எங்கும் அழுகைச் சத்தம்… விம்மல் ஒலி.. சோக இசை….. வானமே இடிந்து விட்டதைப்போன்ற வேதனை எல்லோரையும் ஆக்கிரமித்திருந்தது. வானத்து நிலவு கீழே விழுந்துவிட்டது போன்ற உணர்வு! காலை 11.00 மணிக்கு “என்பார்ம்” செய்வதற்காக, அவரது உடலை யாழ் வைத்தியக் கல்லூரிக்கு எடுத்துச் சென்றோம். பிற்பகல் 4.15 மணியளவில் திரும்பவும் அதே மேடைக்கு முன்பாக அவரின் புகழுடம்பு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் புள்ளிப்போட்ட, பச்சையும் – கறுப்பும் கலந்த இராணுவ உடையும், தொப்பியும் திலீபனுக்கு அணியப்பட்டு, “லெப்டினன்ட் கேணல் என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் செய்த தியாகத்துக்கு அவருக்க அந்த பட்டமும் தகுதியில்லை, அல்லது ஈடாகாது என்பது எமக்கு தெரியும்… ஆனால், என்ன செய்ய முடியும்? அவரைப் படுக்க வைத்திருந்த பேழையை, விடுதலை புலிகளின் சிவப்பு நிறத்திலான கொடி அலங்கரித்திருந்தது. தந்தை, சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோர் உடலை வந்து தரிசித்து சென்றனர். பெட்டியைத் திறந்ததுமே அவரது அன்புத் தந்தையும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான திரு. இராசையா அவர்கள் “ஓ…” என்று அலறியவாறு அவர் உடல்மீது விழுந்து புரண்டு அழத் தொடங்கி விட்டார். அவரின் அழுகையைத் தொடர்ந்து பொதுமக்கள், சிறு பிள்ளைகளைப்போல்; குலுங்கி குலுங்கி அழுதகாட்சி நெஞ்சை உருக்கியது. பொதுமக்கள் மணிக்கணக்காகக் காத்திருந்து, நீண்ட வரிசையிலே வந்து தமது இறுதி அஞ்சலியை மண்ணின் மைந்தனுக்குச் செலுத்தினர். ஈரோஸ் இயக்கத் தலைவர் திரு. பாலகுமார், தமிழகத்திலிருந்து வருகை தந்த தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் தலைவர் திரு. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதவாறு தமது அஞ்சலியைச் செலுத்தினர். தலைவர் பிரபாகரன், சொர்ணம், மாத்தயா, குமரப்பா, புலேந்திரன், சந்தோசம், ஜொனி, பிரபா, இம்ரான், அன்ரன் மாஸ்ரர், சங்கர் அண்ணா , நடேசன் மற்றும் ஏனைய இயக்க உறுப்பினர்களும் தத்தம் இறுதி அஞ்சலியைத் தமது தோழனுக்குச் செலுத்தினர்.

சாஜகான், நரேன், அருணா, சிறி, ராஜன், தினேஸ் பெற்றோர் தம்மைச் சமாளிக்க முடியாமல் விம்மி விம்மி அழுதனர். திலீபனின் தியாகப் பயணத்தில் 12 நாட்கள் அவரின் கூட இருந்து, அவரின் போராட்டத்தில் பங்குபற்றி, வேதனையின் எல்லைக்கே சென்றுவந்த எனக்கு. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இன்னும் எத்தனை நாட்கள் தேவை நானறியேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! திலீபன் உயிர் அநியாயமாகப்போகவில்லை அதற்கு பதிலாக அவர் ஒரு படிப்பினையை எமக்குக் கற்பித்து விட்டுப் போயுள்ளார்…

அகிம்சைப் போராட்டம் என்பது மனித நேயமும், உயர் பண்பும் மிக்கவர்களிடம்தான் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.. ஆயுதங்கள் தான் எமது தமிழீழப் போராட்டத்தைப் பொறுத்தவரை சரியான பதில் தர முடியும் என்பதையும், திலீபன் மறைமுகமாக உணர்த்திவிட்டுப்போயிருக்கிறார் என்பதே எமது கணிப்பு.. அந்த தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

]]>
https://may17iyakkam.com/84038/articles/general-articles/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae/feed/ 0
திலீபனுடன் பதினோறாம் நாள் https://may17iyakkam.com/84035/articles/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8b%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3/ https://may17iyakkam.com/84035/articles/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8b%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3/#respond Sat, 26 Sep 2020 03:59:01 +0000 https://may17iyakkam.com/?p=84035

திலீபனுடன் பதினோறாம் நாள்

25.09.1987

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுதமுடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைகின்றன. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன்மூலம்தான் அறியமுடிகிறது

‘கோமா’வுக்கு முந்திய நிலையில் (நங்ம்ண் இர்ம்ஹ) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது அவர் படுத்திருந்தது சிறிய கட்டில்….. ஆகையால், தேவரிடம் சொல்லி, பெரிய கட்டிலொன்று கொண்டுவரச் செய்து, அதில் திலீபனைப் படுக்க வைத்தோம்

அப்போதுதான் அவர் கட்டிலில் ஏற்கனவே சிறுநீர் கழித்திருந்ததைக் காணமுடிந்தது. மாறன், நவீனன், தேவர் ஆகியோர் மிகக் கஷ்டப்பட்டு அவரது ஆடைகளை மாற்றி, புத்தாடை அணிவித்தனர். அவர் சுயநினைவோடு இருக்கும் போது புது ஆடைகளை அணியும்படி பலமுறை நான் கேட்டது பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

“சாகப் போகிறவனுக்கு எதுக்கு வாஞ்சி அண்ணை புது உடுப்பு? ” என்று, தனக்கேயுரிய சிரிப்புடன் கேட்டார்… அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

பிற்பகல் 4 மணியளவில் திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமான நிலைக்கு வந்தது. ஆம், அவர் முழுமையான கோமாநிலைக்கு வந்துவிட்டார்.. மைதானத்தில் கூடியிருந்த சனக் கூட்டத்தினர் திலீபனின் நிலைகண்டு மிகவும் வருந்தினார்…. ஒவ்வொருவர் முகத்திலும் சோகத்திரை படர்ந்திருந்தது.

இன்று காலையிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் நாட்டின்
பல பாகங்களிலும் இருந்துவந்து குவிந்த கொண்டிருந்தனர். லொறிகள், பஸ்கள், வான்கள், கார்கள், ஏன்? மாட்டு வண்டிகளிற் கூட அவர்கள் சாரி, சாரியாக வந்து நிறைய தொடங்கினர். யாழ்ப்பாணத்திலோ அல்லது இலங்கையின் எந்தப் பகுதியிலே இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் இப்படி மக்கள் வெள்ளம் போல் நிறைந்ததாக சரித்திரமே இல்லை.

வட்டுக்கோட்டையில் இருந்து மட்டும் 50 மாட்டு வண்டிகள் புலிக்கொடிகளை ஏந்தியவாறு, மக்களை நிறைத்துக்கொண்டு வரிசையாக வந்து சேர்ந்தன.

இன்று பிற்பகல் 1.30 மணியுடன் முல்லைத்தீவில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திருசெல்வம் என்ற விடுதலைப் புலி உறுப்பினர். 60
மணித்தியாலங்களை வெற்றிகரமாகத் தாண்டிவிட்டார்.

மட்டுநகரில் மதன் என்ற விடுதலைப் புலி இன்று காலை 10.40 மணிக்கு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை திலீபனுக்கு ஆதரவாக ஆரம்பித்தார்.

அதேபோல திருகோணமலையிலும் ‘கிருபா’ என்ற போராளி இன்று மாலை ஆரம்பித்துவிட்டார். திருக்கோணமலை, முல்லைத்தீவு, மட்டுநகர் ஆகிய மாவட்டங்களில்தான் கடந்த 10 ஆண்டுகளாக, சிறீலங்கா அரசு திட்டமிட்டவாறு சிங்கள மக்களைக் குடியேற்றி வருகிறது.

1983 ஆம் ஆண்டு கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையிலே படுகொலை செய்யப்பட்ட தமிழர்களில் தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் மிக முக்கியமானவர்கள். ஜெயிலிலிருந்த சிங்களக் கைதிகளைத் தூண்டிவிட்டு 52 பேர்களைக் கொல்வதற்குத் திட்டம் வகுத்துக்கொடுத்தது வேறு யாருமல்ல – கனம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாதான்.

52 பேர்களைத் திட்டமிட்டபடி கொலைசெய்த நூற்றுக்கணக்கான சிங்கள ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு என்ன பரிசு அவிப்பதென்று ஜே.ஆர் ஒரு வருடமாக மண்டையைப் போட்டு உடைத்தார். கடைசியில் அனைவரையும் அவர்களின் குடும்பங்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள டொலர் பாம், கென்ற் பாம் ஆகிய இடங்களில் நவீன வீடுகளைக் கட்டிக் கொடுத்து, குடி அமர்த்தினார்.

ஒவ்வொரு குடும்பத்துக்கு 5000 ரூபா பணமும் 2 ஏக்கர் நிலமும் குடியிருக்க வீடும் வழங்கப்பட்டன. இது மட்டுமா? கொலைகாரர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகளும் ஏற்படுத்தப்பட்டன. இது வெறும் பொய்யல்ல நடந்த உண்மை. என்ன ஆச்சரியம்? உலக வரலாற்றில் எந்த நாட்டிலாவது இப்படி நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அப்படிப்பட்ட ஜே.ஆர். என்ன சொல்கிறார் தெரியுமா? தான் உண்மையான ‘காந்தியவாதி’ என்று கூறுகிறார். என்ன கேலிக்கூத்து இது! காந்தீயம் அத்தனை மலிவானதா இத்தனை இனத்துவேசியான ஜே.ஆருடன் தமிழர் நலம் காப்பது என்ற பெயரில் ஓர் ஒப்பந்தம் செய்வதென்றால், அது நடைபெறக்கூடிய காரியமா? அல்லது
நடக்கத்தான் விடுவாரா அந்தக் குள்ளநரி?

ஒப்பந்தம் சரிவர அமுலாக வேண்டும் என்பதற்காகத்தான். அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டு – திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அவர் “தமீழத்தைப் பிரித்து தா” என்று கேட்டு உண்ணாவிரதமிருந்தால் அதை எதிர்ப்பதில் நியாயம் உண்டு; இதை ஏன் எதிர்க்கிறார்கள்? புரியவேயில்லை!

நீங்கள் இருவரும் கையெழுத்துப் போட்ட ஒப்பந்தத்தை ஒரு திலீபன் சரிவர நிறைவேற்றும்படி கேட்கிறான். இது நியாயமான கோரிக்கையா இல்லையா?… இதைத் தமிழ் மக்களே முடிவு செய்யட்டும்.

இன்று (25.09.87) இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் வடபிராந்தியக் குழு “இந்திய இராணுவத்தின் அத்துமீறலைக் கண்டிக்கிறோம்” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையைப் பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. வடக்கும் – கிழக்கும் இணைந்த பிரதேச சுயாட்சியையும், நியாயபூர்வமான சகல உரிமைகளையும் வழங்க முன்வரவேண்டுமென்று அது தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்து.

இன்று திருகோணமலையில் விறகு ஏற்றிச் சென்ற எட்டு அப்பாவித் தமிழர்கள் தமிழர்கள் சிங்கள குடியேற்ற வாசிகளால் வெட்டி கொல்லப்பட்டதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியிருந்தது.

நாளை முதல் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து அரச அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும், போக்குவரத்துச் சேவை ஊழியர்களும் திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதமும் மறியலும் செய்து, தமது வேலைகளைப் பகிஷ்கரிக்கப் போவதாக சகல பத்திரிக்கைகளிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகள் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சிச் சேவை கடந்த 10 நாட்களாக தினமும் இரவு 7 மணிமுதல் விசேட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

இன்றிரவு திலீபனின் உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. அவர் சுவாசிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

திலீபன் சுயநினைவுடன் இருந்தபோது அவரால் விரும்பிக் கேட்கப்படும் பாடல் ஒன்றை, இன்றிரவு மேடையில் ஒலிபரப்பினார்கள்.

அந்தப் பாடல் எனக்கு மட்டுமன்றி, திலீபன் இருந்த இந்த நிலையில் அனைவரினது கண்களில் இருந்தும் கண்ணீர் வரவழைத்துவிட்டது.

ஓ.. மரணித்த வீரனே – உன்

ஆயுதங்களை எனக்குத் தா…

உன்

சீருடைகளை எனக்குத் தா….

உன்

பாதனிகளை எனக்குத் தா !

( ஓ….மரணித்த )

கூட்டத்திலே சில பெண்கள் இந்தப் பாடலைக் கேட்டதும் விம்மி விம்மி அழத்
தொடங்கினர்.

அந்த வேதனைமிக்க இரவு சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது. இரவே! நீ ஏன் இரக்கமில்லாமல் எமை விட்டு மறைந்து கொண்டிருக்கிறாய் ?

]]>
https://may17iyakkam.com/84035/articles/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8b%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3/feed/ 0
திலீபனுடன் பத்தாம் நாள் https://may17iyakkam.com/84029/articles/general-articles/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/ https://may17iyakkam.com/84029/articles/general-articles/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/#respond Sat, 26 Sep 2020 03:55:56 +0000 https://may17iyakkam.com/?p=84029

திலீபனுடன் பத்தாம் நாள்

24.09.1987

பெற்றோர்-பிள்ளைகள்- சகோதரர்-உற்றார் -உறவினர் -நண்பர் இவர்களின்
யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கி விடுகிறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால் இவர்களில் ஒருவர் அணு அணுவாகச் செத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது….
துயரத்தின் எல்லைக்கே நாம் போய்விடுகின்றோம். உலகமே சில வினாடிக்குள் வெறுத்து போய்விடும் கண்களில் அழுவதற்குக் கண்ணீர்கூட எஞ்சியிருக்காது. ஆனால், இவர்களில் ஒருவர் ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் 10 நாட்களாக எம் கண் முன்னால் அணு அணுவாகச் சாவின் விளிம்பில் நின்று தத்தளிப்பதைப் பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது ஏற்படும் வேதனை இருக்கிறதே…. அப்பப்பா!… அதை வாய்விட்டுச் சொல்ல முடியாது. அத்துனை கொடுமை அது அனுபவித்தவர்களுக்கு மட்டும் புரியும் அது. அதை நான் என்
வாழ்நாளில் முதன்முறையாக அனுபவிக்கிறேன்.

இதையெல்லாம் என் கண்களால் பார்க்கவேண்டும் என்று முன்பே
தெரிருந்திருக்குமானால் நான் திலீபன் இருந்த பக்கமே தலைவைத்து
படுத்திருக்கமாட்டேன், நான் முற்று முழுதாக நினைத்திருந்ததெல்லாம்
இதுதான். இந்தியா ஒரு பழம்பெருமைமிக்க ஜனநாயக நாடு, காந்தி பிறந்த பொன்னான பூமி. அகிம்சையைப் பற்றியும்- உண்ணாவிரதத்தைப் பற்றியும்
உலகில் பெருமைப்படக்கூடிய அளவுக்கு காந்தியடிகள் மூலம் புகழ்பெற்ற நாடு.
அப்படிப்பட்ட ஒரு நாட்டிடம் நீதி கேட்டு அகிம்சை வழியில் உண்ணாவிரதப்
போராட்டத்தை ஆரம்பித்த திலீபன். உண்மையிலேயே பாக்கியசாலிதான்
ஏனெனில், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நாடு நிச்சயமாக திலீபனுக்கும் ஓர் நல்ல வழியைக் காட்டத்தான் செய்யும்…

அதன்மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஓரளவாவது இந்திய அரசு நிறைவேற்றத்தான் போகிறது… என்ற எண்ணத்தில்தான் கண்களை மூடிக்கொண்டு….. இந்த தியாக வேள்வியில் என்னால் முடிந்த பங்கை செலுத்துவதற்குத் தயாரானேன்.

நான் நினைத்ததெல்லாம்… இவ்வளவு விரைவில் ‘மாயமான்’ ஆகிவிடும் என்று
நான் கனவு கூட கண்டிருக்கவில்லை… எத்தனை பெரிய ஏமாற்றம் எத்தனை
பெரிய தவிப்பு? இன்றைய நிலையில் திலீபன் இருந்த நிலையை பார்த்தபோது
நம்பிக்கையே அற்றுவிட்டது. இனி ஒரு நல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,
அதன் பிறகு திலீபனை ஆஸ்பத்திரிக்கு அனுமதித்தாலும் காப்பாற்ற முடியுமா
என்பது. என்னைப் பொறுத்த அளவில் கேள்விக்குறிதான். அப்படியிருக்க…
கடவுளே! மனித தர்மத்துக்கு கிடைக்கப்போகும் பரிசு இதுதானா? திலீபனைக் கொல்வதற்கு அவர்கள் திடமனம் பூண்டுவிட்டனர் என்பது புரிந்துவிட்டது. அதோ வானத்தில் ஓர் வயோதிக உருவம் முகில்களைக் கிழித்துக்கொண்டு என்னையே
பார்த்துக்கொண்டிருக்கிறது.

அவ்வுருவத்தின் தலையிலே மயிரிலே… கண்களில் வெள்ளை கண்ணாடி…அந்தக் கண்களில் அருவியாக வழிந்து கொண்டிருக்கிறது. அது என்ன? இரத்தமா?
அந்த மனிதன் இரத்தக் கண்ணீர் சொரிகிறாரே… ஏன்? ஏன்? அடுத்து வேறு ஒரு உருவம்! அதன் தலையிலும் மயிரைக் காணவில்லை… வானத்தின் நடுவிலே
வெள்ளரசு மரத்தின் அடியிலே அமர்ந்திருக்கும் அந்த உருவம் எம்மை, இல்லை திலீபனையே பார்த்துக்கொண்டிருக்கிறது. பௌர்ணமி நிலவில் அந்தக் கருணை முகத்திலே… கருணையைத் தேடுகின்றேன்… ஆனால் காணமுடியவில்லை…. ஏன்… ஏன்….? இந்திய மண்ணில் என்றோ தோன்றி மறைந்துவிட்ட அந்த இரு சோதிகளும் அல்ல, உருவங்களும் வெகுநேரம் திலீபனைப்பார்க்க முடியாமல்
வெட்கிக் தலைகுனிந்தவாறு சிறிது சிறிதாக என் கண்களை விட்டு மறைந்து
கொண்டிருக்கின்றன….

நேற்று சிறிதளவாவது அசைந்து கொண்டிருந்த திலீபனின் கை
கால்கள் இன்று அசைவற்று சோர்ந்து விட்டன. உள்மூச்சு மட்டும் பலமாக
இழுத்துக்கொண்டிருக்கின்றது. கண்கள் உச்சியிலே குத்திவிட்டு நிற்கின்றன.
உடலின் நிறம் சிறிது நீலமாக மாறத் தொடங்கிவிட்டது. நாடித்துடிப்பைப்
பரிசோதிக்கிறேன். 52. இரத்த அழுத்தம்-80/50. சராசரி மனிதனின் அளவுகளைவிட எல்லாமே மிகவும் குறைந்துள்ளன. இனித் திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம். ஐயோ… அதை நினைத்துப்பார்க்கவே நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கின்றது. நெஞ்சே இந்தக் கணமே நீ வெடித்துவிடக்கூடாதா? அன்று திலீபன் கிட்டு அண்ணாவைப் பார்க்கவேண்டும் என்றாரே? இதற்காகத்தானா?
இந்திய அரசு தன் கோரிக்கைகளை நிறைவேற்றாது என்பதை அவர் உள்ளூர
அறிந்தவர் போல் அன்று உண்ணாவிரத மேடையிலிருந்து எவ்வளவு தீர்க்கதரிசியாக
இதைக்கூறினார். “நான் இறப்பது நிச்சயம்… அப்படி இறந்ததும் வானத்திலிருந்து
என் தோழர்களுடன் சேர்ந்து.. தமிழீழம் மலர்வதைப் பார்ப்பேன்…” இந்த
வார்த்தைகளை இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்…

திலீபன், கிட்டு அண்ணா மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தானோ
அதைப்போல் அவரும் திலீபன் மீது உயிரையே வைத்திருப்பது எனக்குத் தெரியும். கிட்டு அண்ணா யாழ் மாவட்ட தளபதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணக் குடா நாட்டை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக அரும்பாடுபட்டு உழைத்தவர். திட்டமிடும் சாதுர்யம் அதை நிறைவேற்றுவதில் மிகச் சாதுர்யம். எதிரியைப் பந்தாடுவதில் ராஜதந்திரம். இவற்றுடன் குறிதவறாமல் சுடுவதிலும் தன்னிகரற்றவரான தளபதி கிட்டுவும், யாழ் மாவட்ட அரசியல் பிரிவுத் தலைவன் திலீபனும் விடுதலைப்புலிகளுக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிசம் என்றுதான்
கூறவேண்டும். இவர்களை உறுப்பினர்களாகப் பெற்ற உறுதி மிக்க தலைவனை நாம் பெற்றுள்ளோம். கிட்டு அண்ணாவை பார்க்கவேண்டும் என்று திலீபன் அன்று மேடையிலிருந்து கூறிய போது அதை நான் பெரிதாக எடுக்கவில்லை.

ஆனால் இன்று….? இந்த நிலையில் அந்த ஆசை நிறைவேறாமலேயே
என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இதை என்றோ ஒருநாள்
கிட்டு அண்ணாவிடம் கூறும்போது அவர் மனம் எவ்வளவு வேதனையடையும்
என்பதைச் சிந்தித்துப் பார்க்க எனக்கு இந்த உலகத்தின் மீது வெறுப்பு வருகின்றது. இந்த மண்ணிற்காக நாம் எத்தனை அரும்பெரும் உயிர்களையெல்லாம்
இழந்திருக்கின்றோம். நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தமது
துப்பாக்கிகளைச் சிங்கள இராணுவத்திடமிருந்து காப்பாற்றுவதற்காக காயப்பட்டு
நடக்க முடியாத நிலையில் தம்மைச் சுட்டுவிட்டு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு
தப்பி ஓடும் படி கட்டளையிட்ட சீலன், ஆனந்தன்… இயக்க இரகசியங்கள்
அடங்கிய முக்கிய விடையங்களையும் கோப்புக்களையும் காப்பாற்றுவதற்காக
கடைசிவரையும் தாக்குப்பிடித்து அவைகளை மற்றவர்களிடம் எடுத்து
அனுப்பிவிட்டு தன் உயிரைத் தியாகம் செய்த ‘பண்டிதர்’, இயக்கப்போராளிகள்
குடியிருந்த இடமொன்றில் வெடிகுண்டின் கிளிப் எதிர்பாராமல் விலகிவிட
மற்றவர்களை அந்த அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக வெடிகுண்டை தன்
வயிற்றுக்குள் அமுக்கிக் கொண்டு குப்புறப்படுத்து தன் உடலையே சிதறப்பண்ணி மற்றவர்களை அழிவினின்றும் காப்பாற்றிய தியாக வீரன் ‘அன்பு’ இவர்களைவிட
அவ்வப்போது சிங்கள இராணுவத்திடம் பிடிபடும் நிலையில் இயக்க ரகசியங்களை
காப்பாற்றுவதற்காக சயனைட்டைத் தின்று தியாக மரணமடைந்தவர்கள் உலக
வரலாற்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத்தான் ஏராளம் ஏராளம்.

இந்த வழிகளையெல்லாம் விட தன் வழி மிகவும் வேறுபட்டதாக இருக்கட்டும்
என்பதற்காக திலீபன் இந்த முடிவிற்கு வந்தார்? இன்று மாலை வசாவிளான்
என்ற ஊரைச் சேர்ந்த ஒரு ஆதரவாளர் அங்கிருந்து உண்ணாவிரத மேடை வரை
தூக்குக் காவடியுடன் அழுதழுது வந்தது எல்லோரையும் கவர்ந்த ஒன்றாகும்.
வட்டுக்கோட்டை சிவன் கோயிலடி, அச்சுவேலி மகாவித்தியாலத்திற்கு முன்பாக, மற்றும் சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள் போன்ற இடங்களிலெல்லாம் அடையாள உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் பரந்தளவில் நடைபெற்றது.

பளையிலிருந்து நாவற்குழி வரையுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 6000
மாணவ, மாணவிகள் அழுத கண்களும் சிந்திய மூக்குமாக ஊர்வலமாக வந்து நல்லூர் மைதானத்தை நிறைத்தனர். அவர்களின் ஊர்வலத்தில் பார்க்குமிடமெல்லாம் புலிக்கொடிதான் பறந்து கொண்டிருந்தன. நாவாந்துறையைச் சேர்ந்த மக்களின்
உணர்ச்சி வெள்ளத்தை இன்று வந்த அவர்களின் ஊர்வலத்தின் மூலம்தான் அறிய முடிந்தது. முல்லைத்தீவு மாவட்டமெங்கும் எங்கும் உண்ணாவிரதமும் மறியலும்
நடக்காத இடமே இல்லை என்று கூறிவிடலாம். “திலீபன்” என்ற இந்த சிறிய
கூட்டிற்குள் இருக்கும் இதயத்தை எத்தனை இலட்சம் மக்கள்தான் நேசிக்கிறார்கள்.
“மன்னிக்கவும் இலட்சமல்ல கோடி! தமிழ் நாட்டிலும் ஏன்? ஏனைய ஐரோப்பிய,
அமெரிக்க நாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லோருமே திலீபனுக்காக கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கின்றார்கள்.”

]]>
https://may17iyakkam.com/84029/articles/general-articles/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/feed/ 0
திலீபனுடன் எட்டாம் நாள் https://may17iyakkam.com/83985/articles/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/ https://may17iyakkam.com/83985/articles/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/#respond Tue, 22 Sep 2020 11:58:05 +0000 https://may17iyakkam.com/?p=83985

திலீபனுடன் எட்டாம் நாள்

22.09.1987

இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவினர் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்துவிட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்க வேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத் தொடங்கியிருந்தார்கள். உண்ணாவிரதம் ஆரம்பிக்கும் போது இத்தனை சனக்கூட்டம் வருமென யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமின்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப்
பயணம் பற்றியே மக்கள் பெரும்பாலானோர் பேசிக்கொண்டிருப்பதாகப்
பத்திரிக்கைகளில் போட்டிருந்தார்கள். அத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்கொண்டு தம் எழுச்சியைக் காட்டிக்கொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாநகரில் ‘மதன்’ என்ற இளம் தளபதி ஒருவர், மக்களின் ஆதரவுடன் தன் போராட்டத்தை திலீபனின் வழியில்… இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்கவிருப்பதாக என்னிடம் மாத்தயா கூறினார்.

இந்த மதனைத் தெரியாதவர்களே மட்டக்களப்பில் இல்லை, 1985ம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்தபோது மதன் தமிழீழத்திற்குச் சென்றார். போர்க் களங்களை தன் இளம்வயதில் சந்தித்தார் மட்டக்களப்பு மாவட்டத் தளபதி கருணாவுடன் சேர்ந்து திருகோணமலையிலுள்ள குச்சவெளிப் பொலீஸ் நிலையத்தை தகர்த்தவர்களுள் இந்த மதனும் ஒருவர் இந்த குச்சவெளிப் பொலீஸ் நிலையத்தாக்குதல்களில் முக்கிய பங்கெடுத்தவர்கள் என் மனதில் மட்டுமின்றி தமிழ் மக்களின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்திருக்கின்றார்கள். அவர்கள் வேறு யாருமல்ல… லெப்டினன்ட் கேர்ணல் சந்தோஷம், லெப்டினன்ட் கேர்ணல் குமரப்பா,லெப்டினன்ட் கேர்ணல் புலேந்திரன் ஆகியோர்தான். தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே திருச்செல்வம் என்ற போராளியும், அவருடன் சேர்ந்து பல பொதுமக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தினை நாளை தொடங்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. தமிழீழம் எங்குமே அஹிம்சைப்போர் தீப்பிழம்பாக
எரிந்து கொண்டிருக்கிறது. திலீபன் ஓர் மகத்தான மனிதன்தான்.

இல்லையென்றால் அவன் வழியிலேயே இத்தனை மக்கள் சக்தியா…!
வல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும்
ஐந்து தமிழர்களைத் தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது
எடுக்கப்பட்ட படத்தையும், திலீபனின் படத்தையும், பத்திரிகைகளில் அருகருகே
பிரசுரித்திருந்தார்கள். ‘ஈழமுரசு’ பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையிலே சாகும்வரை (நீராகாரம் அருந்தாமல்) உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும்
திருமதி நல்லையா செல்வி. குகசாந்தினி, செல்வி.சிவா துரையப்பா ஆகியோரின்
படங்களைப் போட்டிருந்தார்கள் மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அகிம்சை போருக்கு வெற்றி முரசு கொட்டிக்கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வெளிவரும்
செய்திகள் மட்டுமின்றி ஒவ்வொரு ஊரிலிருந்தும் பல பொதுசன அமைப்புகள்
அணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து
விநியோகித்து வந்தன. இந்த எழுச்சியை மக்களின் வெள்ளத்தைப் பார்ப்பதற்கு
என்றே தினமும் யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றி, சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன,
இந்திய சமாதானப் படையின் ஹெலிகொப்டர்கள்.

புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல, அஹிம்சை போராட்டத்திலும்
சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும்
பரவிக்கொண்டிருந்தது. திலீபனின் சாதனை உலக அரங்கிலே ஓர் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறது. உலகிலேயே முதன் முதலாக ஒரு சொட்டுநீர் கூட அருந்தாமல்
சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்தவர் என்ற பெருமையுடன் அதோ கட்டிலில் துவண்டு வதங்கி, உறங்கிக்கொண்டிருக்கிறார் திலீபன். அவரது கண்கள் இரண்டிலும்
குழிகள் விழுந்துவிட்டன. முகம் சருகைப்போல் காய்ந்து கிடக்கிறது. தலை
மயிர்கள் குழம்பிக் கிடக்கின்றன… வயிறு ஒட்டிவிட்டது… நீரின்றி வாடிக்கிடக்கும்
ஓர் கொடியினைப் போல் வதங்கி கிடக்கின்றார். அவரால் விழிகளைத்
திறக்க முடியவில்லை பார்க்க முடியவில்லை…. பேச முடியவில்லை…. சிரிக்க முடியவில்லை… ஆம் தூங்க மட்டும்தான் முடிகிறது. இன்னும் எத்தனை
நாட்களுக்குத்தான் இந்த கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்கப்போகிறது?
முரளியின் பொறுப்பிலுள்ள மாணவர் அமைப்பைச் சார்ந்த (ந.ஞ.க.ப) மாணவ-
மாணவிகள் சனக்கூட்டத்தைப் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக்கொண்டிருக்கின்றனர். பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள். “சிந்திய குருதியால் சிவந்த தமிழ் மண்ணில் சந்ததி
ஒன்று சரித்திரம் படைக்க… முந்திடும் என்பதால்… முளையிலே கிள்ளிட… சிந்தனை செய்தவர் சிறுநரிக் கூட்டமாய்…. ‘இந்தியப் படையெனும் பெயருடன் வந்தெம்
சந்திரன் போன்ற திலீபனின் உயிரைப் பறித்திட எண்ணினால்… பாரிலே புரட்சி….
வெடித்திடும்.. என்று வெறியுடன் அவர்களை…. எச்சரிக்கின்றேன்..” மேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்த கவிதை என் மனத்திலே ஆழமாக பதிகிறது.

இன்று திலீபனின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது என்பதை அவரின் வைத்தியக் குறிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. இரத்த அழுத்தம் – 80/50 நாடித்துடிப்பு -140 சுவாசம் – 24

]]>
https://may17iyakkam.com/83985/articles/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/feed/ 0