Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Sun, 03 Apr 2022 06:31:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 மதுரை செஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாட்டில் பங்கேற்க திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து அழைப்பு https://may17iyakkam.com/87643/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf/ https://may17iyakkam.com/87643/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf/#respond Fri, 25 Mar 2022 06:27:42 +0000 https://may17iyakkam.com/?p=87643

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக வரும் மே மாதம் 29 அன்று மதுரையில் நடைபெறும் செஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாட்டில் பங்கேற்க வேண்டி 28-03-2022 அன்று திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து பெரியாரிய உணர்வாளர்கள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு அழைப்பு விடுத்தார். தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழர் வாலாசா வல்லவன், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைமை நிலையச் செயலர் தோழர் தபசிகுமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆசிரியருடன் புலவர் கலி. பூங்குன்றன் மற்றும் தோழர் வீ குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87643/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf/feed/ 0
நவம்பர் ஒன்றாம் நாளே தமிழ்நாடு நாள் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாடுவோம்! சூலை 18 – ஐ வேறொரு பொருத்தமான பெயரில் சிறப்பான விழாவாகக் கொண்டாடுவோம்! – பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிக்கை! https://may17iyakkam.com/86560/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%87-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf/ https://may17iyakkam.com/86560/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%87-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf/#respond Sat, 06 Nov 2021 18:10:51 +0000 https://may17iyakkam.com/?p=86560

=====================================

நவம்பர் ஒன்றாம் நாளே தமிழ்நாடு நாள் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாடுவோம்!

சூலை 18 – ஐ வேறொரு பொருத்தமான பெயரில் சிறப்பான விழாவாகக் கொண்டாடுவோம்!

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிக்கை! =====================================

மொழி வழி மாநிலங்கள் மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளின்படி ஏற்கனவே மொழிவழியாக அமைந்திருந்த அசாம், ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளம், கருநாடகம், பஞ்சாப், பம்பாய், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம், ஒரிசா, மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்களாக உருவான நாள்தான் 1956 நவம்பர் முதல் நாள் ஆகும்.

1954 – இல் இதே நாளில்தான் புதுச்சேரியை இந்தியாவோடு இணைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பின்னர் பஞ்சாப் மாநிலம் பஞ்சாப், அரியானா என்று 1960இல் இரு மாநிலங்களாக ஆன நாளும் இதுதான். குறிப்பாகத் தமிழ் மக்களுக்கான தாயகம் தனி மாநிலமாக வரையறுக்கப்பட்ட நாள் இதுவேயாகும். வடக்கிலும் தெற்கிலும் சில பகுதிகளில் விடுபட்டு இருந்தாலும் கன்னியாகுமரி மாவட்டமும் செங்கோட்டை வட்டமும் தமிழ்நாட்டோடு இணைந்த நாளும் இதுதான்.

சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி 18 -7 -1967 அன்று சென்னை மாநிலச் சட்டமன்றம் தீர்மானம் இயற்றினாலும், பெயர் மாற்றும் அதிகாரம் கொண்ட நாடாளுமன்றம் இதற்கான தீர்மானம் இயற்றியது 23 -11 – 1968 அன்று தான்.

தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுமாறு பேரறிஞர் அண்ணாவின் வேண்டுகோளை ஏற்று விழாக்கள் நடந்தது 1-12-1968 அன்றுதான்.

மேலும் அதிகாரப்பூர்வமாகத் தமிழ்நாடு என அறிவிக்கப்பட்டது 14-1-1969ஆம் நாளே ஆகும்.

முதலில் 1953இல் அமைக்கப்பட்ட ஆந்திர மாநிலம் சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற ஏழு மாவட்டங்களை மட்டும் கொண்டு அமைக்கப்பட்டது. பின்னர் மேலும் ஐதராபாத் நிஜாம் ஆட்சியில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களையும் சேர்த்து 1956 நவம்பர் 1 ஆம் நாள் ஆந்திர மாநிலம் திருத்தி அமைக்கப்பட்டது.

அதேவேளையில் சென்னை மாகாணத்தில் இருந்த கஞ்சம் மாவட்டம் ஒரிசாவோடு இணைக்கப்பட்டதால் ஒரு மாவட்டத்தையும் ஆந்திரம் இழந்தது. 14 மாவட்டங்களோடு விளங்கும் கேரள மாவட்டங்களில் மலபார் மாவட்டம் மட்டுமே சென்னை மாகாணத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மாவட்டமாகும்.1956 -இல் 16 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட மைசூர் மாநிலத்தில் தென் கன்னடம் (மங்களூர்) எனும் ஒரு மாவட்டம் மட்டுமே சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற மாவட்டமாகும்.

1957ஆம் ஆண்டு முதல் நவம்பர் ஒன்றாம் நாளைத் தமிழகம் அமைந்த நாளாகச் சிறுசிறு விழாக்கள் நடந்து கொண்டிருந்தாலும் தமிழ்ச் சான்றோர் பேரவை 1996 தொடங்கிப் பல ஆண்டுகள் அவ்விழாவினை எடுத்த போதே அந்த நாள் அனைத்து தரப்பினருக்கும் பரவலாக அறியப்பட்ட நாள் ஆனது.

2019 ஆம் ஆண்டு தொடங்கி, 2020 ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாளன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அந்த நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடி விழா எடுத்தது..

2019, 2020 ஆம் ஆண்டுகளில் அன்றைய தமிழ்நாடு அரசு நவம்பர் முதல் நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுமாறு அறிவித்ததோடு அவ்விழாவிற்கு ரூபாய் 10 லட்சம் நிதியையும் ஒதுக்கியது.

2020ஆம் ஆண்டு தமிழ்நாடு விழாவைப் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அறிவித்ததுடன் விழா நடத்திக் கொண்டாடவும் செய்தது.

மேலும், தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களிடம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் 16- 10- 2021 அன்று நேரில் சந்தித்து நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட உள்ளதையும் அந்த நாளை தமிழ்நாடு விழா நாளாக அறிவிக்க வேண்டுகோள் வைத்தோம். பல்வேறு கட்சித் தலைவர்களும் முதலமைச்சர் அவர்களிடம் அதே வகையில் வேண்டுகோள் விடுத்தனர்.

கருநாடகம், நாகாலாந்து, காஷ்மீரம் போன்ற மாநிலங்களில் உள்ளதைப் போல தமிழ்நாட்டுக்கும் ஒரு கொடியை உருவாக்கி அறிமுகப்படுத்தியது… எந்த வகைச் சாதி, வருண அடையாளங்களுக்கும் ஆட்படாத வெள்ளைநிறக் கொடியில் தமிழ்நாடு வரைபடம் சிவப்பு நிறத்தில் பொறித்த வகையில் கொடி அமைக்கப்பட்டது.. தமிழ்நாடு அரசு இது குறித்துப் பரிசீலித்து வேறு வடிவில் கொடியை அறிமுகப்படுத்தினால் அதை ஏற்றுக்கொள்ள அணியமாக உள்ளதையும் எடுத்துரைத்தோம்.

இந்நிலையில் முதல்வர் அவர்கள் 30 – 10 – 2021 அன்று சூலை 18 ஆம் நாளினைத் தமிழ்நாடு விழாவாக அறிவித்து திடுமென அறிக்கை வெளியிட்டார்.

அதன் காரணமாகக் கடந்த ஆட்சியில் நடந்தது போலவே ஏறத்தாழ தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தமிழ்நாடு நாள் விழாவை நவம்பர் ஒன்று கொண்டாடுவதைத் தடுத்தது.

தமிழ்நாடு கொடியை அறிமுகத்திற்காக ஏற்றிய பல பகுதிகளில் தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

ஒருவேளை முதல்வர் அவர்களின் அறிவிப்பு நவம்பர் முதல் நாளுக்குப் பின்னர் வெளியிடப்பட்டு இருந்தால் இந்தக் குழப்பங்கள் நிகழாமல் போயிருக்கலாம் என்றே கருதுகிறோம். மேலும் இவை குறித்துப் பொதுவெளியில் விவாதிப்பது கூட கொள்கை எதிரிகளின் அணியில் நிற்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கும் பெரும் சங்கடத்தை விளைவித்தது.

இந்த நிலையில் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு தனது கருத்தாக கீழுள்ளவற்றை முன்வைக்கிறது…

•••

நவம்பர் 1 தமிழ் மக்களுக்கான தாயகம் தனி மாநிலமாக வரையறுக்கப்பட்ட நாள். இதன் உருவாக்கத்தில் அன்றைய ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைத்துத் தரப்பு மக்களும், ஏறத்தாழ அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் பங்களித்ததன் வகையில் தமிழர்கள் அளவில் சட்டம் இயற்றி முன் மொழியும் அதிகாரம் கொண்ட அரசு உருவான நாள். இந்த நாள் அனைத்து கட்சியினரும் இயக்கத்தினரும் இணைந்து நடத்தினால் தமிழர் ஓர்மையை உருவாக்க உதவும் என்று கருதுகிறோம். எனவே நவம்பர் 1- ஐயே தமிழ்நாடு நாளாக அனைவரும் ஏற்கவும், தமிழ்நாடு அரசு அறிவிக்கவும் வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்…

•••

சென்னை மாநிலச் சட்டப்பேரவை தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றிய சூலை 18; பெயர் திருத்தும் அதிகாரம் கொண்ட நாடாளுமன்ற தீர்மானம் இயற்றிய நாள் நவம்பர் 23 1968; பேரறிஞர் அண்ணாவின் வேண்டுகோள்படி தமிழ்நாடு நாள் எடுக்கப்பட்ட நாள் 1-12-1968; தமிழ்நாடு என்ற பெயர் அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்ட நாள் 14-1-1969 என எந்த நாளாக இருந்தாலும், அந்த நாளில் தமிழ்நாடு விழாவை நடத்துவது திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தேர்தல் கூட்டணி கட்சிகளும் ஒத்த சிந்தனையுள்ள இயக்கங்களும் மட்டும் நடத்தும் விழாவாக சுருங்கும் வாய்ப்பே உண்டு. எனவே அதைத் தவிர்க்க அதற்கு ஒரு பொருத்தமான பெயரை அறிவித்துத் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாடும்படிச் செய்யலாம்..

இந்த இரண்டு நாட்களும் இரண்டு விழாவாக ஏற்று நடந்த பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்புக்கு ஏற்புடைய விழா நாட்களே எனினும் தமிழ்நாடு நாள் என நவம்பர் 1- ஆம் நாள் விழாவையே அனைத்துத் தரப்பினரும் அனைத்து இடங்களிலும் பங்கேற்கும் பெருவிழாவாக நடத்துவதற்கும், சூலை 18 – ஐ வேறொரு பொருத்தமான பெயரில் உரிய முக்கியத்துவம் உள்ள விழா நாளாக நடத்தலாம் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைமைக் குழு

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு.

]]>
https://may17iyakkam.com/86560/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%87-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf/feed/ 0
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு விழா கொண்டாட்டம் https://may17iyakkam.com/86541/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf/ https://may17iyakkam.com/86541/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf/#respond Tue, 02 Nov 2021 14:26:13 +0000 https://may17iyakkam.com/?p=86541

நவம்பர் 1 தமிழ்நாடு நாள் பெருவிழா, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, நவம்பர் 1 திங்கள்கிழமை மாலையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழ்நாடு விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/86541/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf/feed/ 0
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் நினைவை போற்றுவோம்! https://may17iyakkam.com/84717/may17/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0/ https://may17iyakkam.com/84717/may17/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0/#respond Thu, 11 Feb 2021 10:25:51 +0000 https://may17iyakkam.com/?p=84717

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் நினைவை போற்றுவோம்!

தமிழ்நாட்டில் பொதுவுடமை சித்தாந்தத்திற்கு வித்திடவும், இந்திய அளவில் பொதுவுடமை சிந்தனை வளர்ச்சி பெறவும் மாபெரும் பணியை செய்த சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் எழுத்து, பேச்சு போற்றுதலுக்குறியது. பாட்டாளி மக்களின் உரிமைக்காகவும் அவர்களின் எழுச்சிக்காகவும் தொடர்ச்சியாக களமாடியவர் ஐயா சிங்காரவேலர் அவர்கள். மிக ஆழமான அரசியல் விவாதங்களை தத்துவங்களை கருத்துக்களை தமிழ்ச் சமூகத்திலே பதிவு செய்தவர், தொழிற்சங்கங்களை கட்டி எழுப்பியவர், இந்திய அளவில் பல்வேறு தொழிற்சங்க போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.

தோழர் சிங்காரவேலர் அவர்களின் அவரது 75 வது நினைவு நாளான இன்று (11-02-21), பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை பொறுப்பாளர் தோழர் குமரன், திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை பொறுப்பாளர் தோழர் உமாபதி உள்ளிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடையே பேசிய தோழர் திருமுருகன் காந்தி, சிங்காரவேலர் அவர்களின் நினைவை போற்றும் விதமாக, அவரது நினைவிடம் அமைந்துள்ள லேடி வெலிங்கடன் பள்ளி வளாகத்தை சிங்காரவேலர் பெயரிலேயே அழைக்கப்பட வேண்டும் என்றும், அங்கு அவருக்கு வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும், அவரது அறிவுப் பணியை போற்றும் விதமாக ஒரு நூலகத்தை அமைத்து அவரது முற்போக்கு சிந்தனைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பெரியாரிய உணர்வாளர்கள் சார்பாக கோரிக்கைகளை முன்வைத்தார்.

மே பதினேழு இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/84717/may17/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0/feed/ 0
உழவர் சட்டங்களை அம்பலப்படுத்தும் காவிரி சமவெளி பிரச்சாரபயணம் https://may17iyakkam.com/84621/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ https://may17iyakkam.com/84621/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#respond Sun, 24 Jan 2021 05:29:17 +0000 https://may17iyakkam.com/?p=84621

உழவர் சட்டங்களை அம்பலப்படுத்தும் காவிரி சமவெளி பிரச்சாரபயணம், செங்கிப்பட்டியில் தழல்.ஈகி.முத்துக்குமார் சிலை முன்பிருந்து இன்று (22-1-2021) காலை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக துவங்கியது. டில்லியில் போராடும் உழவர்களுக்கு துணை நிற்போமெனும் உறுதியேற்போம்.

]]>
https://may17iyakkam.com/84621/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/feed/ 0
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் முற்றுகை https://may17iyakkam.com/84455/protests/privatization/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4/ https://may17iyakkam.com/84455/protests/privatization/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4/#respond Sat, 19 Dec 2020 14:42:47 +0000 https://may17iyakkam.com/?p=84455

கார்பரேட் நலனுக்காக கொண்டுவரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி, தலைநகர் டில்லியை முற்றுகையிட்டு வரும் உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று (09-12-2020) சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் முற்றுகையிடப்பட்டது. திராவிடர் விடுதலை கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் உட்பட தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தமிழர் விடுதலை கழகம் போன்ற அமைப்புகளின் தோழர்கள் பங்கேற்று கைதாகினர்.

]]>
https://may17iyakkam.com/84455/protests/privatization/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4/feed/ 0
தோழர் பொழிலன் மற்றும் தம்பி மண்டேலா பிணையில் விடுதலை – தோழர்கள் வரவேற்பு https://may17iyakkam.com/84368/protests/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae/ https://may17iyakkam.com/84368/protests/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae/#respond Tue, 10 Nov 2020 16:16:47 +0000 https://may17iyakkam.com/?p=84368

தமிழ்நாடு உருவான நாளை கொண்டாடியதற்காக தமிழக அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி மதுராந்தகம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் தமிழக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பொழிலன் அவர்களுக்கும், தமிழக மக்கள் குடியரசு கட்சியின் தலைவர் தம்பி மண்டேலாவுக்கும் பிணை கிடைத்ததை அடுத்து இன்று 10.11.20 செவ்வாய்கிழமை மாலை 5.30மணியளவில் விடுதலை ஆனார்கள்.

விடுதலையான தோழர்களுக்கு சிறை வாயில் முழக்கங்களோடு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து தோழர்கள் அனைவரும் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிற சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தார்கள்.

இந்நிகழ்வில் மே-17 இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தியும் தோழர் பிரவீன்குமாரும் கலந்துகொண்டு அரசின் அடக்குமுறையை சந்தித்த தோழர்கள் பொழிலன் அவர்களுக்கும் தம்பி மண்டேலா அவர்களுக்கும் கதர் ஆடை அணிவித்து வரவேற்றார்கள்.

]]>
https://may17iyakkam.com/84368/protests/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae/feed/ 0
தமிழ்நாடு நாள் கொண்டாடியதற்காக சிறையிலடைக்கப்பட்ட தோழர் பொழிலன் உள்ளிட்ட அனைத்து தோழர்களையும் விடுதலை செய்யக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/84343/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/ https://may17iyakkam.com/84343/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/#respond Tue, 10 Nov 2020 15:57:39 +0000 https://may17iyakkam.com/?p=84343

தமிழ்நாடு நாள் கொண்டாடியதற்காக சிறையிலடைக்கப்பட்ட தமிழக மக்கள் முன்னணியின் தலைவரும், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் பொழிலன் உள்ளிட்ட அனைத்து தோழர்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யக் கோரி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று (07-11-2020) காலை சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமுமுக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ஐயா குணங்குடி ஹனீபா, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன், தந்தைபெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை பொறுப்பாளர் தோழர் குமரன் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

]]>
https://may17iyakkam.com/84343/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
கலவரத்தை உருவாக்க திட்டமிட்டு தமிழகத்தில் நடத்த இருக்கும் வேல் யாத்திரையை தடுக்க வலியுறுத்தி தமிழக டிஜிபி திரிபாதி அவர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டது https://may17iyakkam.com/84336/protests/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/ https://may17iyakkam.com/84336/protests/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/#respond Sat, 07 Nov 2020 08:05:53 +0000 https://may17iyakkam.com/?p=84336

வட இந்தியாவில் யாத்திரைகள் மூலம் கலவரம் செய்து அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிற பிஜேபி. தமிழகத்திலும் வேல் யாத்திரை என்கிற பெயரில் ஒரு கலவரத்தை உருவாக்க திட்டமிட்டது. அதை தடுக்க வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாகவும், பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாகவும் இதில் அங்கம் வகிக்கும் இயக்கங்களின் தலைவர்கள் இன்று காலை 11 30 மணியளவில் தமிழக டிஜிபி திரிபாதி அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.

கொடுக்கப்பட்ட மனு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது

தமிழக அரசே! பாஜகவின் வகுப்புவாத வேல் யாத்திரையை தடைசெய்!

  • பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

மத்திய பாஜக அரசின் மோசமான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாகவும், தற்போதைய கொரோனா பரவல் காரணமாகவும் தமிழகம் உள்பட நாடு முழுவதும் வருமானமிழந்து மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றியும், பலரும் இருந்த வேலைவாய்ப்பை இழந்தும், அனைத்து தரப்பு மக்களும் வருமானமிழந்தும், மனநிம்மதி இழந்தும், நோயுடனும், வறுமையுடனும் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக பாஜகவினர் வகுப்புவாத வேல் யாத்திரையை மேற்கொண்டு, தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை சீர்குலைத்து, கலவரத்தைத் தூண்ட திட்டமிட்டுள்ளனர். இத்தகைய வகுப்புவாத ரீதியிலான நிகழ்ச்சிக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது.

கடந்த காலங்களில் பாஜகவின் அத்வானி உள்ளிட்டவர்கள் நடத்திய ‘ரத யாத்திரை’ போன்று இந்த வேல் யாத்திரை மூலமாகவும் தேவையற்றப் பிரச்சினைகளை, சட்டம் ஒழுங்குச் சீர்குலைவை திட்டமிட்டு ஏற்படுத்தும் வாய்ப்பிருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் மூலம் வட இந்தியாவில் வன்முறையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயமடைந்த பாஜக மற்றும் சங்பரிவார கும்பல்களின் முயற்சி தமிழகத்தில் பலனிக்காத நிலையில், தமிழர்கள் அதிகம் வழிபடக்கூடிய முருகப்பெருமானை கொண்டு அரசியல் லாபமடைய பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்காக இந்த வேல் யாத்திரையை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் தைப்பூசம் அல்லது பங்குனி உத்திரத் திருவிழாவின் பொழுது தை மாதம் அல்லது பங்குனியில் முருகப் பெருமானை வேண்டி உண்மையான ஆன்மீக பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர். அவர்களால் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாது என்பதை தமிழகம் வரலாற்று ரீதியாக கண்டு வருகிறது. ஆனால், பாஜக தற்போது திட்டமிட்டிருக்கும் வேல் யாத்திரை என்பது முழுக்க முழுக்க வகுப்புவாத நோக்குடனும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வன்முறை நோக்குடனேயே திட்டமிடப்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு போக்கு காரணமாகவும், திட்டமிடப்படாத நடவடிக்கைகள் காரணமாக தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுகுறு தொழில் புரிவோர், படித்த இளைஞர்கள், மாணவர்கள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழர்களுக்கு பல்வேறு வகைகளில் விரோதமான போக்கை பாஜக அரசு கையாண்டு வருகின்றது. காவிரி விவகாரமாகட்டும், நீட் விவகாரமாகட்டும், இடஒதுக்கீடு விவகாரமாகட்டும் இவை அனைத்திலுமே தமிழர் விரோத போக்கை கையாண்டு வரும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பாஜக மக்களிடம் செல்லாக்காசாக உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. இந்நிலையில், எதிர்வரும் தமிழக தேர்தலை கணக்கில்கொண்டு தங்களின் சாதனையாக குறிப்பிட எதுவும் இல்லாத சூழலில், ஆன்மீகத்தின் பெயரால் மத உணர்வைத் தூண்டி, மக்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சி மூலமாக, தமிழகத்தில் ரத்தக்களரியை உருவாக்கும் வெறுப்பு யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது மீண்டும் கொரோனா பரவல் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருவதால், பல்வேறு நாடுகள் மீண்டும் ஊரடங்கை நோக்கி செல்கின்றன. இந்தியாவிலும் நவம்பர் 30வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க இந்த ஊரடங்கு கூட்டம் கூடுவதை தடை செய்கிறது. ஆகவே, தமிழக அரசு கொரோனா பரவலையும் கருத்தில்கொண்டு பாஜகவின் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கூடாது. இந்த யாத்திரையில் பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட்டுவோம் என்று பாஜக தலைவர்கள் கூறிவருகின்றனர். இப்படி கூட்டத்தை கூட்டுவதாலும், மாநிலம் முழுவதும் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு அந்த கூட்டம் பயணிப்பதாலும், தற்போது குறைந்துவரும் கொரோனா பரவலானது மீண்டும் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது. ஊரடங்கை காரணம் காட்டி மக்களின் அடிப்படை உரிமைக்காக கூட நடத்தப்படுகின்ற போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறை, தமிழகத்தின் அமைதியை கெடுக்கும் விதத்தில் நடத்தப்படக்கூடிய வேல் யாத்திரைக்கு ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது. தமிழகத்தில் நிலவும் சமூக அமைதியை சீர்குலைத்து, அந்த சீர்குலைவின் மூலமாக தங்கள் அரசியல் அஸ்திரத்தை நிறுவ நினைக்கும் பாஜகவுக்கு தமிழக அரசு ஒருபோதும் துணைபோகக் கூடாது.

மத்தியில் இருக்கும் தங்கள் ஆட்சியாளர்களைக் கொண்டு தங்களின் திட்டங்களை சாதித்துக் கொள்ளலாம் என்று தமிழக பாஜக கருதுகிறது. இவர்களின் இந்த அணுகுமுறையை எதிர்த்து, தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி செயல்பட வேண்டிய தார்மீகக் கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கொரோனாவை காரணங்காட்டி தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கூட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள சூழலில், பாஜகவின் இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கினால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதோடு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கும் காரணமாக அமைந்திடும் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு
பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு
முனைவர் தொல்.திருமாவளவன் – விடுதலை சிறுத்தைகள் கட்சி
கொளத்தூர் மணி – திராவிடர் விடுதலைக் கழகம்
கோவை கு.இராமகிருட்டிணன் – தந்தை பெரியார் திராவிடர் கழகம்
சுப.உதயகுமார் – பச்சைத் தமிழகம் கட்சி
கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி
தியாகு – தமிழ் தேசிய விடுதலை இயக்கம்
இனிகோ இருதயராஜ் -கிருஸ்துவ நல்லெண்ண இயக்கம்
பொழிலன் – தமிழக மக்கள் முன்னணி
நெல்லை முபாரக் – எஸ்.டி.பி.ஐ.
கே.எம்.சரீப் – தமிழக மக்கள் ஜனநாயக் கட்சி
குடந்தை அரசன் – விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி
திருமுருகன் காந்தி – மே17 இயக்கம்
கே.எஸ்.அப்துல் ரஹ்மான் – வெல்ஃபேர் பார்ட்டி
நாகை திருவள்ளுவன் – தமிழ்ப்புலிகள் கட்சி
சுந்தர்ராஜன் – பூவுலகின் நண்பர்கள்
முகமது சேக் அன்சாரி – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
பேரா.அ. மார்க்ஸ் – என்.சி.ஹெச்.ஆர்.ஓ.
இரா.அன்புவேந்தன் – இந்திய குடியரசுக் கட்சி
வழ.வெண்மணி – திராவிடத் தமிழர் கட்சி
பாலன் – தமிழ் தேச மக்கள் முன்னணி
கா.சு.நாகராஜன் – தமிழ்நாடு திராவிடர் கழகம்
பேரா.த.ஜெயராமன் – மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
வழ, ஹென்றிதிபேன் – மக்கள் கண்காணிப்பகம்
கோ.சுகுமாறன் – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு
செள.சுந்தரமூர்த்தி – தமிழர் விடுதலைக் கழகம்
வழ.ரஜினிகாந்த் – மக்கள் அரசு கட்சி
உ.இளமாறன் – தமிழர் விடுதலைக் கட்சி
தீபக் – டிசம்பர் 3 இயக்கம்
கண குறிஞ்சி – தமிழ்நாடு மக்கள் மன்றம்
யா.அருள்தாஸ் – மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு
சு.அகத்தியன் – தமிழ் சிறுத்தைகள் கட்சி
ஜாகுலின் ஜோதி – NAPM

]]>
https://may17iyakkam.com/84336/protests/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/feed/ 0
தமிழ்நாட்டுக் கொடி அறிமுகம்! https://may17iyakkam.com/84193/protests/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81/ https://may17iyakkam.com/84193/protests/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81/#respond Wed, 21 Oct 2020 15:20:56 +0000 https://may17iyakkam.com/?p=84193

தமிழ்நாட்டுக் கொடி அறிமுகம்!

நவம்பர் 1 “தமிழ்நாடு நாள்” கொண்டாடப்படுவதை ஒட்டி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாட்டிக் கொடி அறிமுகம், இன்று (20-10-2020) காலை சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. வெள்ளை நிற பின்புலத்தில் சிவப்பு நிற தமிழ்நாடு வரைபடம் கொண்ட கொடியினை தமிழ்நாடுக் கொடியாக, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பில் உள்ள பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் இணைந்து அறிமுகப்படுத்தினர்.

கொடி அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்…

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி,
தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் பொழிலன்,
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,
விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன்,
தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன்,
திராவிடத் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி,
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சேக் முகமது அலி,
திராவிடர் விடுதலைக் கழகம் தபசி குமரன்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சென்னை மாவட்டத் தலைவர் குமரன்,
மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சித் தோழர் முத்தமிழ் ,
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் செல்வமணி,
மக்கள் குடியரசுக் கழக தோழர் மண்டேலா,
தமிழ்நாடு திராவிடர் கழகம் காசு நாகராசன்
மற்றும் எண்ணற்ற தோழர்கள் கலந்துகொண்டனர்.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

]]>
https://may17iyakkam.com/84193/protests/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81/feed/ 0