Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
நடப்பு செய்திகள் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Fri, 27 May 2022 08:57:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் வழக்கிற்காக தாம்பரம் நீதிமன்றம் வருகை https://may17iyakkam.com/88287/articles/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-66/ https://may17iyakkam.com/88287/articles/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-66/#respond Thu, 26 May 2022 08:53:58 +0000 https://may17iyakkam.com/?p=88287

வெறுப்பு பேச்சிற்கு எதிராக பேசியதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீது போடப்பட்ட வழக்கிற்காக 25-05-2022 அன்று தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது வழக்கறிஞருடன்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/88287/articles/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-66/feed/ 0
கோவிட் 19 பரிசோதனைக் கூடங்களும் உண்மை நிலவரங்களும் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/85926/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d/ https://may17iyakkam.com/85926/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d/#respond Mon, 16 Aug 2021 03:35:26 +0000 https://may17iyakkam.com/?p=85926

கோவிட் 19 பரிசோதனைக் கூடங்களும் உண்மை நிலவரங்களும்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஒரு ஆய்வகம், அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து பரிசோதனைகளுக்கும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அங்கீகாரம் பெற்ற பரிசோதனைகளை மட்டும் குறிப்பிடாமல், இந்த NABL Accreditation சான்று அளிக்கப்பட்டது என்ற பிம்பத்தை எழுப்ப முயற்சிக்கின்றனர். இது ஆய்வகங்கள் தெரிந்தே செய்யக் கூடிய தவறு. இவ்வகையான விதிமீறல்களை NABLல் இருக்கும் எந்தவொரு அதிகாரியும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. இதன்மூலம் பரிசோதனைகளுக்கான தரச்சான்று தரும் தன்னாட்சி அமைப்பான NABL, கண்துடைப்புக்காக மட்டும் இதை செய்கிறதோ என்ற ஐயம் எழுகின்றது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/85926/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d/feed/ 0
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முதல்வரால் நியமனம் – வரலாற்று சிறப்புமிக்கது https://may17iyakkam.com/85908/protests/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a/ https://may17iyakkam.com/85908/protests/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a/#respond Sat, 14 Aug 2021 06:34:59 +0000 https://may17iyakkam.com/?p=85908

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முதல்வரால் நியமனம் பெற்றது வரலாற்று சிறப்புமிக்கது, வரவேற்பிற்குரியது. சாதிகளை காக்கும் மதம், மதத்தை காக்கும் கோவில், இவற்றை கட்டுப்படுத்தும் வேதம். இந்த பார்ப்பன சங்கிலி முறியாமல் சமத்துவ பாதை சாத்தியமில்லை. கடவுளை, கோவிலை, ஆன்மீகத்தை சனதான-பார்ப்பனியத்திடமிருந்து விடுவித்து அனைத்து சாதியினர் கையில் ஒப்படைத்தால்தான் சமத்துவம் சிறிதேனும் துளிர்விடும். தந்தை பெரியாரின் சமத்துவத்தை நோக்கிய கோரிக்கைகளில் முகாமையானது நடைமுறைக்கு வருவதில் பெருமகிழ்ச்சி.

சாதி அடிப்படையில் கடவுளை தொடும் உரிமையை, பூசை செய்யும் உரிமையை மறுப்பது எனும் நிலை இந்நியமனத்தால் இனி மாறவேண்டும். ’கோபுரதரிசனம், கோடிபுண்ணியம்’ எனும் சூழ்ச்சிகரமான உபதேசங்கள் ஒழியட்டும். இந்து மதத்தின் அடிப்படைகளில் இரண்டு வருணமும், ஆசிரமமும். வேதங்களை கற்று, வேள்விகள் செய்யும் ஆசிரமமுறைகள் பூணூல் அணியும் இருபிறப்பாளராக தன்னை சொல்லிகொள்ளும் பார்ப்பனர்களுக்கே உண்டு என்கிறது மனுதர்மம்.

சூத்திரர்கள் இருபிறப்பாளர்களில்லை என்பதால் பூணுலும் அணிய இயலாது என்கிறது மனு. துறவு பூண்டாலும், வேதம் கற்றாலும் சன்னியாசியாக, அர்ச்சகராக சூத்திரன் சனாதனத்தால் அங்கீகரிக்கப்படுவதில்லை. இதை செய்வது சனாதான நெறியை மீறுவதாகும். இதை செய்ததாலேயே சம்புகனை இராமன் கொன்றான்.

துறவு மேற்கொண்ட மடாதிபதிகளாக இருக்கும் சைவமடாதிபதிகளை வேத பார்ப்பனர்கள் சங்கராச்சாரிக்கு கீழானவர்களாகவே கருதுகிறார்கள் என்பதற்கு இன்று மதுரை ஆதீனம் மறைவை பற்றி ‘தி இந்து’வின் செய்தியில் ஆதீனம் முரசொலியில் பணியாற்றியது பிற சச்சரவுகளை பற்றி எழுதிய ’இந்து’ தலைவர்களின் இரங்கல் செய்தியை தவிர்த்தது. அதேசமயம் ஜெயேந்திர சரஸ்வதி சாவு செய்தியில் அவரின் மீதான கொலைவழக்கு, பெண் பாலியல் குற்றச்சாட்டு ஆகியவற்றையெல்லாம் சொல்லாமல் பிரதமர், ஜனாதிபதி, முதல்வர் ஆகியோரின் செய்திகளை கவனமாக தொகுத்து எழுதுகிறது.

ஆதினம், சங்கராச்சாரி ஆகியோர் சமமான மத தலைவர்கள், சன்னியாசம் கொண்டவர்கள் என்ற போதும், சங்கராச்சாரி பார்ப்பனர் எனும் இருபிறப்பாளர் எனும் காரணத்தினால் உயர்த்தியே பார்ப்பன பத்திரிக்கை ‘தி இந்து’ எழுதுகிறது. ஏனெனில் சூத்திரர்கள் பிரமச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் ஆகியமுறைகளின் மூலம் சன்னியாசமடைய இயலாது என்கிறது சனதானம். இந்த நான்குவகை ஆசிரமமுறை பார்ப்பனர்களுக்கே உரித்தானது என்பதை புரட்சியாளர் அம்பேத்கரின் கூற்றிலிருந்து மேற்கோள் காட்டுகிறார், பேரா.நெடுஞ்செழியன் அவர்கள்.

இந்த ஆசிரமமுறையற்ற சூத்திரர்கள் அர்ச்சகர் ஆவதோ, சன்னியாசி ஆவதோ சாத்தியமற்ற நிலையிலேயே இன்றளவும் இந்துமதத்தை வைக்க விரும்புகிறார்கள் உயர்சாதி கூட்டத்தினர். தனது இழிவான மனநிலையையே முற்போக்கு மரபு கொண்டது என்று சொல்லிக்கொள்ளும் ‘இந்து‘ இதழ் அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. இறுக்கமான நிறுவனமாகி இருக்கும் இந்துமத உயர்சாதி ஆதிக்கத்தை உடைக்கும் பேராயுதமாக அனைத்து சாதியினருக்கான அர்ச்சகர் ஆகும் உரிமை உள்ளது.

இப்படியான மாற்றத்தின் மூலமாக பல்வேறு உரிமைகளை சமத்துவமானதாக மாற்றும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும். இவ்வகையில் சனாதன கட்டமைப்புகளை உடைக்கும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான அனைத்துசாதியினரும் அர்ச்சகர் ஆவதை தடைகடந்து நடைமுறைப்படுத்திய முதல்வர் மரியாதைக்குரிய திரு.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும், இந்த உரிமைபோராட்டத்தில் தொடர்ந்து பங்காற்றிய திராவிடஇயக்க-பெரியாரிய தோழர்களுக்கும், அம்பேத்கரிய-முற்போக்கு அறிஞர்களுக்கு-செயல்பாட்டாளர்களுக்கும் மகிழ்வுடன் வாழ்த்துகளை தெரிவிப்போம்.

தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்

]]>
https://may17iyakkam.com/85908/protests/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a/feed/ 0
சென்னையின் பூர்வகுடி மக்களின் விருப்பமின்றி அவர்களை அப்புறப்படுத்தப்படும் வன்முறை நடவடிக்கை https://may17iyakkam.com/85853/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%95-2/ https://may17iyakkam.com/85853/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%95-2/#respond Sat, 31 Jul 2021 18:05:21 +0000 https://may17iyakkam.com/?p=85853

சென்னையின் குடிசைவாசிகள் உட்பட எளிய மக்களை அப்புறப்படுத்துவது நீண்ட நாட்களாக நடைபெறும் வன்முறை. மக்கள் விருப்பமின்றி வன்முறையாக இது பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சென்னை வெள்ளத்தை பயன்படுத்தி இவர்களை கேட்பாரின்றி அகற்றுவது தீவிரமானது. 90களில் சென்னை நகர விரிவாக்கம் முறைப்படுத்தல் எனும் பெயரில் பணக்காரர்கள் ஆக்கிரமிப்புகள் சட்டப்பூர்வமாக்கப்பட்டது, பூர்வகுடி மக்கள் சட்டப் பாதுகாப்பின்றி விடப்பட்டார்கள். இம்மக்களுக்கான வசதியான, ஒழுங்கமைக்கப்பட்ட குடியிருப்புகள் தேவைப்படுகின்றன.

எவரும் கூவம், அடையாறு கரையோரங்களில் விருப்பத்துடன் குடியிருக்க முயலவில்லை. மாறாக சுத்தமான, வசதிகளுடன், பாதுகாப்பான அதேநேரம் தங்கள் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற அண்மைய இடத்தில் குடிபெயர விரும்பினார்கள். இதையே உச்சநீதிமன்ற தீர்ப்புகளும், ஐ.நாவின் சாசனங்களும் சொல்லுகின்றன. வாழிடங்களிலிருந்து 3 கி.மீ சிறு தொலைவிற்குள் குடியமர்த்தப்பட வேண்டுமெனும் விதிமுறைகள் திட்டமிட்டு மீறப்பட்டன. சென்னையின் மையப்பகுதியில் நிலங்கள் இருந்தும், குடியேற்றம் மறுக்கப்பட்டது.

அடிப்படை வசதிகள்-வேலைவாய்ப்புகள் அற்ற, பள்ளி-மருத்துவமனையற்ற குடியிருப்புகள் சென்னைக்கு வெளியே 20-30 கி.மி தொலைவில் உருவாக்கப்பட்டன. செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், கண்ணகி-எழில் நகர் போன்றவை இம்மக்களை குவித்துவைக்கும் குடோன்களாக மாற்றப்பட்டன. இப்பகுதி இளைஞர்கள் கல்வி எட்டாக்கனியானது, வேலைவாய்ப்புகளற்று போனார்கள். இப்பகுதி காவல்நிலையங்கள் பெரும்பாலான அப்பாவி இளைஞர்கள்மீது பொய்வழக்குகளை பதிவு செய்வதை எதிர்த்து போராட்டங்கள் நடந்திருக்கின்றன.

2000 வருடத்திலிருந்து இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான எளிய மக்கள் இங்கே வீசியெறியப்பட்டார்கள். இக்குடியிறுப்புகள் மனிதர்கள் வாழும் தகுதியற்றவை. பெண்களுக்கான பாதுகாப்பற்றவை. சிறை அறைகளை விட கீழ்த்தரமானவை. கட்டிட ஒழுங்கற்றவை. உயரக்கட்டிடங்களில் லிப்ட் வசதிகளற்றவை. சுகாதாரமற்றவை.

தாங்கள் முன் வசித்த இடங்களிலேயே இவர்களுக்கான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. அன்றாட போக்குவரத்து செலவுகளை இந்த எளிய கூலி தரும் வேலைகள் நிறைவு செய்யாது. ஆண்-பெண், கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லவேண்டிய் நெருக்கடியில் குழந்தைகள் தனியாக பாதுகாப்பின்றி வளர வேண்டியவையாகின்றன.

நான் புழல் சிறையிலிருந்த 4 மாதத்தில் இப்பகுதியிலிருந்து சாமானிய நிகழ்வுகளுக்கு கூட குற்றவாளியாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படும் இளைஞர்களை ஒவ்வொரு நாளும் சந்தித்திருக்கின்றேன். குற்றபரம்பரையாக இவர்கள் தங்களது பழைய இடங்களில் நடத்தப்பட்டதில்லை, குற்றவழக்கு வாங்கியவர்களும் இல்லை.

இந்த மனிதநேயமற்ற, சட்டவிரோத குடியேற்றம் பற்றிய விரிவான வெளிப்படையான விவாதம் தேவை. பாதிக்கப்பட்சவர்கள் கோரிக்கைகள் பங்கேற்கும் கொள்கை வடிவமைப்பு மிகமுக்கியமாக உடனே வேண்டும்.

கடந்த 10 வருடங்களில் பல போராட்டங்களில் மே17 இயக்கம் பங்கெடுத்துள்ளது. இம்மக்களோடு ஒன்றாக நின்றிருக்கிறோம், சட்டபோராட்டங்களில் பங்காற்றியிருக்கிறோம். ஆக்கிரமிப்பு அகற்றம் என்பதாக மட்டுமே இதை பார்ப்பது வன்முறையானது. ‘குடியமர்த்தல்’ குறித்தான கொள்கையையே கேள்வி எழுப்புகிறோம்.

ஆக்கிரமிப்பு அகற்றம் எனில் பெரும்முதலீடுகள் ஏன் அப்புறப்படுத்தப்படவில்லை? இந்த திட்டங்கள் அடிப்படையில் குடிசைகளை நீக்கும் நோக்கம் கொண்டவையென்பதை NHAIஇன் 2008 கூவம் மீட்டெடுத்தல் திட்டத்தின் ஆலோசனை நிறுவனமான வில்பர்-ஸ்மித் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டது.

கடந்தகால திமுக-பின்பான அதிமுக அரசு இக்கொள்கைகளை எதிர்க்கவில்லை. மாறாக நடைமுறைப்படுத்தினர். இக்கொள்கைகளை எதிர்த்து ஐயா.நல்லகண்ணு, தோழர்.திருமா போன்ற மூத்த கம்யூனிச-அம்பேத்கரிய-பெரியாரிய தோழர்கள் தொடர் போராட்டங்களை நடத்தியுமுள்ளனர். இவையனைத்தையும் தொகுத்து குடியேற்ற வழிமுறைகளை உருவாக்குவதே நாகரீக செயல்திட்டத்திற்கான திறவுகோள். கடந்தகால அரசுகள் கைகொண்ட வழிமுறைகள் அல்ல.

– தோழர் திருமுருகன் காந்தி

ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்

]]>
https://may17iyakkam.com/85853/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%95-2/feed/ 0
நாட்டின் இறையாண்மையை விற்ற மோடி அரசு – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/85668/protests/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1/ https://may17iyakkam.com/85668/protests/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1/#respond Mon, 12 Jul 2021 12:39:11 +0000 https://may17iyakkam.com/?p=85668

நாட்டின் இறையாண்மையை விற்ற மோடி அரசு
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தங்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை இந்திய அரசு தரவேண்டுமென்று தான் கெய்ர்ன் நிறுவனம் சர்வதேச சட்டத்தை நாடி இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றது. இந்தியா இதை எதிர்த்து தி ஹேக் (The Hague) தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. நாட்டின் இறையாண்மையை காக்கும் சட்டத்தைவிட இருநாட்டு ஒப்பந்தம் தான் பெரிது என்று அந்த தீர்ப்பாயம் தீர்ப்பு கொடுத்துவிட்டது. ஆக பாஜக அரசு பெரிய பெரிய வெளிநாட்டு முதலாளிகளுக்காக இந்திய நாட்டின் இறையாண்மையை காவுகொடுத்துவிட்டது என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது.

கட்டுரையை வாசிக்க

]]>
https://may17iyakkam.com/85668/protests/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1/feed/ 0
தமிழ்நாட்டு அரசியல் சூழல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல் https://may17iyakkam.com/84648/videos/may17-in-media/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2/ https://may17iyakkam.com/84648/videos/may17-in-media/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2/#respond Thu, 28 Jan 2021 11:44:26 +0000 https://may17iyakkam.com/?p=84648 தமிழ்நாட்டு அரசியல் சூழல் குறித்தும், பாஜகவின் அரசியல் குறித்தும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, நக்கீரன் இணைய தொலைக்காட்சிக்கு வழங்கிய விரிவான நேர்காணல்.

]]>
https://may17iyakkam.com/84648/videos/may17-in-media/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2/feed/ 0
தமிழ்நாடு மின்வாரிய பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது, ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதற்கும் ஊழலுக்கும் வழிவகுக்கும்! தமிழ்நாடு அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது! https://may17iyakkam.com/84493/protests/power-energy/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95/ https://may17iyakkam.com/84493/protests/power-energy/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95/#respond Sat, 19 Dec 2020 15:00:24 +0000 https://may17iyakkam.com/?p=84493

தமிழ்நாடு மின்வாரிய பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது, ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதற்கும் ஊழலுக்கும் வழிவகுக்கும்! தமிழ்நாடு அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது! – மே பதினேழு இயக்கம்

மின் பகிர்மான வட்டத்தின் பிரிவு அலுவலகத்தின் மூலம், மின் நுகா்வோருக்குத் தடையற்ற மின் விநியோகம் வழங்குதல், தினசரி பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவற்றை தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் மூலமாக மேற்கொள்வது தொடா்பான அறிவிப்பு வெளிவந்துள்ளது. மின் வாரியத்தை தனியார் மயமாக்கும் செயலின் ஒரு பகுதியாக மின்வாரிய பணிகளை தனியாருக்கு வழங்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது!

இந்த அறிவிப்பின் படி, ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்தின் பிரிவு அலுவலகமும் ஒரு நாளைக்கு 412 ரூபாய் கூலியாக வழங்கக்கூடிய ஒப்பந்த பணிக்கு, 20 பேருக்கு குறையாமல் ஒப்பந்த தொழிலாளர்களை எடுத்துக்கொள்ளலாம். இதன்படி, குறைந்தபட்சம் 500 மின் பகிர்மான வட்டப் பிரிவுகள் ஒப்பந்த பணியாளர்களை எடுத்தால் குறைந்தது 10,000 புதிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

ஏற்கனவே பணியாற்றி வருகிற பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நீண்ட கால ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டுமென 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஏற்கனவே உள்ள இந்த ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல், ஒப்பந்ததாரர்கள் மூலம் மேலும் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த பணியாளர்களை பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே உள்ள ஒப்பந்த பணியாளர்கள் ஒரு நாளைக்கு 500 ரூபாய் பெற்று வந்தார்கள் என்றால், புதிதாக பணியமர்த்தப்படும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்து 412 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். ஒப்பந்தத் தொழிலாளர்களின் கூலியிலும் ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்வதென்பது அரசே தொழிலாளர்களை சுரண்டுவற்கு ஒப்பாகும்.

மின் மீட்டர்களை மாற்றுவதற்கே இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பெருமளவில் பணியமர்த்தப்படப் போகிறார்கள். இதில் கணக்கீடுகள் செய்ய முடியாது. பொய்யான கணக்குகள் காட்ட முடியும். இது மிகப்பெரிய ஊழலுக்கு தான் வழிவகுக்கும். தனியார் முதலாளிகள் பெருமளவில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒப்பந்தராரர்களாக நியமிக்கப்படுவார்கள். ஒப்பந்ததாரர்களோ ஒப்பந்த பணியாளர்களிடம் அரசு வேலை, பணி நிரந்தரம் தொடர்பாக பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றவே செய்வார்கள்.

மேலும், அரசியல்வாதிகளும், அரசியல் செல்வாக்கு, அதிகார பலம் உடையர்களை ஒப்பந்தராரர்களாக நியமிக்கப்படுவார்கள். அவர்கள் ஒப்பந்தத்த தொழிலாளர்களுக்கான 412 ரூபாய் கூலியை கணக்கில் காட்டிவிட்டு, தொழிலாளர்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே வழங்குவார்கள். ஆக, அரசும், தனியார் முதலாளிகளும் தொழிலாளர்களை சுரண்டும் வழிமுறையை தான் மின்சார வாரியம் தற்போது ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பொறியாளர் பணிகளுக்கு வெளிமாநிலத்தாரை மாநில அரசே நியமித்துள்ளது. தற்போது இந்த ஒப்பந்த பணிகளும் குறைந்த கூலிக்காக வெளிமாநில தொழிலாளர்களை கொண்டு நிரப்பப்படும். இது தமிழர்களுக்கான வேலைவாய்ப்பினை முற்றிலும் முடக்கும். கொரானா கால இடர்களுக்கு பிறகு வேலை தேடுவோர்களின் சூழலை பயன்படுத்திக்கொண்டு அவர்களின் உழைப்பை உறிஞ்சும் செயலை இது ஊக்குவிக்கும்.

அதேவேளை, ஏற்கனவே உள்ள ஒப்பந்த பணியாளர்களை பணிநிரந்தரம் செய்வதன் மூலம் மின்வாரிய பணிகளை மிகசிறப்பாக கையாள முடியும். ஆனால் தொழிலாளர் பணி நியமனம் தொடர்பான பிரச்சனைகளை மின்சார வாரியம் மேலும் சிக்கலாக்குகிறது. மேலும், மும்பை, டில்லி போன்ற பெருநகரங்களின் மின் பகிர்மானம் அதானி நிறுவனம் கட்டுப்பாட்டில் உள்ளது போல், சென்னையை தாரை வார்க்கும் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.

தமிழ்நாடு அரசின் இது போன்ற செயல்கள் தற்போது ஐடிஐ, பட்டயப்படிப்பு படித்த பல்லாயிரக்கணக்கான வேலை இல்லா இளைஞர்களின் கனவை தகர்த்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்து, மின்வாரியத்தில் காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது!

மே பதினேழு இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/84493/protests/power-energy/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95/feed/ 0
டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்! https://may17iyakkam.com/84417/protests/privatization/%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ https://may17iyakkam.com/84417/protests/privatization/%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#respond Sat, 05 Dec 2020 14:50:05 +0000 https://may17iyakkam.com/?p=84417

டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!

இந்திய அரசே!

* விவசாய விரோத மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறு!

* அம்பானி-அதானிகளுக்கு விவசாயிகளை கூலிகளாக்கும் சட்டங்களை பாஜக அரசே கைவிடு!

* விவசாயத்தை கார்பரேட்மயமாக்கும் WTO நிர்பந்தத்திற்கு அடிபணியாதே! WTO ஒப்பந்தத்திலிருந்து வெளியேறு!!

* நியாயமான கோரிக்கைளுக்கு முன்வைக்கும் விவசாயிகளின் போராட்டத்தை அரச வன்முறையை ஏவி ஒடுக்காதே!!

வாழ்வாதார போராட்டத்தை முன்னெடுக்கும் உழவர்களுக்கு தமிழர்கள் நாம் ஆதரவளிப்போம்!

மே பதினேழு இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/84417/protests/privatization/%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/ 0
பட்டியல் இன ( SC) பள்ளி மாணவர்கள் 60லட்சம் பேருக்கு கிடைக்கவேண்டிய கல்வி உதவித்தொகையை இரத்து செய்த இந்துத்துவ மோடி அரசை கண்டிக்கின்றோம் https://may17iyakkam.com/84403/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9-sc-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/ https://may17iyakkam.com/84403/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9-sc-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#respond Sat, 28 Nov 2020 04:51:38 +0000 https://may17iyakkam.com/?p=84403

பட்டியல் இன ( SC) பள்ளி மாணவர்கள் 60லட்சம் பேருக்கு கிடைக்கவேண்டிய கல்வி உதவித்தொகையை இரத்து செய்த இந்துத்துவ மோடி அரசை கண்டிக்கின்றோம் – மே17 இயக்கம்

ஓவ்வொரு மாநிலங்களிலும் 11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் பட்டியல் இன (SC) பள்ளி மாணவர்கள் தங்களது படிப்பை முடித்து உயர்கல்விக்கு போக வழிவகை செய்ய ஏதுவாக கல்வி உதவித்தொகையினை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிவந்தது. இதனை தற்போது பிஜேபியின் மோடி அரசு நிறுத்தியிருக்கிறது. இதன்மூலம் இந்திய ஒன்றியத்திலிருக்கும் 60லட்சம் பட்டியலின மாணவர்கள் கல்வி பாதிப்படையும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

மோடி அரசு பதவியேற்ற 2014லிருந்து உயர்கல்வியில் பட்டியல் இன மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை 55% அதாவது பாதிக்கும் கீழ் குறைத்துவிட்டது. நமக்கு நினைவிருக்கலாம் ஜதரபாத்தில் தற்கொலைக்கு தூண்டப்பட்டு இறந்துபோன ரோகித் வெமுலா மற்றும் அவரது நண்பர்களின் போராட்டமே தடுத்து நிறுத்தப்பட்ட தங்களது கல்விஉதவித்தொகையான 25000ரூபாயை தரச்சொல்லித்தான் நடந்தது. அதன் விளைவாகவே அவர்கள் கல்லூரியைவிட்டு இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.

ஒரு பக்கம் புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் நவினக்குலக்கல்வியை கல்வியிலிருந்து மாணவர்களை விரட்டியடிக்கும் ஒருவேலையை செய்யும் மோடி அரசு அதையும் மீறி போராடி படிக்க வருபவர்களுக்கு கல்வி உதவித்தொகையினை நிறுத்தி அவர்களை கல்வியிலிருந்து விரட்டியடிக்கிறது.

ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட(OBC) மாணவர்களின் கல்வி வேலைவாய்ப்பை பறிக்கும் மோடி அரசு, இப்போது பட்டியலின மக்களின் கல்வியில் கைவைத்திருக்கிறது. இவ்வளவு சதிவேலைகள் செய்யும் இந்துத்துவ மோடி அரசு உயர்சாதிகளுக்கு (பார்ப்பனர்கள்) 10% இடஒதுக்கீட்டை அவர்கள் கேட்காமலேயே அள்ளிக்கொடுக்கிறது.

இந்துத்துவ மோடி அரசின் பட்டியலின மற்றும் பிறபடுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான இப்படியான நடவடிக்கைகள் என்பது பார்ப்பன அதிகாரத்தை நிலைநிறுத்தும் செயலே ஆகும். ஆகவே இந்துத்துவ மோடி அரசின் இந்த சதிதிட்டத்தை பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் ஒரணியில் நின்று எதிர்த்தால் மட்டுமே வென்றாக முடியும்.

மே 17 இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/84403/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9-sc-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
மோடி அரசே! தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகப்படுத்தும் ’தொழில் பாதுகாப்பு , சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் 2020’ என்ற சட்டத்தை உடனடியாக திரும்ப பெறு https://may17iyakkam.com/84397/may17/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%87-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9/ https://may17iyakkam.com/84397/may17/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%87-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9/#respond Sat, 28 Nov 2020 04:47:18 +0000 https://may17iyakkam.com/?p=84397

மோடி அரசே! தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகப்படுத்தும் ’தொழில் பாதுகாப்பு , சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் 2020’ என்ற சட்டத்தை உடனடியாக திரும்ப பெறு – மே 17 இயக்கம்

உலகமெங்குமிருக்கிற தொழிலாளர்கள் இன்று பெற்றிருக்கிற குறைந்தபட்ச உரிமைகள் கூட பல்வேறு தொழிலாளர்களின் உயிர்களை கொடுத்து பெற்றதே. அதுபோலத்தான் இந்தியாவிலும்,தொழிலாளர்கள் நல உரிமைகள் யாவும் எளிதில் கிடைத்ததல்ல. அப்படிப்பட்ட உரிமைகள் அனைத்தையும் இந்திய அரசு பறிக்கின்ற வேலைகள் கடந்த முப்பதாண்டுகளாக தொடர்ச்சியாக நடந்துவருகிறது. அதில் உச்சம் தான் தற்போது ஆட்சியிலிருக்கிற மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள்.

அதாவது தொழிலாளர்களுக்கென்று இருந்த பல்வேறு சட்டங்களை நான்கு சட்டங்களாக மாற்றி நீர்த்துப்போகச் செய்ததாகட்டும், தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதிக்கான வட்டியை தொடர்ந்து குறைப்பதாகட்டுமென்று சொல்லிக்கொண்டே போகலாம் அந்த வரிசையில் மிக மோசமாக தொழிலாளர் விரோத சட்டத்தை சத்தமேயில்லாமல் கொரோனா காலத்தில் நிறைவேற்றியிருக்கிறது இந்த மோடி அரசு.

‘தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் 2020’ என்ற இந்த சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி அறிமுகப்படுத்தி, இரண்டு அவைகளிலும் எந்த விவாதமுமில்லாமல் நிறைவேற்றி செப்டம்பர் 29ஆம் தேதி அதை அரசின் அரசாணையிலும் அதிகாரபூர்வமாக வெளியிட்டுவிட்டது இந்த மோடி அரசு. இந்த சட்டத்தின் படி

1. தொழிலாளர்களின் வேலைநேரம் தற்போது இருக்கும் 8மணிநேரத்திலிருந்து 12மணி நேரமாக மாற்றப்படும்.

2. பெண்களும் இனி இரவு பணியில் ( Night Shift) வரவேண்டும்.

3. நிரந்தர/பணி உத்தரவாத தொழிலாளர் முறைகளை ஊக்குவிப்பதை தவிர்த்து, பணி நிரந்தரமில்லாத ஒப்பந்த தொழிலாளர்கள் முறையை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கான பயணச்செலவு, பயிற்சி சான்றிதழ், அனுபவ சான்றிதழ் என பல்வேறு திருத்தங்கள் என முழுக்க முழுக்க தொழிலாளர் விரோத அம்சங்களை கொண்டதாகவே இந்த சட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆகவே தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை குழிதோண்டி புதைக்கும் இந்த சட்டத்தை உடனடியாக மக்கள் விரோத மோடி அரசு திரும்பபெற்றுக்கொள்ளவேண்டும்.

மே 17 இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/84397/may17/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%87-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9/feed/ 0