Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
பத்திரிக்கையாளர் சந்திப்பு – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Fri, 10 Feb 2023 07:25:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 ‘கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட சாதிய தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுத்தல் மற்றும் கள ஆய்வு அறிக்கை வெளியீடு’ குறித்த ஊடகச் சந்திப்பு https://may17iyakkam.com/90021/protests/caste/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/ https://may17iyakkam.com/90021/protests/caste/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/#respond Thu, 09 Feb 2023 07:22:28 +0000 https://may17iyakkam.com/?p=90021

‘கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட சாதிய தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுத்தல் மற்றும் கள ஆய்வு அறிக்கை வெளியீடு’ குறித்த ஊடகச் சந்திப்பு 08-02-2023 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஊடகச் சந்திப்பில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் தோழர் வெண்மணி, அனைத்திந்திய சனநாயக மாதர் சங்கத்தின் தோழர் வாலண்டினா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தோழர் பா.சுகந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

அறிக்கை:

மூங்கில்துறைப்பட்டில் நடந்த சாதிய வன்முறை குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு – 8/2/2023

அண்மை காலங்களில் ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியலின மக்கள் மீது நடைபெறும் சாதி ரீதியான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதை மே17 இயக்கம் போன்ற சனநாயக அமைப்புகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றோம். வீரளூர், வேங்கைவயல், கிளாமங்கலம் கிராமங்களில் நடந்த சாதிய வன்முறைகளைத் தொடர்ந்து தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர் நகரில் ஆதிக்க சாதி வெறியர்கள் பட்டியலின மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி18 அன்று தொண்டமனூர் கிராமத்தில் நடந்த பொங்கல் கலை நிகழ்ச்சிகளைக் காண சென்ற அம்பேத்கர் நகர் இளைஞர்கள் மீது திட்டமிட்டு ஆதிக்க சாதியினர் வன்முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக அம்பேத்கர் நகர் இளைஞர்கள் அணிதிருந்த நீல நிற சட்டைகளை கழட்ட செய்து, ஆதிக்க சாதி சமூக விரோதிகள் தாங்கள் அணிந்திருந்த மஞ்சள் நிற சட்டைகளை வணங்கும்படி செய்து அவமானப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து ஜனவரி 19 அன்று ஆதிக்க சாதியினர் சாலை மறியல் செய்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்ட சமூக விரோதிகள் மது போதையில் அம்பேத்கர் நகருக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ஆயுதங்களுடன் நுழைந்து, சாதிப் பெயரை இழிவாக கூச்சலிட்டபடியும் பெண்கள் குழந்தைகளை கொச்சையாகப் பேசியும் அச்சுறுத்தியுள்ளனர். கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் சூறையாடி மிரட்டல் விடுத்துள்ளனர்.

திட்டமிட்டு நடைபெற்ற இந்த வன்முறை தாக்குதல் குறித்து ஆதிக்க சாதியினர் முன்னரே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததும் அம்பேத்கர் நகர் மக்களை மிரட்டி உள்ளதும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சாதி வெறி தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். தற்போது இரு தரப்பிலிருந்தும் இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால் இவ்வன்முறையைத் தூண்டிவிட்ட முக்கிய குற்றவாளிகளை இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை.

இந்த வன்முறைக்குத் தொடர்பில்லாத பட்டியலின இளைஞர்கள் மேல் பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும். மேலும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட ஆதிக்க சாதியினர் 200 பேரும் காணொளி உதவியுடன் அடையாளம் காணப்பட்டு வழக்கு பதிய வேண்டும். இவர்களைத் தூண்டிவிட்டு தவறாக வழிநடத்திய சமூக விரோத நபர் / நபர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திட வேண்டும். மேலும் வன்முறை தாக்குதலில் தங்கள் வீடு, வாகனம், குடிநீர் குழாய் போன்ற சொத்துக்களை இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கவும் வலியுறுத்துகின்றோம். இத்தகைய நடவடிக்கைகள் மூலமே, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சாதிய வன்முறை நிகழ்வுகளைத் தடுத்திட முடியும்.

]]>
https://may17iyakkam.com/90021/protests/caste/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/feed/ 0
தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வும், தமிழ்நாடு அரசும் – ஊடகச் சந்திப்பு https://may17iyakkam.com/90009/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/ https://may17iyakkam.com/90009/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/#respond Wed, 08 Feb 2023 16:22:28 +0000 https://may17iyakkam.com/?p=90009

ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், ‘தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வும், தமிழ்நாடு அரசும்’ என்ற ஊடகச் சந்திப்பு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் 07-02-2023 செவ்வாய் அன்று நண்பகலில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகச் சந்திப்பில், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்களும், தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பை சேர்ந்த தோழர் லயோலா மணி அவர்களும் உடனிருந்தனர்.
அறிக்கை:


தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வும், தமிழ்நாடு அரசும்

கடந்த சனவரி 29 அன்று நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டியது குறித்த ஆலோசனைக் குழு கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளில் ஒன்றாக, ‘இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு பற்றி வலியுறுத்த வேண்டும்’ என மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக எம்பி-க்களுக்கு அறிவுறுத்தியதாக செய்தி வெளியானது.

இச்செய்தி வெளியானவுடன், ‘அதிகாரப் பகிர்வு’ என்ற அரசியல் தீர்வு குறித்தும், ‘இலங்கைத் தமிழர்’ என்ற வார்த்தைப் பயன்பாடு குறித்தும் மே பதினேழு இயக்கம் உடனடியாக தனது கருத்தை பதிவு செய்திருந்தது.

1987-ஆம் ஆண்டு இந்தியா இலங்கை இடையே ஏற்படுத்தப்பட்ட இராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையிலான இலங்கையின் 13-வது சட்டத்திருத்தம் பரிந்துரைப்பதே ‘அதிகாரப் பகிர்வு’ முறையாகும். ஈழத்தமிழர்களை கலந்தாலோசிக்காமல் அவர்கள் மீது இந்தியா திணித்த ஒரு அரசியல் தீர்வாகும். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் ஈழத்தமிழர்களிடம் ‘அதிகாரப் பகிர்வு’ குறித்த வாக்குறுதிகளை அளித்து, ஒப்பந்தங்கள் பல போட்டு இலங்கை ஒவ்வொரு முறையும் அதனை மீறியுள்ளது. இறுதியாக தந்தை செல்வாவின் தலைமையில் 1976-ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் தனித் தமிழீழமே ஒரே தீர்வு என்பது ஈழத்தமிழர்களின் இறுதி முடிவாக உள்ளது. அதனடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளும் இறுதி வரை போராடினர்.

இராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தினை இலங்கை இதுவரை நிறைவேற்ற முயற்சித்ததே இல்லை. இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய நேரங்களில் மட்டுமே இந்தியாவும் அதனை பேசுகிறது. இனப்படுகொலைக்கு பிறகான காலகட்டத்தில் இது தீவிரமாக பேசப்பட்டது. அதாவது, இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் கீழ் செயல்படக்கூடிய ஒரு அரசியல் தீர்வை முன்மொழியப்பட்டது. இது உலக நடைமுறைகளுக்கு எதிரானதாகும். தற்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு 13-வது சட்டத்திருத்தம் குறித்து இந்தியா-இலங்கை பேசுகிறது. இலங்கையும், ஈழத்தமிழர்களும் ஏற்றுக்கொள்ளாத இந்த ‘அதிகாரப் பகிர்வு’ முறையை, தமிழ்நாடும் நிராகரித்துள்ளது.

ஈழத் தமிழர்கள் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தீர்மானமே தமிழர்களின் இறுதி முடிவாக கருதப்படுகிறது. அந்த வகையில் 2013 மார்ச் 27 அன்று அஇஅதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, ‘தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பே இறுதித் தீர்வு’ என்னும் தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றினர். 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் அன்றைய அதிமுக அரசுக்கு பெரும் அழுத்தத்தை உருவாக்கி, ‘தனித் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு’ மற்றும் ‘இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை’ என்ற தமிழ்நாட்டின் கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றியது. இதன் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் ‘அதிகாரப் பகிர்வு’ முறையை தமிழ்நாடு முற்று முழுதாக நிராகரித்துள்ளது என்பது வரலாறு.

இவ்வாறு, ஒட்டுமொத்த தமிழர்களும் முற்றிலும் நிராகரித்த 13-வது சட்டத்திருத்தம் வலியுறுத்தும் ‘அதிகாரப் பகிர்வு’ முறையானது, திரு ஸ்டாலின் அவர்கள் உள்ளிட்ட திமுகவினரும் ஏற்றுக்கொண்டு 2013-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு’ முறைக்கு முற்றிலும் முரணானது ஆகும்.

ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக ‘அதிகாரப் பகிர்வை’, ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டின் கட்சிகளும் தீர்வாக முன்வைக்கவில்லை. 2013-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் திமுகவின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானமே தமிழர்களின் இறுதி முடிவு. இந்த வரலாற்று முக்கியத்துவமான அரசியல் முடிவான ‘பொதுவாக்கெடுப்பையே’ திமுக நாடாளுமன்றத்தில் முன்மொழிய வேண்டும். மாறாக, திமுகவின் ‘அதிகாரப் பகிர்வு’ என்னும் முடிவு திராவிடர் இயக்க அரசியலுக்கு முரணானது.

திமுகவின் 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையின் 17-வது பக்கத்தில் 6-வது பிரிவின் 3-வது வாக்குறுதியாக, ‘பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசை வலியுறுத்தும்’ என்று வாக்குறுதி கொடுத்து வென்றுள்ளது. ஆனால், இன்று அதனை நாடாளுமன்றத்தில் வலியுறுத்த தனது எம்பிக்களை அறிவுறுத்தாமல், உலகத் தமிழர்கள் மறுக்கும் இலங்கையின் 13-வது சட்டத்திருத்தத்தின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்துவது திமுகவின் தேர்தல் வாக்குறுதிக்கு முரணானது.

மேலும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் விதமாக தமிழின விரோத பாஜக, 13-வது சட்டத்திருத்தத்தின் ‘அதிகாரப் பகிர்வு’ முறையை தமிழர்கள் மேல் திணிக்கப் பார்க்கிறது. இதன்மூலம் ஈழத்தமிழர்கள் தமிழீழம் என்ற நாட்டை அடைவதை தடுத்துவிட முடியும் என நினைக்கிறது. இதற்கு துணைபோகும் விதமாக திமுகவும் பாஜகவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் விதமாக செயல்பட முடிவெடுத்துள்ளது தமிழர்கள் ஏற்றுக்கொள்ள இயலாதது.

அதேபோல், ஈழத்தமிழர்களை ‘இலங்கைத் தமிழர்’ என்று குறிப்பிடுவது திராவிட இயக்க முன்னோடிகளின் கூற்றை மறுத்து, தமிழின விரோதிகளின் நிலைப்பாட்டை ஒட்டிய முடிவாகும். அறிஞர் அண்ணா முதல் கலைஞர் வரை திராவிடர் இயக்க மரபில் ‘ஈழத் தமிழர்’ என திமுக அழைத்து வந்தபோது, துக்ளக் சோ ராமசாமி, சுப்ரமணிய சாமி, குருமூர்த்தி உள்ளிட்ட பார்ப்பனர்கள் ‘இலங்கைத் தமிழர்’ என்றே அழைத்தனர். ஆனால் இன்றைய திமுக ‘இலங்கை தமிழர்’ என்று குருமூர்த்தி மரபை பின்பற்றுகிறது. இது ஈழத்தமிழர்களின் தேசிய அடையாளத்தை மறுக்கும் செயலாகும். மேலும், திமுக தனது 2019 தேர்தல் அறிக்கையில் ‘ஈழத்தமிழர்’ என்ற வார்த்தையை பயன்படுத்திவிட்டு, இன்று அதனை தவிர்த்து ‘இலங்கைத் தமிழர்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவது வாக்களித்த தமிழர்களை ஏமாற்றும் செயலாகும்.

சட்டமன்ற மரபுகளை மீறி 2013-ஆம் ஆண்டு தீர்மானத்திற்கு எதிரான, வரலாற்று ரீதியாக ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட உலகத்தமிழர்கள் அனைவரும் முற்றிலும் நிராகரித்த ‘அதிகாரப் பகிர்வு’ முறையை வலியுறுத்துவதை திமுக விட்டுவிட்டு, ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக பொதுவாக்கெடுப்பை ஒன்றிய நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் வலியுறுத்த வேண்டுமென மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட சனநாயக அமைப்புகள் திமுகவினை வலியுறுத்துகிறது. மாண்புமிகு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் 2019 தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப ஈழத்தமிழர்கள் தொடர்பான திமுகவின் நாடாளுமன்ற நடவடிக்கை முடிவுகளை திருத்த ஆவண செய்யவேண்டும் என கோருகிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/90009/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
திரையுலக ஆளுமைகள் பங்கேற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பு https://may17iyakkam.com/89802/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-2/ https://may17iyakkam.com/89802/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-2/#respond Fri, 06 Jan 2023 13:52:02 +0000 https://may17iyakkam.com/?p=89802

தாம்பரத்தில் நாளை 07.01.23 சனிகிழமை மாலை 4மணிக்கு நடைபெறவிருக்கிற ஜல்லிக்கட்டு பாதுகாப்பு மாநாடு குறித்து இன்று 06.01.23 வெள்ளிகிழமை பத்திரிக்கையாளர் மன்றத்தில் திரைகலைஞர்கள் பங்கேற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு.

காணொளி

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89802/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-2/feed/ 0
திரையுலக ஆளுமைகள் பங்கேற்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு https://may17iyakkam.com/89796/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%b1/ https://may17iyakkam.com/89796/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%b1/#respond Fri, 06 Jan 2023 05:51:22 +0000 https://may17iyakkam.com/?p=89796 திரையுலக ஆளுமைகள் பங்கேற்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு

தலைப்பு : ’சல்லிகட்டு எனும் ஏறுதழுவல்’ விளையாட்டை அரசியல் சாசனத்தால் பாதுகாக்கப்பட்டதமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வு என ஒன்றிய அரசு அறிவித்து தமிழர்களின் சல்லிகட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும்.


பங்கேற்போர்:
திரு. அமீர் – திரைப்பட இயக்குநர்
திரு. வெற்றிமாறன் – திரைப்பட இயக்குநர்
திரு. கரு.பழனியப்பன் – திரைப்பட இயக்குநர்
திரு. மீரா கதிரவன் – திரைப்பட இயக்குநர்
திரு. யுகபாரதி – பாடலாசிரியர்
திரு. கவிதா பாரதி – நடிகர்
திரு. சினேகன் – பாடலாசிரியர்
திரு. பிரம்மா – திரைப்பட இயக்குநர்
திரு. திருமுருகன் காந்தி – ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்

இடம்: சென்னை பிரஸ் கிளப், சேப்பாக்கம், சென்னை
நேரம்: 06-01-2023 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:00


அனைத்து ஊடகத்தினரையும் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம்.

ஒருங்கிணைப்பு
மே பதினேழு இயக்கம்
தொடர்புக்கு
9884864010

]]>
https://may17iyakkam.com/89796/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%b1/feed/ 0
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு காணொளி https://may17iyakkam.com/89391/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f-3/ https://may17iyakkam.com/89391/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f-3/#respond Sun, 23 Oct 2022 14:24:24 +0000 https://may17iyakkam.com/?p=89391 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையிலான ஆணையம் சமர்ப்பித்த அறிக்கை குறித்த ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் 21-10-2022 வெள்ளி காலை மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்தது. இதில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஊடகவியலாளர்களிடம் உரையாடிய காணொளி.

காணொளி உதவி: ரெட் பிக்ஸ்

யூடியூப் இணைப்பு:

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89391/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f-3/feed/ 0
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையிலான ஆணையம் சமர்ப்பித்த அறிக்கை குறித்த ஊடகவியலாளர்கள் சந்திப்பு https://may17iyakkam.com/89370/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f-2/ https://may17iyakkam.com/89370/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f-2/#respond Fri, 21 Oct 2022 13:21:48 +0000 https://may17iyakkam.com/?p=89370

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையிலான ஆணையம் சமர்ப்பித்த அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை குறித்த நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றை மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்தது. இந்த சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று (21-10-2022 வெள்ளி) காலை நடைபெற்றது. இதில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் பிரவீன் குமார், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அருணா ஜெகதீசன் அறிக்கை அடையாளம் காட்டும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அறிக்கை வெளிப்படுத்தாத காரண காரியங்களை கண்டறிய எடப்பாடி பழனிச்சாமி, கிரிஜா வைத்தியநாதன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், துப்பாக்கி சூட்டிற்கு பின்னால் பாஜக மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சதி வலைப்பின்னல் உள்ளது என்றும் அதனை அறிக்கை வெளிப்படுத்தவில்லை என கூறப்பட்டது.

விரிவான அறிக்கை:

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89370/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f-2/feed/ 0
தமிழீழ இனப்படுகொலைக்கான 13ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் பேரறிவாளன் அவர்கள் விடுதலை குறித்தும் நடைப்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு https://may17iyakkam.com/87988/activities/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-16/ https://may17iyakkam.com/87988/activities/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-16/#respond Wed, 18 May 2022 15:50:44 +0000 https://may17iyakkam.com/?p=87988

தமிழீழ இனப்படுகொலைக்கான 13ஆம் ஆண்டு நினைவேந்தல் குறித்தும் பேரறிவாளன் அவர்கள் விடுதலை குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக இன்று (18-05-2022) மாலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

ஊடகவியலாளர்களிடையே பேசிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, 13-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை நடத்த சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை ஒதுக்கிய அரசிற்கு நன்றி தெரிவித்து, வரும் மே 22 ஞாயிறு மாலை 4 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

மேலும், பேரறிவாளன் அவர்களின் விடுதலை மகிழ்ச்சியானது என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளுநரின் அதிகாரத்தை எடுத்துக்கூறியுள்ளது என்றும், மற்ற 6 பேரின் விடுதலையையும் உறுதி செய்வதாக கூறிய முதலமைச்சரின் வாக்குறுதியை வரவேற்பதாகவும் தோழர் திருமுருகன் காந்தி பேசினார். ஊடகவியலாளர்களிடையே இனிப்பு பகிரப்பட்டு பேரறிவாளன் அவர்களின் விடுதலை கொண்டாடப்பட்டது.

இச்சந்திப்பின் போது, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இளமாறன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் தோழர் குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87988/activities/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-16/feed/ 0
பீமா கோரேகான் வழக்கில் சிறைப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு https://may17iyakkam.com/87943/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%aa%e0%af%80%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/ https://may17iyakkam.com/87943/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%aa%e0%af%80%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/#respond Thu, 12 May 2022 16:50:46 +0000 https://may17iyakkam.com/?p=87943

பீமா கோரேகான் வழக்கில் சிறைப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சட்டம் திரும்பப்பெறப்பட்டு, அந்த நிறுவனம் கலைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சனநாயக அமைப்புகள் சார்பாக இன்று (12-05-2022 வியாழன்) காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வைத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

“பீமா கோரேகான் வழக்கு என்ற பெயரில் பாஜக அரசு தீட்டியுள்ள சதியை அம்பலப்படுத்தவும் கேலிக்கூத்தாகியுள்ள நீதிக்கு பின்னால் இருக்கும் உண்மையை வெளிக்கொணரவும் ‘பீமா கோரேகான் அரசியல் சிறைபட்டோர் விடுதலைக்கான குழு’ உருவாக்கப்பட்டுள்ளது. எல்கர் பரிசத் வழக்கில் சிறைப்பட்டுள்ள அறிவாளிகள், வழக்கறிஞர்கள், செயல்பாட்டாளர்களின் அப்பழுக்கற்றத் தன்மையை வெகு மக்களிடையே பரப்புவதிலும் அவர்தம் உடனடி விடுதலைக்கான கோரிக்கையை எழுப்புவதும் இக்குழு நோக்கமாக கொண்டுள்ளது.” என பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

குறிப்பு: பத்திரிக்கை செய்தி வெளியீடு படங்களாக இணைக்கப்பட்டுள்ளது.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87943/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%aa%e0%af%80%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/feed/ 0
பட்டியலின-பழங்குடி (SC/ST) சமூக மக்களுக்கான நிதிநிலை அறிக்கையின் தேவை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு https://may17iyakkam.com/87845/protests/caste/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-sc-st-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95/ https://may17iyakkam.com/87845/protests/caste/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-sc-st-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95/#respond Mon, 02 May 2022 16:45:34 +0000 https://may17iyakkam.com/?p=87845 பட்டியலின-பழங்குடி (SC/ST) சமூக மக்களுக்கான நிதிநிலை அறிக்கையின் தேவை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (02-05-2022 திங்கள்) காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் அவர்களோடு பங்கேற்று, ஊடகவியலாளர்களிடையே உரையாடிய காணொலி.

]]>
https://may17iyakkam.com/87845/protests/caste/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-sc-st-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95/feed/ 0
திருவண்ணாமலை மாவட்டம் அருந்ததியர் மக்கள் மீது நடந்த தாக்குல் குறித்த – கள ஆய்வு அறிக்கை – ஆவணப்படம் – வெளியீடு – கருத்தரங்கம் https://may17iyakkam.com/87209/protests/caste/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85-2/ https://may17iyakkam.com/87209/protests/caste/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85-2/#respond Sat, 29 Jan 2022 09:05:26 +0000 https://may17iyakkam.com/?p=87209

திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளருமான தோழர் எஸ்எஸ் பாலாஜி அவர்கள் ஆற்றிய உரை.

திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிராமத்தை சேர்ந்த பட்டியலின அருந்ததியர் மக்கள் மீது கடந்த ஜனவரி 16 அன்று சாதிவெறி கூட்டம் தாக்குல் நடத்தியது. இது குறித்து மே பதினேழு இயக்கத்தின் உண்மை கண்டறியும் குழு ஜனவரி 19, 22 ஆகிய நாட்களில் கள ஆய்வு மேற்கொண்டது. அக்கள ஆய்வின் அறிக்கை வெளியீடு, ஆவணப்படம் வெளியீடு, பாதிக்கப்பட்ட மக்களின் நேரடி சாட்சியங்கள், பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் கருத்தரங்கம் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக 28-01-22 மாலை சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் தோழர் அரங்க குணசேகரன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை. திருவள்ளுவன், ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், திராவிடர் தமிழர் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் சங்கர், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். வீரளூர் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் கலந்துகொண்டதோடு சிலர் நேரடி சாட்சியங்கள் அளித்தனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87209/protests/caste/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85-2/feed/ 0